நியூயார்க்: செப்டம்பர் 27, 2019 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசு 11 கோடி கழிப்பறைகள் கட்டியுள்ளதாகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் எதிராக ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாகவும் கூறி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக இந்தாண்டு மே மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றினார். மோடி தனது 18 நிமிட உரையின் முதல் பாதியை, காலநிலை மாற்றம் குறித்து பேசுவதற்கு முன்பு, தனது அரசின் வெற்றி, சமுதாயத்தை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றியமைக்கிறது மற்றும் உலகளாவிய பன்முகத்தன்மையின் அவசியம் பற்றி விளக்கினார்.

மோடியின் ஐ.நா. உரை, அவரது ஒருவார அமெரிக்க பயணத்தின் முடிவில் வந்துள்ளது; காலநிலை அவசர உச்சி மாநாட்டில் பேசுவதற்கு முன், டெக்சாஸின் ஹூஸ்டன் நகர கால்பந்து மைதானத்தில் 50,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் சேர்ந்து உரையாற்றியது, தூய்மை இந்தியா திட்டத்திற்காக கேட்ஸ் அறக்கட்டளை விருதை பெற்றது உள்ளிட்டவற்றில் அவர் பங்கேற்றார்.

இந்தியர்களுக்கு 11 கோடி புதிய கழிப்பறைகளைக் கட்டுவதில் தனது அரசு பெற்றிருக்கும் வெற்றியில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும் என்று, ஐ.நா. உரையில் மோடி கூறினார். தமது அரசு காசநோயை - இது இந்தியாவில் 27 லட்சம் பேரை பாதிக்கிறது - அகற்றுவதில் தமது அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானால் பின்னர் எழுப்பப்பட்ட ஒரு பிரச்சனை குறித்து மோடி மவுனமாகவே இருந்தார், அது: காஷ்மீர்.

ஐ.நா பொதுச் சபையில் தனது முதல் உரையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அரை மணி நேரம் அதிகமாகவே, எழுதி வைக்காமல் காஷ்மீர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய்வற்றை மையமாகக் கொண்டு பேசினார்.

கானின் பரபரப்பான பேச்சு மற்றும் அணுசக்தி போர் என்ற அச்சுறுத்தல் என்பதால், இந்தியாவின் கூர்மையான எதிர்வினையை ஈர்த்தது; அது, பேச்சை "கண்மூடித்தனமாக இருந்தது, ஆனால் ராஜதந்திரரீதியாக அல்ல" என்று கருத்து தெரிவித்தது.

மோடியின் கவனம்: அரசின் வெற்றிக் கதைகள் பற்றியது

மோடியின் பேச்சு இந்தியா மற்றும் அவரது அரசின் முதன்மை திட்டங்களை மையமாகக் கொண்டிருந்தது.

37 கோடி ஏழை இந்தியர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளை தொடங்க அரசு உதவியதாகவும், அதன் குடிமக்களுக்காக மிகப்பெரிய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைத் தொடங்குவதாகவும், ஊழலை தடுத்த வகையில் 20 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியதாகவும் மோடி கூறினார்.

தனது உரையில் மகாத்மா காந்தி, கவுதம புத்தர், சுவாமி விவேகானந்தர் மற்றும் தமிழ் கவிஞர் கனியன் பூங்குன்றனார் ஆகியோரை அவர் மேற்கோள்காட்டினார்.

அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், “உலகுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டுகிறது” என்று மோடி கூறினார்; இது, 50 கோடி மக்களுக்கு ஆண்டு சுகாதார பாதுகாப்புக்காக ரூ.5,00,000 தரும் திட்டத்தை அவர் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவில் இருந்து ஒழிப்பதற்கான அரசின் இலக்கைப் பற்றி அவர் பேசினார், உலகின் பிற பகுதிகளும், 2030 காலக்கெடுவுக்குள் இதை விரட்ட இலக்கு கொண்டுள்ளன.

மோடி தனது அரசாங்கத்தின் புதிய வீட்டுத்திட்டம் குறித்து பேசினார். "2022 ஆம் ஆண்டில், இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஏழைகளுக்காக 2 கோடி வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றம் குறித்து, உலகில் மிகக் குறைந்த தனிநபர் உமிழ்வுகளில் ஒன்றைக் கொண்டிருந்த போதிலும், தற்போதைய 80 ஜிகாவாட்டில் இருந்து 450 ஜிகாவாட் (GW) ஆக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளதாகவும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும் மோடி கூறினார்.

மோடியும் பன்முகத்தன்மை குறித்தும் பேசினார். "ஒரு பிரிந்து கிடக்கும் உலகம் யாருடைய நலனுக்காகவும் இல்லை", என்று அவர் கூறினார். "இந்த புதிய சகாப்தத்தில், நாம் பலதரப்பினருக்கும் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கும் புதிய திசையை வழங்க வேண்டும்" என்றார்.

வெற்று நாற்காலிகளுடன் பேச்சு

தலைவர்கள் பெரும்பாலும் நாட்டின் பிரதிநிதிகளுடன் தான் பேசுகிறார்கள், கிட்டத்தட்ட ஒருபோதும் மற்ற தலைவர்களிடம் இல்லை.சிறிய நாடுகள் தங்களது சொந்த பிரதிநிதிகளுடன் உரையாடுவதை காணலாம். பிரதமர் நரேந்திர மோடி பேசிய பின்னர், இந்த படம் செப்டம்பர் 27 அன்று எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் உலகத் தலைவர்கள் ஐ.நா பொதுச் சபைக்கு வந்து ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள்; உலகளாவிய செயல் திட்டத்தை வகுக்க வருகிறார்கள். ஆனால் பொதுச் சபையில் பேச்சுகள் மூலம் உட்கார்ந்து, இந்தியாஸ்பென்ட் செய்ததைப் போல, பெரும்பாலும் கேட்போர் குறைவாகவே உள்ளனர் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்தியா ஸ்பெண்ட் செய்து பார்த்ததில், பொதுச் சபையின் உரைகளை உட்கார்ந்து கேட்பவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவாகவே உள்ளது தெளிவாகிறது.

சில நேரங்களில் சில நாடுகளின் தலைவர்கள் பேசும்போது, பெரும்பாலும் அவர்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருப்பார்கள் என்பதை, வெளியேசொல்ல விரும்பாத ஐ.நா. அதிகாரி ஒருவர்ஒப்புக் கொண்டார்.

உதாரணமாக, மோடி பேசியபோது, அந்த அறையில் வேறு எந்த உலகத் தலைவரும் இல்லை. இருப்பினும் நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து தலைவர்களும் தங்கள் பேச்சு முடிந்ததும் வெளியேறிவிடுகின்றனர்.

சிறிய நாடுகளின் தலைவர்கள் பேசும்போது, அது பெரும்பாலும் வெற்று நாற்காலிகள் தான் காணப்பட்டன. ஐ.நா பொதுச் சபையில் தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன, ஆனால் நிகழ்ச்சி நிரல் ஐ.நா. அதிகாரிகளால், "பிரம்மாண்டம்" என்று குறிப்பிடும், அதில் இந்தியாவும் கருதப்படக்கூடும் ஒரு சில நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டது.

சிறிய நாடுகள் பெரும்பாலும் அவசர மற்றும் சிக்கலான பிரச்சினைகளை எழுப்புகின்றன. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பல தலைவர்களும், தென்னாப்பிரிக்காவிற்குள் நிலப்பரப்புள்ள நாடான லெசோதோவும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் பற்றிப் பேசின, உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோள்களை விடுத்தன, லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கான வழியில் இருந்து கூட வெளியேறின.

"நாம் பசுமை இல்ல வாயுக்களை 10% மற்றும் வெளிப்புற உதவியைப் பயன்படுத்தி 25% வரை குறைப்போம்" என்று லெசோதோவின் பிரதமர் தாமஸ் மோட்சோஹே தபானே கூறினார்.

பல சிறிய தீவு நாடுகள்-, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் "வெறுமனே" உட்கார்ந்திருக்காமல், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும்பாலும் "முன்னணியில்" இருப்பதாக ஐ.நா.வும் கூட ஒப்புக் கொண்டுள்ளது.

காஷ்மீர்: மோடி புறக்கணித்தார், கான் எழுப்பினார்

காஷ்மீரில் அமலில் உள்ள தகவல் தொடர்பு தடையை உடனடியாக நீக்குமாறு,பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.

காஷ்மீர் குறித்து - ஆகஸ்ட் 5, 2019 முதல், அந்த பிராந்தியத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததில் இருந்து 80 லட்சம் பேர் மொபைல்போன், இணையதள தடைகளை எதிர்கொண்டுள்ளனர்- மோடி மவுனம் சாதித்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் கான், காலநிலை மாற்றம், இஸ்லாமோபோபியா மற்றும் ஏழை நாடுகளில் இருந்து சட்டவிரோத இடமாற்றம் போன்ற பிற விஷயங்களில் இதை எழுப்பினார்.

காஷ்மீரில் "மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும்" என்று, இந்தியாவை கான் கேட்டுக்கொண்டார், இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா நடத்திய பாலாக்கோட் தாக்குதல்கள், "10 மரங்களை அழித்தன; நாம் வளர்க்க வேண்டிய அத்தகைய மரங்களை அழித்தது மிகவும் வேதனையாக இருந்தது" என்றார்.

பாகிஸ்தானின் காலநிலை மாற்றம், இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய நதிகள், இமயமலை பனிப்பாறைகளால் பிராந்தியத்தில் நீர் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கான் பேசினார்.

கான் தனது உரையின் போது குஜராத் கலவரம் மற்றும் காஷ்மீரைக் குறிப்பிடும்போது “படுகொலைகள்” மற்றும் “இரத்தக்களரி” போன்ற சொற்களை பயன்படுத்தியதை இந்தியா கடுமையாக எதிர்த்தது, இதற்கு பதிலளிக்கும் விதமாக, இது “இடைக்கால மனநிலையின்” பிரதிபலிப்பு என்று கூறியது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தரும் ஆதரவு மற்றும் அங்கு சிறுபான்மையினரை நடத்துவது குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி பணியாளர்; மற்றும் ரெஹாம் அல்-ஃபர்ரா மெமோரியல் ஜர்னலிசம் பெல்லோஷிப் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து கட்டுரை வழங்கியுள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.