'வேலைவாய்ப்புகளும் விலைவாசி உயர்வும் இந்தியாவின் பெரிய சிக்கல்கள்'
மும்பை: கடந்த 2018 மே முதல் ஜூலை வரை - பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கடைசி ஆண்டு தொடக்கத்தில் - நடைபெற்ற ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 70% பேர், வேலைவாய்ப்புகள் குறைவு மற்றும் விலைவாசி உயர்வு நாட்டின் மிகப்பெரிய சவால்கள் என்று தெரிவித்ததாக, நேற்று (மார்ச் 26) வெளியான பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்பின்மை விகிதம், தற்போது 45 ஆண்டுகளில் உயர்ந்த அளவாக நகர்ப்புறங்களில் 7.8%, கிராமப்புறங்களில் 5.3% என மதிப்பிடப்பட்டுள்ளதாக, 2017-18 ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கசிந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதை விளக்குவதற்குள்ள சில வழியாக, நாட்டில், "மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கிறது" என்று கருதும் மக்களின் விகிதம், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது (2017 இல் 70% என்றிருந்தது, 2018இல் 55% என்று) 15% புள்ளிகள் சரிந்துள்ளன.
இது, 2015 ஆம் ஆண்டு - நரேந்திர மோடியின் முதல் ஆண்டு - திருப்தி அளவை மீண்டும் குறிக்கிறது; ஆனால், மன்மோகன் சிங் அரசின் கடைசி இரண்டு ஆண்டு அளவை காட்டிலும் இன்னும் அதிகமாக உள்ளது என, 2,591 பேரிடம் நடந்த கணக்கெடுப்பு அடிப்படையில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.
ஊழல் அதிகாரிகள், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் ஆகியன அடையாளம் காணப்பட்டு, அடுத்த பிரதான பிரச்சினைகள் என்றும்; 60% மக்கள் இவற்றை 'மிகப்பெரிய பிரச்சினை' என்றும் கூறியுள்ளனர். நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக இப்பட்டியலில் கடந்தாண்டு வேலைவாய்ப்பு முதலிடத்தில் இருந்தது; இதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்று ஆய்வு கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.
சிறிய முன்னேற்றம், நிலைமையை மோசமாக்குகிறது
வேலைவாய்ப்பு, ஊழல், பணவீக்கம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் பெரும்பான்மையானவர்கள் அளித்த பதில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதாகும் என்கிறது ஆய்வு முடிவு.
வேலைகள்: கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என, பதிலளித்தவர்களில் 21%க்கும் அதிகமானவர்கள் தெரிவித்தனர்; 67% பேர், இது மேலும் மோசமடைந்ததாக கூறினர். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரின் முக்கிய கவலையாக, இந்தியாவில் வேலைவாய்ப்பு சுருங்கி வருவது உள்ளது. வேலை தேடலில் குடியேற்றம் என்பது நாட்டை பாதிக்கும் மற்றொரு பெரிய பிரச்சனை என்று, 64% பேர் தெரிவித்தனர்.
ஊழல்: ஊழலை தூண்டுவதற்கான அணுகுமுறைகள் இருந்ததாகவும், இவ்விஷயத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிட்டது என்று 65% பேர் கருத்து தெரிவித்தனர்; 21% பேர், இது மேம்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு மற்றொரு முக்கிய கவலையாக இருந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பணவீக்கம் தற்போது அதிகரித்திருப்பதாக 65% பேர் கூறினர்.
சமத்துவமின்மை: செல்வ இடைவெளி, இனவாத உறவுகள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றில் நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதாக, குறைந்தது கால்வாசி பேர் தெரிவித்தனர். வேலைவாய்ப்பு, பணவீக்கம், ஊழல் ஆகியவற்றை விட, இவ்விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ஆயினும்கூட, நிலமை மோசமாகிவிட்டதாக, பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி கடந்த ஐந்து ஆண்டுகளில் விரிவடைந்து, 27% என்றளவில் இருந்தது; இது முன்பு குறுகியதாக இருந்ததாக அது கூறுகிறது.
இந்தியர்கள் செல்வந்தர்களில் 1% வைத்திருக்கும் சொத்து, ஒரே ஆண்டில் 15% புள்ளியை உயர்ந்து, 2018ஆம் ஆண்டில் 58% என்பது, 2019 வரை 73% என்று எட்டியதாக, சமத்துவமின்மை குறித்த 2019 ம் ஆண்டு ஒக்ஸ்பாம் அறிக்கையை மேற்கோள்காட்டி, 2019 ஜனவரி 24இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
காற்று மாசுபாடு: ஆய்வில் பங்கேற்றவர்களில் 51% பேர் 2014 முதல் காற்றின் தரம் குறைந்துவிட்டது என்றும், 27% பேர் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
உலகின் 20 க்கும் அதிகமான மாசுபட்ட நகரங்களில் 15, தற்பொது இந்தியாவில் இருப்பதாக, 2019 மார்ச் 5இல், இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இனவாதம்: இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் ஏறக்குறைய பாதி பேர் (45%), 2014 ஆம் ஆண்டில் இருந்து இனவாத உறவுகள் மோசமடைந்துள்ளதாகவும்; 28% பேர் நிலைமை மேம்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இனவாத வன்முறைகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 703 என்றிருந்து 2016ஆம் ஆண்டில் 869 ஆக அதிகரித்ததாக, தேசிய குற்றப்பதிவு பிரிவு (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வருடாந்திர குற்றம் குறித்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாததால், கடந்த இரு ஆண்டுகளுக்கான போக்குகள் தெளிவாக இல்லை.
பாகுபாடு: இங்கு, "உறுதியான ஒரு பாகுபாடு திசையில் நாடு செல்வது, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்"; அரசியலின் இரு பக்கங்களிலும் கணிசமான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அது செல்வதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உதாரணமாக, எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் (காங்கிரஸ் கட்சி) ஆதரவாளர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மோசமடைந்து உள்ளதாக கூறுவது 21% புள்ளிகள்; இது பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்களைவிட அதிகம்.
செல்வம் சமத்துவமின்மை, ஊழல், பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத உறவு பிரச்சினைகளில் பாகுபாஉட் அணுகுமுறைகள் காணப்படுகின்றன. சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது என்று கருதுவோரைவிட பாஜக ஆதரவாளர்களின் கருத்து 17% புள்ளிகள் குறைவு. மோடி அரசில் ஊழல் மோசமாகி விட்டது என்று கூறுவோர் 12 சதவீத புள்ளிகள் குறைவு என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ஜனநாயகம் எவ்வாறு நன்றாக செயல்படுகிறது?
இந்தியாவின் பொருளாதார ஆரோக்கியம், பாதுகாப்பு, காற்று தரம் ஆகியவற்றின் காரணமாக, அதன் ஜனநாயக செயல்திறன் குறித்து கலவையான பதில் ஆய்வில் கிடைத்தது.
"தேர்தல்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து இந்தியர்களின் குரலானது கடும் விரக்தியை கொண்டிருக்கும்" என அறிக்கை கூறுகிறது; பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்று 58% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
சாதாரண மக்களின் எண்ணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மதிப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாக கூறியவர்கள், 33%ஐ தாண்டவில்லை. இரவில் நடப்பதற்கு கூட அஞ்சும் வகையில் பாதுகாப்பற்ற சூழலில், ஆபத்தான இடத்தில் வசிப்பதாகவும், பாதுகாப்பு குறித்த கவலைகள் தங்களுக்கு இருப்பதாகவும், 54% பேர் கருத்து தெரிவித்தனர்; மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறினர்.
ஜனநாயகம் 'மிகவும் திருப்திகரமாக உள்ளது' என, 54 சதவீதத்திற்கும் மேலானவர்கள் தெரிவித்தனர்; இது ஓராண்டுக்கு முன் 79% என்றிருந்த நிலையில், 25% புள்ளிகள் சரிந்திருப்பது, அதற்கான மனப்பான்மையை விளக்கக்கூடும்.
இருப்பினும், 58% பேர் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், 59% பேர், தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு "ஒரு நல்ல வாய்ப்பு" உள்ளது என நம்புவதாக தெரிவித்தனர்.
ஆயினும், நீதிமன்ற நடைமுறை அனைவருக்கும் மிக நியாயமான முறையில் இருப்பதாக, பாதிக்கும் சற்று குறைவானோர் (47%) கூறினர்; கணிசமானவர்கள் (37%) அது வழக்கல்ல என்று தாங்கள் நம்பவில்லை என்று கூறினர்.
மோடி தலைமையின் கீழ் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் உலக எண்ணங்கள்
கருத்து கணிப்பில் பதிலளித்தவர்களில் 75% பேர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தீவிர அச்சுறுத்தல் என்றும், 7% பேர் மட்டுமே அந்நாட்டால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினர்.
ஆயினும், 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கொல்லப்பட்ட காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஒன்பது மாதங்கள் முன்பு இந்த ஆய்வு நடந்தது. இந்த புள்ளிவிவரங்கள், தாக்குதலுக்கு பிந்தைய கருத்துக்களையோ, இந்தியாவின் ராணுவ பதிலடியையோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு முன்பே, காஷ்மீரில் நிலவும் சூழல் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துவிட்டதாக 53% பேரும், 18% பேர் தான் முன்னேற்றம் அடைந்ததாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 58% பேர், பாகிஸ்தானுக்கு எதிராக அரசு ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் பாரபட்சமான அணுகுமுறைகள் வெளிப்படையானவை என்று கூறும் அவர்கள், பாகிஸ்தானை அச்சுறுத்தலாக பார்ப்பதால் 70% பேர் "நரேந்திர மோடி மீது நம்பிக்கை" என்கின்றனர்; இது, பிரதமர் மீது குறைவான நம்பிக்கை கொண்டவர்களை விட அதிகம் என அறிக்கை தெரிவிக்கிறது. மோடிக்கு சற்று குறைந்த சாதகமான மனப்பான்மை கொண்டவர்களில், ஒரு மெல்லிய பெரும்பான்மையினர் (51%), பாகிஸ்தானை அச்சுறுத்தலாக கருதுகின்றனர்.
இந்தியாவின் சர்வதேச உணர்வுகள் பிரதமராக மோடி பதவியேற்ற காலத்தில் இருந்து பெரும்பாலும் நிலையாக இருப்பதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான இந்திய உறவு, 2014 மற்றும் 2018 க்கு இடையே நன்கு மேம்பட்டிருந்தது; குறிப்பாக பிலிப்பைன்ஸ் உடனான இணக்கம், 13% அதிகரித்தது. அமெரிக்கா, ஜப்பான் உடனான உறவில் ஒரு "புறக்கணிப்பால்" ஐந்து சதவீத புள்ளிகள் சரிந்து காணப்பட்டன.
உலக அரங்கில் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை இந்தியர்கள் எவ்வாறு கருதுகின்றனர் மற்றும் ஒரு பரந்த பார்வையாளர்களால் இந்தியா எப்படி பெறப்படுகிறது என்பதில் பொருத்தமற்ற சூழல் உள்ளது. இப்போது உலக விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என, 56% இந்தியர்கள் கருத்து தெரிவித்தனர்; கணக்கெடுப்பு நடந்த 26 நாடுகளில் உள்ள மக்களில் சராசரி 28% பேர் ஒப்புக் கொண்டனர்.
இருப்பினும், பல பணக்கார நாடுகளும் இந்தியாவின் செல்வாக்கும் பங்களிப்பும் உயர்ந்து வருவதாக கூறின; குறிப்பான பிரான்ஸ் (49%), ஜப்பான் (48%), தென் கொரியா (48%), ஸ்வீடன் (47%) மற்றும் இங்கிலாந்து (46%) ஆகியன.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்பு எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருப்பதாக, கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் (34%) தெரிவித்தனர். இந்த பிரிவில், அதிகம் குழுக்கள் உள்ள பிரிக்ஸ் நாடுகளான பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன (முறையே 32% மற்றும் 37%), 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியாவின் முக்கிய பங்களிப்பு சற்று குறைந்திருப்பதாக கூறியுள்ளன.
(சங்கேரா, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.