மும்பை: கோவிட் தொற்றை தொடர்ந்து அமல் செய்யப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தை, இந்தியாவை சேர்ந்த மாதச்சம்பளதாரர்கள் தற்போதுதான் மெதுவாகக் காணத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைகளை திரும்பப் பெறுவது மிகக்கடினமாக இருக்கும் என்று, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE- சி.எம்.ஐ.இ.) நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகிறார்.

கோவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் வேலை இழந்த மாதச்சம்பளதாரர்களின் எண்ணிக்கை இப்போது 1.89 கோடியாக உயர்ந்துள்ளது, ஜூலையில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. கண்டறிந்து உள்ளது. மறுபுறம், மாதச்சம்பளம் பெறாத முறைசாரா வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ள இத்தகைய அதிர்ச்சியானது, சந்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும்: தொழிலாளர்களை குறைவாக சார்ந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தைப் பங்கைப் பெறும்; மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்று வியாஸ் கூறுகிறார்; இது, மாதச்சம்பளம் பெறுபவர்கள் மத்தியில் வேலையிழப்பு எவ்வாறு மோசமடையக்கூடும் என்பதை விளக்குகிறது.

வேலையின்மை நிலவி வரும் விவசாயத்துறையில் தான், சுமார் 1.5 கோடி வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. "ஏனென்றால், விவசாயத்துறை மீதமிருக்கும் ஒரு முகாம் போன்றது" என்று வியாஸ், இந்த பேட்டியில் கூறுகிறார். "எங்கும் எதுவும் கிடைக்கவில்லை என்றால், கடைசியாக நீங்கள் உங்களது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லலாம்; உங்களுக்கென கொஞ்சம் நிலம் இருக்கும். நீங்கள் உங்கள் தோட்டத்தில் வேலை பார்ப்பதாக கூறுவீர்கள்" என்றார்.

வேலை இழப்புகளை விட அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இது பொருளாதாரத்தில் நுகர்வு சக்தியை பாதிக்கும் என்று, வியாஸ் மேலும் கூறுகிறார்.

நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

கடந்த நான்கு மாதங்களை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, எண்ணிக்கை என்ன சொல்கிறது?

சுமார் 40.3 கோடி மக்களின் வேலைவாய்ப்புக்கு வழிவகுத்த பொருளாதாரம் மீது, ஏப்ரல் மாதத்தில் பெரும் அதிர்ச்சியின் உடனடி தாக்கத்தை சந்தித்தோம். அந்த 40.3 கோடி பேரில் 12.1 கோடி பேர் வேலை இழந்தனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின் கட்டமைப்பை கண்ட பிறகு இதை பாராட்டுவது என்பது எளிதானது. இந்தியாவில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் முறைசாரா துறைகளில் உள்ளன - அவர்கள் தினக்கூலி பெறுபவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள். இந்த மக்களில் நிறைய பேரின் நடமாட்டம் உள்ளது: இத்தகைய அதிர்ச்சியை சந்திக்கும் போது, அவர்கள் உடனடியாக வேலை இழக்கிறார்கள். ஒரு கட்டுமானத்தளத்தில் தச்சர் அல்லது கொத்தனார் வேலை செய்யலாம்; ஊரடங்கு அமலுக்கு வந்ததும் கொத்தனார் அல்லது தச்சருக்கு வேலை இல்லை. அவர்கள் உடனடியாக வேலை இழந்தனர். ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு, முறைசாரா வேலையாட்கள் பலரும் தங்களது வேலைகளை மீண்டும் பெற்றனர். சில கட்டுமானங்களில் மீண்டும் பணி தொடங்குவதை கொத்தனார் கண்டார். கட்டுமான தளங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மழை மிக நன்றாக பெய்திருப்பதை விவசாயிகள் கண்டுள்ளனர், அவர்கள் விதைப்பு வேலை [மற்றும்[ வேளாண் பணிகளில் தீவிரமாக உள்ளனர்; அங்கு பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

மாதச்சம்பளம் பெறுபவர்கள் உடனடியாக வேலைகளை இழக்க மாட்டார்கள். உங்களைப் போன்றவர்கள், நிறுவப்பட்ட நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள்; அந்த நிறுவனம் சிக்கலில் இருந்தாலும் வேலை சிலகாலம் தக்கவைக்கப்படுகிறது. மாதச்சம்பளம் பெறுபவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனர். ஊரடங்கின் தாக்கம், அவர்கள் எதிர்பார்த்ததை விட கடுமையாக இருப்பதை மெதுவாகக் காண்பதால், நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படுகிறது. நினைவில் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் நாம் கற்பனை செய்ததை விட ஊரடங்கு நீண்ட காலம் உள்ளது. எனவே தாக்கம் மெதுவாக -- அமைப்புசார்ந்த துறையில் தாக்கம் என்ற விஷம் மெதுவான ஊர்ந்து செல்கிறது-- வெளிப்படுகிறது; மற்றும் மாதச்சம்பளதாரர்கள் வேலை இழந்துள்ளனர்; அப்பணியை அவர்கள் மீண்டும் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

எனவே அமைப்புசார்ந்த துறையிலோ அல்லது கார்ப்பரேட் இந்தியாவிலோ பின்னடைவு இல்லை என்று நாம் நினைத்தோம். அதைத்தானே நீங்கள் சொல்கிறீர்களா?

நாம் நினைத்ததை விட பின்னடைவு குறைவான உள்ளது. கார்ப்பரேட் துறை அல்லது சம்பள வேலைகள் [மற்ற துறைகளை போல்] பாதிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நான் “பின்னடைவு” என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். [2020-21 முதல் காலாண்டில்] அவை 1.7 கோடி வேலை இழந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இழக்கவில்லை என்று சொல்லவில்லை. கார்ப்பரேட் துறை அதன் தாக்கத்தை இன்னும் கொஞ்சம் மெதுவாகக் காண்கிறது. எனவே அவர்கள் பாதிக்கப்பட்டனர் - [அவர்கள் இழப்பை சந்தித்தனர்]; 1.7 கோடி வேலைகள், [இது] இப்போது 1.9 கோடி என்று அதிகரித்துள்ளது, மேலும் அது மோசமடையக்கூடும்.

"பின்னடைவை" சந்தித்தும் வேலை இழப்பை சந்திக்காத துறை விவசாயத் துறை. ஏனென்றால், விவசாயத்துறை மீதமிருக்கும் ஒரு முகாம் போன்றது: நீங்கள் எங்கு சென்று எந்த வேலையும் பெறாவிட்டால், கடைசியில் உங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்லலாம். உங்களிடம் இருக்கும் கொஞ்ச நிலத்தை உழுது தயார்ப்படுத்தலாம். உங்களை கேட்டால் வேளாண் பணி என்று சொல்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் துன்பத்தை சந்தித்ததாக நினைக்கிறேன்.

முறைசாரா துறையுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் துறையின் திறனைத் திரும்பக் குறைக்கும் திறன் அதிகமாக உள்ளது என்று ஏதாவது சொல்ல முடியுமா?

நிச்சயமாக சந்தை மாற்றம் இருக்கப்போகிறது. இவ்வகையான அதிர்ச்சி இருக்கும்போது, பெரு நிறுவனங்கள் மட்டுமே இதில் பிழைக்கப் போகின்றன.

கார்ப்பரேட் துறை இரண்டு வகையான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். முதல் விஷயம் என்னவென்றால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிழைப்பது கடினம், அவை மூடப்படும். அவை மூடப்படும்போது, பெரிய நிறுவனங்களுக்கு அந்த இடம் தரபப்டும். பெரிய நிறுவனங்கள் தங்கள் சந்தை பங்கு அதிகரிப்பைக் காண்பார்கள். இரண்டாவது விஷயம், சந்தைப் பங்கைப் பெறப்போகும் பெரிய கார்ப்பரேட் துறை, உழைப்பை உள்வாங்கப் போவதில்லை. அவை அதிக ஆட்டோமேஷனுக்குச் செல்லும், ஏனென்றால் அவை ஆட்டோமேஷனுக்குச் செல்லும் திறன் கொண்டவை.

எனவே பெருநிறுவனங்கள் சந்தைப் பங்கைப் பெறும், உழைப்பை குறைவாக சார்ந்திருக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இது கடினமானது, சம்பள ஊழியர்களுக்காக தன்னை முன்னோக்கி செலுத்தும்.

அந்தளவுக்கு இதில் சில மாற்ற முடியாதவை. அது சரியானதா?

அது சரியே. சில துறைகளில் [மற்றும்] சில நிறுவனங்களுக்கு இது மாற்ற முடியாதது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதை தக்கவைக்கப் போவதில்லை என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. எனவே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இயக்கும் தொழில்முனைவோர் இருக்கும் புதிய அமைப்பில் வேறு சில வேலைகளைக் கண்டறியப் போகிறார்கள். அவர்கள் வேலை செய்ய வேறு இடத்தை தேட வேண்டும், அவர்கள் சில செயல்பாடுகளை நிறுத்தலாம், புதிய செயல்களை தொடங்கலாம். ஆனால் நிகர லாபம் அவர்களுக்கு எதிர்மறையாக இருக்கும். மேலே பின்னடைவு மற்றும் ஸ்பெக்ட்ரமின் கீழ் முனையில் முழுமையான மறுசீரமைப்பு என்ற தெளிவாக பிரச்சினையாக இருக்கப்போகிறது.

வேலை இழந்த 1.9 கோடி சம்பளதாரர்கள் மற்றும் லாபம் ஈட்டிய விவசாயத்துறை உட்பட மற்றவைகளை பார்த்தால், 1.9 கோடி தனிநபர்களின் நுகர்வு அல்லது வாங்கும் திறன் அதிகமாக உள்ளது என்பது தர்க்கரீதியானது. அதை நீங்கள் கணக்கிட முடியுமா, பொருளாதாரத்தில் அதன் தாக்கம்?

இது மிக பலவீனமான ஒன்று. இது மிக தொந்தரவாக இருக்கிறது, ஏனெனில் வேலையை நீங்கள் தக்க வைத்துக் கொண்டாலும், உங்களது வருவாய் குறைந்துவிட்டது. வேலைகள் தக்கவைக்கப்பட்ட இடங்களில் கூட, ஊதிய உயர்வு மிகக் குறைவாகவோ அல்லது சிறிய ஊதியக்குறைப்பு இருக்கும். உங்கள் ஊதியத்தில் இருந்து வருமானம் நிலையானதாக இருந்தாலும், வேறு எங்காவது இழப்பை சந்தித்திருப்பீர்கள்; சில மதிப்பீடுகள் குறைந்துவிட்டன. உங்கள் அடிப்படை உணர்வு குறைந்துவிட்டது. எனவே வாங்கும் திறனைப் பொறுத்தவரை வேலைகளில் நாம் காணும் இழப்பை விட மிகப்பெரிய இழப்பைக் காண்கிறோம். வேலை இழப்புகள் வருமான இழப்புகளை விடக் குறைவு.

பொருளாதாரத்தில் என்ன பாதிப்பு இருக்கும்? உதாரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% குறையக்கூடும் என்று புள்ளி விவரங்களைக் கண்டோம். வேலை இழப்பால் பொருளாதாரத்தில் நுகர்வு அல்லது வாங்கும் திறன் தாக்கம் என்ன? அதை அளவிட ஒரு வழி இருக்கிறதா?

செப்டம்பர் நடுப்பகுதியில், வருவாய் குறித்த கூடுதல் தரவுகளைப் பெறும்போது தான், இதை மிகச்சிறப்பாக அளவிட முடியும். வேலைவாய்ப்பு தரவு ஒரு சிறிய பின்னடைவுடன் வருகிறது; வருமான தரவு நான்கு மாத பின்னடைவுடன் வருகிறது. எனவே, ஏப்ரல் மாதத்திற்கான தரவை செப்டம்பரில்தான் பெறுவோம். மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாதத்தில் வருமானத்தைப் பொறுத்தவரை மிகவும் தீங்கு விளைவிக்கும் பாதிப்பு என்ன என்பதை பற்றி, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தான் பேச முடியும். இப்போது, வருமானம் குறைந்துவிட்டதா இல்லையா என்று ஒரு நபரிடம் கேட்கும் பதில்களின் அடிப்படையில் மட்டுமே நாம் கருத்து தெரிவிக்கிறோம். அந்த சரிவு, வாரியம் முழுவதும் ஒரே மாதிரியானது.

அமைப்புசாரா துறையின் வாங்கும் திறனை நீங்கள் எவ்வாறு பார்ப்பீர்கள்? இப்போது அவர்கள் மீண்டும் தொழிலாளர் தொகுப்பில் வந்து விரிவடைந்துள்ளனர், ஒருவகையில் அவர்களின் வாங்கும் திறன் கோவிட்டுக்கு முந்தையதாக இருந்ததா, அல்லது நிச்சயமற்ற தன்மை உள்ளதா?

மிகவும் குறைவு. அவர்களின் வாங்கும் திறன் அதிகரித்ததாகவோ அல்லது முன்பு இருந்த இடத்திலேயே இருப்பதாகவே நான் நினைக்கவில்லை. நினைவில் கொள்ளுங்கள், அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்க முடியாது. தினக்கூலி பெறும் ஒருவர் இன்று மாலைக்குள் தனது உணவுக்கு சம்பாதித்தாக வேண்டும். அவர் அதைப் பெறவில்லை என்றால், கடன் பெற வேண்டியிருக்கும் அல்லது அதற்கு சமமான ஒன்றைச் செய்ய வேண்டும். எனவே, இந்த நபர்கள் அவர்கள் பெறும் ஊதியங்கள் எதுவாக இருந்தாலும் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் முன்பு பணிபுரிந்த எண்ணிக்கையில் பாதி, மற்றும் அரை ஊதியத்தில் வேலை செய்யலாம். அவர்கள் வேலை செய்த மணிநேரம் மற்றும் ஊதிய விகிதங்கள் இரண்டிலும் வெற்றி பெறலாம். அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தின் காரணமாக அவர்கள் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அதிக வாங்கும் சக்திக்கு பங்களிக்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.

முன்னதாக, அரசு தரும் ஆதரவு பற்றி கேட்டிருந்தேன். இந்த 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 என்ற அபாயத்தை தெரியப்படுத்தினீர்கள். அவ்வாறு ஏதாவது செய்வதில் இன்னும் தாமதமாகிறதா? அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

இது ஒருபோதும் தாமதமாகாது. சுற்றிலும் வேதனை இன்னும் தொடர்கிறது. அந்த பணத்தை அந்த நபர்களிடம் ஒப்படைத்தல் - இது இப்போது 1.1 கோடி [வேலைகள் இல்லாமல்] உள்ளனர், ஆனால் இன்னும் பலர் உள்ளனர். வேலை இழந்த 12.1 கோடி மக்களிடம் செல்லுங்கள், அவர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்கள் தங்களது சேவைக்கு அப்பாற்பட்டு இன்று அனைவரும் கடன்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் சொத்துக்களை இழப்பார்கள், மேலும் நிறைய இழக்க நேரிடும். அடுத்து வரவிருக்கும் மன அழுத்தத்தில் இருந்து -- அது மன அழுத்தமாக இருக்கலாம், அது சொத்து இழப்புகள், கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் இழப்புகள்; நம்மால் அளவிட முடியாத பல இழப்புகள் உள்ளன -- காப்பாற்ற நாம் நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்; அத்தகைய துயர் நடக்க விடக்கூடாது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.