பெங்களூரு: இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான பெண்கள் உள்ளனர்: 2011-12 மற்றும் 25% உடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 18% க்கும் அதிகமானோர் வேலை செய்யவில்லை; நகர்ப்புறத்தில் 15% என்பது, 14% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் சம்பள வேலைகளில் பெண்களின் சதவீதம் 2004 ல் 35.6% ஆக இருந்து 2017ஆம் ஆண்டில் 52.1% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் சுயதொழில் அல்லது சாதாரண வேலைகளில் அவர்கள் இருப்பதை ஒப்பிடும்போது தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவவதில்லை என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய அரசு வேலைவாய்ப்பு தரவுகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலையில் இல்லை, ஆனால் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று, காலமுறை தொழிலாளர் தொகுப்பு கணக்கெடுப்பு - பி.எல்.எஃப்.எஸ் (PLFS) 2017-18 சேகரித்த சமீபத்திய அரசு தரவுகளில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்ந்தது என்று, தேசிய வேலைவாய்ப்பு தரவு கசிந்த செய்தி வெளியான நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசின் அதிகாரப்பூர்வ பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை மே 31, 2019 அன்று வெளியிட்டது.

கணக்கெடுப்பைப் புரிந்துகொள்ளுதல்

பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பாலினம், கல்வி மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர் சந்தை குறிகாட்டிகள் குறித்த காலாண்டு மதிப்பீடுகளை வழங்கியது. 2017 இல், பி.எல்.எஃப்.எஸ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பை -என்.எஸ்.எஸ் - ஈ.யு.எஸ் (NSS EUS) மாற்றியது; இது 1972-73 முதல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்பட்டது.

பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை தற்போதைய தரவை என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் உடன் ஒப்பிடுகிறது; ஆனால் இரண்டு முறையிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கணக்கெடுக்கப்பட்ட 4,33,339 நபர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலும் வேறுபடுகின்றன. இரண்டு ஆய்வுகள் பரவலாக ஒப்பிடத்தக்கவை என்று சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் இது ஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிடுவது போன்றது என்று கருதுகின்றனர்.

இரண்டு ஆய்வுகளுக்கிடையில் மாதிரி மூலோபாயம் மாறிவிட்டாலும், புள்ளிவிவர நுட்பங்கள் என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் மற்றும் பி.எல்.எஃப்.எஸ் இன் மதிப்பீடுகள் ஒப்பிடத்தக்கவை என்பதை உறுதி செய்கின்றன. மேலும், தொழிலாளர் சக்தியின் நிலையைப் பிடிக்கப்பயன்படுத்தப்படும் பரந்த கேள்விகள் கணக்கெடுப்புகளுக்கு இடையில் மாறாமல் உள்ளன.

வேலையில் பெண்கள்

கடந்த 1993 ஆம் ஆண்டில், கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் பணியாற்றினர். 2011-12 வாக்கில், கடைசியாக என்.எஸ்.எஸ். - ஈ.யு.எஸ் நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆக இருந்தது. 2011-12 வரையிலான இருபது ஆண்டுகளில் நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீத புள்ளி குறைந்து, 15% ஆனது.

கடந்த 2017-18 பி.எல்.எஃப்.எஸ் மதிப்பீடுகள் மேலும் சரிவைக் குறிக்கின்றன.கிராமப்புற பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.

ஊதியம் பெறும் பணியாளர்களில் குறைவாக பங்கேற்கும் பெண்கள்

Source: Periodic Labour Force Survey (PLFS) 2017-18

வழக்கமான, சம்பள வேலைகளில் அதிக பெண்கள்

வீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு குறித்த பரந்த எழுத்துகள் இந்த சரிவுக்கு சில காரணங்களை வழங்குகிறது. ஒரு விளக்கம் என்னவென்றால், ‘வருமான விளைவு’ காரணமாக, பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் இருந்து விலகுகிறார்கள். இது கணவரின் வருமானத்தில் அதிகரிப்பு ஆகும், இது வீட்டு வருமானத்தை உயர்த்துகிறது (Kapsos et al., 2014). மற்றொரு காரணம் என்னவென்றால், பெண்களின் வீட்டு மற்றும் குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் தொழிலாளர் சந்தையில் பங்கேற்பதை பெண்களை தடுக்கின்றன (சவுத்ரி மற்றும் வெரிக், 2014).

உயர் கல்வியைத் தொடர தொழிலாளர் தொகுப்பில் இருந்து பெண்கள் விலகுவதாக சிலர் வாதிடுகின்றனர் (கிங்டன் மற்றும் உன்னி, 2001), மற்றவர்கள் பெண்களுக்கு நல்ல வேலைகள் இல்லை என்று வாதிடுகின்றனர் (Chatterjee et a., 2015).

இருப்பினும், உயர்திறன் கொண்ட படித்த பெண்கள், நகரங்களில் சிறந்த வேலைகளை கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன: நகர்ப்புற தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்கும் சில பெண்கள் வழக்கமான, சம்பள வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் தொழிலாளர் தொகுப்பில் உள்ள அனைத்து பெண்களில், 35.6% பேர் நகர்ப்புறங்களில் வழக்கமான சம்பள பிரிவில் இருந்தனர். 2017 வாக்கில், அவர்களின் பிரதிநிதித்துவம் 52.1% ஆக உயர்ந்தது.ஆகவே, பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை, பெண்களில் அதிகரித்து வரும் பங்கு இப்போது சுயதொழில் செய்பவர்கள் அல்லது சாதாரண தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகக் காட்டுகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு, 2004 முதல் 2017 வரை நகர்ப்புறங்களில் தொழிலாளர் தொகுப்பில் அவர்களின் பங்கு 47.7% இல் இருந்து 34.7% ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், சாதாரண தொழிலாளர்களில் பெண் தொழிலாளர்களின் பங்கு 16.7%இல் இருந்து 13.1% ஆக குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கிராமப்புறங்கள் இதேபோன்ற வடிவத்தைக் கண்டன, வழக்கமான, சம்பள பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தது மற்றும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவு ஏற்பட்டது. வழக்கமான வேலையில் பெண்களின் இந்த உயரும் பங்கு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த உயர்வு இருந்தபோதிலும், வழக்கமான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

பெண்கள் பங்கேற்கும்போது, அவர்கள் வழக்கமான சம்பளத் தொழிலாளர்களாக அதிகளவில் பணியாற்றுகிறார்கள்

Source: Periodic Labour Force Survey (PLFS) 2017-18

நாங்கள் பிரதிநிதித்துவ குறியீட்டை- ஆர்.ஐ. (RI) - வேலைவாய்ப்பு வகையிலான ஆண்கள் அல்லது பெண்களின் பங்கின் விகிதம் முழு தொழிலாளர் தொகுப்பிலும் அந்த பாலினத்தின் பங்கால் வகுக்கப்படுகிறது - வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்துகிறோம்.

விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருந்தால், இதன் பொருள் குழு குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விகிதம் அந்த வேலைவாய்ப்பு பிரிவில் குழுவின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைக் குறிக்கிறது.

சுயதொழில் மற்றும் சாதாரண வேலை வகைகளில் முறையே 2.23 மற்றும் 1.61 என்ற ஆர்.ஐ. உடன் பெண்கள் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். இருப்பினும், வழக்கமான வேலைவாய்ப்பு வகைகளில், பெண்கள் 0.9 இன் ஆர்.ஐ. உடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

எனவே, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்யப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது சாதாரண தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வருவாய்

பி.எல்.எஃப்.எஸ் சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவைப் பிடிக்க ஒரு கேள்வியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்பவர்கள் என்பதால், முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான கூடுதலாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.

வழக்கமான, சம்பள பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி வருவாயின் வித்தியாசமாக அளவிடப்படும் மூல பாலின இடைவெளி, கிராமப்புற குடியிருப்புகளில் ஆண்கள் ரூ .4,594.5 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ .3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் முறையே ரூ. 70 மற்றும் ரூ. 80 சம்பாதிக்கிறார்கள்.

சுயதொழில் செய்பவர்களிடையே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்கள் பிழைகள் புகாரளிக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை மாற்று தரவு மூலங்களுடன் ஒப்பிட்ட பின்னரே கண்டறிய முடியும்.

ஆண்களும் பெண்களும் வைக்கும் நேரம்

பணிபுரிந்த மணிநேரங்கள் பற்றிய தகவல் பி.எல்.எஃப்.எஸ் கேள்வித்தாளில் மற்றொரு கூடுதலாகும். ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையிலான கணக்கெடுப்பு காலத்தின் நான்கு காலாண்டுகளில், ஒரு வாரத்தில் பணி புரியும் சராசரி மணிநேரம் கொண்டு இது அளவிடப்படுகிறது.

கிராமப்புறங்களில் கூடுதல் வேலைக்கு கிடைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் வழக்கமான வேலை வகைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட வேலைக்கு அதிக நேரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுயதொழில் செய்யும் போது, ஆண்கள் வாரத்திற்கு பெண்களை விட 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். வழக்கமான மற்றும் சாதாரண வேலைவாய்ப்புகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை துல்லியமாகப் பிடிக்கப்படாததால், அவர்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதை இது குறிக்கவில்லை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் செலுத்தப்படாத பங்களிப்பைப் புரிந்துகொண்ட பிறகே, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

நாம் இப்போது என்.எஸ்.எஸ். நேர பயன்பாட்டு கணக்கெடுப்புகளின் தரவுக்காக காத்திருக்கிறோம். வெளியிடப்பட்டதும், ஆண்களும் பெண்களும் பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவான கணிப்புகளை முன்வைக்க இது உதவும்.

இது, இந்திய தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கை விளக்க முயற்சிக்கும், எங்களின் இரண்டு பகுதிகள் கொண்ட தொடரில் இது முதல் பகுதியாகும்.

(ஷிபு மற்றும் ஆபிரகாம், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.