மும்பை: கோவிட்-19 பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தபடி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை செய்யமுடியாத பலவற்றில் கல்வி காலெண்டர்களின் அட்டவணை தான் முதன்முதலில் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் மட்டும், 32 கோடிக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் (அவர்களில் 13 கோடிக்கும் அதிகமானோர் மேல்நிலைக்குள்) கோவிட் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யுனெஸ்கோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பள்ளிகள், 2020 மார்ச் 25 ஆம் தேதி நாடு தழுவிய முழு முடக்கம் தொடங்கும் முன்பே ஒரு தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன; இதனால் கல்வி வாரியங்களில் சில பாடங்களின் இறுதி தேர்வுக்கு இடையூறும், காலவரையின்றி ஒத்திவைக்கவும் செய்தது.

படிப்பின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், பாடத்திட்டத்தில் கற்றலில் உள்ள இடைவெளியை போக்கவும், பல பள்ளிகள் ஆன்லைன் எனப்படும் இணையவழி கற்பித்தல் பக்கம் திரும்பியுள்ளன. அரசும் தற்போதைய சூழலுக்கு பதில் தரும் வகையில், ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது;

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மாணவர்களுக்கு நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் கல்வி சேனல்கள் போன்றவற்றின் வாயிலாக கற்பிக்க பலவித ஏற்பாடுகளை செய்துள்ளன.

ஆனால், இந்தியாவில் 27% வீடுகளில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் இணைய வசதி உள்ளதாக, வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இணைய அணுகல் இருப்பது என்பதன் பொருள், ஒரு வீட்டில் உண்மையில் நெட்வொர்க் அலைவரிசை அல்லது வீட்டில் ஒரு கணினி உள்ளது என்று அர்த்தமல்ல, ஆனால் அது மொபைல் போன்கள் மூலம் இணையத்தைக் கொண்டிருக்கலாம் என்று, டெல்லியில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரின் இந்த ஆய்வு காட்டுகிறது. நகர்ப்புற மக்கள் தங்கள் கிராமப்புறத்தவர்களுடன் ஒப்பிடும்போது இணைய அணுகல் ஒரு மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில், ஆன்லைன் கற்பித்தல் என்பது பல நிறுவனங்களுக்கு சாத்தியமில்லை என்றாலும், பெரும்பாலான மாநில அரசுகள் எப்போது-எப்படி பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் தேர்வுகளை மறுசீரமைப்பது என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், ​​ஒரு சராசரி மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் பல சிக்கலான கேள்விகளுடன் உள்ளனர். பிரதாம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கல்வியாளர் ருக்மிணி பானர்ஜியிடம், இந்தியா ஸ்பெண்ட் நேர்காணல் நடத்தி சில பதில்களை பெற்றது.

இந்தியாவில் பொருளாதார வல்லுனராகப் பயிற்சியளிக்கப்பட்ட பானர்ஜி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பயின்றார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் அறிஞராக இருந்தார், பின்னர் 1991 இல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பெற்றார். பானர்ஜி சிகாகோவில் ஸ்பென்சர் அறக்கட்டளையில் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1996 இல் இந்தியாவுக்குத் திரும்பினார் மற்றும் ப்ரதாம்-ஐ நிறுவினார், அங்கு அவர் எப்போதும் இருந்தார். பானர்ஜிக்கு கல்வித்துறையில் - கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுடன் நேரடியாக பணியாற்றுவதுடன், அரசுகளுடன் பெரிய அளவிலான கூட்டாண்மைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் பரந்த அனுபவம் உள்ளது . 2005 முதல் 2014 வரை ASER (கல்வி அறிக்கையின் வருடாந்திர நிலை) முயற்சி உட்பட பிரதாமின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.

நேர்காணலில் திருத்தப்பட்ட பகுதிகள்:

கோவிட் 19 பரவல் மற்றும் அதன் விளைவாக அமலான ஊரடங்கு என, பள்ளிகள் முன் எப்போதும் சந்திக்காத சவால்களை எதிர்கொண்டுள்ளன. பாதுகாப்பில் இருந்து விலகி, இப்போது ஒரு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது, பள்ளிகளுக்கு என்ன வழி?

இதுவரை இல்லாதவாறு, பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்று ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ தருணம் என்று நான் கூறுவேன், அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகள் இப்போது என்ன செய்கின்றனவோ, அதை (அது ஆன்லைன் வகுப்புகள் அல்லது பிற செயல்பாடுகளாக இருந்தாலும்) மிகச் சிறப்பாக செய்ய வேண்டும்; அது இன்னும் போதுமானதாக இல்லை. எனவே தான் அனைவரும் மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இந்த நெருக்கடியான தருணத்தில் முற்றிலுமாக பாதுகாப்பு தந்தாலும், [ஆன்லைனில்] ஏதாவது செய்ய முயற்சிக்கும் மாநில அரசுகள் மற்றும் பள்ளிகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். [பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு] நிறைய நேரம் இருக்கிறது, ஆனால் பள்ளிகள் திறந்தவுடன் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் இன்னும் எந்த திட்டமும் இல்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது முதல் சில மாதங்களுக்கு எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், பள்ளி ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பது பற்றியும் முறையான சிந்தனை தேவை.

இந்த ஆண்டு கல்வியாளர்களைப் பற்றி மட்டுமே இருக்கக்கூடாது; ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டும் - கல்வி மட்டுமின்றி பள்ளிக்கு சமூக மற்றும் உணர்ச்சி அம்சமும் உள்ளது. குழந்தையின் அடித்தள திறன்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் (பிரதாமில்) நம்புகிறோம். பள்ளிகள் முதலில் குழந்தைகளை அமர்த்த அனுமதிக்க வேண்டும். பின்னர் ஒரு மதிப்பீடு (இது பீதி தரலாம்) செய்யப்பட வேண்டும். அடித்தளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையும் எந்த நிலையில் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க ஒரு முறை இருக்க வேண்டும்.

பாடத்திட்டம் பற்றி கவலைப்படாமல் பள்ளிகள் முதல் இரண்டு மாதங்களை [மீண்டும் திறந்த பிறகு] செலவிட வேண்டும், மேலும் குழந்தைகளை மீண்டும் இணைத்து அடிப்படை வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை புதுப்பிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, பள்ளி மூடப்பட்டால் குழந்தைகள் எதுவும் கற்றுக்கொள்வதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால் [தற்போதைய சூழ்நிலை விளைவாக] குழந்தைகள் உண்மையில் என்ன கற்றுக்கொண்டார்கள், குறிப்பாக குடும்பத்தில் நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது வாழ்க்கையை சமாளிப்பது பற்றி என்ன கற்றாஅர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு இப்போது சிறிது நேரம் ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் நாம் கற்பிக்காத விஷயங்கள் இவை; ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. இது மீண்டும் இணைப்பதைப் பொறுத்தது - மனிதர்களாக - ஒருவருக்கொருவர். இது முக்கியம், ஏனென்றால் வெவ்வேறு குழந்தைகளுக்கு பகிர்வதற்கு வெவ்வேறு அனுபவங்கள் இருக்கும். வீடு மற்றும் பள்ளிக்கு இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும், ஏனெனில் பெற்றோர்கள் [ஊரடங்கின் போது ] உண்மையிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கற்றலில் உதவ உதவுகிறார்கள். இப்போது இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் [அவர்கள் வேறுபட்ட வர்க்கங்களை பொருட்படுத்தாமல்] மத்தியில் [தங்கள் குழந்தையின் கற்றலுக்காக] ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளது. ஆகையால், பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையில் ஒரு நெருக்கம் நிறுவப்பட வேண்டும், அது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமல்ல, குழந்தை தனது முழு வளர்ச்சியிலும் வளர உதவுகிறது.

கற்றலுக்கான அணுகல் ஒரு விஷயம், ஆனால் தரமான கற்றலுக்கான அணுகல் மற்றொரு விஷயம். நம் நாட்டில் நிலவும் டிஜிட்டல் பிளவு என்பது, சில மாணவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா; அறிவைப் புரிந்துகொள்வதற்கான தளங்கள் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சமம் என்பது சாத்தியமானவையா?

இது உண்மையில் ஒரு பொருளாதார பிளவு போன்றது அல்ல, டிஜிட்டல் பிளவு. டிஜிட்டல் உட்பட ஏராளமான வளங்களைக் கொண்ட படித்த மற்றும் செழிப்பான பெற்றோர் உள்ளனர்.

ஆனால் அவர்களிடம் உள்ள மிகப் பெரிய ஆதாரம் அவர்களின் சொந்தக் கல்வியும், குழந்தைகளுக்கு எந்த வகையிலும் உதவக்கூடிய திறமையும் ஆகும். பொதுவாக, உயரடுக்கு குடும்பங்களில் பெற்றோர்கள் பிஸியாக இருக்கிறார்கள், ஆனால் ஊரடங்கால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். குழந்தைகளை ஆதரிப்பதற்கான குடும்ப வளங்கள் வழக்கத்தை விட அதிகம். அவர்கள் எப்போதும் சில குடும்பங்களில் மற்றவர்களை விட உயர்ந்திருப்பார்கள். இது ஒரு புதிய பிளவு என்று நான் நினைக்கவில்லை.

வானொலி, டிவி, ஜூம் அழைப்புகள், வெபினார்கள், வாட்ஸ்அப் போன்ற மாணவர்களுடன் உங்களிய இணைக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால், அதை அடைய பல்வேறு வழிகள் இருப்பது இப்போது தான் தெரிந்தன. ஒவ்வொரு மாநில அரசும் அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன என்பதல்ல. ஆனால் வாரியங்கள் முழுவதும், பல வழிகளை அடைய முயற்சிக்கின்றன. இது உண்மையில் டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கான எதிர்கால சாத்தியங்களைத் திறக்கிறது.

பிரதாம் வாயிலாக நாங்கள் சுமார் 11,000 கிராமங்களையும் சில நகர்ப்புற சமூகங்களையும் சென்றடைய முடிந்தது. எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் வழியாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளை அணுகினோம். இது எங்கள் திட்டத்தின் ‘கரோனா தோடி மஸ்தி தோடி பதாய்’ பகுதியாக இருந்தது, அங்கு குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் கல்வி ரீதியாகவும் செயல்பாடுகளை அனுப்புகிறோம். இதன் விளைவாக கிடைத்த ஒரு செய்தி, மாலை நேரத்தில் பெற்றோரிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் 10க்கும் மேற்பட்ட பதில்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள், ஆலோசனைகளை கேட்கப்பட்டன என்பதாகும்.

அடிப்படையில், இதுபோன்ற அமைப்புகளை உருவாக்குவதற்கான இப்போது தான் நல்ல வாய்ப்பாகும், ஆனால் [மாணவரின்] குடும்பம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நான் ஒரு பாட புத்தகத்தில் இருந்து ஒரு பாட வேலையை அனுப்பும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பித்து உதவுவதற்கு, அவர்கள் படித்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்கிறேன். உதாரணமாக, கடந்த வாரம் வீட்டில் தினமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும்படி குழந்தைகளிடம் கேட்டோம். குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு நிறைய பதில்கள் கிடைத்தன; அவர்கள் அதை குவளைகளில் அளவிட முடியுமா என்று கேட்டார்கள், ஏனெனில் அது அவ்வளவு எளிதானது. இது மிகவும் விவாதமாகும். மற்றொரு நாள், 3 x 3 தொகுப்பை 15 ஐ நடுத்தர எண்ணாகவும், அனைத்து கணக்கீடுகளிலும் மொத்தம் 15 வரும்படியும் உருவாக்குமாறு குழந்தைகளிடம் கேட்டோம். இந்தச் செயலில் உதவ போதுமான கல்வி இல்லை என்று பெற்றோர்கள் உணர்ந்ததால், அதற்கு அதிக பதில் கிடைக்கவில்லை. டிஜிட்டல் உள்ளடக்க தயாரிப்பாளர்கள் தங்கள் காதுகளை களத்தில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன், இல்லையெனில் இது பாரம்பரிய கல்வி முறைகளைப் போலவே மாறும், கல்வியின் அணுகலில் உள்ள சிக்கல்களை தீர்க்காது.

பல மாநில அரசுகள் நிறைய செய்கின்றன - சிலர் குரல் பதிவு மூலம் கலந்துரையாடுகின்றனர். மற்றவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களா இல்லையா என்பது கேள்வி அல்ல; அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், எது செய்யவில்லை என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகள் இதைச் செய்கின்றன, ஆனால் அரசு கட்டமைப்புகள் பெரியவை. தனியார் பள்ளிகளில், பள்ளி மட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. எனவே, முடிவுகளை எடுப்பதற்கும் அடுத்த கட்டத்தை எடுப்பதற்கும் இடையிலான வளையம் சிறியது. அரசு அமைப்பில், மாவட்ட அளவிலான நிர்வாகி போன்ற ஒருவர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. மாநில அரசு ஆணை அதிகார அறிவுறுத்தல்களை வெளியிடும். ஆனால், மீண்டும் இத்தகைய ஒரு நெருக்கடி உங்களுக்கு வித்தியாசமாக விஷயங்களைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஊரடங்கு காரணமாக நகரங்களில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்கள் பசியில் இருந்து தப்பிக்க, சொந்த கிராமங்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த மனிதாபிமான நெருக்கடி மற்றும் வெகுஜன வெளியேற்றம் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளின் கல்வியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி வருவது எதிர்மறையான மற்றும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கஷ்டங்கள் இருக்கும் என்பது ஒன்று நிச்சயம். மதிய உணவு திட்டம் இப்போது மிக முக்கியமானதாகிவிடும், ஏனெனில் இது உணவுப் பாதுகாப்பை சார்ந்தது. மேலும், கிராமப்புறங்களில் பள்ளிகளில் வருகை மற்றும் சேர்க்கை அதிகரிக்கும். அத்துடன் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சேர்க்கை என்ற மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், பெற்றோரால் கட்டணச் சுமையை தாங்க முடியாது, குறிப்பாக கிராமப்புறங்களில். இந்த விஷயத்தில், அரசு பள்ளிகள் அழுத்தத்திற்கு உள்ளாகும், ஆனால், மீண்டும், மாநில அரசுகள் போதுமான நிதி இல்லாததால் செலவினங்களை அதிகரிக்கக்கூடாது. உண்மையான தீர்வுகள் உள்ளூர் மட்டத்தில் வர வேண்டும். எனவே, கூட்டு முடிவெடுப்பது முக்கியம்.

நான் ஒரு உதாரணத்தை தருகிறேன்: கிராமங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோர், நகரங்களில் சிறந்த பள்ளிகளில் வாய்ப்பை பெற்றிருந்தவர்கள்; அவர்கள், கிராமப்புற பள்ளிகளுக்கு மதிப்பு சேர்க்கலாம். இந்த நபர்களை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம்? இந்த குழந்தைகளை நாங்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறோம்? குழந்தைகளை ஒரு சுமையாகப் பார்க்கப் போகிறோமா, ஏனென்றால் அவர்களுக்கு கொஞ்சம் பணம் இருக்கும், இது நெரிசலுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக குழந்தைகளின் பெற்றோரை உணவு, கற்பித்தல் அல்லது கதை சொல்ல உதவுதல் என பள்ளிக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவுவதற்கு இதை நாம் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கிய மாற்று காலண்டர் ஆண்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இந்த நான்கு வார, செயல்பாட்டு அடிப்படையிலான கல்வி நாள்ட்டி, மதிப்பெண்களைக் காட்டிலும் கற்றல் முடிவுகள் மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்ட கற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சில மாநிலங்கள் நேரடியாக அடுத்த வகுப்புக்கு குழந்தைகளை அனுப்புவது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? குறிப்பாக உயர் வகுப்புகளில் உள்ளவர்கள் மற்றும் அடுத்த ஆண்டு கல்லூரிக்குச் செல்லத் திட்டமிடுபவர்களை இது எவ்வாறு பாதிக்கும்?

பாடத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான ஆண்டு இதுவல்ல என்று நான் நினைக்கிறேன். இது வகுப்பை தொடங்கவும், நம்மை சுற்றியுள்ள விஷயங்களை கவனித்துக் கொள்வதற்கும், நமது அடித்தளத்தை வலுப்படுத்துவதற்குமான ஒரு வருடம். அடிப்படை ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதற்கான நேரம் இது, மேலும் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும், ஏனென்றால் உங்களிடம் வரும் எதற்கும் நீங்கள் பரவலாக தயாராக இருக்க வேண்டும். இந்திய மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுதுதல், கணிதம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்த இந்த நேரத்தை செலவிட வேண்டும், இதனால் 2021 மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குழந்தைகள் புதிய பள்ளி ஆண்டுக்கு புதியதாகவும் வலுவாகவும் செல்ல முடியும்.

ஆரம்பப்பள்ளி மாணவர்கள், 5ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற கொள்கையை நாம் ஏற்கனவே வைத்திருக்கிறோம் [2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கவைப்பு இல்லாமை கொள்கை]. ஒவ்வொரு மாணவரும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மறைமுகக் கொள்கையும் உள்ளது. மார்ச் 2021 இல், 10ஆம் வகுப்பு தேர்வுகளை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு பெரிய கேள்வி. 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களை நன்கு பயிற்றுவிக்க வேண்டும் மற்றும் அவர்களின் பலவீனங்களை சரிசெய்ய வேண்டும், இதனால் அவர்கள் அடுத்த ஆண்டு புதிய வகுப்பிற்குச் செல்லும்போது, ஆசிரியர்கள் மிகவும் மாறுபட்ட கற்றல் தரங்களைக் கொண்ட மாணவர்களைக் கையாள வேண்டியதில்லை. சில நேரங்களில் முன்னேறுவதை விட இரண்டு படிகள் பின்வாங்குவது நல்லது.தற்போதைய நெருக்கடிக்கு குழந்தைகளுக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட வேண்டும்? உங்களுக்குத் தெரியும், அடுத்த வகுப்பிற்குச் செல்வது அவர்களுக்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் - உயரமாக வளர்வது போல.

பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படுகின்றன? பள்ளிகளைத் திறப்பதில் மாநிலங்கள் என்ன கொள்கையை பின்பற்ற வேண்டும்?

முதலவாது, நமது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பியதால் தான் பள்ளிகள் மூடப்பட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியவில்லை. ஊரங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன; என்னைப் பொறுத்தவரை, பள்ளிகள் கடைசியாக திறக்கப்படுவது ஒரு பிரச்சனையல்ல. இருப்பினும், பெற்றோர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - கிராமப்புறங்களில், பெற்றோர்கள் ஏற்கனவே அறுவடைக்கு வெளியே செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டார்கள். பள்ளிகள் திறக்க, பொது போக்குவரத்து முழுமையாக செயல்படுவதும் முக்கியம்.பின்னர் என்ன அவசரம்? மாநிலங்களுக்குத் தேவையான பணத்தை பள்ளிகள் தரப்போவதில்லை - மதுபானக் கடைகளிலிருந்து கலால் வரி வசூலிப்பது போல அல்ல இது. ஒரு குடும்ப அலகு போலவே, நீங்கள் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு முன்பு சுற்றுப்புறங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வீர்கள், பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு ஒரு சமூகம் முதலில் விஷயங்களை இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்.

நீங்கள் பள்ளிகளைத் திறக்கும்போது, குடும்பத்திற்கான தகவல்கள் கிடைக்கக்கூடிய இடமாக அவை மாறும் வகையில் புதிய வழியில் அவற்றைத் திறக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் வகித்த பங்கையும் பள்ளிகள் அங்கீகரிக்க வேண்டும்; பள்ளிகள் மூடப்பட்டபோது, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றலில் வலிமையின் தூண்களாக மாறினர். குடும்ப சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் போன்ற பரந்த பாடங்களைப் பற்றி பள்ளி மற்றும் பெற்றோர்களிடையே நிறைய தொடர்பு ஏற்பட வேண்டும்.

பள்ளிகள் நிலைமையை மற்ற நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன? சில வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை ஒருவருக்கொருவர் ஆறு அடி தூரத்தில் அமர அனுமதிக்கின்றன. இந்தியாவுக்கான நடைமுறை தீர்வுவாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன?

பள்ளிகளை மூடாத சுவீடன் போன்ற நாடுகள் உள்ளன; அவர்கள் பள்ளிகளை ஒரு பாதுகாப்பான இடமாகப் பார்க்கிறார்கள் மற்றும் குழந்தைகள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படாத வகையில் பராமரிக்கிறார்கள். மாறுபட்ட அனுபவங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன், நடைமுறையைப் பார்ப்பதை விட, அந்த குறிப்பிட்ட நடைமுறையின் பின்னால் உள்ள தர்க்கத்தைப் பார்ப்பது முக்கியம், ஏனெனில் அது மிகவும் சூழல் சார்ந்ததாகும். ஆறு அடி தூரத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் ஸ்வீடனில் வேலை செய்யலாம், ஏனென்றால் அவர்கள் நம்மைவிட ஒரு வகுப்பறையில் மிகக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளனர். நமது விஷயத்தில், குழந்தைகளை நகர்த்த முயற்சிப்பதை விட இரண்டு ஷிப்டு வகுப்புகளை நாம் நடத்த வேண்டியிருக்கும்.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மீது, தற்போதைய கோவிட் தொற்று என்னவகையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் காண்கிறீர்கள்?

ஏற்கனவே பாதகமாக உள்ளவர்கள் நெருக்கடி காலங்களில் மற்றவர்களை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நான் சொன்னது போல, இந்த ஆண்டு கற்றல் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது முக்கியம்; அதற்கு பதிலாக பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை கொண்ட பகுதியில் மாணவர்கள் வருகை குறித்து நாம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ஒரு கிராமப்புற பள்ளியில் - ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் - சேர்ந்த மாணவர்களின் வருகை குறைந்து வருவதைக் கவனித்தால், அந்த குழந்தைகளைச் சென்று திரும்பப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, பாதிக்கப்படக்கூடிய அல்லது பின்தங்கிய குழந்தை பாதையில் இருந்து விழாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழி, மற்றவர்களை விட அவர்களின் வருகையை குறிவைத்து கண்காணிப்பது மற்றும் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கான தீர்வுகளைக் காண்பது ஆகும்.

செலவினங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியமும், அரசு பள்ளிகளுக்கு எந்தப் பணம் வந்தாலும் அறிவியல் உபகரணங்களைக் காட்டிலும் மதிய உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக செலவிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பெற்றோரின் வலுவான சமூகம் பள்ளிக்கு மதிப்பு சேர்க்கக்கூடிய ஒரு வளமாக பார்க்கப்பட வேண்டும். பள்ளிகள் பெற்றோரை ஒரு கூடுதல் கையாக பார்க்க வேண்டும், ஒரு சொத்தாக அல்ல. அரசு நிதி குறைக்கப்படக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் நமக்கு அதிகமான உள்ளூர் வளங்கள் தேவைப்படும்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர். கட்டுரையை திருத்தியவர், பூஜா வஸிஷ்ட் அலெக்சாண்டர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.