பெங்களூரு: 2020 ஜூன் மாதம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித் துறை (DFEH - டி.எஃப்.இ.எச்) சாதி பாகுபாடு காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் மீது வழக்கு தொடர்ந்தது. கலிஃபோர்னியாவின் சிவில் உரிமைகள் சட்டங்களை அமல்படுத்துவதற்கு பொறுப்பான அரசு நிறுவனமான டி.எஃப்.இ.எச் வழக்கு, "உயர் சாதியை சேர்ந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பாரபட்சமான அமைப்பின் நடைமுறைகளை தங்களது குழு மற்றும் சிஸ்கோவின் பணியிடங்களில் புகுத்தினர்" என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஜூலை 2 அன்று செய்தி வெளியிட்டது. 'ஜான் டோ' என்று பெயர் மாற்றி சாதி குறிப்பிடப்பட்டுள்ள இந்திய-அமெரிக்க தலித் பொறியாளர், சிஸ்கோ ஊழியர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு, இரு தசாப்தங்களுக்கு முன்னர், பம்பாயின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தன்னுடன் படித்த ஒரு "உயர்" சாதி சக ஊழியரால் வெளிப்படுத்தப்பட்டது மற்றும் வேலையின் போது அது மற்றவர்களிடம் காட்டப்பட்டது என்றார். ஜோவின் பெயர் பொது தகுதிப்பட்டியலில் இல்லாத நிலையில், இடஒதுக்கீடு மூலம் அந்த முன்னணி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

இடஒதுக்கீடு போன்ற உறுதியான நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளையில், தகுதியின் உடையில் செயல்படும் சாதி இயக்கவியலின் சிக்கலான சிக்கலை இந்த வழக்கு முன்வைக்கிறது. இந்தியா பல தசாப்தங்களாக, பட்டியலின சாதியினர் (எஸ்சி), பட்டியலின பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஒடுக்கப்பட்ட குழுக்களுக்குக்கு இடஒதுக்கீடு அளித்திருந்தாலும், 2019 ஜனவரியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு 10% ‘ஒதுக்கீட்டை’ அறிமுகப்படும் செய்தது என்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

சாதி, இனம் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான இந்த நேர்காணலில், உறுதிப்படுத்தும் யோசனையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) சமூகவியல் ஆய்வு மையத்தின் சமூகவியல் பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா கூறுகிறார். இடஒதுக்கீடு தொடர்பான யோசனைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; மேலும் கல்வியாளர்கள், தனியார் துறை மற்றும் பிற பங்களிப்பாளர்களுடன் அரசு கலந்தாலோசித்து, “சாதி அடையாளங்கள் குறித்த கூடுதல் தரவுகளை சேகரிக்க வேண்டும்” என்றார்.

புகழ்பெற்ற சமூக விஞ்ஞானிகளுக்கான இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்-அமர்த்தியா சென் விருதை ஜோத்கா 2012ம் ஆண்டில் வென்றவர். அவரது சமீபத்திய வெளியீடுகளில் India’s Villages in the 21st Century: Revisits and Revisions (எட்வர்ட் சிம்ப்சனால் திருத்தப்பட்டது), Mapping the Elite: Power, Privilege and Inequality (ஜூல்ஸ் நவுடெட்டால் திருத்தப்பட்டது). அத்துடன், Inequality in Capitalist Societies (பாய்க் ரெஹ்பியன் மற்றும் ஜெஸ்ஸி ஸவு ஸாவுடன் இணைந்து எழுதியது), The Indian Middle Class (அசீம் பிரகாஷுடன் இணைந்து எழுதியது) ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

கலிஃபோர்னியாவில் உள்ள நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித் துறை (DFEH - டி.எஃப்.இ.எச்), ஊழியருக்கு எதிரான சாதி பாகுபாடு காடியதாக சிஸ்கோவிற்கு எதிராக வழக்கைத் தொடர்ந்தது. இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட தனியார் துறையில் மனிதவள மேலாளர்களுடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்ட 2007 எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வார இதழ் கட்டுரையில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது "நவீனத்துவத்திற்கும் தகுதிக்கும் இடையிலான உறவு" என்று நீங்கள் (மற்றும் இணை எழுத்தாளர் கேத்ரின் நியூமன்) குறிப்பிட்டிருந்தீர்கள். தகுதி என்ற கருத்தை இப்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள், இந்தியாவில், குறிப்பாக தனியார் துறையில் சாதியால் ஏற்படும் பிரச்சினைகள்?

இது தாராளவாத சமூக ஒழுங்கின் பெரிய பிரச்சினை ஆகும். முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து தனிநபர் அடிப்படையிலான சாதனைக்கு நகர வேண்டும். நவீனத்துவத்துடன் ஒரு அடித்தள சிக்கல் உள்ளது, அதை பொதுத்துறையில் காணலாம். கண்ணுக்கு தெரியாத அடையாளங்களின் மூலமே சமத்துவமின்மைக்கான நியாயத்தன்மை கோரப்படுகிறது. கலாச்சார மூலதனம், மென்மையான திறன்கள், சமூக வலைப்பின்னல் போன்ற அடையாளங்கள் குறிப்புகளில் இருந்து வருகின்றன. தனிநபர் வெற்றி அறிவுத்திறன் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் சூழலில், சில நிலைகளில் பார்த்தால் இது இந்திய பிரச்சினை மட்டுமல்ல; இவை தான் முகப்புகள்.

கடந்த 20 ஆண்டுகளில், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் [சமூக] இயக்கம் நின்றுவிட்டதாக கட்டுரைகள் காட்டுகின்றன.உயர் சாதியினரை தகுதியின் அடிப்படையில் வெற்றிபெற இடஒதுக்கீடு அனுமதிக்கிறது மற்றும் அடையாளத்துடன் எந்த தொடர்பும் இல்லை [என்று அது நம்புகிறது]. அவர்கள் தங்களது சொந்த சலுகைகள் என்பதை உணரவில்லை. எனவே, கார்ப்பரேட் மேலாளர்கள், தகுதியை மட்டுமே தாங்கள் மதிப்பதாகவும், சாதிக்கு எந்த நம்பகத்தன்மையையும் தரவில்லை என்று கூறும்போது, அவர்கள் முன்பே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுடன் தங்களைத் தாங்களே குருடாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மென்திறன்களைத் தேடுவதோடு அவர்கள் அதையே தகுதி என்றும் அழைக்கிறார்கள். விரும்பிய சமூகத்திறன், உண்மையில் ஒப்பீட்டளவில் சலுகை பெற்றவர்களின் ஏகபோகங்கள். தகுதியின் தனிப்பயனாக்கம் சமத்துவமின்மையை நியாயப்படுத்தும் ஒரு உத்தியாக செயல்படுகிறது.

தகுதிக்கான இந்த விளக்கம் பொது அல்லது அரசுத்துறையை விட தனியார் துறையில் அதிகமாக காணப்பட்டதா?

அரசுத்துறையில் கூட தகுதி பற்றிய விளக்கம் உள்ளது. இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) மாநிலத்தால் நிதியளிக்கப்பட்ட போதும் ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கிறது. இதேபோல், ஆயுதப்படைகள் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தவில்லை, மேலும் உயர் நீதித்துறையும் சலுகை பெற்றவர்களுக்கு சலுகையாக இருந்து வருகிறது.

தனியார் துறைக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஒரு விவாதம் நடந்துள்ளது, மேலும் எதிர்மறை கருத்தும் உள்ளது. இத்துறைக்கு இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டுமா? ஆம் என்றால், அதை எவ்வாறு செய்ய வேண்டும்?

இது ஒரு கடினமான கூற்று. அதை செயல்படுத்தவோ நியாயப்படுத்தவோ செய்வது எளிதானதல்ல. எனக்கு ஒரு சிறிய நிறுவனம் இருந்து, அதில் ஐந்து பேரை வேலைக்கு அமர்த்த விரும்பினால் [மற்றும் இட ஒதுக்கீடு அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்], அது [சட்ட தெளிவின்மை உட்பட] எல்லா வகையான சிக்கல்களையும் உருவாக்கும். இருப்பினும், [தனியார்] துறைக்கு சமூகப் பொறுப்பு இருக்கக்கூடாது என இது அர்த்தப்படுத்துவதில்லை. சாதி குறைபாட்டின் முக்கிய குறிகாட்டியாக உள்ளது, மேலும் அனைவராலும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட வேண்டும், அனைவரும் களத்தை சமன் செய்வதில் பணியாற்ற வேண்டும்.

இந்தியச் சூழலில் பன்முகத்தன்மை எவ்வாறு தொன்மை முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதில் இருந்து விலகி உறுதிப்படுத்தும் கருத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பன்முகத்தன்மை என்பது மொழி, பகுதி மற்றும் மதம் பற்றியது மட்டுமல்ல. சாதியை பன்முகத்தன்மையின் முக்கியமான அச்சாகவும் அங்கீகரிக்க வேண்டும். சாதியே எல்லாமாக இல்லை என்றாலும் பாலினம் மற்றும் மதம் போன்ற பிற அடையாளங்களும் முக்கியம் என்றாலும், பன்முகத்தன்மையை அளவிடுவதில் இது மிக முக்கியமான மாறுபாடாக இருக்கலாம்.

உறுதியான நடவடிக்கையை அறிமுகப்படுத்த கார்ப்பரேட் அல்லது தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டுமானால், பள்ளிக்கல்வியின் தன்மை, கிராமப்புற குடியிருப்பு அல்லது பாலினம் போன்ற பல மாறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் அதைத் திறக்கவும், பற்றாக்குறையைத் தனிப்பயனாக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இது 'பற்றாக்குறை புள்ளிகள்' என்ற கருத்தின் மூலம் செயல்படுத்தப்படலாம். ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) அதன் சேர்க்கைக்கு அத்தகைய முறையைப் பயன்படுத்துகிறது - சாதி, கல்வி (கிராமப்புற அரசு பள்ளி அல்லது தனியார்), கிராமப்புறங்களில் இருந்து இடம்பெயர்வு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பற்றாக்குறை புள்ளிகளைக் கொடுக்கும்.உறுதியான நடவடிக்கை அடையாளத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும், இல்லையெனில் அது உறுதியான செயல் அல்ல. ஆனால் நிலையான ஆராய்ச்சி மற்றும் உரையாடல் மூலம் அடையாளங்களை இன்னும் வெளிப்படையாக கற்பனை செய்ய வேண்டும். இந்திய அரசு காலனித்துவ காலங்களில் தோன்றிய நிலையான வகைப்பாடுகளுடனே இன்னமும் செயல்படுகிறது.

அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு வகைப்பாட்டை நாம் பொதுவாகப் பின்பற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு அடையாளங்களை மறுவடிவமைப்பதற்கான சிறந்த வழி எது?

இது அரசுக்கு மட்டுமல்ல, பிற சொந்த நலன்களும் உள்ளன, தலித்துகளுக்குள்ளேயே கூட, இடஒதுக்கீடு கொள்கையைத் தொடுவதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் உயரடுக்கை நம்பாததால் அவர்களுக்கும் அச்சங்கள் உள்ளன. எவ்வாறாயினும், சாதி குறித்த ஒரு நிலையான கருத்தில் இருந்து வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சம வாய்ப்புகளையும் உறுதிப்பாட்டையும் ஊக்குவிக்கும் பொதுவான கலாச்சாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்; மேலும் பற்றாக்குறையின் ஒரு முக்கிய அச்சாக மட்டுமே சாதி அங்கீகரிக்கப்பட வேண்டும். மேற்கத்தைய நாடுகளில் செய்யப்படுவதைப் போல எந்தவிதமான பாகுபாடு காட்டுவதும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.தகுதி உயரடுக்கிற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படாததால் பன்முகத்தன்மை தனியார் துறைக்கு நல்லது. தனியார் துறையில் மென்மையான திறன்கள் என்று புரிந்து கொள்ளப்படுவதில் பெரும்பாலான தகுதி குழப்பமாகவே காணப்படுகிறது. அதிக பன்முகத்தன்மையைக் கொண்டுவருவது அதை மாற்றும். வேலைவாய்ப்பு என்று வரும்போது அது சாதியை ஒழிப்பதை பற்றியது அல்ல, அது [சமூக நடமாட்டம்] வாய்ப்புகளை பெறுவது பற்றியது.

வேலைவாய்ப்பில் சில சதவீதங்களை பூர்த்தி செய்யும் வடிவத்தில் தனியார் துறைக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அது ஒரு பிரச்சினையாக மாறும். அவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் [உதாரணமாக, உறுதியான நடவடிக்கையைத் தொடரும் தனியார் நிறுவனங்களை மதிப்பிட ஒரு சுயாதீன நிறுவனம் கேட்கப்படலாம், இது அரசு ஒப்பந்தங்கள் அல்லது நிறுவனங்களுக்கான அவர்களின் கருத்தை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம், இது பொது மக்களுக்கான ‘நல்ல வணிக நடைமுறைகள்’ நிறுவனங்களின் பட்டியலில் வைக்கப்படலாம்]. அது நிலையை மாற்றக்கூடும்.அத்துடன் இந்திய சமூகம் மிகவேகமாக மாறுகிறது. ஒதுக்கீட்டிற்கான மற்ற கோரிக்கைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஜாட்டுகள், படேல்கள் மற்றும் மராட்டியர்களின் போராட்டங்களை கண்டிருக்கிறோம். இவை ஆதிக்க சமூகங்கள்; இவர்களது அடுத்த தலைமுறையினர் கிராமங்கள் மற்றும் விவசாயத்தில் இருந்து விலகிச் சென்று, படித்தவர்கள் மற்றும் நகரங்களில் இருக்க விரும்புகிறார்கள்.

இது நாட்டுக்கு நல்லது என்றபோதும், நாம் அவர்களுக்கு இடம் தர வேண்டும். தற்போது இந்த இடங்கள் பனியா-பிராமணர்கள் [உயர் சாதிகள்] குழுக்களின் ஏகபோகத்தில் உள்ளன. அவர்களின் [மேலாதிக்க சமூகங்களின்] கிளர்ச்சி முறைகளில் சிக்கல்கள் இருந்தாலும், அவர்களும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல முயற்சிக்கிறார்கள், அவற்றை நேர்மறையாகக் காணலாம். அவர்கள் பின்தங்கிய வர்க்க அந்தஸ்தைக் கேட்பது மட்டுமல்ல, நகரங்களில் கண்ணியமான கல்வியையும் வேலைவாய்ப்பையும் கேட்கிறார்கள். இது, உருமாற்றம் பெறும் விருப்பங்களையும் ஆற்றல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான அரசு, பொருளாதார ரீதியாக பலவீனமான உள்ள பிரிவினருக்கு அரசுப்பணிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பொது பிரிவில் 10% இடஒதுக்கீடு என்று ஏற்கனவே அறிவித்தது;ஒரு வகையில், இந்தியாவில் உறுதியான நடவடிக்கை என்ற கருத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு புதிய மற்றும் ஆக்கிரோஷமான தேசியவாத கதை வெளிவருவதால், இந்தக் கொள்கையின் எதிர்காலம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

கொள்கையில் மதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் அது தொடரும் என்று கருதுகிறேன். இது பொது நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் மட்டுமே இருக்கும். இருப்பினும், பொது நிறுவனங்களின் தரம் குறைந்து வருகிறது, அது மேலும் குறையலாம். நமது கல்வி முறை வேகமாக வேறுபடுத்தப்பட்டு வருகிறது, அங்கு தரமான கல்வி பெரும்பாலானவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் நிறுவனங்களில் நிகழ்கின்றன. இது ஏற்கனவே பள்ளிக் கல்வியின் மட்டத்தில் நிகழ்ந்துள்ளது, மேலும் இது உயர்கல்வி மட்டத்திலும் மிக வேகமாக நடந்து வருகிறது.

வேலை முன்னணியும் மாறுகிறது. கீழ்மட்டத்தில் உள்ள வேலைகள் பெரும்பாலும் அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன, புதிதாக மொபைல் கிராமப்புற எஸ்சிக்கள் இந்த அமைப்புக்கு வர வாய்ப்பில்லை. [அரசாங்கத்தில்] சில உயர் மட்ட வேலைகள் இந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆலோசகர்களுக்கும் பக்கவாட்டு உள்ளீடுகள் மூலம் சேருபவர்களுக்கும் "திறக்கப்படுகின்றன".

இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. பின்தங்கிய சமூகக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர இட ஒதுக்கீடு எவ்வாறு உதவுகிறது என்பதை 2016 இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். நீதிமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது பொருளாதார, ஜனநாயக மற்றும் கல்வி அமைப்பில் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் பங்குகளை உருவாக்கியுள்ளது. கல்வி என்பது நடமாட்டத்தை எட்டுவற்கு உதவும் ஒரு வழி. இது அவர்களுக்கு அமைப்பில் ஒரு பங்கு இருப்பதைக் குறிக்கிறது. விளிம்பில் உள்ளவர்களுக்கு அவர்களது உரிமைகள் பறிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது, கல்வி அரசிடம் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு மாறிவிட்டது. ஒதுக்கப்பட்ட பிரிவினர், உச்சநீதிமன்றம் அத்தகைய அறிவிப்பை தங்களுக்கு எதிரான செய்தியாக பார்க்க முனைகிறார்கள்.இதை இப்படி வைப்பது எந்த நோக்கத்திற்கும் உதவுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

கடைசியாக 1931இல் செய்யப்பட்ட சாதி குறித்த தரவுகளை எடுக்க புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகார் சட்டசபை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. சமூகப் பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC ) கிட்டத்தட்ட தசாப்த காலமாக புதுப்பிக்கப்படவில்லை. இது சமூக இயக்கம் மற்றும் வாய்ப்புகளை எவ்வாறு பாதித்தது?

இடஒதுக்கீடு பற்றிய யோசனை வெளிப்படையாக இருக்க வேண்டும். சாதி அடையாளங்கள் குறித்த கூடுதல் தரவுகளை நாம் சேகரிக்க வேண்டும். [சுதந்திரத்திற்கு பிறகு] முதல் 50 ஆண்டுகளில், நவீனமயமாக்கல் என்பது சாதியை ஒழிக்கும் என்ற மாயையுடன் நாம் பணியாற்றி வந்தோம். அது அவ்வாறு செயல்படவில்லை என்பது நமக்கு தெரியும். கூட்டு அடையாளங்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் முக்கியமானவை மற்றும் அன்றாட வாழ்க்கையில் வாய்ப்புகளை வடிவமைக்கின்றன.நாம் தீவிரமாக தரவை சேகரிக்க வேண்டும். இது கல்வியாளர்கள், கார்ப்பரேட் துறை மற்றும் பிறருடன் [பங்குதாரர்களுடன்] கலந்து ஆலோசித்து சேகரிக்கப்பட வேண்டும். கடைசியாக இது [எஸ்.சி.சி, தரவு சேகரிப்பு] அவசரமாக செய்யப்பட்டது. எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை.

சாதி என்பது பான்-இந்தியா அமைப்பு அல்ல, மேலும் இது வர்ணாசிரம வரிசைமுறை அல்லது எஸ்சி / எஸ்டி மற்றும் பொதுவகை பற்றியது மட்டுமல்ல.பிராந்திய ரீதியான பல அம்சங்கள் உள்ளன, கடந்த அரை நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் சாதி நடமாட்டத்தின் பிராந்திய வடிவங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை நாம் கவனிக்க வேண்டும், இது போன்ற [வரிசைமுறையில்] மேலே அல்லது கீழ்நோக்கிச் சென்ற சாதிகள் மற்றும் துணை சாதிகள் எவை? முந்தைய தலைமுறை அதிகாரத்துவத்தினர் புரிந்துகொண்ட அம்சங்கள் இவை. உதாரணமாக, ராஜஸ்தானின் சில சலுகைகளை பெறும் ஜாட்கள் ஓபிசி என பட்டியலிடப்பட்டு உள்ளனர், மற்றவற்றில் அவை இல்லை. அத்தகைய அதிகாரத்துவ அறிவு இப்போது இருக்காது. எனவே, (ஒவ்வொரு ஐந்து முதல் 10 வருடங்களுக்கும்) தவறாமல் தரவை நாம் உருவாக்க வேண்டும் , இந்த அம்சங்களை வளர்ப்பதிலும் புரிந்து கொள்வதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பு தேவை.

சமத்துவமின்மை என்பது எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினை. ஏற்றத்தாழ்வுகள் நீடித்தால், மோசமாகிவிட்டால், கார்ப்பரேட் துறையால் தேவையை உருவாக்க முடியாமல் போகலாம்; ஏனென்றால் இதில் வசதி மையப்படுத்தப்படுகிறது. சமத்துவமின்மை என்பது ஒரு முறையான கேள்வி. இது வகைகள் மற்றும் அடையாளங்களுடன் பிணைக்கப்படும்போது, அவை அரசியல் ரீதியாக ஆபத்தானவை. ஒரு ஆரோக்கியமான சமுதாயமாக நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் போல இதைச் செய்ய முடியும். [முன்னாள் ஜனாதிபதி லூலா இனாசியோ லூலா டா சில்வா] லூலாவின் ஆட்சியின் போது சமூக-பொருளாதார மாறுபாடுகளை பிரேசில் இணைக்க முடிந்தது, மேலும் சமூக நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிந்தது.

நம்மைப் போன்ற ஒரு சமூகத்தில் வறுமை மற்றும் தள்ளி வைப்புகளை சமாளிப்பதற்கான ஒரே வழி இது. தற்போதைய தொற்றுநோய் போன்ற சூழ்நிலைகளில் கூட, சமீபத்தில் நாம் கண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நமக்கு முறையான தரவு தேவை.

கோவிட்-19 சுகாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறடு. குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களை நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறச் செய்தது. பொதுவாக ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்த பல புலம்பெயர்ந்தோர் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அரசுகளும் தொழில்துறை தலைவர்களும் வேலை நேரம் நீட்டிப்பது மற்றும் தொழிலாளர் சட்டங்களை தளர்த்துவது குறித்து பேசியுள்ளனர். தொற்றுநோயின் விளைவாக சமூக கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் மாற்றம் பற்றிய கருத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும். [ஒரு தொற்றுநோய் காலத்தில்] அவர்களுக்கு [பொருளாதார] வாய்ப்பைச் சுற்றி ஒரு கதைகளை உருவாக்குவதை விட, அதை மாற்றி, அவர்களுடன் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும்.

இது நெருக்கடியின் ஒரு தருணம் மற்றும் ஒரு மாநில அமைப்பாக நமது வளங்களும் ஆற்றலும் அணிதிரட்டப்பட வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் எல்லோரும் பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.தொற்றுநோய் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஆன்லைன் கற்பித்தலுடன் மாணவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை நாம் காணலாம். பலருக்கு கிராமப்புறங்களில் ஏழைகள் உள்ளனர் அல்லது இணைப்பு வசதி இல்லை. ஆராய்ச்சி மாணவர்கள் களப்பணி செய்ய வெளியேறுவது கடினமாகிவிட்டது. இந்த சமூக சூழல்கள், விடுவித்தல் அல்லது சந்தர்ப்ப தருணங்கள் அல்ல. நம்மிடம் வகுப்பறை கல்வி இல்லையென்றால், அது சரிந்து போகும். அடுத்த சில ஆண்டுகளுக்கு மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க வேண்டி இருந்தால், நம்மிடம் திறமையான மக்கள் தொகை இருக்காது. நம்மால் அறிவியல் பரிசோதனைகள் அல்லது புதுமையான ஆராய்ச்சிகளை ஆன்லைனில் செய்ய முடியாது. ஒரு முழு விநியோகச் சங்கிலி [இது பாதிக்கப்படும்] உள்ளது.

ஜார்ஜ் ஃபிலாய்ட் படுகொலைக்குப் பின்னர் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கும், அதைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்கும் சாட்சியாக இருக்கும் அமெரிக்காவில் இன உறவுகள் பதட்டமாக உள்ளன. என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, இந்தியாவில் எஸ்.சி.க்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 43,000 சம்பவங்கள்; எஸ்.டி.க்களுக்கு எதிராக 6,500 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியாவில் 2018ம் ஆண்டில் பதிவாகியுள்ளன. சாதி மற்றும் இனப் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள், இந்தியாவில் பாகுபாடுகளுக்கு எதிரான ஒரு வெளிப்பாட்டை நாம் ஏன் காணவில்லை?

நம்முடையது மிகவும் வித்தியாசமான சமூகம். கலாச்சார ரீதியாகவும், மனோபாவ அடிப்படையிலும் நாம் இன்னும் [ஒரு] ஜனநாயகவாத மக்கள் அல்ல. நம்முடையது கூட்டு குடும்பம், தேசப்பற்று மற்றும் பாரம்பரிய உத்தரவுகளை விரும்புகிறோம். நம்முடையது ஒரு அரசியல் ஜனநாயகம், ஆனால் கணிசமாக பாலினம் மற்றும் சாதி வேறுபாடுகளை கொண்டிருப்பினும் நாம் நன்றாக இருக்கிறோம்.இனப்பிரச்சினை வரலாற்று ரீதியாக வேறுபட்டது. இனத்தைப் புரிந்துகொள்வதில் இருமங்களை உருவாக்குவது எளிதல்ல என்றாலும், அது [சாதியுடன் ஒப்பிடும்போது] இன்னும் தெளிவாகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களில் பெரும்பாலோர் நகர்ப்புறமாகவும், நாடு நகர்ப்புறமாகவும் உள்ளது. இந்தியாவும் [நகரமயமாக்கல்] செயல்முறையை கடந்து செல்கிறது, ஆனால் தலித்துகள் அல்லாதவர்கள் தலித்துகளுடன் ஒரு போராட்டத்தில் சேருவது இன்னும் அரிதாகவே உள்ளது.

கைர்லான்ஜி படுகொலை [2006ல் நடந்த] மகாராஷ்டிராவை முடக்கியது. இதேபோல், வருகை தந்த தலித் மதத் தலைவர் [2009 இல்] ஆஸ்திரியாவில் கொல்லப்பட்டபோது, பஞ்சாப் முடங்கியது. இதுபோன்ற வெகுஜன எதிர்வினைகளை, ஆனால் அவை அனைத்தும் தலித் குழுக்களால் மட்டுமே, பொதுவாக தலித்துகளின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் நாங்கள் எப்போதாவது காண்கிறோம். தலித்துகள் கூட இதுபோன்ற பிரச்சினைகளில் ஒன்றிணைவது அரிது. அவர்களிடையே சாதி அடிப்படையிலான பிளவுகளும் தொடர்ந்து வலுவாக உள்ளன, அவை தொடர்ந்து தங்கள் அரசியல் மற்றும் அணிதிரட்டல்களை வடிவமைக்கின்றன.

நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் இருந்தபோதிலும், கடந்த மூன்று தசாப்தங்களில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களின் ஆதரவை முறையே 21% மற்றும் 34% என்ற பலனையே பெற்றுள்ளன. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது, அதே நேரம் ஓபிசி குடும்பங்கள் சிறப்பாக செயல்பட்டு 8% குறைவாக ஈட்டியுள்ளன. சாதி அடிப்படையிலான அரசியலுடன் ஒப்பிடும்போது வர்க்க அடிப்படையிலான அரசியல் கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார கட்டமைப்பை எவ்வளவு மாற்றிவிட்டது? நகர்ப்புறங்கள் வித்தியாசமாக செயல்படுகின்றனவா?

நமது சமுதாயத்திலும், ஏற்றத்தாழ்வுகள் அல்லது பாதிப்புகளை நாம் அணுகும் விதத்திலும் ஒரு தவறு உள்ளது. உதாரணமாக, சுதந்திரத்திற்கு பின்னர் ஆரம்ப தசாப்தங்களில் வறுமை மற்றும் சமத்துவமின்மை பற்றி பேசும்போது சமூக விஞ்ஞானிகள் சாதியில் கவனம் செலுத்துவது மிகவும் அரிது. கள நிலைமையும் வேறுபட்டது. கிராமப்புற மக்களில் பெரும் பகுதியினர் (20% -30% அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) விவசாயத் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களுக்கும் யூனியங்கள் இருந்தன. கிராமப்புற சூழலில் வர்க்கத்தின் கேள்வி தெளிவாக இருந்தது.

இதேபோல், விவசாயிகள் [தங்கள் விளைபொருட்களின்] விலைக்கான கேள்வியில் நகர்ப்புற சந்தைகளில் அவர்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள். தேசிய அளவில் வர்க்க அரசியலின் [ஒரு கதை] இருந்தது. இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பயன்பாட்டின் மூலம், இந்த அடையாளங்கள் உடையக்கூடியதாகிவிட்டன. இந்தியாவில் இன்று எந்தவொரு தொழிலாளர் வர்க்க அரசியலும் இல்லை. இடது அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் குறைந்துவிட்டன.

வலதுசாரி மதக் குழுக்களிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக இந்தியா அதிக மதமாக மாறுவதை நீங்கள் காண்கிறீர்களா?

களத்தில் நடக்கும் மாற்றங்கள் அடையாள அரசியலுக்கான இடங்களை உருவாக்கியுள்ளன. உலகமயமாக்கல் தலைமையிலான இயக்கம் கவலைகளையும் பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது. எனவே ஒரு வழி தேசியவாதம் மற்றும் மத அடையாளத்தைப் போலவே உணரப்பட்ட அடையாளப் பெருமையாகிறது. கள மாற்றங்களால் உருவாக்கப்படும் ‘இயக்கவியல் கவலைகள்’ (ஒருவரின் இருப்பு மற்றும் வாழ்க்கையின் பொருள் அல்லது நோக்கம்) இது ஒரு பதிலாகும். மத அடையாளத்தின் மீதான வளர்ந்து வரும் மோகத்தை நாம் காண்கிறோம் - புதிய பாபாக்கள், தேராக்கள் பஞ்சாபில் இருந்தும் மற்றும் பிற இடங்களில். ஒரு புதிய வகையான ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்கவியல் மதவாதம் உள்ளது. சமூகம் மற்றும் உறவை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் பலவீனமடைந்துள்ளன, மக்கள் இழந்துவிட்டதாக உணர்கின்றனர். இயக்கவியல் மக்களிடையே இந்த போக்குகள் பொதுவாக அதிகம் காணப்பட்டாலும் இத்தகைய மாற்றங்கள் கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நிகழ்கின்றன.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.