ஏழைக்கு சமையல் காஸை மலிவாக்கி, பணக்காரர்களுக்கு மானியம் நீங்குங்கள்: ஆய்வு
புதுடெல்லி: இந்தியாவின் புதிதாக இணைப்பு பெற்ற 7.3 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு திரவ பெட்ரோலிய எரிவாயு- எல்.பி.ஜி. (சமையல் எரிவாயு) சிலிண்டர்களுக்கான மானியம் என்பது, ஒரு சிலிண்டரின் விலையில் ஒரு வீட்டின் மாதச்செலவில் 4%ஆக கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று, ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஏழை வீடுகளுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்பட வேண்டும்; அத்துடன் பணக்காரர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என, கூட்டு தூய்மையான காற்று கொள்கை மையம்- சி.சி.ஏ.பி.சி (CCAPC), ஜூன் 15, 2019இல் வெளியிட்ட “உஜ்வாலா 2.0” என்ற கொள்கை சுருக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு மாற்றங்களாலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் வாயுவை அவர்களின் முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற உதவக்கூடும். மேலும், எளிதில் கிடைக்கக்கூடிய உயிரி எரிபொருள்களான விறகு மற்றும் மாட்டு சாணத்தை எரிக்கக்கூடாது என்று, , கொள்கை சுருக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
7.3 கோடி மில்லியன் எல்.பி.ஜி. இணைப்புகளை (ஜூலை 14, 2019 நிலவரப்படி) வழங்கி இருப்பதன் மூலம், உஜ்வாலா திட்டம், வரும் 2020 ஆம் ஆண்டில் ஏழை வீடுகளுக்கு 8 கோடி இணைப்பு என்ற இலக்கில் 91.25%ஐ அடைந்து உள்ளது. இது 2014 ஆண்டுடன் ஒப்பிட்டால், 35% புள்ளி உயர்வாகும். நுகர்வோர் எண்ணிக்கை உயர்ந்த போதிலும், சமையல் எரிவாயு நுகர்வு 2017 உடனான இரண்டு ஆண்டுகளில் வெறும் 0.8% மட்டுமே அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 6% தான் திஅகரித்துள்ளது என, ஏப்ரல் 22, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
உஜ்வாலா திட்ட பயனாளிகளில் ஆண்டுதோறும், தனிநபர் எல்.பி.ஜி. மறு நிரப்பல் என்பது 3.4 பேர் மட்டுமே செய்துள்ளனர் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடுகளில் சமையல் வாயு பயன்பாடு முழுமையாக மாற்றுவதற்கு, சி.சி.ஏ.பி.சி கருத்து சுருக்கத்தின்படி, ஆண்டுக்கு குறைந்தது ஒன்பது சிலிண்டர்கள் தேவை.
உஜ்வாலா திட்ட பயனாளிகள் சமையல் எரிவாயுவிற்கு இன்னமும் முழுதாக மாறவில்லை; ஏனெனில் எல்.பி.ஜி. மறுநிரப்பல்கள் விலை அதிகம். இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு பங்கு வாழும் கிராமப்புற பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில்- இன்னும் திட எரிபொருள் பயன்படுத்தும் சுமார் 85% உஜ்வாலா பயனாளிகள் வசிப்பதாக, 2019 ஏப்ரல் 30 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
இது உஜ்வாலா திட்டத்திலுள்ள இடைவெளிகளால் ஏற்படுகிறது. ஏழை வீடுகளுக்கு மானியம் அதிகரிப்பு, மேலும் மானியங்களை சிறப்பாக ஏழைகளை நோக்கி இலக்காக வைத்தன் போன்றவற்றால் இந்த இடைவெளிகளை குறைக்க வேண்டுமென, சி.சி.ஏ.பி.சி கொள்கை சுருக்கம் பரிந்துரைத்தது.
இந்தியாவின் சுகாதாரச்சுமையை குறைக்க, உஜ்வாலா திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது முக்கியம். சமையல் மற்றும் வீடுகளுக்கான விறகு, சாணம் மற்றும் விவசாய எச்சங்களை எரிப்பதால் வெளிப்படும் மாசு, நாட்டில் வெளிப்புற துகள்கள்- பி.எம் (PM) மாசுபாட்டில் 25-30% பங்களிப்பு செய்கிறது. வீட்டு காற்று மாசுபாடு நேரடியாக வெளிப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 480,000 இந்தியர்கள் இறக்கின்றனர். மேலும் 270,000 பேர் வெளிப்புறங்களில் மறைமுக வெளிப்பாட்டிற்கு ஆளாகின்றனர் என்று கொள்கை சுருக்க குறிப்பு கூறுகிறது.
சமையல் வாயுவை பயன்படுத்துவது அத்தகைய இறப்புகளைத் தடுக்க உதவுகிறது; அத்துடன் உயிர் எரிபொருட்களின் வெளிப்பாட்டின் விளைவாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசு செலவினங்களை குறைக்கலாம்.
ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மூலம், சுகாதார செலவினங்களில் ரூ.3,800 முதல் ரூ.18,000 வரை அரசால் சேமிக்க முடியும். சமையல் எரிவாயு பயன்பாடு, வீட்டு உயிரி எரிபொருளை முழுவதுமாக அகற்றும் போது, நாட்டின் 597 மாவட்டங்களில் 58% பாதுகாப்பான காற்றை சுவாசிக்கும் என்று அது தெரிவிக்கிறது.
காஸ் மானியத்திற்கான ஒதுக்கீடு, 2019-20 பட்ஜெட்டில் 63% அதிகரிப்பு
சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 - எஸ்.இ.சி.சி (SECC) ஆல் அடையாளம் காணப்பட்ட 8.73 கோடி பேரில் 5 கோடி ஏழை குடும்பங்களை இலக்காக வைப்பதே 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உஜ்வாலா திட்டத்தின் ஆரம்ப குறிக்கோளாக இருந்தது.
பிப்ரவரி 2018இல் இந்த இலக்கு, வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 8 கோடி ஏழை குடும்பங்களை இலக்காக வைக்கும் வகையில் திருத்தப்பட்டது. அனைத்து பட்டியலின தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்.சி) / பட்டியலின பழங்குடி (எஸ்.சி.) குடும்பங்கள், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்) (பி.எம்.ஏ.வி.ஜி), அந்தோத்ய் அன்ன யோஜனா (ஏஏஒய்), மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகள் (எம்பிசி), தேயிலை முன்னாள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆகியவற்றின் பயனாளர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தோட்ட பழங்குடியினர், தீவுகளில் வசிக்கும் மக்கள் போன்றவர்கள், எஸ்.இ.சி.சி பட்டியலுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.
2019-20 பட்ஜெட்டில், சமையல் எரிவாயு மானியத்திற்காக அரசு ரூ.32,989 கோடியை செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது, 2018-19 இன் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 63% அதிகம் என்று இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு கூறுகிறது.
Cooking Gas Subsidy Budget 2019-20 | |||
---|---|---|---|
FY 2018-19 (Revised) | Budget FY 2019-20 | % change | |
Direct Benefit Transfer - cooking gas | 16,477.80 | 29,500 | 79.02% |
Cooking gas Connection To Poor Households | 3,200 | 2,724 | -14.87% |
Other Subsidy Payable Including For North Eastern Region | 513.38 | 674 | 31.28% |
Project Management Expenditure | 92 | 91 | -1.08% |
Total cooking gas Subsidy | 20,283.18 | 32,989 | 62.64% |
Source: India Budget
ஏழை வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்புக்கு ஒதுக்கீடு 15% சரிந்த நிலையில், நேரடி பயன் பரிமாற்றம் (DBT) ஒதுக்கீடு 79% அதிகரித்துள்ளது.
"ஒதுக்கீடு அதிகரிப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த அதிகரிப்பு, நேரடியாக பயனாளிகளின் அதிகரிப்புக்கான ஒரு செயல்பாடாக இருக்கக்கூடும் ”என்று டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான கொள்கை ஆராய்ச்சி மையம் - சிபிஆர் (CPR) சேர்ந்த சந்தோஷ் ஹரிஷ் கூறினார். ஹரிஷ் சி.சி.ஏ.பி.சி.யின் ஆசிரியராகவும் உள்ளார்.
ஏழை வீடுகளுக்கு சமையல் எரிவாயு மானியத்தை அதிகரித்தல்
உஜ்வாலா திட்டத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழே -பிபிஎல் (BPL) உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, அவர்களின் முதல் சமையல் எரிவாயு இணைப்பை அரசு வழங்குகிறது. இந்த இணைப்பில் ஒரு சிலிண்டர், ரெகுலேட்டர் மற்றும் இணைப்பு குழாய் அடங்கும்.
இணைப்பிற்கான முன்பண செலவு ரூ.1,600ஐ, சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு அரசே செலுத்துகிறது. மறு நிரப்பல்களுக்கு வழங்கப்படும் ரூ.200 - ரூ. 300 மானியத்தில் இருந்து வரும் மாதத்தவணைகளில் இது பின்னர் அந்தந்த வீடுகளிடம் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இருப்பினும், இங்கே முக்கியமான் ஒன்று: எரிவாயு ஏஜென்சிகளுக்கு ரூ.1,600 தொகை கிடைக்க பெறும் வரை, இந்த ஏழை வீடுகளுக்கு அவர்களது சிலிண்டருக்கான மானியம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படாது.
இந்த முன்பண கடனை திருப்பிச் செலுத்த, ஏழை வீடுகளுக்கு ஆறு முதல் 10 சிலிண்டர் ரீபில் வரை ஆகக்கூடும். இதற்கிடையே, சந்தை விகிதங்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், மறு நிரப்பல்களை அவர்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சர்வதேச எரிபொருள் சந்தையில் விலைகள் மாறுவதால் சிலிண்டருக்கு ரூ.700 முதல் ரூ.900 வரை செலவாகும். இது ஏழைக் குடும்பங்களுக்கு உகந்ததாக இருக்க முடியாதது; ஏனெனில் இது அவர்களின் மாதாந்திர குடும்ப வருமானத்தில் 25% வரை செலவாகிறது என, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் கள நிலவர அறிக்கையை, இந்தியா ஸ்பெண்ட் அதன் ஏப்ரல் 2019 வெளியிட்டிருந்தது. அதை நீங்கள் இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
உஜ்வாலா திட்ட பயனாளிகள், சிலிண்டர் மறு நிரப்பல்களுக்கு சந்தை நிலவர தொகை செலுத்த வேண்டியது என்பது, இத்திட்டத்தின் வடிவமைப்பில் ஒரு “கட்டமைப்பு” குறைபாடு மற்றும் ஏழைக் குடும்பங்கள் தங்கள் சிலிண்டர் பயன்பாட்டைத் தக்கவைக்க முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் என்று, எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வார இதழின் 2018 கட்டுரையை மேற்கோள் காட்டி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதன் பொருள் உஜ்வாலா திட்டத்தில் ஏழைக் குடும்பங்கள், கடன் திருப்பிச் செலுத்தும் காலத்திற்குள், பணக்கார குடும்பங்களை விட சிலிண்டர் மறு நிரப்பல்களுக்கு அதிக கட்டணம் செலுத்துகின்றன என்பதாகும்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 2018 முதல், இந்த இடைவெளியை குறைக்க அரசு முயற்சிக்கிறது; ஆறு மறு நிரப்பல்கள் அல்லது ஒரு வருடம் வரை வீடுகள் முன்பண கடனை திருப்பிச் செலுத்துவதை தள்ளிவைக்க அனுமதிக்கிறது.
கடன் திருப்பிச் செலுத்திய பிறகும், ஒரு ஏழை குடும்பம் முதலில் மறு நிரப்பல் சிலிண்டரின் முன்பண செலவைச் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் வடிவமைப்பு குறைபாடு காரணமாக மானியம் பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். "எனவே, மானியமில்லாத சமையல் எரிவாயு விலை அதிகமாக இருக்கும்போது, ஏழை குடும்பம் வாங்கும் நேரத்தில் முழு சந்தை விலையையும் செலுத்துவது கடினம் என்று கருதுகிறது மற்றும் அரசாங்க மானியம் நுகர்வோர் வங்கியில் விரைவாக டெபாசிட் செய்யப்பட்டாலும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறைக்கப்படுகிறது” என்று கொள்கை சுருக்க குறிப்பு கூறுகிறது.
எனவே, மானியத்தின் அளவு என்பது, சமையல் எரிவாயுவிற்காக செலவழிக்கும் வீட்டின் விருப்பத்தின் அடிப்படையில் - ஏழை குடும்பத்தின் மாத வருமானத்தில் 4% இருக்க வேண்டுமென்ற, சந்தை பகுப்பாய்வு நிறுவனம்(CRISIL) இன் 2016 கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறியது.
உதாரணமாக, 2019 மார்ச்சில், 14.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ .701 ஆக இருந்தபோது, மானிய விகிதம் ரூ.495 ஆக இருந்த போது, மத்திய அரசு ரூ. 206 மானியத்தையே வழங்கியது. இந்த மானிய விகிதம் ரூ .350 ஆக குறைந்துவிட்டால், ஏழை குடும்பங்கள் சமையல் எரிவாயுவை முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற வாய்ப்புள்ளது என்று, கொள்கை சுருக்க குறிப்பு தெரிவிக்கிறது.
சமையல் எரிவாயு மானியத்தை ஏழை வீடுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்துவது உதவுமா?
கொள்கை சுருக்க குறிப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள கணக்கெடுப்பு (கீழே உள்ள அட்டவணையை காண்க), சமையல் எரிவாயு விலைகள் அவற்றின் சமையல் எரிவாயு செலவுகளை 4% க்குள் வைத்திருக்க, சமையல் எரிவாயு விலைகள் தற்போதைய மானிய விலையான கிலோவுக்கு 495 ரூபாயை விடக் குறைவாக இருக்க வேண்டும் என்பதை, ஒட்டுமொத்த மாத செலவு காட்டுகிறது. இருப்பினும், பணக்காரருக்கான மதிப்பீடு அளவு, அதே கணக்கீடு இந்த வீடுகளுக்கான மானியங்கள் தேவையில்லை என்று கூறுகிறது.
சுருக்க குறிப்பு மேலும் காட்டுவது, அட்டவணையாக:
- மாதாந்திர வருமானத்தை பொறுத்தவரை, ஒருவர் பணக்காரர் என்ற மதிப்பீட்டில் இருந்து, ஏழைக்கான மதிப்பீட்டிற்கு நகரும்போது சமையல் எரிவாயுக்கான சதவீத செலவு அதிகரிக்கிறது.
- முதல் மூன்று மதிப்பீடுகளில் உள்ள வீடுகளுக்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, இந்த வீடுகள் சமையல் எரிவாயுவை பயன்படுத்த தயாராக இருக்கும் விலையை விடக் குறைவு. எனவே, அந்த வீடுகளுக்கான மானிய விலையை அதிகரித்தாலும், அவர்கள் தொடர்ந்து சமையல் எரிவாயுவை வாங்குவர்.
- மறுபுறம், சிலிண்டர் இணைக்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கையுடன், கீழிருந்து மேலாக இரு மதிப்பீடுகளுக்கான மானிய விலை, அந்த வீடுகள் சமையல் எரிவாயு வாங்குவதற்கு செலுத்த தயாராக இருக்கும் விலையை விட அதிகமாக உள்ளது. இந்த வீடுகளில் சமையல் எரிவாயுவுக்கு பணம் செலுத்த முடியவில்லை, மேலும் விலை அதிகரித்தால் சமையல் வாயு முறையில் இருந்து விலகிச் செல்லக்கூடும்.
எனவே, மானிய விகிதத்தை குறைப்பதால் உலகளாவிய மானியத்தை வழங்குவது கைவிடப்பட வேண்டும். ஏனென்றால் மானியத்திற்கான ஒட்டுமொத்த தொகை, ஏராளமான பயனாளிகள் இடையே பகிரப்படுகிறது. உலகளாவிய மானியமும் "பிற்போக்குத்தனமானது". ஏனெனில் இது சமையல் எரிவாயுவை "ஏழைகளுக்கு கட்டுப்படுத்த முடியாதது, அதே நேரத்தில் நன்மைகள் ஒப்பீட்டளவில் செல்வந்தர்களுக்கு கிடைக்கிறது" என்று கொள்கை சுருக்க குறிப்பு கூறுகிறது.
மானிய இலக்கை மேலும் சிறப்பாக எட்ட, 2015 ஆம் ஆண்டில் மானியம் “விட்டு கொடுத்தல்” என்ற பிரச்சாரம் நடவடிக்கைகளை அரசு தொடங்கியது. இதன் விளைவாக ஒரு கோடிக்கும் அதிகமான நடுத்தர குடும்பத்தினர் தங்களது மானியம் பெறுதலை திரும்ப ஒப்படைத்தன. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் தருவதை அரசு விலக்கிக் கொண்டது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் "ஏழைகள் மீது மானியங்களை முழுவதுமாக மையப்படுத்த போதுமானதாக இல்லை", ஏனெனில் வருமான வரம்பு மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான சமையல் எரிவாயு நுகர்வோர் மானியத்தை பெற இன்னும் உரிமை கொண்டுள்ளனர்.
எனவே, உஜ்வாலா திட்டத்தில் வீடுகளுக்கு இரு அடுக்கு, வேறுபட்ட விலை நிர்ணயம் இருக்க வேண்டும்: எஸ்.இ. சி.சி பட்டியலில் இருந்து அடையாளம் காணப்பட்ட ஏழைகளுக்கு குறைந்த விலை (அல்லது அதிக மானியம்); மற்றும் பிற நுகர்வோருக்கு அதிக விலை (குறைந்த அல்லது மானியம் இல்லாமை) என்று, கொள்கை சுருக்க குறிப்பு பரிந்துரைக்கிறது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வீடுகளுக்கு சமையல் எரிவாயு மானியத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தினால், 65% க்கும் அதிகமான நுகர்வோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இந்த இலக்கு ஏழை குடும்பங்களுக்கான மானிய அளவு அதிகரித்தாலும், அரசின் மீதான நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும் என்று கொள்கை சுருக்கம் தெரிவிக்கிறது.
உதாரணமாக: ஒன்பது சிலிண்டர்களில் சமையல் எரிவாயு மானியம், சிலிண்டருக்கு ரூ.350 (மேலே பரிந்துரைக்கப்பட்டபடி) வீதம், 8.73 கோடி எஸ்.இ.சி.சி குடும்பங்களுக்கான அரசின் நிதிச்சுமை ரூ.27,500 கோடி (4 பில்லியன் டாலர்) நிதிச் சுமையை குறைக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இது தற்போதைய மானியச்சுமை சுமார் 65,000 கோடி ரூபாய் (9.4 பில்லியன் டாலர்) விட 58% குறைவாகும். இது தற்போதைய நடைமுறையின்படி 12 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஒரு சிலிண்டருக்கு 205 ரூபாய் மற்றும் இந்தியாவின் 28 கோடி குடும்பங்கள் அனைத்துக்கும் ஒரு சமையல் எரிவாயு இணைப்பை தரும் என்று அது கூறியது.
சந்தையில் வேறுபட்ட விலை நிர்ணயம் குறித்த ஒரு விமர்சனம், குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை மானியமில்லாத வணிகச் சந்தையில் திருப்புவதற்கான வாய்ப்பாகும், சுருக்கமாக, எந்தவொரு மானியக் கசிவிற்கும் எதிராக நேரடி பண பரிமாற்ற திட்டம் உறுதி செய்யும் என்று அது கூறியது.
எப்படியானாலும், பணக்கார குடும்பங்களை சமையல் எரிவாயு மானிய வரம்பில் இருந்து நீக்குவது பயனற்றது என்பதை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். "பணக்கார குடும்பங்கள் இடையே கூட இத்தகைய திட எரிபொருள் பயன்பாடு இருப்பதல, அவர்களுக்கான சமையல் எரிவாயு மறு நிரப்பலின் விலையை அதிகரிப்பது, எதிர்மறையானதாக இருக்கும் என்று தோன்றுகிறது" என்று இலாப நோக்கற்ற அமைப்பான, இரக்க பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் - ரைஸ் () ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் குப்தா கூறினார்.
"அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் எரிவாயு மறு நிரப்பலின் விலையை மேலும் குறைப்பதை நாம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிக ஏழ்மையான வீடுகளுக்கு சிலிண்டர் விலை மிகவும் மலிவானதாக இருக்க வேண்டும் (அல்லது கிட்டத்தட்ட இலவசம்) என்று நான் நினைக்கிறேன், ”என்று குப்தா கூறினார்; தூய்மையான எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் பெரிய சுகாதார நன்மைகளையும், சமையல் எரிவாயு மானியங்களுக்கான ஒப்பீட்டளவில் சிறிய செலவுகளையும், நிதிக் கருத்தில் அதிக எடை கொடுக்கக்கூடாது என்றார் அவர்.
செலவு மற்றும் மலிவு அல்லது வறுமை நிச்சயமாக முக்கியமானது; ஆனால் பாலின சமத்துவமின்மை (திட எரிபொருள் கொண்டு பெண்கள் சமையல் செய்கிறார்கள்), மற்றும் திட எரிபொருளால் சமைப்பதன் எளிமை, சுவை மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்த நம்பிக்கைகள் உள்ளிட்ட சமையல் வாயு மீது மக்கள் உயிர்ப் பொருளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் வேறு முக்கியமான காரணிகள் உள்ளன. சமையல் வாயுவுக்கு எதிராக (சுல்ஹா உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்) என்று, ஏப்ரல் 2019 ரைஸ் ஆய்வில் குப்தா இணைந்து எழுதியுள்ளார்.
பெரும்பாலான கிராமப்புற குடும்பங்களுக்கு தங்களது திட எரிபொருட்களான விறகு, சாணம் மற்றும் விவசாய எச்சங்களை இலவசமாக சேகரிக்க முடியும், ஆனால், சமையல் எரிவாயு நிரப்புதல் என்பது, ஒரு விலையுயர்ந்த மாற்றாக கருதப்படுகிறது. ரைஸ் ஆய்வின்படி, பணக்கார கிராமப்புற சொத்து வீழ்ச்சியில் கூட, 40% க்கும் அதிகமான குடும்பங்கள் சமையல் எரிவாயுவை பிரத்தியேகமாக பயன்படுத்தவில்லை. திட எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமைக்க ஆண்களை ஊக்குவிப்பதற்கும் இது அழைப்பு விடுகிறது, என்றார் குப்தா.
சுகாதார ஆதாயம் மானிய சுமை அதிகரிப்பை ஈடு செய்யும்
ஏழைகளுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்கான மானியங்களை ஒரு சுமையாக அரசு பார்க்கக்கூடாது. சி.சி.ஏ.பி.சி கொள்ள்கை சுருக்க குறிப்பின்படி, இது கணிசமான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஏறக்குறைய 1.58 கோடி இயலாமை-சரிசெய்யப்பட்ட வாழ்வாதார ஆண்டுகள் (DALYs) - இயலாமை காரணமாக இழந்த உற்பத்தி ஆண்டுகளின் தொகை - 2017 ஆம் ஆண்டில் வீட்டு காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவில் இழந்தது.ஏற்கனவே நாம் கூறியது போல், வீட்டுக்குள் காற்று மாசுபாடு காரணமாக அதே ஆண்டில் சுமார் 480,000 மக்களை பலி கொண்டது.
இந்த எண்களை பயன்படுத்தி, மிகவும் பழமைவாத மதிப்பீடுகளின்படி கூட, ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் சுகாதார மதிப்பு ரூ.3,800 முதல் ரூ.18,000 வரை வேறுபடலாம் என்று சுருக்கமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு சிலிண்டர் மானியத்திற்கு ரூ.350 ஐ விட “மிக அதிகம்”. "எனவே, ஏழை வீடுகளுக்கான மானியம் ஒரு சமூக முதலீடாக கருதப்பட வேண்டும்," என்று அது மேலும் கூறியது.
இப்போது, வீட்டில் உயிரி எரிபொருளை எரிப்பதை தணிப்பது காற்று மாசுபாட்டிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்வி. பி.எம். 2.5 இன் உமிழ்வு - ஒரு மனித முடியை விட 30 மடங்கு மெல்லிய நன்றாக உள்ளிழுக்கக்கூடிய துகள்கள் - அனைத்து வீடுகளில் இருந்தும் தணிக்கப்பட்டால், நாட்டின் 597 மாவட்டங்களில் 58% தேசிய பாதுகாப்பான காற்று தரத்தை பூர்த்தி செய்யும்; இது, 2015 இல் 41% ஆக இருந்தது. மேலும் 18.7 கோடி மக்கள் பாதுகாப்பான காற்றை சுவாசிப்பார்கள் என்று அமெரிக்காவை சேர்ந்த சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகையான ப்ரோசிடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸில் (PNAS) வெளியிடப்பட்ட ஏப்ரல் 2019 ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(திரிபாதி , இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.