அரசு சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சார்ந்திருக்கும் இந்தியர்கள்
மும்பை: இந்தியர்கள் வர்க்கம், ஜாதி அல்லது கல்வியால் பிளவுபட்டு பின்தங்கியுள்ளனர். இதனால், அரசு அமைப்புகள், பொது சேவைகளை அணுக முடிவதில்லை. அரசின் சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை, அவர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் உள்ள, 8 மாநிலங்களின் 22 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, 16,680 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ, 50% பேர், தங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவம், பள்ளி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டை பெறுதல் போன்ற அரசின் உதவிகளை பெற, பேரூராட்சி, நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை அணுகுகின்றனர் என்பது, அண்மையில் ஆஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் லோக்நிதி (அபிவிருத்தி சங்கங்களின் ஆய்வு மையம் -சி.எஸ்.டி.எஸ்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு சேவைகளை பெற பொதுமக்கள் அடுத்து அதிகம் நாடும் இடைத்தரகர், குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்தவர் (10%), அதை தொடர்ந்து அரசு அலுவலர்கள் (8.5%).
இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், பல்வேறு சமூக, பொருளாதார பிரிவினர், கல்வி அளவிலான பணிகளை சார்ந்தவர்கள், தங்களின் பணியை செய்யும் நபர்களை சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விஷயத்தில் அரசின் தலையீடு தேவை.
அரசு சேவைக்கு யாரை அணுக வேண்டும் என்று முடிவெடுப்பது, வர்க்கம், ஜாதி, கல்வி உள்ளிட்ட 10 சமூக, பொருளாதார காரணிகளை பொறுத்து அமைவதாக, ஆய்வு கூறுகிறது. பயனாளர்களின் தேர்வாக கீழ்கண்டவை அமைகின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ), அரசு அலுவலர், உள்ளூர் அரசியல் தலைவர், கவுன்சிலர் அல்லது கிராம பஞ்சாயத்து உறுப்பினர், ஜாதி சங்க தலைவர் அல்லது குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்த தலைவர்.
சத்தீஸ்கரில், 5-ல் 4 பேர், தங்களின் அரசு தேவைகளுக்கு கவுன்சிலர்களை அணுகுவதாகவும், பீகாரில், 23% பேர் அரசு அலுவலர்களை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.
“மக்களின் அரசு சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதில் கவுன்சிலர்களின் பங்கு அதிகரித்து வருவது எங்களின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது,” என்கிறார், ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, சித்தார்த் ஸ்வாமிநாதன்.
மக்களின் தேவைகளுக்கு அரசு அதிகாரிகள் (கலெக்டர், தாசில்தார் தவிர ) நாடப்படுவது 4.8% ஆக இருப்பது, அதே ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, 2018, ஜூலை 13ம் தேதி, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை சுட்டிக்காட்டியது. இதில் கடைசியில் இருப்பது அரசியல் கட்சிகள் (-1.75%); அவர்களை விட அரசு அதிகாரிகள் ஒரு நிலை மட்டுமே முன்னே உள்ளனர். அதே நேரம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மிகவும் நம்புகின்றனர்; உதவிக்கு அவர்களை நாடுவதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாக இந்தியாவில், அரசு சேவைகளை பெற இடைத்தரகர் தேவை என்ற நிலையே உள்ளது என்று சுவாமிநாதன் கூறுகிறார். அதிக கல்வியறிவு உள்ளவர்கள், உயர்மட்டத்தில் உள்ள தனிநபர்களை சிறப்பாக அணுகுவதாகவும், அவர் மேலும் தெரிவிக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரை (எம்.பி) அணுகி சேவை பெறுவதில், உயர்ஜாதி மற்றும் பட்டதாரிகள் மற்றவர்களைவிட ஒரு சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்கள், மற்ற பிரிவுகளை விட எம்.எல்.ஏ.க்களை அணுகும் வாய்ப்பு அதிகம்.
பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தரும் குடும்பங்கள்
திருமணம், சொத்து தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பெரும்பாலான குடும்பங்கள், இருதரப்புக்கும் பொதுவான நடுவர்கள் மூலம் தீர்க்கவே விரும்புகின்றன. திருமணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு, 37% இந்தியர்கள் இவ்வாறு தீர்வு காண்கின்றனர். 5% சதவீதம் பேர் மட்டுமே நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். குடும்ப வன்முறைகளை பொறுத்தமட்டில், 44% பேர், குடும்ப நடுவர்கள் மூலமே தீர்வு காண்கின்றனர்.
பிரச்சனைகளுக்கு தனிநபர் மூலம் தீர்வு காண்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மகாராஷ்டிரா (56%), மத்திய பிரதேசம் (51%), ஜார்க்கண்ட் (26%). பெரும்பாலும் உடனடி தீர்வுக்காக நாடப்படுவது, திருமணம் தொடர்பான வழக்குகளே.
இதேபோ, ஸ்குரோல்.இன் கடந்த 2018, ஜனவரி 24-ல் வெளியிட்ட ஆய்வு முடிவில், 74% குடும்ப பிரச்சனைகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் தீர்வு காண்பதாகவும்; 49% பேர், கிராம பெரியவர்கள் அல்லது உள்ளூர் அரசியல், சமுதாய தலைவர்களை நாடுவதும் தெரிய வந்துள்ளது.
Source:Politics And Society Between Elections, 2018 [Azim Premji University and Lokniti (CSDS)]
Note: Figures are average of responses from eight states
மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், 50% க்கும் மேற்பட்டோர், குடும்ப வன்முறை விஷயத்தில் குடும்பத்தினர் உதவியை கேட்டு பெறுகின்றனர்; மூன்றாவது இடத்தில் உள்ள, 15% பேர் மட்டுமே காவல்துறையினரை அணுகுகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 34% அதிகரித்துள்ளன; பெரும்பாலும் கணவர் அல்லது உறவினர்களின் கொடுமை என்று புகார் பெறப்பட்டுள்ளது, இந்தியா ஸ்பெண்ட் 2016, செப்டம்பர் 6ஆம் தேதி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில், தெலுங்கானாவில் 30% பேர், ஆந்திராவில் 25% பேர் காவல்துறையை நாடுகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினரை நாடுவோர் எண்ணிக்கை குறைவு. நீதிமன்றங்களை நாடுவது என்பது கடைசி வாய்ப்பாக மட்டுமே உள்ளது.
நம்பகத்தன்மை கொண்ட ஒரு அமைப்பாக உள்ள காவல்துறையை, 5.7% பேரே அணுகுகின்றனர்; பட்டியலிடப்பட்ட 16 தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத நிறுவனங்களில், கீழிருந்து மூன்றாவதாக காவல்துறை உள்ளது என்பது, 2018 ஜூலை 13-ல் வெளியான இந்தியா ஸ்பெண்ட் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, ஆண், பெண் என்ற அடிப்படையில் பார்த்தாலும் பெரும் மாற்றத்தை காண முடிவதில்லை. ஆனால், பெண்கள் தங்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு குடும்பத்தினரையே நாடும் நிலையில் ஆண்களின் விருப்பமாக சமூகத்தினர் அல்லது காவல்துறை இருக்கிறது என்று ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.
ஜாதி மற்றும் வர்க்க விஷயங்கள்
ஆய்வில் பட்டியலிடப்பட்ட ஏழு ஜாதி சமூகத்தினரில், 50% பேர், தங்களின் ஜாதி அல்லது சமூகம் சார்ந்த அரசு முக்கிய பணிகளுக்கு, உள்ளூர் கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகுவதாக கூறுகின்றனர்.
எனினும் மேல்ஜாதி இந்துக்கள் (40%), முஸ்லீம்கள் (37%) ஆகியோர் இதை குறைந்தளவே நாடுகின்றனர். அரசு அதிகாரிகளை நேரடியாக அணுகுவதாக, உயர் ஜாதி இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
Source:Politics And Society Between Elections, 2018 [Azim Premji University and Lokniti (CSDS)]
உயர்ஜாதி இந்துக்களில் காவல்துறையினரிடம் குறைந்தபட்சமே பயம் கொண்டுள்ளனர்; அவர்களுக்கு சாதகமான கருத்தை கொண்டுள்ளனர். குறைந்தபட்சமே காவல்துறையினரால் அவர்கள் தொடர்பு கொள்ளப்படுவது, இந்தியா ஸ்பெண்ட், 2018 ஜூன் 11 கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு உயர் வகுப்பிலும் 38% பேர், கவுன்சிலர்களையே நாடுகின்றனர். பொருளாதார வர்க்கம் மற்றும் பிராந்தியத்தில் (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) பிரிவில் இதற்கான குறைந்தபட்ச விருப்பத்தை, அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
Source:Politics And Society Between Elections, 2018 [Azim Premji University and Lokniti (CSDS)]
(பலியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.