புதுடெல்லி:பருவநிலை மாற்றம் தொடர்பாக முடிவெடுக்கும் உயர் அதிகாரம் பெற்ற அமைப்பான, ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் அமைப்பின், 24வது மாநாட்டு கூட்டத்தில்- சி.ஓ.பி. (COP) பங்கேற்க உலகத் தலைவர்கள், போலந்து நாட்டின் கடோவைஸ் நகரில் ஒன்று கூடினர். இதில் கலந்து கொண்ட சி.ஓ.பி. முன்னாள் தலைவர்கள் நால்வர் எச்சரித்தனர். உலகம் ”ஒரு குறுக்கு வழியில்” செல்கிறது; ”பருவ நிலை மாற்றத்தால் பாதிக்கக்கூடியவர்களை பாதுகாக்க” உலகத் தலைவர்கள் கட்டாயம் “தீர்க்கமான முடிவு” எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 வரை தொடரும் பேச்சுவார்த்தைகள், 2015 பாரிஸ் உடன்படிக்கைக்கு பின் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உலகளாவிய வெப்பநிலை 2.0 டிகிரி செல்சியஸ் (° C) என்பதற்கும் மேலாக தொழில்துறை அளவில் (1800ஆம் ஆண்டுகளுக்கு முன்) மேலே உயர்த்துவதற்கு கூட்டு முயற்சிகளுக்கு தங்களின் தேசிய உறுதிப்படுத்திய பங்களிப்புகளை (NDC) சமர்ப்பிக்க நாடுகள் ஒப்புக் கொண்டன.

பருவநிலை மாற்றத்தின் விளைவு 600 மில்லியன் மக்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு மிக மோசமானதாக இருக்கக்கூடும். உலகளாவிய வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்த நிலையில், இந்தியா ஏற்கனவே பல்வேறு வகை பேரிடர்களை சந்தித்து வருகிறது. கேரளாவில் கடும் வெள்ளம், உத்தரகாண்டில் வனத்தீ, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடும் வெப்பக்காற்று என பல வானிலை பாதிப்புகளை அனுபவித்து வருகிறது.

இதை தடுக்க, இந்தியா முன்னெப்போதும் இல்லாத முயற்சிகளை எடுக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு செய்வதற்கு தற்போது "மிக நல்ல இடமுண்டு", என்று தெரி மேம்பட்ட பள்ளிகளின் துணைவேந்தர் லீனா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். இவர், ஜப்பானின் கியோட்டோ நகரில் 1997ஆம் ஆண்டு நடந்த சி.ஓ.பி.-3 மாநாட்டில் அனைத்து சி.ஓ.பி. தலைவர்களுடன் ஸ்ரீவஸ்தவாவும் பங்கேற்றார். பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி, 2001 இல் பிரசுரிக்கப்பட்ட) மூன்றாவது மதிப்பீட்டின் ஒருங்கிணைத்த அறிக்கை தயாரித்த முன்னணி எழுத்தாளர் ஆவார். இந்த அறிக்கை பருவநிலை மாற்றத்தின் மீதான விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் சமூக-பொருளாதார தகவல்கள், அதன் சாத்தியமான விளைவுகள், ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் குறைப்பதற்கான வாய்ப்புகளை தெரிவித்தது.

இந்தியா, 2020ம் ஆண்டு என்ற தனது இலக்கை அடைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, விரைவில் தனது என்.டி.சி.ஒப்பந்த பொறுப்புகளை நிறைவேற்றும் என்று ஸ்ரீவாஸ்தவா நம்பிக்கை தெரிவித்தார். புவி வெப்பமயமாதல் 1.5 °Cக்குள் கட்டுப்படுத்த உலக அளவில் உதவுவதில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும்; இது அரசியல் விருப்பமாகவும் திட்டவட்டமான செயல்கள், பதில்கள், பொறுப்புகளில் இருக்கிறது.

உலக வெப்பமயமாதல் குறித்த ஐ.பி.சி.சி.யின் சமீபத்திய அறிக்கையில் இருந்து இந்தியா எடுத்துச் செல்ல வேண்டியது என்ன? இந்தியா மிகவும் பாதிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாகும்.

இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், நாம் இது குறித்து அடிக்கடியும், தீவிரமாகவும் பேசுவது அதிகரித்துள்ளது. ஒரு கண்ணோட்ட நிலைப்பாட்டில் இருந்து, நாம் வரலாற்று அனுபவங்களைப் பார்க்க முடியாது; மாறாக, நடக்கக்கூடிய வாய்ப்புகள் என்னவென்பதை சிந்தித்து, பின்னர் அதற்கேற்ப தயாராக முடியும். ஆனால், நாம் இதை செய்யவில்லை. உதாரணமாக, கேரள வெள்ளத்தை நீங்கள் பார்த்தால், பருவநிலை மாற்றத்தால் இது ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது, ஏனெனில், அதுபற்றி ஆய்வு செய்யப்படவில்லை. நமது தயார்நிலையை மேம்படுத்த, மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பை பற்றிய புரிதல் தேவை. அது, ஒரு தீவிர நிகழ்வு, மேலாண்மை முறைமையுடன் தற்போதுள்ள அளவில் தயார் நிலையில் இணைக்கப்பட வேண்டும்.

நகர்ப்புறப் பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மழை பெய்தால், அறிவியல் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு இது சாத்தியமானது. வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு பகுதிகளை நீங்கள் மதிப்பிடுவீர்கள். வெள்ளப்பெருக்கைக் கண்டுள்ள நகரப்பகுதிகள், இடமாற்றம் செய்யக்கூடிய ஏற்கத்தக்க நடவடிக்கைகள் மற்றும் இடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பிடலாம். நபர்களை எப்படித் தயார் செய்யலாம்; சரியான விழிப்புணர்வுடன், நிறுவன ரீதியிலான திறனுடன் இணைந்து கொள்ளலாம் என்பதை நீங்கள் தெரிவிக்கலாம். நாம் ஒன்றிணைக்காத விஷயங்கள் இவை.

இத்தகைய தீவிர நிகழ்வுகளை கையாள்வதில் ஒரு ஒத்திசைவான அணுகுமுறை இருக்க வேண்டும். இன்று தங்களுக்கு தேவையானவற்றை செய்யக்கூடிய நிறுவனங்களைக் கொண்டுள்ளோம்; ஆனால் அரசு நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் தொடர்புத் தடங்களை நாம் கொண்டிருக்கவில்லை. இவை, தேசிய அல்லது மாநில அளவில்,, தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை திறம்பட குறைக்க நமக்கு உதவுகிறது. எனவே, கற்றுக்கொள்வதற்கான நிறைய படிப்பினைகளை நாம் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த திசையில் கவனத்தை நாம் செலுத்தினால், அதை செய்ய முடியும்.

நிலக்கரி பயன்பாட்டை 2010ஆம் ஆண்டு அளவில் உள்ளதை, அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2030-ல் பாதியளவாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாகவும் நிறுத்தினால் மட்டுமே, உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று, ஐ.பி.சி.சி. அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய எரிசக்தி துறை, இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்? உலக நிலக்கரி பயன்பாட்டில் (சீனாவுக்கு அடுத்து) இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது; 15 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டிய நிலையில் (2018, அக். 11 தேதியின்படி) மின் தயாரிப்பில் 60% நிலக்கரியையே இந்தியா சார்ந்துள்ளது.

ஒரு ஆற்றல் முன்னோக்கில் இருந்து பார்த்தால், இந்தியா அதன் சட்டத்தை சரியாக பெற்றுள்ளது. நாம், 2 ° C என்பதில் இணக்கமானதாக இருக்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் என்ற எண்ணத்தோடு நாம் என்.டி.சி. கடமைகளை சந்திக்க வாய்ப்புண்டு என்பது நிதர்சனம். இதன் பொருள், இலக்கை அதற்கான கெடுவுக்கு பத்து ஆண்டுக்கு முன்பே நாம் எட்ட முடியும். பிறகு, 1.5 ° C என்ற இலக்குடன் இணக்கத்தன்மை தேவைப்படும். புதுப்பித்தக்க ஆற்றல் துறைக்கு நாம் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்திருப்பதால், இது சாத்தியமானது. நிச்சயமாக, நாம் வழியில் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அது கற்றல் நடைமுறை என்ற அளவிலேயே உள்ளது.

போக்குவரத்து துறை வாகனங்கள் வெளியேற்றுவதை குறைப்பது நமக்கு மிகவும் கடினமாக உள்ளது. நாம் முழு உள்கட்டமைப்பையும் மாற்ற வேண்டும், ஏனெனில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை, இயற்கையாகவே மிகவும் வேறுபட்டு இருக்கிறது. போக்குவரத்து துறைக்கு அதிக முதலீடு தேவைப்படும். ஆனால், யார் முதலீடு செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது? அத்துடன் எப்படி முதலீடு ஈடு செய்யப்படும்? எனவே, இப்பணியில் நிச்சயமாக ஆட்டோமொபைல் தொழில் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

வாகனங்களில் எரிசக்தி ஆற்றல் தொடர்பாக நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால், அதற்கு மாற்று வாய்ப்பும் நமக்கு தேவைப்படுகிறது. மேலும், அது இன்னும் நமது கவனத்தை ஈர்ர்கும் அளவுக்கு வரவில்லை. மாற்று வழி என்பது, தனியார் வாகனங்களை நிராகரித்து, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் சார்ந்த போக்குவரத்து அமைப்புகளுக்கு மாறுவதாகும். இத்தகைய அமைப்பு நம்மிடம் இன்னும் இல்லை. ஆனால் அவற்றைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றொன்று, நமது வாழ்க்கை முறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது.

ஆனால் மிகப்பெரிய சவாலாக விவசாயம் இருக்கும், ஏனென்றால், ஒரு பெரிய அளவிற்கு நாம் உள்கட்டமைப்பு பயிற்சி மற்றும் திறனை வளர்க்கும் காலம், வெறுமனே உள்ளது. எனினும், விவசாயத் துறையில் இருந்து வெளியேற்றத்தை குறைக்க, நமது உத்திகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நிறைய முயற்சிகள் மற்றும் அமைப்பு தேவைப்படுகிறது.

எனவே அரசியல் தேவை என்று நாம் எளிதாக கூறலாம். நாம் குறிப்பிட்ட செயல்களுக்குள், அதை உடைக்க முடியும், பின்னர் அங்கு இருந்து பின்னர் வரும் பதில்கள், நாம் ஒரு நல்ல வேலை செய்யவில்லை என்பதை தெரிவிக்கும். இவ்விஷயத்தில் இந்திய அறிவியல் துறை கூட இந்திய அரசுக்கு சரியாக உதவி செய்யவில்லை என்று கூறலாம். இவ்வாறு செய்து தரும்படி அரசு கோரவில்லை; அவ்வாறு கேட்டால், அதற்கான நிதி வளங்களையும் அரசு தர வேண்டும் என்று, அறிவியல் துறை பதிலளிக்கலாம். ஏனெனில் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு என்பது தெரிந்த ஒன்று தான். ஆனால், தேவையான ஆதார வளங்களை கேட்டு பெறாவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பிறகு யார் பொறுப்பு என்ற கேள்வி எழக்கூடும்.

ஆற்றல் திறன் என்ற நிலையை எட்ட இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்லது? இதை எப்படி எதிர்கொள்ளலாம்?

ஆற்றல் திறன் என்பது, வெவ்வேறு துறைகளுக்கு மாறுபட்ட அளவில் வருகிறது. தொழில்துறையில் 20-25% ஆற்றல் திறன் மேம்படும் சாத்தியம் உள்ளது. மாற்றத்தக்க எரிசக்தி வாய்ப்புகளை நோக்கி நாம் நகர்ந்தால், கார்பன் வெளியேற்றம் (அல்லது தீவிரம்) கணிசமாக குறைக்க முடியும். எரிசக்தி துறை முதலீட்டை விட வளர்ச்சித்துறை முதலீடுகளே குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் இருக்கிறது. எங்காவது உள்ள சில சிக்னல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் ஆற்றல் திறன் முதலீடு செய்ய லாபம் தரக்கூடியது என்பதை தொழில்துறை கண்டறியும்.

தற்போது, வீட்டு பயன்பாட்டு என வரும் போது, மின் கட்டண விகிதங்களை (பயன்பாட்டுக்கேற்ப மின் கட்டணம்) கருத்தில் கொண்டு, ஏற்கனவே குறிப்பிட்ட சில பிரிவினர் திறமையான எரிபொருள் சாதனங்களுக்கு மாறிவிட்டனர். அத்தகையது இதை கவர்ந்திழுக்கும். திறமையான, தரமானதாக இல்லை என்றாலும் குறைந்த விலை என்பது, கவர்ச்சிகரமானதாக உள்ளது. இன்று சுற்றுச்சூழலுக்கு உகந்த, கடன் அடிப்படையில் நுகர்வோருக்கு இச்சாதனங்களை வழங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் வழிமுறைகளை செய்ய வேண்டும். இப்பயன்பாடுகள் மேலும் அதிகரிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். வீட்டு பயன்பாட்டு பொருட்களுக்கு, ஒவ்வொருவராலும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரும் சந்தை நம்மிடம் உள்ளது. ஆனால், அது ஒழுங்குபடுத்தப்படவில்லை. காலநிலை மாற்றம் குறைப்பு என்பது உண்மையில் உயிர்வாழ்வதற்கான ஒரு விஷயமாக மாறியிருந்தால், தேவையான முயற்சிகளில் ஏன் நாம் ஈடுபடவில்லை? ஒருவேளை, நேரம் மற்றும் முயற்சியின் முதலீடு செய்ய அரசியல் ரீதியாக முயற்சிக்க வேண்டும். அது சாத்தியமில்லை; எனினும், அவ்வாறு செய்யப்பட வேண்டும்.

உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, 2015ஆம் ஆண்டு 900 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற ஆற்றல் தொடர்பான குறைப்பு முதலீடுகளுக்கான விலை, 2050 வரை மட்டுமே. அதிக கார்பனை வெளியேற்றி வரும் அமெரிக்கா, பாரீஸ் உடன்படிக்கையை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளது. கட்டுப்படுத்துதல் மற்றும் ஏற்றுகொள்வதால் ஏற்படும் சுமையை, கார்பன் வெளியேற்றுவோர் மற்றும் பாதிக்கப்படுவோர் மீது எவ்வாறு நியாயமாக சுமத்த முடியும்?

கோடவைஸ் மாநாடானது, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதை விட பாரிஸ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்தவுள்ளது. வாக்குறுதிகள் தங்கள் தேசிய சூழ்நிலைகளை பொறுத்து நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்று நாடுகளை அனுமதிப்பதில் கீழ்நிலை அணுகுமுறையை பாரீஸ் உடன்படிக்கை எடுத்துள்ளது. எனவே, ஒட்டுமொத்த மதிப்பீட்டில் எதுவும் இல்லை. ஆம். இதை கையாளக்கூடிய வழிமுறைகள் [இலக்கை அடைவதற்கான முயற்சிகளையும் அதை மதிப்பீடு செய்யவும்] 2020-ல் இருக்க வேண்டும். நாம் தலைமை ஏற்கும் போது நாம் தான் அவற்றை பார்க்க வேண்டும்; அதிகரிக்கும் விருப்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

வரும் 2020 வரை நாம் இத்தகைய சிக்கல்களில் இருப்போம் என்று நான் கருதவில்லை. [வளரும் நாடுகளில் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியளிக்கவில்லை]. நாம் எவ்வாறு வெளிப்படையான அறிக்கையை தயாரிப்பது என்பதற்கு சி.ஓ.பி. 24 விதிகளை பார்க்கலாம். எனவே நிதி சிக்கல் அல்லது 1.5 °C அறிக்கை கூட சி.ஓ.பி. 24 விவாதங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அது உறுதியாக செயல்படுத்தப்படும் என்றே நினைக்கிறேன்.

வளர்ந்த நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதில் வளர்ந்த நாடுகளின் பிரச்சினை மீண்டும் விவாதத்தின் ஒரு புள்ளியாக இருந்து வருகிறது. உதாரணமாக, வளரும் நாடுகள் கார்பன் கட்டுப்படுத்துவது தொடர்பான நிதிக்கு உறுதிப்பாடு பற்றி ஒருபோதும் ஆலோசிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக ஒரு விவாதம் தொடர வேண்டும்; அது, நீங்கள் செய்யக்கூடிய விலைமதிப்பற்ற அளவான ஒன்றாக இருக்கும். அது (வளர்ந்த நாடுகள் மீதான) நியாயமான நெருக்குதலுக்கு அப்பாலானதாக இருக்கும்.

இந்திய நகரங்கள் ஏற்கனவே வெப்பத்தீவுகளாக மாறி வருகின்றன. புவி வெப்பமயமாதலை 1.5 ° செல்சியஸ் கட்டுப்படுத்தவில்லை எனில் வரும் ஆண்டுகளில் கடும் வெப்ப நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கொல்கத்தா போன்ற இந்திய நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும், 2015 ஆம் ஆண்டை போலவே, கடும் வெப்பநிலையை அனுபவித்து வருவதாக, ஐ.பி.சி.சி. அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு கடும் வெப்பம், அனல் காற்றால், இந்திய மாநிலங்களில் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நகரங்கள் இந்தியாவில் உருவாகி வரும் நிலையில் புவி வெப்பமயமாதலை எதிர்த்து போராடுவதற்கான உறுதிமொழியின் கீழ் இந்தியா கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

இதில் முதன்மையானது பசுமைச்சூழல். ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆராவலிஸுடன் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதைப் பாருங்கள். (ஆரவல்லி பல்லுயிர் பூங்கா பல்லுயிர் வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக, அக்டோபர் கடைசி வாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர்.) மற்றவற்றைவிட பசுமையை வளர்ப்பது காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்ட உண்மை. நகர்ப்புறங்கள் வெப்பத்தீவுகளாக மாறி வருவது பற்றி நாம் எதுவுமே செய்யவில்லை. நகரங்களை இனி மீண்டும் புனரமைக்க இயலாது; எனவே, புதிய உள்கட்டமைப்புகளில் வெப்பத்தை குறைக்கும் கூரைகள் அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை நாம் ஏற்க வேண்டும். நீங்கள் சிறந்த மற்றும் திறமையான கட்டிடப் பொருட்களை தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிடங்களின் மின்சார சுமையை குறைத்து, ஆற்றல் நுகர்வையும் நீங்கள் குறைக்க இயலும். இவை எல்லாமே நகர்ப்புறங்கள் வெப்பத்தீவுகளாக மாறுவதை கையாள உதவியாக இருக்கும்; உலகளாவிய அளவில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

நகரங்களில் அதிக வெப்பத்தை கட்டுப்படுத்த, அதிக வெப்பத்தை உண்டாக்கும் செயல்பாடுகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை நகரின் வெளிப்புறங்களுக்கு நகர்த்தவோ, புதிய தொழில்நுட்ப மாற்றங்களை செய்யவோ முன்வர வேண்டும். உதாரணத்துக்கு, அனல் மின் நிலையங்கள், நகர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்பாடுகள் அதிகம் நிகழ்கின்றன. நீர்நிலைகள், பசுமைப்பரப்பை அதிகரித்தலால் நகரின் வெப்பத்தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்; ஆனால், அவை வலியுறுத்தப்படுவதை நீங்கள் எங்கும் காண இயலாது. நகரங்களில் பசுமைப்பரப்பை அழிப்பதும், நீர்நிலைகள் கட்டிடங்களாக மாறுவதையும் நீங்கள் காணலாம். அவற்றை நாம் நிர்வகிக்க தவறிவிட்டோம். நமக்கு உதவுவதற்கு கூட நாம் எதையும் செய்யவில்லை.

வெப்ப உமிழ்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் இந்தியாவின் வர்த்தக உறவு என்னவாக இருக்கும்?

இப்போது நாம் செய்யக்கூடிய எவ்வித செயலும் வெற்றி பெறும் ஒரு சூழல் உள்ளது; ஏனெனில் நமது வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது. எனவே, பருவநிலை மாற்றம் உகந்த சூழலில் அதிகரிப்பதை, முதல் சந்தர்ப்பத்திலேயே அதை நீங்கள் உறுதிப்படுத்தினால், உண்மையில் உங்களால் நிறைய சாதிக்க முடியும். ஆண்டுக்கு 10-11% வளர்ச்சி காணும் கட்டுமானத்துறையாக இருக்கட்டும், வாகனத்துறை தேவையாகட்டும், அதிக மின்சாரம் பயன்பாடு உள்ள புதிய சாலைகள், புதிய ரயில்வே தடங்கள் என்பதாகட்டும், இத்தகைய எல்லா இடங்களிலும் இந்தியா மாற்றம் செய்யக்கூடிய வகையில் நன்றாக உள்ளது.

அவ்வாறு செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா தனது இலக்கை கணிசமாக எட்ட, இது முக்கியத்துவம் வாய்ந்த படியாக இருக்கும். ஆனால், தொழிற்துறை மற்றும் நிதிசார்ந்த அமைப்புகளுடன் அரசு இணங்கி செல்ல வேண்டும். அதன் இலக்குகளை அடையவும், அதற்காக ஒரு பாதையை வரையறுக்கவும் நாம் ஒரு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.