மும்பை:பயோடெக் நிறுவனமான பயோகான், ஜூலை 11 அன்று, ஐடோலிசுமாப் என்ற புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறியது. இதற்கு, கோவிட்19 காரணமாக ஏற்படும் கடும் சுவாசக் குழாய் நோய்க்குறியின் (ARDS) கடுமையான நிகழ்வுகளுக்கும், மிதமான சைட்டோகைன் சுழல் வெளிப்பாட்டுக்கு சிகிச்சையளிக்க, அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மருந்தின் ஒரு குப்பிக்கு ரூ.7,950 செலவாகிறது, ஒரு நோயாளிக்கு நான்கு குப்பிகள் தேவைப்படும்.

மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் குடும்பத்தைச் சேர்ந்த இடோலிஸுமாப் மருந்து, இதுவரை தடிப்புத்தோல் அழற்சி சிகிச்சைக்கு பயன்பட்டுவந்தது. சைட்டோகைன் சுழலை தடுப்பதற்காக மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துகிறது அல்லது தடுக்கிறது - அதிகப்படியான அல்லது கட்டுப்பாடற்ற சைட்டோகைன்கள் --இது அதிகம் வெளிப்பட்டும் செல்களை இறக்கச்செய்யும் -- வெளியிடப்படும்போது, அதிக நோயெதிர்ப்பு உயிரணுக்களை செயல்படுத்துகிறது. இது ஹைப்பர் இன்ஃப்ளமேஷனில் விளைகிறது, மேலும் செப்சிஸ் அல்லது உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறது, இவை அனைத்தும் ஆபத்தானவை.

கடந்த 2020 மே மாத தொடக்கத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஐடோலிஸுமாப் மூலம் மருத்துவப்பரிசோதனைகளை மேற்கொண்ட முதல் மும்பை மருத்துவர் ஹேமந்த் தாக்கருடன், நாம் பேசவிருக்கிறோம். தாக்கர், மும்பையின் பாட்டியா மற்றும் ப்ரீச் கேண்டி மருத்துவமனைகளில் இருதயக்கோளாறுகள் மற்றும் பொது மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

நீங்கள் செய்த சோதனைகளின் தன்மை என்ன?

ஏப்ரல் மாத இறுதியில்,நகரங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தொற்று தீவிரமாக பரவிய போது, சைட்டோகைனின் சுழலை தடுக்க மோனோக்ளோனல் நோயெதிர்ப்பு குடும்பத்தை சேர்ந்த மருந்துகளின் குழு (அதாவது அவை இம்யூனோ - மாடுலேட்டர்கள் அல்லது இம்யூனோ - தடுப்பான்கள்) பயன்படுத்தப்படலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அந்நேரத்தில், ஒரேயொரு [அத்தகைய மருந்து] - டோசிலிசுமாப் - மட்டுமே கிடைத்தது; அதுவும் குறைவான சப்ளைஇருந்தது. டோசிலிசுமாப் இரண்டு முறை கொடுக்கப்பட வேண்டியிருந்தது - ஒன்று மற்றும் இரண்டு நாட்களில். அது ஒவ்வொரு நாளும் அதற்கு சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை செலவிட வேண்டியிருந்தது. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை, கருணை அடிப்படையில் அதை முயற்சித்தோம்; அது [இடோலிஸுமாப்] வேலை செய்வதாகத் தோன்றியது - மேலும் நன்றாக. இரண்டு டோசிலிசுமாப் உடன் ஒப்பிடும்போது எங்களுக்கு ஒரு ஊசி மட்டுமே தேவைப்பட்டது.

முதல் நோயாளியை [மருத்துவப்பரிசோதனைக்கு] மே 12 அன்று கருணையுடன் நியமித்தேன். நோயாளி ஆறாவது நாளில், மேலும் மேலும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், அவரது சுவாசம் போராடுகிறது. அவர் விரைவில் [சைட்டோகைன்] சுழலுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. எனவே நாங்கள் இடோலிஸுமாப் கொடுத்தோம். நாங்கள் சுமார் 4-5 ஆம்புலைகளை கொடுக்கிறோம் - சுமார் 100 முதல் 125 மி.கி. நாங்கள் வழக்கமாக ஒருமுறை மட்டுமே தருகிறோம். ஏழு நாட்களுக்குப் பிறகு அதை மீண்டும் செய்யலாம். இந்த மருந்து உடலில் உள்ள வைரஸின் எரிச்சலால் தூண்டப்பட்ட அழற்சி, சைட்டோகைன்களின் செயல்பாட்டைத் தடுப்பதைக் கண்டறிந்தோம்.

வைரஸ் - அது மனித உடலில் தன்னைப் பற்றிக் கொண்டவுடன் - ஒரு சங்கிலி எதிர்வினை அமைத்து வீக்கத்தைத் தூண்டியது; அதன் விளைவாக அழற்சி சைட்டோகைன்களைத் தூண்டியது, அவற்றில் சில இன்டர்லூகின்ஸ் என்று அழைக்கிறோம். இந்த சைட்டோகைன்கள் 6, 7 அல்லது 10 ஆம் நாள் வரை அதிகரித்து, திடீரென மனித உடலைத் தாக்குகின்றன. சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவற்றை செயலிழக்கச் செய்யும் [மற்றும் சுவாசத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்], அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கும் - சைட்டோகைன் சுழல் நெருக்கடி என்று இதை நாம் அழைக்கிறோம்.

அந்த நிலையில் நெருக்கடியை நீங்கள் முன்கூட்டியே வெளியேற்றியோ அல்லது டோசிலிசுமாப் போன்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம் ஆன்டிஜென்கள் அல்லது அழற்சி குறிப்பான்கள் உடலில் வேலை செய்வதைத் தடுக்கிறீர்கள். அதன் பிறகு, அழற்சி குறிப்பான்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அவை வேலை செய்யாது. எனவே, வைரஸ் தடுக்கப்படும். அழற்சி குறிப்பான்கள் பூஜ்யம் மற்றும் வெற்றிடமாகும். அவை தாக்கலாம், ஆனால் அவை சேதத்தைத் தடுக்கும் கவசத்தின் மீதுதான் படும். அந்நேரத்தில், வைரஸ் நிலைகுலையும், உடல் செயலாற்ற தொடங்குகிறது, [உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மீண்டும் தாக்கும்.

எனவே, அந்த முக்கியமான மூன்று முதல் ஐந்து நாள் காலகட்டத்தில் முடிந்தால், உடலை மீட்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நினைவில் கொள்ளுங்கள், இந்த ஊசி மிதமான, மிதமான தீவிரம் மற்றும் கடுமையான நிகழ்வுகளுக்கு மட்டுமே; இது மொத்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் 4-5% அல்லது அதற்கும் குறைவாக உள்ளது; 85-90% நோயாளிகள் தாங்களாகவே குணமடைவார்கள். மீதமுள்ள 10-12% இல் பெரும்பாலானவர்களுக்கு, விலையுயர்ந்த இந்த நோயெதிர்ப்பு -மாடுலேட்டர்கள் மற்றும் ஊசி மருந்துகள் நரம்பு வழியாக செலுத்த விரும்புவதில்லை.

எனவே, நாம் என்ன செய்வது? நோயாளிகள் வென்டிலேட்டர் பயன்பாட்டை தடுக்க, மரணத்தை தடுக்க இதைப் பயன்படுத்துகிறோம். அவர்கள் ஏற்கனவே வென்டிலேட்டரில் இருந்தால், அவர்களை எளிதாக வெளியேற்றலாம். கோவிட்டுக்கு எதிரான சிகிச்சையில் வெவ்வேறு தூண்களின் ஒரு மூலக்கல்லாக உருவாகும் ஒருமுறை இது என்று நாங்கள் நம்புகிறோம். கோவிட்டுக்கு மேஜிக் புல்லட் இல்லை. இது, கோவிட்டின் ஆட்டத்திற்கு மாற்று அல்ல. இறப்பைக் குறைப்பதில் - அல்லது குறைக்க முயற்சிப்பதில் இது போக்கை மாற்றுகிறது. இதை நீங்கள் ரெம்டெசிவிர் அல்லது ஃபாவிபிராவிருடன் ஒப்பிட முடியாது, ஏனெனில் அவை ஆன்டிவைரல்கள்.

நீங்கள் இப்போது விவரித்த முன்னேற்றத்தை மிகவும் கடுமையான வழக்குகள் பின்பற்றுகின்றனவா?

அவர்கள் செய்கின்றார்கள். அவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் வருகிறார்கள். அவர்களுக்கு ஆன்டிவைரல், டாக்ஸிசைக்ளின் மற்றும் அஜித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள், டெக்ஸாமெதாசோன் மற்றும் மெத்தில்ல்பிரெட்னிசோலோன் போன்ற ஸ்டெராய்டுகள், ஆன்டிகோகுலண்டுகள் மற்றும் பிற தரமான பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. நோயாளிக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும், அவரது சுவாச அமைப்பு மோசமடைந்து காணப்பட்டால், நாங்கள் [சைட்டோகைன்] சுழலை தடுத்து, ஐடோலிஸுமாப் கொடுக்கிறோம், அது செயல்படுகிறது. சுமார் 21 நோயாளிகளில் இதை ஆய்வுக்காகப் பயன்படுத்தினேன். இவற்றில், ஒருவரைத்தவிர, மற்றவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத அல்லது முக்கியமான வசதிகள் இல்லாத பல நோயாளிகள் இருந்ததாக, ஏப்ரல் மாதத்தில் கூட, நீங்கள் அதை நம்புவதாக சொன்னீர்கள். கடந்த நான்கு மாதங்களில் நீங்கள் திரும்பிப் பார்த்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய பிற கற்றல் மற்றும் நுண்ணறிவு என்ன?

நுண்ணறிவு என்னவென்றால், கோவிட்டுக்கு இன்னும் சிகிச்சை மருந்து இல்லை. நீங்கள் அந்த அலையில் நீந்த வேண்டும்; கோவிட் தொற்றுக்கு மேல் செல்ல வேண்டும். நம்மில் பெரும்பாலோர் மிக அதிர்ஷ்டசாலிகளாக இருப்போம்; மேலும் 85-88% வகைக்குள் வருவோம். மீதமுள்ளவர்கள் அடுத்த 7-8% வகைக்குள் வருவார்கள், அவர்களுக்கு காய்ச்சல், இருமல், தளர்வான இயக்கங்கள், உடல்வலி, வழக்கமான வைரஸ் நோய்க்குறி இருக்கும் - அவை வாசனையையும் சுவையையும் இழக்கின்றன.ஆனால் 4-5% பேர் கோவிட் நிமோனியா வடிவத்தில் சுவாசத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டுள்ளனர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டவுடன், அவர்கள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்; ஏனெனில் சீரழிவுக்கும் முழுமையாக வீசிய [சைட்டோகைன்] சுழலுக்கும் இடையிலான நேரம் மிகக்குறைவு. அது மருத்துவமனையில் இருந்தால், அது வருவதைக் காணலாம், அதை எதிர்பார்க்கலாம், சிகிச்சையளிக்கலாம், அதை முன்கூட்டியே செய்யலாம்.

எனவே, கடந்த மூன்று மாதங்களில் நோயை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நம்முடைய திறன் மேம்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுவீர்களா - உங்களைப் போன்ற முன்னணியில் உள்ள மருத்துவர்கள் முன்பை விட அதைக் கட்டுப்படுத்துவதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா?

எங்களிடம் அதிகமான உபகரணங்கள் உள்ளன; ஐடோலிஸுமாப் உள்ளது, ரெமெடிவிர் உள்ளது. இவையெல்லாம் சேர்ந்து இறப்பு விகிதத்தை - இப்போது 3-4% முதல் 2-3% வரை குறைக்க எங்களுக்கு உதவியது. ஒவ்வொரு 100 க்கும் 1-1.5 நோயாளிகளை நீங்கள் காப்பாற்ற முடிந்தால், அதுவே நிறையவாகும்.

முக்கியமான பராமரிப்புகளில் சிரமம், குறிப்பாக கோவிட்டை நிர்வகிக்கும் மருத்துவமனைகளில் ஏதேனும் இருந்தால், நீங்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறீர்கள்?

இந்தியா 130 கோடி மக்களைக் கொண்ட நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்; மும்பை ஒரு பரபரப்பான நகரம். எங்களுக்கு நிச்சயமாக நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஐ.சி.யூ அல்லது முக்கியமான கவனிப்பு தேவைப்படும் நபர்கள் உள்ளனர் என்பதிய அறிவோம். எனவே, நாங்கள் எப்போதும் பரபரப்பாக இருக்கிறோம், எப்போதும் இங்குள்ள படுக்கைகள் நிரம்பி இருக்கின்றன. ஆனால், முக்கியமான நோயாளிக்கு எங்களிடம் இடம் இல்லை; அதனால் டிஸ்சார்ஜ் செய்தோம் என்று அர்த்தமல்ல. அவருக்கு சிகிச்சையளிப்பதா அல்லது 80 வயதானவருக்கு அல்லது 40 வயதானவருக்கு சிகிச்சையளிப்பதா என்ற குழப்பத்திலும் நாங்கள் இல்லை. அதிர்ஷ்டவசமாக, வென்டிலேட்டர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எனவே அந்த வகையில் நாம் சரியானவர்கள்.

நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தெரிந்துகொள்கிறோம். புதுமைப்படுத்த, நாங்களாகவே சிந்திக்க கற்றுக்கொண்டோம். இது [ஐடோலிஸுமாப் பயன்படுத்துவது] அவர்கள் கொண்டு வந்த ஒரு சிந்தனையாக இருந்தது, ஏனெனில் இந்த மருந்து தடிப்புத் தோல் அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. நான் இப்போது 24-25 நோயாளிகளுக்கு பரிசோதித்துள்ளேன். நன்றாக வேலை செய்வதாக தெரிகிறது. காலம் பதில் சொல்லும்.

வைரஸ் தொற்றுநோய்களுக்கு, மாத்திரை சாப்பிட்டாலே தொற்று இறந்துவிடும் மலேரியா மருந்து போன்ற ஆன்டிவைரல் எங்களிடம் இல்லை. தட்டம்மை, ரூபெல்லா, சின்னம்மை - இவை அனைத்தும், எப்படி போய்விட்டன? அவை தடுப்பூசி மூலம் மட்டுமே மறைந்தன. நீங்கள் சின்னம்மை தடுப்பூசி, பெரியம்மை தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்கள். எங்களது காலத்தில் நாங்கள் அனைவரும் சின்னமையால் பாதிக்கப்பட்டோம். அப்போது அதை குணப்படுத்தவில்லை, அது தன்னைத்தானே மடித்துக் கொள்ளும் வரை சகித்துக் கொண்டோம்.

வைரஸ்களைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும் என்று நான் நினைக்கவில்லை. எல்லா வைரஸ்களுக்கும் ஒரு தடுப்பூசி தேவை, மேலும் ஒருபோதும் தடுப்பூசி இல்லாத சில வைரஸ்களும் உள்ளன. டெங்கு வைரஸ் மற்றும் எச்.ஐ.வி போன்றவற்றிற்கு தடுப்பூசி வெற்றிகரமாக இல்லை. எனவே, [SARS-CoV-2க்கு] எதையாவது பெறுவோம் என்று நம்புகிறோம், அல்லது அதை மனிதர்கள் ஏற்கப் பழகுவதன் மூலம் சகித்துக்கொள்ள கற்றுக்கொள்கிறோம். ஒன்று வைரஸ் பலவீனமடையும், அல்லது நாம் பலமடைவோம்.

வெளிப்படையாக, நீங்கள் இந்த மருந்துடன் வரையறுக்கப்பட்ட தரவு மற்றும் நேரத்துடன் பணிபுரிகிறீர்கள். இந்த மருந்து பாதுகாப்பானது என்று கூறுவீர்களா?

உறுப்புகளை அச்சுறுத்தும் அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை என்ற வடிவில் எனக்கு எந்த எதிர்வினையும் இல்லை. உங்கள் உற்சாகத்தால் இந்த மருந்தை இரண்டு-மூன்று மணி நேரத்தில் மிக விரைவாகக் கொடுத்தால், நோயாளிக்கு நடுக்கம், குளிர் மற்றும் பிற விஷயங்களுடன் ஒரு ஒவ்வாமை நிகழ்வைப் பெறக்கூடிய ஒரு சிக்கலைப் பெறலாம். இப்போது நாம் சிந்திக்கக் கற்றுக்கொண்டோம், ஆறு அல்லது ஏழு மணிநேரங்களுக்கு மேல் மெதுவாக அதைக் கொடுக்கிறோம். பின்னர் எதுவும் நடக்காது.

நம்மிடம் சிறுநீரக முடக்கம் இல்லை; நீண்ட கால [சிக்கல்கள்] இல்லை - நாங்கள் இரண்டு மாதம் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமே உள்ளது. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஐடோலிஸுமாப் பெற்றவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை காலம் நமக்குத் தெரிவிக்கும். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால் அது தன்னைத்தானே எரிக்கப் போகிறது. இப்போதைக்கு, இது பாதுகாப்பானது.

தொற்று வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்; உபகரணங்கள் அதிகம் உள்ளதாக கூறினாலும், அடுத்த சில மாதங்களில் இது முன்னேறுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எல்லோருக்கும் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். உங்கள் பாதுகாப்பை கைவிட வேண்டாம். ஒவ்வொரு நாளும் நம்மிடம் மருந்துகள் பையில் விழுகின்றன என்று நினைக்க வேண்டாம்; எனவே நாம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கப் போகிறோம். உங்கள் முகக்கவசத்தை தொடர்ந்து அணிந்திருந்தால், நீங்கள் கூட்டமாக சேராமல் இருந்தால், பாதுகாப்பான இடைவெளியை கொண்டிருந்தால் மட்டுமே நீங்கள் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஊரடங்கால் சோர்வடைந்து இருக்கிறார்களா அல்லது மக்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள. உங்களைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படவில்லை. உங்கள் வயதுள்ள, வயதான, பலவீனமானவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும். அது நடப்பதை நான் காணவில்லை. தன் பாலினத்தவர்களுடன் சாலையில் திரிபவர்களை காண்கிறேன். மக்கள் கூட்டமாக இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் உடல் நலன் மீது ஆர்வம் காட்டுவதைவிட மூடப்படும் மதுக்கடை அல்லது விற்பனைக்கு வரும் உணவகம் அல்லது கடையில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மருத்துவ ரீதியாக நாம் முயற்சிக்கிறோம், புதுமைப்படுத்துகிறோம், நம்புகிறோம், பழைய மருந்துகளை மெருகூட்ட முயற்சிக்கிறோம், அவற்றை எடுத்து மறுவடிவமைக்கிறோம், நமக்கு வேறு சிகிச்சை இல்லை. இவை அனைத்தும் துணை சிகிச்சைகள். நம்மில் பெரும்பாலோர் அதிர்ஷ்டம் கொள்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசம் கொண்ட அந்த 1-2% மக்களுக்கு கடவுள் உதவுகிறார். எனவே, அதைப்பெறும் 1-2% பேரில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பவில்லை என்றால், அதைப் பெறுவதைத் தடுக்க வேண்டும். நீங்கள் அதைப் பெற்றவுடன், உங்கள் உடல் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஒரு பெண்மணி வந்து, “என் கணவர் 10 ஆண்டுகளாக மட்டுமே புகைபிடித்து வருகிறார், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது; என் பக்கத்து வீட்டில் இருப்பவர் 40 ஆண்டுகளாக புகைபிடித்திருக்கிறார், அவருக்கு எதுவும் நடக்கவில்லை" என்றார். நீங்கள் ஆப்பிள்களை தக்காளியுடன் ஒப்பிட முடியாது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கனவில் நடப்பது போல் கடவுள் இதில் தலையிடாவிட்டால் அல்லது திடீரென்று ஒரே இரவில் நம்மிடம் ஒரு சூப்பர் தடுப்பூசி இல்லாவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா ஆழமாக செல்லப்போகிறது என்பதே நிஜம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.