புதுடெல்லி: இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம், ரூ.19,400 கோடி (2.8 பில்லியன் டாலர்) மதிப்புள்ள, நிலுவையில் இருக்கும் 13 ரயில் திட்டங்களுக்கு, 800 ஹெக்டேர் நிலப்பரப்பில், வன அனுமதி கோருவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனுமதியானது ஒரு தேசிய பூங்கா, புலிகள் சரணாலயம், புலிகளின் நடைபாதை மற்றும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களை மிக மோசமாக பாதிக்கும்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வே வாரியம் உள்ளிட்ட ரயில்வே அமைச்சகம், வன (பாதுகாப்பு) சட்டம் (எஃப்.சி.ஏ) நிறைவேற்றப்பட்ட ஆண்டான 1980க்கு முன், அந்த நிலம் ரயில்வேக்கு சொந்தமானது என்று வாதிட்டது; எனவே இந்த சட்டம் அந்த நிலத்திற்கு பொருந்தாது என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியா ஸ்பெண்ட் அணுகிய ரயில் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தொலைபேசியில் கருத்து கேட்டபோது பதில் தெரிவிக்க ரயில்வே அமைச்சகம் மறுத்துவிட்டது. ரயில்வே அமைச்சகத்திற்கு ஜூலை 18, 2019 அன்று மின்னஞ்சல் அனுப்பிய விரிவான கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம். எங்களுக்கு பதில் கிடைத்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

1980 ஆம் ஆண்டு வன (பாதுகாப்பு) சட்டம் எந்தவொரு வன நிலத்தையும் மத்திய அரசின் முன் அனுமதியின்றி வனம் சாராத பிற நடவடிக்கைகளுக்கென பயன்படுத்துவதை தடை செய்கிறது. இந்த செயல்முறை பேச்சு வழக்கில் ‘வன அனுமதி’ அல்லது எப்.சி. (FC) செயல்முறை என அழைக்கப்படுகிறது.

கடந்த 2019 மே மாதம், சுற்றுச்சூழல் அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், நிலம் ரயில்வே நிலமாகவும், 1980ஆம் ஆண்டுக்கு முன்பு, வனம் சாராத பயன்பாட்டிலும் இருந்தால், 1980 எப்.சி.ஏ, பாதை மற்றும் பாதை மாற்றும் திட்டங்கள் இரட்டிப்பாக்க அது பொருந்தாது என்று குறிப்பிட்டது. புதிய விதிகள் நிர்மாணிப்பது சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு, வனத்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வன அனுமதி பணியில் இருந்து இத்திட்டங்களுக்கு இப்போது வழங்கப்பட்ட விலக்கு என்பது, காடுகளை மற்ற பயன்பாடுகளுக்காக திருப்பிவிடப்படுவதற்கு முன், எவ்விதமான ஆய்வும் அல்லது சரியான விடாமுயற்சியும் இருக்காது என்பதாகும். வழக்கமாக, வன நிலங்களைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் மாநில அரசு, மண்டல வன அலுவலர் மற்றும் இறுதியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலைமையகம் அல்லது அவற்றின் மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றால் பரிசோதிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.

ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற வழித்தட திட்டங்கள், மண்டல அளவில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.இந்த ஆய்வு வனவிலங்குகள், வனப்பகுதி மற்றும் திட்டத்தின் நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் எதிர்பாராத தாக்கத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.

உதாரணமாக, இந்த செயல்முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 13 திட்டங்களில் சில, புலிகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாக செல்கின்றன. வனவிலங்குகளின் நடமாட்டம் அல்லது காடுகளை அழிப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து, இப்போது எந்த ஆய்வும் இருக்காது.

வழித்தடங்கள் இரட்டிப்பாக்குதல் மற்றும் பாதை மாற்றங்கள் உள்ளிட்ட இந்த திட்டங்கள், இரு ஆண்டுகளுக்கு மேலான ஆலோசனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டன; இரட்டை வழித்தடம் அல்லது பாதை மாற்றத்திற்காக ரயில்வே பயன்படுத்தும் அனைத்து வன நிலங்களும் உரிமையை பொருட்படுத்தாமல் வன ஒப்புதல்களுக்கு உட்படுத்தப்படும் என டிசம்பர் 2017 முதல் அரசு உத்தரவைப் ‘பின்பற்றியது.

சுற்றுச்சூழல் சட்ட நிபுணர் ரிட்விக் தத்தாவின் கூற்றுப்படி, இந்த திட்டங்களுக்கு வன அனுமதியில் இருந்து விலக்கு தருவது தொடர்பான அமைச்சகத்தின் சுற்றறிக்கை வன (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என்பதாகும்.

"1980ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு வன நிலத்திலும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய செயலும், ஒரு அங்குல நிலத்தை கூட சிதைத்துவிடும். காடு அல்லாத பயன்பாட்டிற்காக, வனச் சட்டத்தின்படி முன் ஒப்புதல் தேவை," என்று அவர் கூறினார். இச்சட்டம் மரங்களை அழிப்பது மட்டுமல்ல, பாதுகாப்புடன் தொடர்பில்லாத எந்தவொரு செயலுக்கும் வன அனுமதி தேவை என்பதை விளக்குகிறது.

13 ரயில் திட்டங்களின் ஒப்புதல் சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதிகளை விரைவாகக் கண்காணிக்கும் முறைக்கு பொருந்துகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நான்கு ஆண்டுகளில், அதாவது ஜூன் 2014 முதல் மே 2018 வரை, இந்திய வனவிலங்கு வாரியத்தால் 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் அவற்றின் ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களிலும்’ மேற்கொள்ள அனுமதி தரப்பட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி -ஐ.மு.கூ. (UPA) அரசு ஒப்பிடுகையில், 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடையில் 260 திட்டங்களை அது அனுமதித்தது என, இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.

சராசரியாக, ஜூன் 2014 முதல் மே 2018 வரை ஆண்டுதோறும் 1.1% க்கும் அதிகமான திட்டங்கள் வரை கூட நிராகரிக்கப்படவில்லை; முந்தைய ஐ.மு.கூ அரசு காலத்தில் 2009 மற்றும் 2013 க்கு இடையில் 11.9% என்பதுடன் ஒப்பிடும் போது இது குறைவு என, டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

அங்கீகரித்த திட்டங்கள் தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயத்தை பாதிக்கும்

அங்கீகரிக்கப்பட்ட 13 திட்டங்களில் குறைந்தது நான்கு, தேசிய பூங்கா, புலிகள் சரணாலயம், புலிகள் நடைபாதை அல்லது வனவிலங்கு சரணாலயத்தை துண்டித்துவிடும்.

அதேபோல், 261 கி.மீ கட்னி-சிங்ராலி பாதை இருவழிப்பாதையாக மாற்றும் போது, அது மத்திய பிரதேசத்தில் உள்ள சஞ்சய் துப்ரி தேசிய பூங்கா வழியாக 33 கி.மீ. கடந்து செல்லும்; மேலும் பந்தவ்கரை தேசிய பூங்காவுடன் இணைக்கும் புலி நடைபாதையையும் தொந்தரவு செய்யும்.

கடந்த 2017 ஜூலையில், தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் ரயில்வே அமைச்சகத்திடம், கட்னி-சிங்க்ராலி பாதை உட்பட 250 கி.மீ ரயில் பாதைகள் முக்கியமான புலி வாழ்விடங்களுக்கு அதிக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிவித்ததாக, 2017 இல் ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இருவழிப்பாதையான ஹோஸ்பெட்-தினாகாட்-வாஸ்கோ பாதை கோவாவின் பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் கர்நாடகாவின் தண்டேலி சரணாலயம் வழியாகவும், லக்னோ-பிலிபிட் பாதை மாற்றம் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் புலி இருப்புக்குள் போக்குவரத்து மற்றும் கட்டுமானத்தை அதிகரிக்கும்.

Railway Lines Running Through Protected Areas
Railway Line Forests/Parks/Tiger Reserves/Sanctuaries
Alipurduar – Siliguri Jaldapara, Gorumara, Mahananda WS
East Central Railway (Bihar-UP line) Valmiki
Kansiya nes – Sasan Gir metre gauge Gir sanctuary
Alipurduar – Siliguri Jaldapara, Gorumara, Mahananda WS
Raiwala-Dehradun Rajaji park
Dhanbad division Betla national park
Nagpur division Reserve forest, malewada
Junagadh-Bilkha Gir sanctuary
Madukarai-Kanjikode section Walayar range, palakkad forest
Gondia-Chanda fort Nagzira, Navegaon and Tadoba
Balaghat – Jabalpur Kanha range
Nagpur – Chhindwara Pench range, sillewani forest
Nagpur – Durg Nagzira RF, Dandakara RF, Dakshin bortalao range
Nainpur – Chhindwara Pench range
Joranda – Dhenkanal Dhenakanal forest
Sitabinj – Harichandanpur Harichandanpur reserve forest
Rouli – Tikiri Eastern Ghats, Rayagda hills
Kakrigumma – Koraput Eastern Ghats, Rayagda hills
Titlagarh-Singapuram road Kotgarh elephant reserve, Niyamgiri

Source: Right to Information request to railway ministry.

சோதனை வழக்கு: அகோலா-கண்ட்வா பாதைக்காக மாற்றப்பட்ட விதிகள்

இந்த ஒப்புதல்களின் மூலமாக, அகோலா-கண்ட்வா பாதை மாற்றும் திட்டம் உள்ளது.

கடந்த 2017இல், அகோலா-கண்ட்வா சாலைத்திட்டம், சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வன அனுமதிக்காக வந்தபோது, 1980 க்கு முன்னர் தங்கள் வசம் இருந்த நிலத்தில் பாதை மாற்றம் நடக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு புதிய வன அனுமதி தேவையில்லை என்று ரயில்வே கூறியது.

இது, 176 கி.மீ மீட்டர் பாதை பாதையை அகல பாதை பாதையாக மாற்றுவதை உள்ளடக்கிய திட்டம்; செப்டம்பர் 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை செய்தபடி, 2017 ஜனவரியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது. இந்த 176 கி.மீ. பாதையில் 18 கி.மீ. மெல்காட் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள முக்கியமான புலி வாழ்விடத்தின் வழியாக - இது, 50 க்கும் மேற்பட்ட புலிகள் வசிக்கும் இடமாகும் மற்றும் 40 கி.மீ. வனப்பகுதிகள் வழியாகவும் செல்கிறது. இந்த திட்டம் 161 ஹெக்டேர் வன நிலங்களை புலிகள் காப்பகத்தில் இருந்து திருப்பிவிடும்; இதற்கு மதிப்பிடப்பட்ட செலவு ரூ.2,000 கோடி (310 டாலர் மில்லியன்).

அரசு உத்தரவின்படி, புதிய வனப்பகுதிகள் திருப்பிவிடப்பட வேண்டியிருப்பதால், ரயில்வே நிலத்தை சொந்தமாக வைத்திருந்தாலும், அவர்கள் வன அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் 2017 டிசம்பரில் தெளிவுபடுத்தியது. இந்த தெளிவு, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அகோலா திட்டத்திற்கான ஒப்புதலுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு சி.இ.சி -(CEC) முறையிடப்பட்டது. இது புலிகள் காப்பகத்தில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு திட்டத்தின் அனுமதியை மறுஆய்வு செய்ய தேசிய வனவிலங்கு வாரியத்தை கேட்டுக்கொண்டது. இந்த திட்டத்தை 2019 பிப்ரவரியில் திருப்பி அனுப்பியது. ஆனால், தேசிய வனவிலங்கு வாரிய இந்த திட்டத்தை 2019 பிப்ரவரியில் திருப்பி அனுப்பியது.

ரயில்வே நிலத்திற்கான வன அனுமதி குறித்து முன்னும் பின்னுமாக, ரயில்வே அமைச்சகம் இந்த விஷயத்தை இந்திய அட்டர்னி ஜெனரல் (ஏஜி) கே கே வேணுகோபாலுக்கு அனுப்பியது. ஏப்ரல் 2018 இல் வெளியிடப்பட்ட தனது 11 பக்க கருத்தில், ஏ.ஜி.வேணுகோபால், ரயில்வே சட்டம், 1989, எந்தவொரு ஆறுகள், ஓரங்கள், நீரோடைகள் அல்லது பிற நீர்நிலைகளின் போக்கை மாற்றியிருந்தாலும் தேவையான பணிகளைச் செய்ய ரயில்வேக்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், இரண்டு சட்டங்களிலும் ‘தடையற்ற’ விதிகள் இருந்தன, அவை அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த பிற சட்டங்களை மீற அனுமதிக்கின்றன, ரயில்வே சட்டம் வன (பாதுகாப்பு) சட்டத்தின் பின்னர் இயற்றப்பட்டதால் மோதல் வழக்கில் அது மேலோங்கும் என்று வேணுகோபால் கூறியிருந்தார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன், வனம் அல்லாத பயன்பாட்டின் கீழுள்ள ரயில்வே நிலங்களுக்கு, தற்போதுள்ள மீட்டர்-கேஜ் / பிராட்-கேஜ் வழித்தடங்கள் சரியான பாதையில் அமைவதற்கு, வன (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் முன் அனுமதி தேவையில்லை என்று வேணுகோபால் முடித்தார்.

"ஏ.ஜி.யின் கருத்தானது, நிலம் சேதமாவதை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் அது சரியான சட்ட அறிக்கை அல்ல; மேலும் வன நிலங்களுக்கு புதிய தேவை இருந்தால் வன பாதுகாப்பு சட்டம் குறித்த ஒவ்வொரு நீதிமன்ற உத்தரவும் பொருந்தும், ”என்று சுற்றுச்சூழல் வழக்கறிஞர் தத்தா கூறினார். "கடைசியாக, ஒரு அமைச்சக சுற்றறிக்கை அல்லது அலுவலக உத்தரவு, ஒரு மத்திய சட்டத்திற்கு மேல் இருக்க முடியாது" என்றார் அவர்.

கடந்த ஜூன் 18, 2018இல், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடத்த கூட்டத்தில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வனத்துறை இயக்குநர் ஜெனரல் சித்தாந்த தாஸ் மற்றும் அகோலாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளால் இட ஒதுக்கீடு கோரும் சூழல் இருந்தபோதும் அட்வகேட் ஜெனரலின் முடிவு அடிப்படையில், கூட்டத்தில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா மாநில வன அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக பிரதிநிதிகள் கருத்துப்படி, பாதை மாற்றுவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று கட்கரி கூறினார்.

அக்டோபர் 2018 இல், கோயல், அப்போதைய சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதினார். மாநில வன அதிகாரிகள் அட்வகேட் ஜெனரலின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என்ற கவலையை எழுப்பி இருந்த அவர், 1980ஆம் ஆண்டுக்கு முன் வனம் அல்லாத பயன்பாடுக்கு ஏற்கனவே உள்ள ரயில்வே நிலங்களுக்கு வன அனுமதி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை வர்தன் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் கோயலுடன் அவர்கள் உடன்பட்டதை சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதிப்படுத்தியது. “சரியான வழியில் பிரச்சினை குறித்து ரயில்வே அமைச்சகத்துடன் கலந்துரையாடினோம். 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்கள் வசம் உள்ள நிலத்தின் மீது அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் முன்பு தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால் எல்லா மாநிலங்களுக்கும் இதை மீண்டும் வலியுறுத்துமாறு அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், நாங்கள் அதைச் செய்துள்ளோம், அவர்களின் பிரச்சினையை நாங்கள் தீர்த்துள்ளோம், ” என்று, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி கே மிஸ்ரா கூறினார்.

இருப்பினும், தேசிய வனவிலங்கு வாரியம் 2019 பிப்ரவரியில் அகோலா திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்தது;தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, ரயில் பாதை ஒரு புலிகள் சரணாலயம் வழியாக இயங்குகிறது; இது முக்கியமாக சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று தெரிவித்தது.

தேசிய வனவிலங்கு வாரியம் நிராகரித்ததைத் தொடர்ந்து தற்போது இந்த திட்டத்தை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்ற திட்டங்களுக்கு வன அனுமதியிலிருந்து விலக்கு பெற ரயில்வே இந்த வழக்கை- 1980ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே மெல்காட் புலிகள் சரணாயலத்திற்குள் மீட்டர்-கேஜ் பாதை உள்ளது; மேலும் கூடுதல் வன அனுமதி தேவையில்லை - என்பதை மேற்கோளிட்டுள்ளது.

(கானேகர், டெல்லியைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். சுற்றுச்சூழல் கொள்கை, வனவிலங்கு மற்றும் காலநிலை மாற்றத்தை உள்ளிட்டவை குறித்து எழுதி வருகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.