பாட்னா: பீகாரில், ஒரு கிராமத் தலைவராக (முகியா) இருந்து வழிநடத்தியது ஒரு பெண் என்று கேள்விப்பட்டபோது, 50 வயது ராம்வதி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திகைத்துப் போனார். “ஒரு பெண் எப்படி வழிநடத்த முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தலையை முக்காடால் மூடிக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கிராமத்தை, ஒரு ஆண் அல்லது ஆதிக்க சாதிகளை மீறி வழிநடத்த அந்த பெண்ணுக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும்? ” என்று, அவர் அக்டோபர் மாதத்தில் ஒருநாள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கடந்த 2006ம் ஆண்டில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு, கிராமப்புற நிர்வாக அமைப்புகளில் அல்லது அதன் பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்தில் (PRIs - பிஆர்ஐ) பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, பிரதான அரசியலில் இறங்க வழிவகுத்தது. பெண்களுக்கு பாதி இடங்களை ஒதுக்கிய முதல் மாநிலமான பீகார், தற்போது மாநில சட்டசபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை சந்தித்து வருகிறது. முதல்வர் நிதீஷ் குமாரின் பெண்களுக்கு ஆதரவான முடிவுகள், 2016ல் மதுபானத்தடையில் தொடங்கி, மாணவியருக்கு மிதிவண்டிகள், பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வரை, அரசு பெண்களுக்கு என்ன செய்தது என்பது பற்றி பேசும்.

பீகார் கிராமப்புற நிர்வாகத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு படிப்படியாக பீகாரின் கிராமப்புற நிர்வாகத்தில் பாலின வளைவை நீக்குகிறது - அங்குள்ள நிறுவனங்கள் இப்போது 70,400 பெண்களை, முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகளில் அமர்த்தியுள்ளன, அதாவது இதன் விகிதம் 52% ஆக உள்ளது என்று பீகார் பாலினம் குறித்த அறிக்கை அட்டை-2019 தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளில், ராம்வதி தேவி தன்னை போன்ற பெண்கள் ஊராட்சி தலைவர்களை மாறி இருப்பதை கண்டார் - ஆர்வமுள்ள முன்னோடிகளில் தொடங்கி, கணவன் மற்றும் ஆண் உறவினர்களுக்கான ராஜினாமா செய்யும் பிரதிநிதிகள் வரை இப்போது தங்களை கேட்க போராடும் சுயேச்சை குரல்கள் வரை மாறியிருக்கிறது.

ராம்வதி தேவி இப்போது பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியின் (கிராம சபை) வார்டு உறுப்பினராக உள்ளார். அவர், பத்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், அவரது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் இருந்து வழிகாட்டுதல்களை பெற்றார். அவர் முடிவெடுப்பதில் பங்களிப்பு செய்கிறார், ஒன்றிய அளவிலான கூட்டங்களில் கலந்து கொள்கிறார் மற்றும் அடிக்கடி தலைவரை சந்திக்கிறார். “கருத்தடை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக நான் சமீபத்தில் வார்டில் ஆணுறைகளை விநியோகித்தேன். ஆண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்லட்டும், நான் செய்ய வேண்டியதை நான் செய்கிறேன், ”என்றார்.

எனினும்கூட, எண்ணற்ற பிறர் இன்னும் ஆணாதிக்கம் மற்றும் வளங்கள் பற்றாக்குறையுடன் போராடுகிறார்கள் என்பதை பாட்னாவின் ஏழு கிராமங்களிலும், முசாபர்பூர் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களிலும் நடத்திய நேர்காணல்களில் இருந்து தெரிந்து கொண்டோம். பல பெண் தலைவர்களுக்கு இன்னும் நம்பிக்கையான முடிவுகளை எடுக்கும் திறன், பயிற்சி அல்லது வெளிப்பாடோ, உள்ளூர் நிர்வாகத்தில் பெண்களுக்கு வழிகாட்டும் முன்னோடிகளோ இல்லை என்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

பீகாரின் பாலின குறிகாட்டிகள் தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ளன என்பதைக் காட்டுகின்றன - அதன் பெண் கல்வியறிவு விகிதம் 2005-06 மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கு இடையில் 37% முதல் 50% வரை உயர்ந்துள்ளது; ஆயினும் இது இன்னமும் தேசிய சராசரியான 68.4% என்பதைவிட குறைவாக உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவிக்கிறது. இது, பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் மிக மோசமான பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை- 4.1% என்ற தேசிய சராசரியுடன் ஒப்பிட்டால் 23.3% என்று உள்ளதாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017 தெரிவித்தது.

"பெண்களின் பெயர்கள் நிர்வாக முறை வரை எட்டியுள்ளன, ஆனால் அவர்களின் குரல்கள் இன்னும் பின்தங்கியே இருக்கிறது" என்று பாட்னாவின் பார்சா பஜாரைச் சேர்ந்த ஆர்வலரும், சட்டசபை தேர்தலில் புல்வாரி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான பிரதிமா குமாரி பாஸ்வான் கூறினார்.

ஊராட்சிகளில் பங்கேற்றாலும் அரசியலில் பெண்கள் குறைவே

பாலின வழக்கங்கள், உளவியல் மற்றும் பாரம்பரிய தடைகள் மற்றும் கல்வி, பயிற்சி மற்றும் வளங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், உலகில் எல்லா இடங்களிலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தி உள்ளன. பஞ்சாயத்து ராஜ் நிர்வாகங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதால் தலைவர்களாகவும், வாக்காளர்களாகவும் அவர்களின் அரசியல் பங்களிப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பீகாரில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும் மாநில அரசியலில் பெண்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு குறைவாகவே உள்ளது. மூன்று கட்ட 2020- சட்டசபைத் தேர்தலின் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலில், இது பிரதிபலிக்கிறது. நிதீஷ் குமார் தலைமையிலான (ஐக்கிய) ஜனதாதளம் முதல் இரண்டு கட்ட தேர்தலில் போட்டியிடும் 78 இடங்களில், 18% இடங்களில் மட்டுமே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதன் முக்கிய போட்டியாளரான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி 97 இடங்களில் போட்டியிட்டும், 14.4% மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியதாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்கான தரவுவை தொகுத்து பகுப்பாய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மற்ற கட்சிகளில் லோக்ஜன்சக்தி தான் போட்டியிடும் 93 இடங்களில் 16%; 75 இடங்களில் போட்டியிடும் பாஜக 9%; 45 இடங்களில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் 9%; சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் 22 இடங்களில் 4.5% இடங்களில் மட்டுமே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

மாநில சட்டசபையில் 240 நடப்பு உறுப்பினர்களில் 12% பெண்கள் இடம் பெற்றிருந்தனர், 2010-15 சட்டசபையில் 14% பெண்கள் என்பதைவிட இது சற்று குறைவு.

பீகாரில், என்.எஃப்.எச்.எஸ் 2015-16 தரவுகளின்படி, 50% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஒரு கிராம ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பெரும்பாலும் குறைந்தபட்ச கல்வி, கொஞ்சம் அல்லது அதுவும் இல்லாத அரசியல் அனுபவம், அவரது பங்கு அல்லது அவர் மேற்பார்வையிட வேண்டிய திட்டங்கள் பற்றிய மிகக் குறைந்த தகவல்களின்படி செயல்படுகிறார். இவற்றால் ஆண்களுக்கே பல நன்மைகள் கிடைக்கின்றன, ஏனெனில் சிறந்த கல்வி, வெளிப்பாடு மற்றும் அரசியல் லட்சியத்திற்கு வழிவகுக்கும் சமூக-அரசியல் அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாகின்றன.

தமிழகத்தில் பெண் ஊராட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வு செய்து, ஆறு பகுதிகள் கொண்ட தொடரை இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்டது. இந்த ஆய்வில் பெண்கள் சாதி, நிதிக் கட்டுப்பாடுகள், பாலியல் மற்றும் வன்முறை ஆகியவற்றை அடிக்கடி சமாளிக்க வேண்டியிருந்தது என்பதை கண்டறிந்தோம். அவர்களின் பொது வாழ்க்கை மற்றொரு நிர்வாகப் பங்கையோ அல்லது அரசியலில் ஒரு பிரதான இடத்தையோ பெறும் நம்பிக்கையில்லாமல் அவர்களின் பதவிக்காலத்துடன் முடிவடைந்தது - ஆனால் இது பெரும்பாலும் அவர்களது ஆண் சகாக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

பயிற்சி, வழிகாட்டல் தேவை

மகளிர் இடஒதுக்கீடு மசோதா 1993ம் ஆண்டில் 73வது திருத்தத்தை கொண்டு வந்து, இயற்றப்பட்டது. திருத்தத்தின்படி பல இந்திய மாநிலங்கள் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33% இடங்களை ஒதுக்கியுள்ளன, பீகார் மிகவும் தாராளமாக இருந்தது - இது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை வைத்திருந்தது. அதன் பிறகு மற்ற 19 மாநிலங்கள் 50% இடஒதுக்கீடு வழங்கின.

கிராமங்களில் சமூக மற்றும் அரசியல் வலைப்பின்னல்களை ஆண்கள் இன்னும் கட்டுப்படுத்துவதால், பெண் தலைவர்கள் பெரும்பாலும் உண்மையாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை (அவர்களின் கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள்) பிரதிநிதிகளாக செய்கின்றனர் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. எங்களது நேர்காணல்களில், பெரும்பாலான பெண் தலைவர்கள் முக்கியமான விஷயங்களில் வழிகாட்டுதலுக்கு ஆண்களையே நாடி விளக்கம் கோருவதை கண்டறிந்தோம், மேலும் அவர்களது பினாமி பாத்திரங்கள் சில இடங்களில் நிறுவனமயமாக்கப்பட்டு உள்ளன.

“பெண் தலைவர்களை அதிகாரபூர்வமாக கூட்டங்களுக்கு அழைக்க வேண்டி இருந்தாலும், கடிதங்கள் தலைவரின் கணவர் [முகியாபதி] என்று கூறி அதில் உரையாற்றுவதை பார்க்க முடிகிறது. இதனுடன் நிர்வாகம் ஒத்துப்போகிறது” என்று பாட்னாவில் உள்ள மசவுரி ஒன்றியத்தை சேர்ந்த லோக்மாத்யம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன பெண்கள் உரிமை ஆர்வலர் பிரமிலா குமாரி கூறினார். இவற்றில் சில, 50% இடஒதுக்கீடு நகர்வுக்கு ஒரு தசாப்தத்திற்கு பிறகு 2016ம் ஆண்டில் மாறத் தொடங்கின, இரண்டாவது முறையாக போட்டியிட்டு வென்ற பிறகு பல பெண் ஊராட்சித் தலைவர்கள் சுயமாக முடிவுகளை எடுத்த நிகழ்வுகளும் இருந்தன. "ஆனால் இப்போது கூட நான் அவர்களின் எண்ணிக்கையை வெறும் 15% ஆகவே பார்க்கிறேன். இந்த பெண்களில் பெரும்பாலோர் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது ஆதரவு குழுக்களிடம் இருந்து சில வெளிப்புற வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளனர்," என்றார் அவர்.

கல்வி, டிஜிட்டல் அறிவு, பயிற்சி மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் பற்றாக்குறை ஒரு பெண்ணின் முதலீட்டு முடிவுகளையும் மேற்பார்வை திறன்களையும் ஒரு ஊராட்சித் தலைவராகக் கட்டுப்படுத்தலாம், ஆனால் இதை பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் அவர்களை மாற்றலாம் என்று, பீகாரில் பெண்கள் பஞ்சாயத்து ராஜ் நிறுவன உறுப்பினர்களுடன் பணிபுரியும் அமைப்புகளோடு தொடர்பில் இருக்கும் மது ஜோஷி கூறினார்.

“மகளிர் இடஒதுக்கீடு காரணமாக, இப்பெண்கள் பதவியேற்கிறார்கள். மொபைல்போன் மற்றும் இணையத்தின் அணுகல் மற்றும் பயன்பாடு கூட, அவர்களிடம் குறைவாகவே உள்ளது. கூடுதலாக, அவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணாதிக்கத்தின் தடைகளை கடந்து வழிநடத்த வேண்டும், ”என்று ஜோஷி கூறினார். "இந்த பெண் தலைவர்களுக்கு, தங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டுதல், வெளிப்பாடு மற்றும் கூட்டு தளங்கள் தேவை" என்றார்.

‘நான் விலக்கப்பட்டால் நான் எப்படி கற்றுக்கொள்வேன்?’

56 வயதான ரேணு தேவி பாட்னா மாவட்டத்தில் உள்ள தினேரி ஊராட்சியின் தலைவர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் தலித்துகளில் மிக ஓரங்கட்டப்பட்டவர்களாகக் கருதப்படும் மூசஹரி சமூகத்தவர்களை ஒதுக்கி வைப்பதற்காக கட்டப்பட்ட எல்லைச் சுவருள்ள, நன்கு கட்டப்பட்ட ஒரு வீட்டில் அவர் வசிக்கிறார், வாயில்களுக்குள், ஒரு தற்காலிக மேசையாந்து பலகையை தாங்கி நிற்கிறது, ஒரு மர நாற்காலி மற்றும் மேஜை ஆகின, தலைவரின் அதிகாரப்பூர்வ சந்திப்பு நிகழுமிடமாக அதை காட்டுகிறது. பார்வையாளர்களுக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன.

நாங்கள் அவரை சந்திக்க சென்றபோது, ​தனது கணவர் தொலைவில் இருப்பதாகவும், அவரை சந்திக்க வந்ததை அறிந்து ஆச்சரியப்படுவதாகவும் ரேணு தேவி கூறினார். அவர் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார், தலைவருக்கான இருக்கையில் அமரவில்லை, இதுபற்றி நாங்கள் அவரிடம் கேட்டபோது, தாம் [உண்மையான] தலைவர் அல்ல என்று அவர் பதிலளித்தார்.

குழந்தையை, தரையில் பிரசவித்த சோதனை காலகட்டத்தை நினைவு கூர்ந்த அவர், கிராம அங்கன்வாடி மையத்தில் (மருத்துவச்சி) பெண்களுக்கு பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு மிகவும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தனது கணவருக்கு பரிந்துரைத்ததாக கூறினார். "நான் அவரிடம் சொன்னேன், ஆனால் யார் கேட்கிறார்கள், ஆண்கள் இந்த சிக்கல்களை பற்றி கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறினார், ஆனால் விரைவாக அவரது குரலை மாற்றினார். "எப்படியிருந்தாலும் கணவர் அதிக படித்தவர், அவருக்கு எல்லாம் தெரியும், அவர் எப்போதும் சரியானதைச் செய்வார்" என்றார்.

இந்த வேறுபாட்டிற்கான காரணம், பெண்கள் நம்பிக்கையுடனோ அல்லது தங்களை மதிக்கவோ அரிதாகவே கற்பிக்கப்படுவதுதான் என்று பிரமிளா குமாரி கூறினார். "இந்த பெண்களின் மேம்பாடு குறைவாகக் கொண்டிருந்தனர், அவர்கள் எவ்வளவு சிந்திக்காமல் , தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் மற்றும் அனுபவமற்றவர்களாக உள்ளனர் என்பதை அவர்களது குடும்பங்கள் தொடர்ந்து நினைவுபடுத்துகின்றன, அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாகக் கற்பிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார். "ஆண்கள் தம் மனைவியருக்கு அதிகாரமோ சுதந்திரமோ கிடையாது என்பதை உறுதி செய்கிறார்கள், எனவே இந்த பெண்கள் முழு அமைப்பிற்கும் துணை நின்று பொறுப்பேற்பது மிகவும் கடினம்” என்றார்.

சுயேட்சை பெண் தலைவர்கள் பலமானவர்களும் கூட, தங்களை தொகுதி அதிகாரிகளால் பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை என்று அவர்கள் புகார் கூறினர். "அதிகாரிகள் நான் சொல்வதைக் கேட்கவில்லை, அவர்கள் என் கணவரையே நாடினர், எனக்கு எதுவும் புரியாது, இடஒதுக்கீடு காரணமாக மட்டுமே நான் இந்த பதவிக்கு வந்தேன் என்பதால், எனது பரிந்துரைகள் கேட்கப்படவில்லை "என்று பாட்னாவின் சபவுர் ஊராட்சித் தலைவியான 40 வயது அனாமிகா தேவி கூறினார்."அவர்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தால், நான் எப்படி எதையும் கற்றுக் கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நேரம் பிடித்தது, எனினும் மக்கள் அனாமிகா தேவியை கவனிக்கத் தொடங்கினர், ஏனென்றால் "நான் வேலை செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியும், அதனால் அவர்களும், ஆதிக்கச்சாதி ஆண்கள் கூட என் பேச்சைக் கேட்க வேண்டும்" என்றார். சபவுர் ஊராட்சியில் மூன்று ஆதிக்க சாதி ஆண்கள் மற்றும் இரண்டு ஆதிக்க சாதி பெண் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

"இத்தகைய மனப்போக்கு பெண்களுக்கு எதிராக, விளிம்பு நிலை சாதியினருக்கு எதிரான ஏற்றப்பட்டுள்ளது" என்ற ஆர்வலர் பிரதிமா குமாரி பாஸ்வான், "பெண்களை எளிதில் மிரட்டவும் கையாளவும் முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்றார்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் சமீபத்திய அறிக்கை, தலித் பெண் ஊராட்சித் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி, மற்றவர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருந்த கூட்டங்களில் தரையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாட்னாவில் உள்ள தினேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் சுனிதா குமாரி தனது ஆரம்ப ஆண்டுகளில் இதே போன்ற அனுபவங்களை கண்டதாக தெரிவித்தார். "நான் வெற்றி பெற்ற பிறகு எனது முதல் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ​​ வார்டு உறுப்பினராக இருந்தபோதும், ஆதிக்க சாதி [பூமிஹார் ] தலைவர், என்னை தரையில் உட்காரச் சொன்னார். நான் அவரிடம் அப்படி உட்கார மாட்டேன்; உங்களுடன் அமருவதற்கான உரிமையை நான் பெற்றுள்ளேன்,”என்று கூறியதாக தெரிவித்தார்.

பெண்கள் சிறந்த வசதிகளை உறுதி செய்கிறார்கள்

பெண் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கிராமங்கள். குடிநீர், பள்ளிகள், சுகாதார நிலையங்கள், நியாயமான விலைக் கடைகள் போன்ற பொது வசதிகளை சிறப்பாகக் செய்து காட்டியுள்ளதை ஆராய்ச்சி காட்டுகிறது.

"எங்கள் வீட்டில் நீண்ட காலமாக குழாய் நீர் இல்லை, நாங்கள் அதை செய்து தருமாறு கேட்டுக்கொண்டே இருந்தோம், எதுவும் செய்யப்படவில்லை" என்று மசவுரி ஒன்றியத்தை சேர்ந்த 40 வயதான லீலா தேவி கூறினார். "பின்னர் நான் உணர்ந்தேன் - என்னுடையது எது, நான் ஏன் தொடர்ந்து கேட்க வேண்டும்? என்று கேட்டுக் கொண்டேன். எனவே தேர்தலில் போட்டியிட்டு வார்டு உறுப்பினரானேன், நான் செய்த முதல் காரியம் எனது வார்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைப் பெறுவதற்கான நிதியை அனுமதிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியது ஆகும்”என்றார்.

பெண் தலைவர்கள் அடிப்படை சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க முனைகிறார்கள், இந்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்னணி செயல்பாட்டாளர்களுடன் ஒத்துழைக்க முடிகிறது என்று, பெண்களுக்கான பிரதான் நிறுவனங்களுடன் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சென்டர் ஃபார் கேடலிசிங் சேஞ்ச் அமைப்பின் 2015 ஆய்வு தெரிவிக்கிறது. “நான் பள்ளியில் இருந்தபோது, ​​எங்கள் வகுப்பில் இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தார்கள், ஊட்டச்சத்து, மாதவிடாய் அல்லது குடும்பக் கட்டுப்பாடு பற்றி யாரும் எங்களிடம் கூறவில்லை. நான் செய்ததைப் போலவே என் மகளும் வளர நான் விரும்பவில்லை, ”என்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர் ஒருவர் கூறினார். வளரிளம் பெண்களுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் கிடைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, அவர் இப்போது உள்ளூர் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்.

எவ்வாறாயினும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிர்வாகத்தில், பெண் அரசியல் தலைமையின் தாக்கத்தை மதிப்பிடும் ஒரு ஆய்வில், பெண் தலைவர்கள் உள்ள கிராம சபைகளில் திறனற்ற முறையில் திட்டம் செயல்படுத்துதல் மற்றும் கசிவுகள் கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

"ஆனால் நிதி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவின் பற்றாக்குறையால் அவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்வது அவசியம், இது அதிகாரம் மிக்க பங்குதாரர்களுடன் ஈடுபடுவதில் இருந்தும் எதிர்கொள்வதில் இருந்தும் அவர்களை பெருமளவில் தடுக்கிறது" என்று மது ஜோஷி கூறினார். "இருப்பினும், பெண் தலைவர்கள் அதிக அனுபவங்களைக் குவிப்பதால் ஆளுகை மேம்படுகிறது என்பதையும் ஆய்வு காட்டுகிறது" என்றார்.

முன்மாதிரி

"பெண்கள் பொறுப்பேற்பதை மற்ற பெண்கள் பார்க்கும்போது, ​​அவர்களும் அந்த அதிகாரத்தை பெற விரும்புகிறார்கள், எல்லோரும் நேதாஜி [தலைவர்] என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள்," என்று பிரமிளா குமாரி கூறினார்.

கடந்த 2003 ஆய்வில், மேற்கு வங்க கிராமங்களில் பெண் தலைவர் [பிரதான்] தலைமையிலான ஊராட்சிகள், முந்தைய ஆறு மாதங்களில் பெறப்பட்ட கோரிக்கை அல்லது புகார்கள் மீதான நடவடிக்கைகள், ஆண்களால் நிர்வகிக்கப்படும் ஊராட்சிகளை விட இரு மடங்கு அதிகமாக நிர்வகிக்கப்பட்டதை காட்டுகிறது. இது கிராமப்புற நிர்வாகத்தில் பெண்களின் அதிக ஈடுபாட்டைக் குறிக்கிறது.

இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படும்போது, ​​தேர்தல் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும், மோதலுக்கு பிந்தைய நாடுகளில் பெண்களின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பெண்கள் மற்றும் தேர்தல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் 2005 அறிக்கை தெரிவிக்கிறது.

"இடஒதுக்கீடு பெண் வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்கான ஒரு அரசியல் நடவடிக்கையாகும். ஆனால் மாநிலத்தில் பெண்களின் பெரிய அரசியல் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது" என்று ஆர்வலர் பாஸ்வான் கூறினார். கடந்த 2000ம் ஆண்டு வரை, பீகாரில் வாக்காளர் எண்ணிக்கையில் பாலின இடைவெளி சுமார் 20% (ஆண்களுக்கு ஆதரவாக) இருந்தது, ஆனால் 2015 தேர்தலில், 53% ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர் எண்ணிக்கை 60% ஆக திரும்பி இருந்தது.

(திவாரி, இந்தியாஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.