மும்பை: உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய தரவரிசையில், முதல் 20 இடங்களில் 15 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்து ஆதிக்கம் செலுத்துவதாக, அரசுசாரா அமைப்பான கிரீன்பீஸ் மற்றும் ஐ.க்யூ ஏர் விஷுவல் (IQ AirVisual) அமைப்பின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள ஆறு நகரங்கள் - குருகிராம், காஜியாபாத், பரிதாபாத், பிவாடி, டெல்லி மற்றும் நொய்டா - ஆகியன முதல் 20 இடத்தில் உள்ள இந்திய நகரங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியாகும். 2018ல் உலகில் மிக மாசுபட்ட நகரமாக குருகிராம், அதை தொடர்ந்து காஸியாபாத் உள்ளன - தினசரி காற்றின் நுண்துகள் அளவு (பி.எம்.) 2.5 இங்கு 135.8 μg / m3 என பதிவாகியுள்ளது; இது, உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 10μg/m3 அளவைவிட 13 மடங்கு அதிகமாகும்.

காற்றில் மிதக்கும் நுண்துகளின் அளவு பி.எம் 2.5 (PM 2.5) என்ற அடிப்படையில் அளவிடப்படுகிறது. சிறிய அளவு மற்றும் நீண்ட கால சுகாதார விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம், மனித சுவாச அமைப்புக்குள் ஆழமாக ஊடுருவும் அளவுக்கு 2.5 மைக்ரான் என்பது நுண்ணியதாக இருக்கும் என்று, அறிக்கை தெரிவித்துள்ளது. பி.எம். 2.5 அளவானது மனிதர்களுக்கு மிகப்பெரிய அபாயத்தை தரக்கூடியதாக அறியப்படுகிறது; இருதய, சுவாச நோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

Source: 2018 World Air Quality Report

தலைநகர் டெல்லியானது "பொதுவாக உலகின் 'மாசுபாடுகளின் தலைநகரம்’ என்று பெரும்பாலான ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது; வடஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் பிற நகரங்கள், அதிக வருடாந்திர பி.எம். 2.5 அளவுவை பதிவு செய்துள்ளதாக, அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு (NCR) வெளியே பாட்னா (7வது), லக்னோ (9வது) இரண்டும் தலைநகரைவிட அதிகம். ஆனால் தேசிய ஊடகங்களில் குறைவான கவனத்தை ஈர்க்கும் என்பதால், மற்ற வெப்பப்பகுதிகள், மாசுபாடு கவனிக்கப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக கூறலாம்.

மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகே உள்ள தானே, 2019 மார்ச் 5ஆம் தேதி நாட்டின் மிக மோசமான காற்றின் தரத்தை கொண்டிருந்ததது என, நிகழ்நேர உலகளாவிய, உள்ளூரின் காற்று தரத்திற்கான தகவலை மையப்படுத்தி வரும் ஐ.க்யூ.ஏர் விஷுவல் இணையதளம் தெரிவிக்கிறது; அதன் அறிக்கை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு “அபாயகரமான” அமெரிக்க காற்று தரக்குறியீடு (AQI) அளவில் 354 என்பதை இந்நகரம் பதிவு செய்துள்ளது; இது 0-500க்கும் இடையே வண்ணம் குறியிடப்பட்ட அளவு, சுகாதார அபாயங்களாக பயன்படுத்தப்படுகிறது.

Source: airvisual.com/india

பி.எம். 2.5 என்பது, 250 μg / m3க்கும் மேலாக அல்லது உலக சுகாதார அமைப்பு பரிந்துரை தரத்தைவிட 25 மடங்கு அதிகம் எனில் 300 +, ஊதா நிறம் மற்றும் 'அபாயகரமான' பிரிவில் வைக்கப்படுகின்றன. காற்றின் தரம் இந்த நிலையில் இருக்கும் போது "பொதுமக்கள் கடும் எரிச்சலை அனுபவிக்கவும், பாதகமான சுகாதார விளைவுகள் சந்திக்ககூடும். அனைவரும் வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க காற்றின் தரக்குறியீட்டு எண்ணின் 'நல்ல' நிலையை -அதாவது 12 μg / m3 - என்ற தரநிலையானது 10 μg / m3 என்ற உலக சுகாதார அமைப்பு தரநிலையை விட சற்று அதிகமான பி.ஏம். 2.5 அளவுகளைபயன்படுத்துகிறது.

இந்தியாவில் காற்றுத்தர கண்காணிப்பு அதிகம் தேவை

"டெல்லி, அனைவரின் கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறக்கூடும். இது ஒரு தேசிய பிரச்சினையாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை; நாங்கள் இதை உருவாக்கத்தான் முயற்சிக்கிறோம்" என்று, கிரீன் பீஸ் அமைப்பின்கிழக்கு ஆசியா திட்ட மேலாளர் நந்திகேஷ் சிவலிங்கம், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "2015 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 38 காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்கள் இருந்தன; அந்த எண்ணிக்கை இப்போது 120 முதல் 130 என்று அதிகரித்துள்ளது. எனவே இப்போது மேலும் தரவுகள் வெளிப்படையாக வெளிவருகிறது " என்றார் அவர்.

நாட்டின் காற்றுத்தரம் கண்காணிப்புத்திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன், கடந்த ஜனவரி மாதம் தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது என்ற சிவலிங்கம், "இது போன்ற முயற்சிகள் வாயிலாக, தேசிய அளவில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது" என்றார்.

இந்தியாவில், 10 நகரங்களில் எட்டு நகரங்களில் வசிக்கும் மக்கள் தற்போது நச்சுக் காற்றை சுவாசிக்கின்றனர்; அதே நேரம் நாட்டில் ஐம்பது கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் பகுதிகள், காற்றின் தரம் குறித்த கிடைக்காத மாவட்டங்கள் என, 2018 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, 2017ல் இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளில் எட்டில் ஒன்றுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருந்துள்ளது; மொத்தம் 12.4 லட்சம் இறப்புகள் நேரிட்டுள்ளன.

"காற்று மாசுபாடு நமது வாழ்வாதாரங்களையும் எதிர்காலத்தையும் திருடிவிடும், எனவே அதை மாற்றுவோம்" என்று, கிரீன் பீஸ் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு நிர்வாக இயக்குனர் யெப் சனோ தெரிவித்தார்."மனித உயிரிழப்புகள் தவிர உலகளவில் 22500 கோடி டாலர் மதிப்பிற்கு தொழிலாளர் இழப்பு, லட்சம் கோடி அளவிற்கு மருத்துவச்செலவினங்களும் அடங்கும்” என்றார் அவர்.

"நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று பற்றி மக்கள் சிந்திக்க இந்த அறிக்கை உதவ வேண்டும்," என்ற அவர், "ஏனெனில் நம் வாழ்வில் காற்றின் தரத்தால் ஏற்படும் தாக்கத்தை புரிந்து கொள்ளும் போது, மிக முக்கியமானது எது என்பது அறிந்து நாம் பாதுகாப்பாக செயல்படுவோம்" என்றார்.

அதிகபட்ச சராசரி பி.எம்.2.5 அளவு காணப்படும் தெற்காசியா

மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் 18 இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ளன; இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தரவுகள், தெற்காசியாவின் காற்று தர நெருக்கடியின் சான்றாக வெளிப்படுகின்றன.

தெற்காசியாவில் மிக மோசமாக காற்றுமாசு அடைந்த தலைநகராக உள்ள டெல்லியில், ஆண்டு சராசரி பி.எம் 2.5 செறிவு 114 μg / m3, அடுத்துள்ள டாக்காவில் 97 μg / m3. இவ்விரண்டின் அளவும், இப்பிராந்தியத்திற்கு வெளியே மாசுபாடுள்ள நகரான பஹ்ரைனில் உள்ள மனாமாவின் மாசுபாட்டைவிட 50% அதிகம்.

"வாகனங்களின் புகை, நிலத்தில் பயிர்களை எரித்தல், தொழிற்சாலைகள் உமிழும் புகை மற்றும் நிலக்கரி எரிப்பு" உள்ளிட்ட செயல்கள் இப்பிராந்தியத்தில் பி.எம். 2.5 அளவு அதிகரிக்க பிரதான பங்களிப்பு செய்கின்றன.

சராசரி ஆண்டு பி.எம். 2.5 செறிவின்படி உலக பிராந்திய தலைநகரங்களின் தரவரிசை

Source: 2018 World Air Quality Report
Figures in (μg/m3)

மிக மோசமான காற்று மாசுபாடுள்ள நகரங்களின் தரவரிசை பட்டியலில்ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுள்ள நிலையில், "62 பிராந்திய தலைநகரங்களில் 9 மட்டுமே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான 10 μg / m3 என்ற காற்று தர வழிகாட்டுதலில் ஆண்டு சராசரி பி.எம். 2.5 நிலையில் உள்ளன"; இது, உலகளாவிய மக்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பற்ற காற்றை சுவாசிப்பதையே காட்டுகிறது.

எனினும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் காற்றின் தரம் பற்றிய தரவுகள் கிடைக்கவில்லை; அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் காற்றின் தரம் பற்றிய தகவல்கள் இன்னமும் இல்லாத நிலையே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இது காற்று மாசுபாட்டின் உலகளாவிய படத்தை உருவாக்குவதில் சிக்கலை மட்டுமின்றி, "தற்போதைய நிலைமைகளுக்கு பொறுப்பேற்கவும், மனித உடல்நலத்தை பாதுகாக்கவும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும்" உண்மையான நேரத்திற்கான அணுகல், பொது தகவல் தேவைப்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் பற்றிய அவசியத்தேவை

Source: 2018 World Air Quality Report
குறிப்பு: நீலப்புள்ளிகள் அரசு காற்று தர கண்காணிப்பு நிலையங்களை குறிக்கின்றன. சிவப்பு புள்ளிகள், அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட சுயாதீன காற்று கண்காணிப்பு நிலையங்களின் தரவை குறிக்கின்றன.

சீனாவின் வெற்றிகள் இந்தியாவை முன்னோக்கி வழி காட்டக்கூடும்

உண்மையான நேரத்தில் காற்று தர தகவல் அணுகலை வழங்கும் உலகில் "மிக விரிவான காற்று தரம் கண்காணிப்பு திட்டங்களில் ஒன்று" சீனா அதன் முக்கிய நகரங்களில் காற்றுத்தரம் மேம்படுத்துவதில் "வழிவகுக்கிறது" எனக் கூறப்படுகிறது.

கடந்த 2017 முதல் 2018 வரை சீன நகரங்களில் சராசரி பி.எம். 2.5 செறிவு 12% குறைந்து, 2018ல் பெய்ஜிங் உலகின் 122வது மாசுபட்ட நகரமாக விளங்குகிறது. தொடர்ச்சியான புகை மற்றும் உலகளாவிய காற்றுத்தர அளவீடுகளுக்கு உலகளாவிய தலைப்புகளில் இடம் பெற்று ஒரு நாட்டின் முன்னேற்றத்தை சிறப்பித்துக் காட்டுகிறது.

முன்னதாக குறிப்பிடப்பட்ட இந்திய தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டம் (NCAP), இந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது, "நாடு முழுவதும் காற்று தர கண்காணிப்பு அமைப்பை பெருக்குவதோடு, விழிப்புணர்வு மற்றும் திறனைக் கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும்" இது போன்ற ஒரு முயற்சியைக் கொண்டுள்ளது.

இந்த திட்டமானது, நாட்டின் மிக உயர்ந்த பார்வை மற்றும் மோசமடைந்துவரும் காற்றுத் தரத்திற்கான மத்திய அரசின் மிகுந்த எதிர்பாப்பை பிரதிபலிப்பாகும்; மேலும் 2024 ஆம் ஆண்டுக்குள் பி.எம். 2.5 மற்றும் பி.எம். 10 செறிவு 20-30%ஐ குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

"ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் சீனா செய்ய முடிந்த ஒரு தெளிவான விஷயம், இது குறிப்பிடத்தக்க ஆதாயத்திற்கு இட்டுச் சென்றது, இது மின் துறையின் உமிழ்வுகளை குறைப்பதாகும்" என்ற சிவலிங்கம் "இந்தியாவிலும் அதே பிரச்சினைகள் உள்ளன; இப்போது இத்துறைகளை கவனிக்க வேண்டும். இந்திய தேசிய காற்று சுத்திகரிப்பு திட்ட விதிகளை அவர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இருப்பினும், இந்தியாவில் எப்பொழுதும் செயல்படுத்துவது என்பது தான் பிரச்சனை என்ற சிவலிங்கம், "இந்திய தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டத்தில் உள்ள முன்மாதிரிகள், முன்னேற்றத்திற்கான நம்பிக்கையுடன் இருப்பதால், கள மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திட்டம் நடைமுறை படுத்தப்படுவது எவ்வளவு நல்லது என்பதை இப்போது சொல்வது மிக முற்போக்கானது; எனவே நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார்.

எனினும், இந்திய தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டம் தொடக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்ததாக, 2019 பிப்ரவரி 6 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. ஏனெனில் அது சட்டப்பூர்வ உத்தரவோ, செயல் திட்டத்திற்கான தெளிவான காலக்கெடுவையோ கொண்டிருக்கவில்லை; , தோல்வியுற்றால் அதற்கு பொறுப்புணர்வு இல்லை.

"சீனாவின் திட்டத்தில் உள்ளது போன்ற சில முக்கிய அம்சங்கள், இந்தியாவின் தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டத்தில் இல்லை" என்று கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் மூத்த பிரசாரகர் சுனில் தாஹியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “நகரங்களில் குறிப்பிட்ட மாசு குறைப்பு இலக்குகள், மாசுபடுத்தும் துறைகளுக்கு உமிழ்வு குறைப்பு இலக்குகள், அத்துடன் நடைமுறை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையான சட்ட கட்டமைப்பு கொண்டிருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் தேசிய காற்று சுத்திகரிப்பு திட்டத்தில் இத்தகைய அம்சங்களை சேர்த்தால், சுவாசிக்கக்கூடிய காற்றின் தரத்தை நோக்கி இந்தியா செல்லும் என்று, தஹியா மேலும் கூறினார்.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.