பெங்களூரு: " பெருநிலை (Macroeconomic) பொருளாதாரக் கொள்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று, தொழிலாளர் பொருளாதார நிபுணரும், சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் வருகைப் பேராசிரியருமான கே.ஆர் ஷியாம் சுந்தர், சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"நமக்கு உலகளாவிய குறைந்தபட்ச ஊதியம், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு தேவை, வெறும் வாக்குறுதி அல்ல" என்று சுந்தர் மேலும் கூறினார். இவர், 'கோவிட்-19ன் தாக்கம், சீர்திருத்தங்கள், இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் மீதான மோசமான நிர்வாகம்' (Impact Of Covid-19, Reforms, Poor Governance on Labour Rights In India) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

கோவிட்-19 தொற்று பரவலால் ஏற்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, மார்ச் 2020 இல் தொடங்கியதில் இருந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முதலில் வீழ்ச்சியடைந்து பின்னர் மீண்டது, ஆனால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டு முதல், 2021-22 வரை 1.2% அதிகரித்து 33.3 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று, சிந்தனைக்குழுவான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு மற்றும் ஊதியங்களுக்கான நான்கு தொழிலாளர் சட்டங்கள், 2020 இல் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், சட்டங்களுக்கான விதிகள், மாநில அளவில் வரைவு பல்வேறு கட்டங்களில் உள்ளன. ஏப்ரல் 27 அன்று, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்த சட்டங்கள்"விரைவில்" வெளியிடப்படும் என்றதாக கூறப்படுகிறது.

இவை "அரசியல் செய்திகள்" என்றார் சுந்தர். 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரை அதிகம் நடக்காது என நான் கருதுகிறேன் என்றார் அவர். தொழிலாளர் சட்டங்கள், சர்வதேச நிறுவனங்களால் எளிதாக வணிகம் செய்வதற்கான தரவரிசையில் மதிப்பெண் பெற அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த நேர்காணலில், இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள், ஏன் கற்பனை செய்ய முடியாதவை, தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கங்களுக்கு ஒரு பரந்த மூலோபாயம் தேவை, மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான தொற்றுநோயின் தாக்கம் ஆகியவற்றைப் பற்றி சுந்தர் பேசுகிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

கோவிட்-19 தொற்றுநோய், வேலையின்மையை உருவாக்கியது, பொருளாதார வளர்ச்சியைக் குறைத்தது மற்றும் குறைந்த ஊதியத்தை விளைவித்தது. இந்தியாவில் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் அதிகாரமளித்தல் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் மதிப்பீடு என்னவாக இருக்கும்?

பொருளாதார மந்தநிலை மற்றும் அதிக அளவிலான வேலையின்மை மற்றும் தொழிலாளர் சந்தை ஏற்றத்தாழ்வு ஆகியன, தொற்றுநோய்க்கு முன்பே இருந்தன. ஆனால் தொற்றுநோய் என்ன செய்தது? தொழிலாளர் சந்தையில் அதன் தாக்கம் குறித்து எனக்கு நான்கு அவதானிப்புகள் உள்ளன.

இது, முறைசாரா தன்மையை தீவிரப்படுத்தியது. தொற்றுநோய் குறைந்த வேலைவாய்ப்பை உருவாக்கியது, மேலும் பிளம்பர்கள் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் போன்ற திறமையான தொழிலாளர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் [அரசின் 100 நாள் வேலை திட்டம் திட்டம்] திறமையற்ற தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். முறைசாராத் துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள்தான் முதலில் பணிநீக்கம் செய்யப்பட்டனர், இது வருமான பாதுகாப்பைப் பாதித்தது. ஊரடங்கு காரணமாக, நகர்ப்புற முறைசாரா துறையானது, குறைந்த பட்சம் ஆரம்பத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது.

வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் முறைசாரா நிலை ஆபத்தானதாக மாறியது. தொற்றுநோய்க்கு முன், அவர்கள் உழைக்கும் ஏழைகளாக இருந்தனர், ஆனால் முறைசாராத் துறைத் தொழிலாளர்கள் முன்னணித் தொழிலாளர்கள் [கடைக்காரர்கள், தெரு வியாபாரிகள், சில்லறை வணிகத் தொழிலாளர்கள் போன்றவை] என்பதால், தொற்றுநோயைத் தொடர்ந்து அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.

மூன்றாவதாக, பெருவணிக பொருளாதாரம் செழித்தபோது, பெரிவணிக தொழிலாளர்கள் [உணவு/மளிகை விநியோக நிர்வாகிகள், ஆப் அடிப்படையிலான டாக்ஸி தொழிலாளர்கள்] சிரமங்களை எதிர்கொண்டனர். தொழிலாளர் சந்தை 'gigified' ஆனது, ஏனெனில் இது கிடைக்கக்கூடிய வேலைகளில் மிகவும் மேலாதிக்கமாக இருந்தது.

இறுதியாக, வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மை அதிகரித்தது. முறையான துறையிலும் கூட, ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் அல்லது பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. விஷயங்களை மோசமாக்குவதற்கு, தொற்றுநோய் அரசாலும் நிறுவனங்களாலும் [தொழிலாளர்] நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் தொழிலாளர் உரிமைகளை பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. பல மாநிலங்கள் வேலை நேரத்தை அதிகரித்தன மற்றும் உத்தரபிரதேச அரசு கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்களையும், ஒருபக்க அறிவிப்பின் மூலம் நிறுத்தி வைத்துள்ளது.

நான்கு தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும், பல்வேறு மாநில அரசுகள் சட்டத்தின் வரைவு விதிகளை மட்டுமே முன் வெளியீட்டிற்கு செய்துள்ளன, மேலும் விதிகள் இறுதிக்கட்டத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. தாமதத்திற்கான காரணம் என்ன, தொழிலாளர்களுக்கு அதன் தாக்கம் என்ன?

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அளவீடாக இருந்த எளிதாக வணிகம் செய்வதில் மதிப்பெண் பெறுவதற்கான அவசரத்தில் தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசாங்கம், முதலீட்டிற்கான சமிக்ஞைகளை அனுப்ப விரும்பியது. பொருளாதாரம் செயல்படாமல் இருந்தது, ஆனால் அந்நிய நேரடி முதலீடு [2020-21ல்] அதிகரித்தது . முதலாளிகளுக்கு ஊதிய மறுவரையறையில் (மற்றும் கொடுப்பனவுகளின் மீதான வரம்பு) சிக்கல் இருந்தது மற்றும் [அரசின் மீது] அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர். அவர்கள் அரசுடன் வற்புறுத்தினார்கள், ஆனால் அரசால் அந்த விதிகளை மாற்ற முடியாது. இது பாராளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இது முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டால், அது மேலும் மாற்றங்களுக்கு சட்டங்களைத் திறக்கும்.

[புதிய சட்டத்தின் கீழ், சம்பளக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைக்கான பங்களிப்பை முதலாளிகளால் அதிகரிக்கும், ஒட்டுமொத்த செலவுகளை உயர்த்தும].

அரசு, சில இடைத்தேர்தல்களில் சாதகமான முடிவைக் காணவில்லை மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்காக [விதிகளை இறுதி செய்ய] காத்திருந்தது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை எதுவும் நடக்காது என நினைக்கிறேன். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தாமதமாகி இருந்தால், மேலும் தாமதிக்கலாம். விதிகளை நிறைவேற்றாத மாநில அரசுகளை, மத்திய அரசு எப்போதும் குறை கூறலாம்.

சட்டங்கள் செயல்படுத்தப்படுவதைப் போல, முதலாளிகள் தொழிலாளர் நெகிழ்வுத்தன்மையை நடைமுறைப்படுத்தக்கூடிய தெளிவின்மை உள்ளது. சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தொழில் தகராறுகள் சட்டத்தின் பாடம் V-B பணிநீக்க வரம்பு (300 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டால் நிறுவனங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறுகிறது) மாநில அளவில் அதாவது சட்டங்களின் [சில] அம்சங்கள் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முதலாளிகளின் கோரிக்கைகள் மாநில அளவில் நிறைவேற்றப்படுகின்றன. தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு [OSH] அல்லது சமூகப் பாதுகாப்புக் சட்டத்தை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை, ஏனெனில் அது தற்போதைய நிலையைப் பேணுகிறது. ஊதியத்தின் வரையறை மட்டுமே முதலாளிகள் தருவது.

அரசு, வேலை நேரத்தை தற்போது 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றி, அதற்கேற்ப இழப்பீடு மற்றும் வார விடுமுறைக் கட்டமைப்பை மாற்றியமைப்பதாக தகவல்கள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வேலை நேரங்கள் (தொழில்துறை) ஒரு வாரத்திற்கு 48 மணிநேரம் மற்றும் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்ற அதிகபட்ச நிலையான வேலை நேரத்தை தேசிய விதிமுறைகளின் அடிப்படையில் நீட்டிப்புகளுடன், சர்வதேச விதிமுறையாக அறிமுகப்படுத்தியது. இந்திய அரசு ஏன் இந்த மாற்றங்களைச் செய்கிறது, அவை தொழில்-தொழிலாளர் உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றன?

விதிமுறைகளானது, வேலை நேரத்தை வாரத்திற்கு 48 மணிநேரமாக கட்டுப்படுத்துகிறது. இது [இந்த வளைந்து கொடுக்கும் தன்மை] தொழிலுக்கு சாதகமாக இருந்தாலும், நான்கைந்து நாட்கள் என்றால் அரசாங்கத்திற்கு ஒரு விஷயமே இல்லை. உதாரணமாக, ஒரு நிறுவனம் ஆறு நாட்களை விட நான்கு நாட்களில் பேருந்துகளை இயக்கினால், இயக்கச் செலவு குறையும். தொழிலாளி தொழிற்சாலையில் நுழைந்தவுடன், தொழிலாளர்கள் எட்டு அல்லது 12 மணி நேரம் வேலை செய்தால் முதலாளிகளுக்கு ஒரு விஷயமே இல்லை.

ஆனால் இது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்குகிறது. அரசு அறிவியல் ரீதியாக தொழிலாளர் சட்டங்களை உருவாக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது, வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யலாம். ஆனால், இந்தியா போன்ற தொழிலாளர் உபரி நாட்டில் நாம் அதைச் செய்ய முடியாது. வேலை நேரத்தை [நிர்வாகியால்] ஆட்சி அமைப்பதற்கு விட்டுவிட முடியாது, அது சட்டமாக்கப்பட வேண்டும்.

நீதிமன்றங்கள், வேலை நேர மாற்றங்களை அனுமதிக்கவில்லை. அதை [அரசால் முன்மொழியப்பட்ட வேலை நேரத்தில் மாற்றம்] செயல்படுத்த முடியாது. தொழிற்சங்கங்கள் நேரடி நடவடிக்கையில் மட்டும் தங்கியிருக்கக் கூடாது, அவர்கள் புத்திசாலித்தனமாக சட்டப்பூர்வ வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சட்டத்துறை மற்றும் கல்வியாளர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அவர்களிடம் உத்தி இல்லை. ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டும் வேலை நிறுத்தம் செய்வதால் பலனில்லை. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கற்பனைக்கு எட்டாதவை என்று நான் காண்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் அரசாங்கம் (புலம்பெயர்ந்தோர் மற்றும் வீட்டுப் பணியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு) கணக்கெடுப்புகளை அறிவித்தது, இவை தேசிய வேலைவாய்ப்புக் கொள்கையை (NEP) உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசின் கூற்றுப்படி, அத்தகைய கொள்கையை உருவாக்க இன்னும் குழு இல்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வேலைவாய்ப்புக் கொள்கை மாநாடு- 1964ஐ இந்தியா அங்கீகரித்துள்ளது. பல ஆய்வுகளின் தேவை ஏன் என்று எனக்குப் புரியவில்லை. காலமுறை தொழிலாளர் திறன் ஆய்வுகள் [சில] தகவல்களை வழங்குகின்றன. இந்த [ஐந்து] ஆய்வுகள், பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன ஆனால் எதுவும் வெளிச்சத்திற்கு வரவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை.

தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை முக்கியமானது, ஏனெனில் மாநாட்டிற்கு வேலைவாய்ப்புக் கொள்கை இருக்க வேண்டும். இது அரசுக்கு தேவையான பெருநிலை பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் சந்தைக் கொள்கைகளுக்கு ஒரு திசையை வழங்குகிறது. இது ஒவ்வொரு துறையின் வேலைவாய்ப்பில் உள்ள மாறுபாடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் வடிவங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

நம்மிடம் இரு வகையான புள்ளிவிவரங்கள் உள்ளன; நிறுவன மற்றும் வீட்டு அடிப்படையிலான தகவல். இந்த இரண்டையும் இணைத்து தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவானது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாட்டை அங்கீகரித்த போதிலும், நம்மிடம் தேசிய வேலைவாய்ப்பு கொள்கை இருந்ததில்லை. பெருநிலை பொருளாதாரக் கொள்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம், மைய நிலையை ஆக்கிரமிக்க வேண்டும்.

புதிய தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டம் (OSH) பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்குமா? உதாரணமாக, உணவு விநியோக நிறுவனங்கள் 10 நிமிட உணவு விநியோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளன, இதன் விளைவாக தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன. இதேபோல், தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்கள் மற்றும் கட்டுமான மற்றும் வாகனத் துறையில் விபத்துகளின் நிகழ்வுகள் உள்ளன.

முன்னதாக, தொழிற்சாலைகள் சட்டத்தின் IV(a) அத்தியாயத்தின் விளைவாக அனைத்து அபாயகரமான தொழிற்சாலைகளும் இருதரப்பு பாதுகாப்புக் குழுவைக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சட்டத்தில் இது அறிவிப்பு மூலம் உள்ளது மற்றும் கட்டாயமில்லை.

தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டம் (OSH) தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தோட்டங்கள், கட்டுமானம் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளடக்கியது. சேவைத் துறையானது பிராந்திய அல்லது மாநில அளவிலான சட்டத்தின் கீழ் உள்ளது. சமூகப் பாதுகாப்புக் குறியீட்டில் கூட, கிக் தொழிலாளர்கள் பாரம்பரிய முதலாளி-தொழிலாளர் உறவுக்குள் இல்லாத தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் கீழ் இல்லை.

250 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அபாயகரமான தொழிற்சாலைகளில் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி கட்டாயம். இப்படி சட்டங்களை எப்படி உருவாக்க முடியும்? சட்டங்கள் கற்பனைக்கு எட்டாத வகையில், கருத்தியல் அடிப்படையின்றி, எந்த ஆதாரமும் இல்லாமல் கட்டமைக்கப்படுகின்றன. சட்டங்கள் சில கொள்கைகள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். நீங்கள் தன்னிச்சையான முறையில் [ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கான 250 தொழிலாளர்கள் போன்ற] வரம்புகளை டிங்கர் செய்ய முடியாது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் அதிகாரம் பெற உங்கள் விருப்பப்பட்டியல் என்னவாக இருக்கும்?

நமக்கு ஒரு உலகளாவிய குறைந்தபட்ச ஊதியம், உலகளாவிய சமூக பாதுகாப்பு தேவை, வெறும் வாக்குறுதி அல்ல. மேலும், நமக்கு பாதுகாப்பான வேலை நிலைமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து இவை நிறைவேற்றப்படாத தொழிலாளர் சந்தை கனவுகளாகவே இருக்கின்றன. சமூகப் பாதுகாப்பு சட்டம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, மகப்பேறு நலன்கள் மற்றும் காயம் இழப்பீடு ஆகியவற்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு உரிமைகளை வழங்குகிறது. ஆனால், அமைப்பு சாரா துறையினருக்கு, திட்டங்கள் பற்றிய வாக்குறுதிகள் உள்ளன. இதை நிர்வாகத்தால் தீர்மானிக்க முடியாது, ஆனால் சட்டத்தில் கட்டமைக்கப்பட வேண்டும். அமைப்புசாராத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைகள் [அமைப்புசாராத் துறை தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு] அரசால் முன்கூட்டியே பரிசீலிக்கப்பட வேண்டும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.