மும்பை: குற்றம், வேலைவாய்ப்பு, விவசாயிகள் தற்கொலை, ஜாதி மற்றும் விவசாய ஊதியங்கள் போன்ற விஷயங்களில் சீரிய காலத்தில் புதுப்பிக்கப்படும் அரசு அறிக்கைகள், புள்ளி விவரங்கள் சில ஆண்டுகளாகவே பொதுமக்களுக்கு வெளியிடாமல் இருப்பது இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2017-18ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டாம் என்ற மத்திய அரசின் முடிவை குற்றம்சாட்டி தேசிய புள்ளியியல் ஆணையம் -என்.எஸ்.சி. (NSC) செயல் தலைவர் பதவியை பி.சி. மோகனன் ராஜினாமா செய்துள்ளார்; "புள்ளி விவர விஷயங்களில் கொள்கைகள், முன்னுரிமைகள் மற்றும் தரத்தை உருமாற்ற" வேண்டி இருக்கிறது என்று 2018 ஜனவரி 29ல் பதவி விலகிய அவரது கூற்றாகும்.

ஆண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அறிக்கை 2017-18க்கு என்.எஸ்.சி. ஒப்புதல் அளித்த பிறகும் மத்திய அரசு அதை வெளியிட மறுத்தது மோகனனை அதிருப்தி அடையச் செய்தது அவரது ராஜினாமாவுக்கான காரணங்களில் ஒன்று என்று தி மிண்ட் இதழிடம் கருத்து தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களை அரசு வெளியிடாதது குறித்து பலதரப்பட்ட கேள்விகளை விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.

"இந்திய அரசு தேசிய மாதிரி ஆய்வு வேலைவாய்ப்பு / வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடாமல் நிறுத்திவைத்தது; இவ்வறிக்கை, வேலையிழப்பை பிரதிபலிக்கும்; அது, வாக்காளர்கள் முடிவெடுப்பதில் குறைந்து மதிப்பிடலாம் என்று கருதி வெளியிடப்படவில்லை” என்று, வேலைகளை உருவாக்கம் மற்றும் உழைப்பு வளர்ச்சிக்கான உத்திகளை வகுக்கும் ஜஸ்ட் ஜாப் நெட்வொர்க்கின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சபீனா திவான், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஒரு செயல்பாட்டு ஜனநாயகம், தகவலறிந்த வாக்காளர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

“இங்கு முக்கிய பிரச்சனையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை இருக்கலாம்” என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான ஜெயதி கோஷ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இதை செய்வதன் மூலம் அரசு தன்னை ஒரு நல்ல வெளிச்சத்தில் காட்ட முயற்சிக்கிறது" என்றார்.

தரவுகள் இல்லாதது, மத்திய மற்றும் மாநில அரசுகளை தகவல் அளிப்பதில் இருந்து முடிவு எடுக்காமல் தடுக்கிறது என்ற கோஷ், அதேபோல், தங்களது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் பிற சிக்கல்களுக்கு திட்டமிட வேண்டிய குடிமக்களை இது பாதிக்கிறது என்றார்.

இது பொருளாதார ஒளியூட்டலை ஏற்படுத்தி இது வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நல்ல முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது என்ற திவான், மற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் பிற மேம்பாட்டு சார்ந்த நிறுவனங்களை தங்கள் வேலைகளை ஒரு சான்று அடிப்படையிலான முறையில் செய்யாமல் தடுக்கிறது. "பொதுமக்கள் அணுகக்கூடிய தகவலை அரசு கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் செய்தால், அரசு பொறுப்புணர்வுடன் இருப்பதாக நாங்கள் எவ்வாறு கூறமுடியும்” என்றார் அவர். ”உண்மையில் வேலைக்கான நெருக்கடியை தீர்க்கும் கொள்கைகளை நிர்ணயிக்க துணைபுரியும் தரவுகளை அரசு வெளியிடுவதை தடுத்தால் நாங்கள் மிகவும் வழுக்கி சாய்ந்து விடும் நிலைக்கு செல்லும் ஆபத்து உள்ளது” என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 29,2018ல் அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தேசிய புள்ளியியல் ஆணைய (என்.எஸ்.சி.) உறுப்பினர்கள் -- மோகனன் மற்றும் வேளாண் பொருளாதார வல்லுனர் ஜே.வி.மீனாட்சி-- என்.எஸ்.சி. கூட்டங்களில் எந்தவொரு விஷயம் தொடர்பாகவும் தங்கள் கவலையை எழுப்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 2017 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலாண்டு தரவுகளை என்.எஸ்.எஸ்.ஓ. தயாரித்து வருகிறது; அதன் பின்னர் அறிக்கை வெளியிடப்படும்" என்று அரசு அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Missing Statistics - A Non-Exhaustive List
Report Ministry/Department Last submitted
NSSO Annual Employment-Unemployment Report Ministry of Statistics and Programme Implementation 2011-12
Socio-Economic Caste Census (data for OBCs was supposed to be released by 2015-16) Office of the Registrar General & Census Commissioner 2011-12
Rapid Survey of Children Ministry of Women and Child Development 2013-14
Foreign Direct Investment statistics Ministry of Commerce/DIPP Jun-18
Crime in India National Crime Records Bureau 2016
Prison Statistics of India National Crime Records Bureau 2015
Accidents and Suicides data National Crime Records Bureau 2015
Agricultural Wages Data Ministry of Agriculture/ Directorate of Economics and Statistics 2015-16

Source: IndiaSpend research

விபத்து மற்றும் தற்கொலை குறித்த அறிக்கை, விவசாயிகள் தற்கொலை பற்றிய தகவல்களை தேசிய குற்ற ஆவணப் பணியகம் (NCRB) அளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இது வெளியிடப்படவில்லை. டிசம்பர் மூன்று அல்லது கடைசி வாரத்தில், இந்தியாவில் 2016 ஆண்டுக்கான விபத்து இறப்புகள், தற்கொலைகள் பற்றிய அறிக்கை வெளியிடப்படும் என்று என்.சி.ஆர்.பி. அதிகாரி ஒருவர், 2017 டிசம்பரில் நியூஸ் 18- க்கு தகவல் தெரிவித்தார்.

"தரவுகள் காணவில்லை என்பது உண்மை இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறுகிறோம். ஏனெனில் என்.சி.ஆர்.பி. தொடர்ந்து தரவுகளை சேகரித்து வருகிறது” என்ற கோஷ் “தரவுகள் வெளியிடுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அந்நிய நேரடி முதலீடுகள் பற்றிய தகவல்கள் தொழில்துறை கொள்கை மற்றும் உற்பத்தித்துறை (DIPP) மூலம், ஒவ்வொரு காலாண்டிலும் வெளிவந்தன; இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழக்கமான உள்ளீடுகளை வழங்கிய போதும், தரவுகள் 2018 ஜூன் முதல் வெளியிடப்படவில்லை என்று, ஜனவரி 29, 2018 அன்று, பிசினஸ் டுடே இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டில் சமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு (SECC) மூலம் உருவாக்கப்பட்ட சமூகத்தின் சமூக-பொருளாதார விவரங்களை மத்திய அரசு வெளியிட்ட போது, எதிர்க்கட்சிகள், அமைச்சர்கள் கோரியிருந்தாலும் கூட, அது ஜாதி பற்றிய தரவுகளை தடுத்தது என்று, 2018 செப்டம்பரில் தி எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இப்பணியில் ஏற்பட்ட தாமதத்திற்கு இந்தியாவின் அளவு மற்றும் மக்கள் தொகையை அரசு காரணம் காட்டியது. உதாரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பானது, 33 கோடி குடும்பங்களை உள்ளடக்கி இருந்தது; மற்றும் 46 லட்சம் உள்ளீடுகளை வரைந்து, 355 12 மணி நேரத்தில் வாசிப்பதற்கு என்று, 2015 ஜூலையில் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

"அனைத்து ஆய்வுகளும் பொதுபார்வைக்கு வைக்கப்பட வேண்டும்; அதனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தரவின் தரத்தை ஆய்வு செய்து விமர்சனம் செய்யலாம்; கூடுதல் பகுப்பாய்வுகளை உருவாக்கலாம். இது சமூகத்திற்கு கொள்கை வகுக்க உதவும், " என்று, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மற்றும்தேசிய மாதிரி ஆய்வு விவரங்களை இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யப்படலாம் என்று அவர் கூறினார். "இவற்றில் இருந்து உருவாக்கப்படும் பல்வேறு தரவு மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளைப் பார்ப்பது அருமையானது" என்று அவர் மேலும் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் போன்ற முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனவா என்பதை குடிமக்கள் அறிய வேண்டும் என்று கூறிய திவான், "தகவல் இல்லாதது, அல்லது கிடைக்கும் தகவலை தடுத்து நிறுத்துதல், ஊகம் மற்றும் தவறான புரிதல்களை தொடர அனுமதிக்கிறது" என்றார். "வேலை பற்றிய பேச்சு, ஊகம் மற்றும் தவறான புரிதல்களை கொண்டிருக்கிறது. வேலை குறித்த நம்பகமான மற்றும் முறையான தரவு சேகரிப்பு இல்லாத நிலையில் கிடைக்கும் தரவுகளை நாம் ஏன் வெளியிடக்கூடாது?” என்று அவர் கூறினார்.

சமீபத்தில் மத்திய நிதியுதவியும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தரவுகள் வலைத்தளங்களில் இருந்து காணாமல் போது கவலை அளிப்பதாக உள்ளது. உதாரணத்திற்கு, செலவின விவரம், கழிப்பறைகளை மாற்றுதல், கழிப்பறை கட்டுமானத்திற்கான பல விவரங்கள், தூய்மை இந்தியா திட்டம் - கிராமின் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று, 2018 அக்டோபர் 6ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு --பள்ளிக்கு முந்தைய குழந்தைகள் (0-4 வயது), பள்ளி குழந்தைகள் (5-14 வயது), இளம் பருவத்தினர் (15-19 வயது) குறித்த விரிவான ஊட்டச்சத்து விவரங்களை உருவாக்கும் இப்பணியானது 2016ன் இறுதியில் தொடங்கப்பட்டது -- இந்த அறிக்கை தயாராக உள்ள நிலையில் வெளியிடப்படவில்லை. ராஷ்டிரிய கிஷோர் ஸ்வஸ்த்ய கார்யகிரம் ('தேசிய இளம்பருவ சுகாதார திட்டம்'), ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யகிரம் ('தேசிய குழந்தை நலத்திட்டம்') மற்றும் தேசிய இரும்புச்சத்து முன்முயற்சி போன்ற இந்தியாவின் ஊட்டச்சத்து கொள்கைகளை மறுசீரமைக்க, இத்தகைய அறிக்கை உதவுகிறது; சமீபத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு அடிப்படையாக உள்ளது.

"பல நாடுகளும் அமைப்புகளும் ஆய்வு முடிவுகளை பொதுவில் வெளியிடுவதை நோக்கி நகர்கின்றன. இது நல்ல நடைமுறை; ஏனெனில் தரவுகள் பொதுவில் கிடைக்கும் போது தான் அதை வைத்து அறிவு தளங்களுக்கு ஆராய்ச்சி மையங்கள் உதவ முடியும்" என்று மேனன் கூறினார்.

நியாயமான கவலைகள் அல்லது பிற முறைப்படியான கவலைகளால் தான் அறிக்கையை அரசு வெளியிடவில்லை என்றால், அதை அவ்வாறே கூற வேண்டும் என்று திவான் கூறினார். "குறைந்தபட்சம் விளக்கம் தேவையென பொதுமக்கள், வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இந்த தகவல்கள், முடிவுகளை எடுத்து பயன்படுத்தலாம்” என்று திவான் மேலும் கூறினார்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த பகுப்பாய்வாளர். இதழியல் துறை மாணவரும், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளருமான ஜாஸ்மின் நிஹலனி உதவியுடன்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.