மும்பை: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து, 2018 இல் 2,967 ஆக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடியால் ஜூலை 29, 2019 அன்று வெளியிடப்பட்ட புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புலிகளில் புவியியல் வரம்பு மற்றும் பாதுகாக்கப்படாத காடுகளை நிர்வகிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது என்று கூறும் நிபுணர்கள், இதில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்கின்றனர்.

புதிய தகவல்கள், 20 மாநிலங்களில் 381,400 கி.மீ காடுகளின் வாழ்விடங்களுக்கு மேல் உள்ள அரசு கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும். அவை இந்தியாவின் புலிகள் வசிக்கும் இடமாகும். இது, அரசின் கூற்றுப்படி கணக்கெடுப்பை போலவே உலகின் மிகப்பெரியது.

"எண்ணிக்கையை பொருத்தவரை, நாம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கவில்லை," என்று பனிச்சிறுத்தை மற்றும் புலிகள் குறித்து ஆராய்ந்து வரும் உயிரியலாளர் ரகு சுந்தாவத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

உண்மையான வெற்றி என்பது, புலியின் புவியியல் வரம்பை நிர்வகிக்கிப்பதில் உள்ளது என்று அவர் கூறினார். “நீங்கள் பாதுகாப்பு தொடர்பான எந்த இலக்கியத்தையும் படித்தால், சரிவு அல்லது அழிவின் முதல் அறிகுறிகளில் ஒன்று வரம்பு கட்டுப்பாடு, இது வரம்பு விநியோகத்தின் புவியியல் இழப்பு." என்றார் அவர்.

முன்பு போலவே இந்தியா முழுவதும் புலிகள் காடுகளில் வசிக்கும் போது தான் முழுவ் வெற்றி கிடைக்கும் என்று அவர் கூறினார்.

அரசில் முடிவெடுப்பவர்கள், வனவிலங்கு கருத்தாய்வு மற்றும் உள்கட்டமைப்பு, சுரங்க அல்லது பிற தொழில்துறை திட்டங்களுக்கு இடையில் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் போது புலி மற்றும் பிற வனவிலங்கு வாழ்விடங்கள் குறுகிய மாற்றத்தை பெறுகின்றன.

மே 2019 இல், 13 ரயில் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல்களில் இருந்து மோடி அரசு விலக்கு அளித்தது; இதில் நான்கு திட்டங்களால் தேசியப் பூங்கா, புலிகள் சரணாலயம், புலி நடைபாதை அல்லது உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா பகுதி வனவிலங்கு சரணாலயம் துண்டிக்கப்படும் என்று, ஜூலை 27, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

மே 2018 முதல் நான்கு ஆண்டுகளில், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு 519 உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களுக்கு - பல இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் வகையில் - பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் “சூழல் உணர்திறன் மண்டலங்களிலும்” செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. முந்தையதை விட இரு மடங்கு விகிதத்தில் அரசு வேகத்துடன் செய்ததாக, ஆகஸ்ட் 2018 இல் நாங்கள் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ராயல் பெங்கால் புலி அல்லது பாந்தரா டைக்ரிஸ் புலிகள் இந்திய துணை இனங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை அதிகபட்சம் வேட்டையாடுகின்றன மற்றும் அதன் எண்ணிக்கை இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பொதுவாக ஆரோக்கியத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் 2015இல் இந்திய புலிகளில் நான்கில் ஒரு பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்தன; உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலும் திறக்கப்பட்டதால் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

இதனால்தான் எண்ணிக்கை அதிகரிப்பானது வல்லுநர்களை ஈர்க்கவில்லை.

கடந்த 1973இல் புலிகள் திட்டம் தொடங்கப்பட்டபோது, ஒன்பது புலி இருப்புக்கள் (~18,278 சதுர கி.மீ) இருந்தன; அவை இப்போது 50 புலி இருப்புக்களாக (~ 72,749 சதுர கி.மீ) வளர்ந்து, இந்தியாவின் புவியியல் பரப்பளவில் 2.2% என்ற நிலையில் உள்ளதாக, அறிக்கை கூறியது.

நாடு முழுவதும் “பாதுகாக்கப்பட்ட பகுதிகள்” மற்றும் “சமூக சரணாயலங்கள்” எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று, 2019 ஜூலை 29இல் அறிக்கை வெளியிட்டு மோடி கூறினார். பாதுகாக்கப்பட்ட பகுதியானது, 2014 இல் 692 ஆக இருந்து, 2019 இல் 860 ஆகவும்; சமூக சரணாயலங்கள் 2014 இல் 43 என்றிருந்தது, நூற்றுக்கும் மேலாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதல, புலிகளின் மனித தொடர்புகள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 27, 2019 அன்று கர்நாடகாவில் ஒரு புலி ஓட்டம் பிடித்தது; மற்றொன்று, ஜூலை 24, 2019 அன்று உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் அடித்து கொல்லப்பட்டது. மற்றொன்று, பெஞ்ச் புலி நடைபாதை வழியாக செல்லும் - மகாராஷ்டிராவின் நான்கு வழி சாலைத்தடுப்பில் குதித்து ஓட்டியதை பார்க்க முடிந்தது.

இது பாதுகாவலர்கள் எச்சரிக்கும் நேரத்தில், அந்த பாதுகாப்பு இருப்புக்களுடன் மட்டுப்படுத்தப்பட முடியாது.

"பாதுகாக்கப்படாத காடுகளை நிர்வகிப்பது முக்கியம்" என்று சுண்டாவத் கூறினார். "நீங்கள் புலி பாதுகாப்பை மேல் எல்லைக்கு கொண்டு செல்ல விரும்பினால், இப்போது நீங்கள் [பாதுகாக்கப்பட்ட பகுதிகளை] வெளியே பார்க்க வேண்டும். தற்போது, பிரத்தியேக பாதுகாப்பு மாதிரி எங்களிடம் உள்ளது, இது பகுதி அடிப்படையிலான பாதுகாக்கப்படுகிறது. புலி வெளியே செல்லும் தருணம், அதைப் பற்றி எதுவும் செய்ய அதிகாரம் இல்லை. அதனால் தான் நாங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வேலை செய்யாததால் வழக்குகள் நடக்கின்றன" என்றார்.

அழிந்துபோகும் போக்கை மாற்றியமைக்க, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வேலை செய்யும் புதிய பாதுகாப்பு மாதிரிகள் தேவை என்று சுண்டாவத் கூறினார். “இப்போது பிரச்சினை என்னவென்றால், புலி இருப்பது மக்களின் நல்லெண்ணத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஏனெனில், அவை மக்களுடன் வாழ வேண்டும்,”என்று அவர் கூறினார்; தற்போதைய மாதிரி பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பை தன்னார்வ அடிப்படையில் மட்டுமே பார்க்கிறது. [அவர்களுக்கு] ஊக்கத்தொகை எதுவும் இல்லை. எனவே புலிகள் மீதான நல்லெண்ணம் இருக்க ஒரு ஊக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.

மத்தியப் பிரதேசத்தில் அதிக புலிகள் உள்ளன; இது 2014 முதல் 71% அதிகரிப்பு

நாட்டில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள், 526 அல்லது 18% பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து கர்நாடகா (524) மற்றும் உத்தரகண்ட் (442); புதிய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு புலி என 2,461 புகைப்படங்கள்பயன்படுத்தப்பட்டன; இது, அவற்றின் எண்ணிக்கை தொகையில் 83% ஆகும். மீதமுள்ளவை "வலுவான வெளிப்படையான பிடிப்பு - மீண்டும் கைப்பற்றும் புள்ளிவிவர மாதிரிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன" என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

புலிகள் 13 நாடுகளில் - பங்களாதேஷ், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோ பி.டி.ஆர், மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் வசிக்கின்றன. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த நாடுகள் 2022 ஆம் ஆண்டளவில் - அது சீன ‘புலியின் ஆண்டு’ என்ற நிலையில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாக உறுதி அளித்துள்ளன.

இந்திய புலிகளின் எண்ணிக்கை 2006-18 முதல் ஆண்டுக்கு 6% அதிகரிப்பு

கடந்த 2006 முதல், இந்தியா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு தழுவிய புலிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அவ்வகையில் புலி மற்றும் அதன் வாழ்விடத்தின் மதிப்பீடு குறித்து, இது நான்காவது கணக்கெடுப்பாகும்.

கடந்த 2006 முதல் 2018 வரை தொடர்ச்சியாக மாதிரிகள் எடுக்கப்பட்ட பகுதிகளை ஒப்பிடும்போது இந்தியாவின் புலி எண்ணிக்கை, ஆண்டுக்கு 6% என்ற வளர்ந்தது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. மிக சமீபத்திய காலகட்டத்தில், இந்தியாவின் புலி எண்ணிக்கை, 2014 இல் 2,226 ஆக இருந்து 2018 இல் 2,967 ஆக, அதாவது 33% அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், 2014 ல் 308 புலிகள் இருந்தது, 71% அதிகரித்து 2018 இல் 526 ஆக உள்ளது. மாறாக, சத்தீஸ்கரில் 2014 இல் 46 என்ற எண்ணிக்கை, 59% சரிவை 2018ஆம் ஆண்டில் 19 புலிகளாக குறைத்துள்ளது. ஒடிசாவில் புலிகள் - எண்ணிக்கையில் 28 என - 2018 வரையிலான நான்கு ஆண்டுகளாக மாறாமல் இருப்பதாக தெரிகிறது.

மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் செயல்திறன் குறித்து கேட்டபோது "பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியன” வளர்ச்சிக்கு தேவையான இரண்டு விஷயங்கள் என்று இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கமர் குரேஷி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள அரசுகள் கிராமங்களை [மைய மற்றும் இடையக பகுதிகளில் இருந்து] அகற்றுவதில் முதலீடு செய்கின்றன; இது இந்த மாநிலங்களுக்கு உதவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

Source: Status of Tigers in India 2018
Note:*Estimated through scat DNA; #For comparison with previous estimates of Andhra Pradesh, combine Andhra Pradesh and Telangana population estimate of current year. Figures for West Bengal include the tiger population of North West Bengal and Sunderbans

"சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் புலி நிலையின் மோசமான மற்றும் தொடர்ச்சியான சரிவு கவலைக்குரியது" என்று அறிக்கை கூறியுள்ளது. “மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திராவில் புலிகள் வசிப்பது அதிகரித்துள்ளது. வடகிழக்கில் இழப்பு மோசமான மாதிரியின் காரணமாக உள்ளது".

சத்தீஸ்கரைப் பற்றி, குரேஷி கூறியதாவது: "பாதுகாப்பு மோசமாக உள்ளது, மேலும் அவை மேம்படும் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் அவ்வாறு நடக்கவில்லை" என்றார்.

இந்தியாவின் புலி வாழ்விடம், இந்தியாவில் ஐந்து நிலப்பரப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவை, - ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி, மத்திய மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா, சுந்தரவனக்காடுகள்.

இந்தியாவின் புலி எண்ணிக்கையில் 35% உள்ள எட்டு மாநிலங்கள் - ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் - உள்ளடக்கிய மத்திய மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பில், 2014 ஆம் ஆண்டில் 688 என்று இருந்த புலிகள் எண்ணிக்கை, 2019 இல் 1,033 ஆக, 50% அதிகரித்துள்ளது.

வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா நதிப்பகுதிகளில் 2014ஆம் ஆண்டில் 201 என்றிருந்தது, 2018ஆம் ஆண்டில் 219 என, 9% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சுந்தர வனப்பகுதியில் 76 என்பது, 88 ஆக 16% புலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் பக்ஸா, மிசோரத்தில் தம்பா மற்றும் ஜார்க்கண்ட் புலிகள் காப்பக பகுதியான பலமாவ் ஆகிய இடங்களில், புலிகள் காணப்படவில்லை என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த "சரணாலயங்கள், முந்தைய மதிப்பீடுகளைவிட மோசமான புலிகள் நிலையை கொண்டிருந்தன".

2018 வரையிலான 7 ஆண்டுகளில் 657 புலிகள் இறந்தன; 21% வேட்டையாடுதல் காரணம்

கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் 657 புலி இறந்துள்ளன; இதில் பெரும்பாலானவை (48% அல்லது 313) இயற்கை மரணம் மற்றும் 21% அல்லது 138 புலிகள், வேட்டையாடுதல் காரணமாக இறந்ததாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.

வேட்டையாடப்பட்டு 138 புலிகள் இறந்ததில், மத்தியப் பிரதேசமே அதிகம் (22% அல்லது 30) பதிவாகியுள்ளது; அடுத்து, தொடர்ந்து கர்நாடகா (24), மகாராஷ்டிரா (18) உள்ளன.

"வேட்டையாடுவதற்கான சந்தை மறைந்துவிடவில்லை; அது இன்னமும் மிக உயிர்ப்புடன் உள்ளது" என்று குரேஷி கூறினார். பாதுகாப்பு நிலை பராமரிக்கப்படுகிறதா அல்லது மேம்படுத்தப்பட வேண்டுமா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் ."தற்போது, உலக சுகாதார அமைப்பு [WHO] சீனாவில் உள்ள பாரம்பரிய மருத்துவத்தை அங்கீகரித்துள்ளது; இது வர்த்தகத்திற்காக புலி உயிரினங்களில் பலவற்றிற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்" என்றார்.

அடுத்த 50 ஆண்டுகளில் - 2070 வாக்கில் - வங்காள புலிகள் பங்களாதேஷின் சுந்தரவன பகுதிகளில் இருந்து காலநிலை மாற்றம் மற்றும் உயரும் கடல் மட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மறைந்து போகக்கூடும் என, சயின்ஸ் ஆப் டோட்டல் என்விரோமெண்ட் இதழில் வெளியான ஆய்வை மேற்கொள்காட்டி, மார்ச் 12, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள், இந்திய பகுதியில் உள்ள சுந்தரவன காடுகளையும் இதேபோல் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வனவிலங்கு நிதியம் கூற்றுப்படி, ஏப்ரல் 2016 நிலவரப்படி உலகளவில் சுமார் 3,900 புலிகள் உள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட உலகம் அதன் புலிகள் எண்ணிக்கையில் 95% ஐ தற்போது இழந்துள்ளது.

புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோத வர்த்தகம், வேட்டை மற்றும் வாழ்விட இழப்பு ஆகியன இந்த சரிவுக்கு காரணம். புலிகளின் எட்டு துணை இனங்களில் மூன்று ஏற்கனவே அழிந்துவிட்டன; மீதமுள்ள ஐந்து ‘ஆபத்தான’ அல்லது ‘மிகவும் ஆபத்தான’ கட்டத்தில் இருப்பதாக, மார்ச் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.