மும்பை: கோவிட் -19 நோயால் இறந்த 65 வயது நபரின் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காணச்சென்ற மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் குழு, ஏப்ரல் 2ம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் தாக்கப்பட்டது. ஆரோக்கியமாக உள்ள முஸ்லிம்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் உடலில் வைரஸ் செலுத்தப்படுவதாகக்கூறி, போலி வீடியோ மற்றும் தகவலால் ஏற்படும் உடல் ரீதியான ஆபத்துகளின் வெளிப்பாடுகளையே, இவை மீண்டும் வலியுறுத்துகின்றன.

இந்தியாவில் தவறான தகவல்களை பற்றிய மிச்சிகன் பல்கலைக்கழக அறிஞர்கள் ஆய்வு நடத்தி, ஏப்ரல் 18, 2020ல் அதன் முடிவை வெளியிட்டனர். அதில், நீக்கப்பட்ட செய்திகள், கட்டுரைகளின் எண்ணிக்கை, குறிப்பாக மார்ச் 22, 2020ல் பிரதமர் நரேந்திர மோடியால் ஜனதா ஊரடங்கு உத்தரவும், தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில் கோவிட் 19 பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இது அதிகரித்துள்ளதாக கூறுகிறது.

கடந்த 2020 ஜனவரி முதல் வாரத்தில், வெறும் இரண்டாக இருந்த தவறான தகவல்களின் நிகழ்வுகள், 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் 60 ஆக உயர்ந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இச்சமயத்தில் கோவிட்-19ஐ குணப்படுத்துவது பற்றிய போலி தகவல்கள் குறைந்தாலும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிமிகுதியில் உள்ளதாக கூறும் தகவல்கள் அதிகரித்திருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்து உள்ளது.

டட்டில் சிவிக் டெக்னாலஜி (இது, முதல்முறை மொபைல்போன் பயனர்கள் துல்லியமான தகவல்களை அணுகுவதை நோக்கமாகக் கொண்ட டெல்லியை சேர்ந்த செய்தி அமைப்பு) செய்தி காப்பகத்தில் இருந்த 243 தனித்துவமான தவறான தகவல்களை கண்டறிந்தது. இது, ஜனவரி 23 முதல் ஏப்ரல் 12 வரை, சர்வதேச உண்மை-சரிபார்ப்பு நெட்வொர்க் (ஐ.எஃப்.சி.என்) சான்றிதழ் அளித்த ஆறு உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனங்கள் (ஆல்ட் நியூஸ், பூம் லைவ், ஃபேக்ட்லி, குயின்ட் வெப்கூஃப் மற்றும் நியூஸ் மொபைல் ஃபேக்ட் செக்கர் ) மூலம் சரிபார்க்கப்பட்டு நீக்கப்பட்டன.

பிரதமர் மோடியின் ஜனதா ஊரடங்கு உத்தரவை அறிவிப்பதற்கு முன்பே தவறான தகவல்களின் பரவல் வேகம் அதிகரித்தது. ஆனால் மார்ச் 2020 மூன்றாம் வாரத்தைத் தொடர்ந்து, நீக்கப்பட்ட போலி செய்திகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தது என ஆய்வு காட்டுகிறது.

இந்த ஆய்வின் மூலம், பல்வேறு சமூக ஊடக செயலிகளில் பரவி இருந்த தவறான தகவல்கள் கலாச்சாரம், அரசு, டாக்டர்களின் புள்ளிவிவரங்கள் போன்ற ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 62 போலி கட்டுரைகள் கலாச்சாரத்துடன் தொடர்புடையவை, அவை ஒரு குறிப்பிட்ட சமூக-மத, இனக்குழுவை குறிவைக்கும் செய்திகளாக வரையறுக்கப்பட்டுள்ளன; அதை தொடர்ந்து அரசின் அறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பான 54 போலிச்செய்திகள் வந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Types of Misinformation
Category Instances Definition
Culture 62 Messages with cultural references such as to a religious / ethnic / social group or a popular culture reference
Cure, Prevention & Treatment 37 Messages suggesting remedies (alternative or mainstream), preventive measures, and vaccines-related misinformation
Nature & the Environment 16 Messages that have references to animals and the environment.
Casualty 36 Messages relating to deaths, illness of people in the pandemic, including graphic images of suffering (not including doctored statistics)
Business and economy 15 Messages relating to scams, panic-buying and target businesses with fake positive cases.
Government 54 Messages have government announcements and advisories or refer to police, judiciary, political parties.
Doctored statistics 23 Messages that have exaggerated numbers of positive cases or death counts and fake advisories.

Source: Study on Misinformation (released on April 18, 2020)

தவறான தகவல்களை கையாளுதல்

தொடர்ச்சியான அதிக பகிர்வு அதிகரிப்பால், ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த இரண்டு வகை போலிச்செய்திகள், கலாச்சாரம் மற்றும் அரசு சார்ந்த கட்டுரைகள். இம்முறை முஸ்லிம்கள் மற்றும் கோவிட் 19ஐ சுற்றியுள்ள செய்திகள் மற்றும் காவல் துறையினரின் அடக்குமுறை தொடர்னான கட்டுரைகளும் இதில் அதிகரித்து காணப்பட்டன. போலிச்செய்திகள், கட்டுரைகள் எண்ணிக்கை, 2020 மார்ச் 16 முதல் வாரத்தில் 15 ஆக இருந்து மார்ச் 30ல் தொடங்கிய வாரத்தில் 33 ஆக உயர்ந்துள்ளது; டெல்லியில் நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வு, கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என்று ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு நேர்மாறாக, விபத்து (மரணங்கள் தொடர்பான பயத்தைத் தூண்டும் செய்திகள், மக்களின் துயரம் குறித்த தொற்றுநோய் அல்லது கிராஃபிக் படங்கள்) மற்றும் கோவிட் -19 சிகிச்சையைச் சுற்றியுள்ள போலி செய்திகளின் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 18ல் இருந்து 12 ஆக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"தப்லிக் ஜமாஅத் சம்பவம் குறித்த பகிர்வில், போலிச்செய்திகளின் தொனியில் ஒரு மாற்றத்தைக் கண்டோம் - ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் மையப்பகுத்தி, அவர்கள் "சூப்பர் ஸ்ப்ரெடர்" அதாவது அதிவேகமாக பரப்புவர்கள் என்று குறிவைக்கப்பட்டது," என்று, போலி செய்திகளை கண்டறிந்து வரும் மும்பையை சேர்ந்த பூம் நியூஸ் (Boom News) ஆசிரியர் ஜென்சி ஜேக்கப் தெரிவித்தார். "வகுப்புவாத பதிவுகள் வரும்போது, எழுத்து வடிவம் மட்டுமே பார்வையாளருடன் தேவையான உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்காது. பகிரப்படும் வீடியோ புதியதா அல்லது பழையதா என்பதை சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, நோயை குணப்படுத்துவது பற்றிய பதிவுகளில் எலுமிச்சை நீரைக் குடிப்பதாகக் கூறப்படுகிறது. அதை நம்புவதற்கு நம்மவர்களுக்கு ஒரு படம் தேவையில்லை” என்றார்.

உணர்ச்சிகள் அதிகம், உண்மைகள் குறைவு

விஞ்ஞான ரீதியாக சரிபார்க்கக்கூடிய கருவி, உண்மைகளை விட அடையாளம் மற்றும் உணர்ச்சியைச் சுற்றியுள்ளதாக இருக்க வேண்டும் என்ற தவறான தகவலில் இந்தியா ஒரு கட்டத்தில் நுழைகிறது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. ஆகவே, போலி குணப்படுத்துதல்கள் அல்லது வலியின் (காலப்போக்கில், அவை நீக்கப்பட்டன அல்லது பார்வையாளர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றுகின்றன) போலி உருவங்களை வழங்குவதில் இருந்து தவறான தகவல்கள் சரிபார்க்க கடினமாக இருக்கும் என்ற கலாச்சார கூறுகளுக்கு நகர்ந்துள்ளன.

“பல காரணங்கள் உள்ளன; ஒன்று முற்றிலும் விஷமத்தனம், பொய்களைப் பார்த்து ரசிக்கும் மக்கள் - அவர்களே உருவாக்குகிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள்,” என்று ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ஜாயோஜீத் பால் கூறினார். “மற்றொரு காரணம் அரசியல்; ஒரு குறிப்பிட்ட திட்டம் வெற்றிபெற விரும்புவோரால் இது மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், முற்றிலும் பொருளாதார செயல்பாடும் இதில் உள்ளது, நீங்கள் செய்திகளை வைரலாக்கினால் பணம் தரக்கூடிய இணையதளங்களில் (யூ டியூப் போன்றவை), கிளிக்-பைட்டிங் நபர்களிடம் இருந்து வருவாய் ஈட்டலாம்; மிகவும் தீவிரமான மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு போலி செய்தி ஒலிக்கிறது என்றால் யாரோ ஒருவர் அதைக் கிளிக் செய்வார்" என்றார்.

தவறான தகவல்களின் உலகம் எவ்வாறு செயல்படுகிறது

பல்வேறு வகையான தவறான தகவல்களை வெளியிடுவதற்கு வெவ்வேறு வகையான ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, ‘விபத்து’ பிரிவில் தவறான தகவல்கள் வீடியோ கிளிப்புகள் போன்ற காட்சிகளின் உள்ளடக்கத்தை அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்; ஏனெனில் உடல் ரீதியான எதிர்வினையை அதாவது பெரும்பாலும் பயம் அல்லது வெறுப்பை தூண்டுவதே இதன் குறிக்கோள். மறுபுறம், தொற்றை குணப்படுத்துதல் மற்றும் தவறாக வழிமுறைகளை தெரிவிக்கும் புள்ளி விவரங்கள், ட்வீட்டுகள் நிறைய பயன்படுத்துகின்றன, ஏனெனில் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் தவறாக வழிநடத்துவதே இதன் நோக்கம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கலாச்சாரம்’ அல்லது ‘விபத்து’ என வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கம், தற்போதைய பேச்சுக்கேற்றவாறு பழைய உள்ளடக்கத்தை மீண்டும் உருவாக்கியது என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த இரண்டு வகைகளும், பார்வையாளரை உணர்ச்சி ரீதியாக பாதிக்க முற்படுவதால், அத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தேடுகிறார்கள் மற்றும் தவறான தலைப்புடன் அதை மீண்டும் உருவாக்குகிறார்கள், ஏனெனில் இது அதிக அதிர்வலைகளை கொண்டிருக்கக்கூடும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

துணை போகும் பிரதான ஊடகங்கள்

செய்தித்தாள்கள் மற்றும் செய்தி சேனல்கள் உட்பட பல முக்கிய ஊடக நிறுவனங்கள் பரவலாக பரப்பப்பட்ட தவறான தகவல்களை நம்பி வெளியிட்டுள்ளதை ஆய்வுகள் காட்டின. பொதுநபர்கள் கூட, தவறான தகவல்களை நீக்காமல் அப்படியே பகிர்கின்றனர். உதாரணமாக, தொழிலதிபர் கிரண் மஜும்தார்-ஷா, தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் (அர்ஜெண்டீனா, அங்கோலா, ஆஸ்திரேலியா) கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்; அவரது செயல்பாடு, ஆல்ட் நியூஸ் வெளியிடுவதற்கு முன்னும் பின்னும் ஆன்லைனில் பரவலான சில நம்பகத்தன்மைக்கு வழிவகுத்தது.

பிரதான ஊடகங்கள் ஏன் தவறான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன என்பதற்கான காரணங்களை, இந்த ஆய்வால் தெளிவான குறிப்பிட முடியவில்லை என்றாலும், சிலர் மிகவும் போட்டி நிறைந்த ஊடக சுற்றுச்சூழல் மற்றும் ஆசிரியர் குழுவில் தகுதிவாய்ந்தவர்கள் இல்லாததால் தரம் குறைந்து போகுதல் போன்றவை இருக்கக்கூடும் என்று அது சுட்டிக்காட்டியது. "இருப்பினும், தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், தவறான தகவல் வேகமாக பரவுகிறது என்பது தான்," என்று, இந்த ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். "தவறான தகவல் அல்லது பரபரப்பூட்டும் தலைப்புச் செய்திகளால் படிக்கத் தூண்டுவதற்காக இவ்வாறும் செய்யக்கூடும்" என்றனர். இத்தகைய சூழ்நிலையில், "பிரதான செய்தி ஆதாரங்கள், குறிப்பாக முஸ்லீம்களை தூண்டிலிட உடந்தையாக உள்ளன" என்றனர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி பங்களிப்பாளர். பூஜா வஸிஷ்ட் அலெக்சாண்டர், கட்டுரையை திருத்தினார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.