மும்பை: மொத்தம் உள்ள 542 இடங்களில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2014 தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட 21 தொகுதிகள் கூடுதலாக வென்று, 2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) வெற்றி பெற்றுள்ளது.

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிள் உள்ள உள்ள அனைத்து இடங்களிலும் பா.ஜ. முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளது: டெல்லி மற்றும் தியூ, தத்ரா & நகர் ஹவேலி, சண்டிகர், மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியன; அத்துடன் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் இடம் மே 24 அன்று பகல் 11.15 மணி நிலவரப்படி முன்னிலை பெற்றிருந்தது.

கடந்த 2014இல், 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து இடங்களையும் பாஜக வென்றது: குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, டாமன் & தியூ, தாத்ரா & நகர் ஹவேலி, சண்டிகர், மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள்.

பாகிஸ்தானின் பாலகோட்டில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதி) 2019 பிப்ரவரி மாதம் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியத்தாக்குதல் நடத்தி, தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் என்பதை பாஜக நிலை நாட்டியது; இது ஒரு வலுவான தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை பலப்படுத்தியது; அதே போல் வளர்ச்சி திட்டங்களும் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாகை சூட வழிவகுத்ததாக தெரிகிறது என்று பகுப்பாய்வாளர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

துல்லியத்தாக்குதல்கள் என்பது பாஜக பிரச்சாரங்களில் முக்கியத்துவம் தரப்பட்டு ஒரு திருப்புமுனையை தந்துள்ளது; இது, பொருளாதார, சமூக மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் என அரசின் மோசமான செயல்பாடுகள் மீது மக்களின் கவனம் திரும்புவதை முறியடித்து, பாதுகாப்பு குறித்து பேச வைத்துள்ளது என்பது, சி.எஸ்.டி.எஸ் - லோகிதி - தி இந்து - திரங்கா டிவி - தைனிக் பாஸ்கர் ஆய்வு 2019 போன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் இருந்து தெளிவாக தெரிந்தது.

அதேபோல், மோடி அறிக்கை அட்டை தொடர் காட்டியது போல் முக்கிய திட்டங்களில் அரசின் செயல்பாடு குறித்த பேக்ட் செக்கர் மதிப்பிட்டவாறே, பல லட்சிய திட்டங்களில் -அனைவருக்கும் வீடுகள், நிதி சேர்த்துக்கொள்வது, ஏழை குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மேம்பட்ட சுகாதாரம் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல்- அணுகல்கள் அதிகரித்தன; ஆனால் நிறைவேற்றுவதில் குறைபாடுகள் இருந்தன.

முடிவுகள்

இந்தியாவில், புவியியல் ரீதியாக வடக்கு - மேற்கில் பாஜக தனது பிடியை பலப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் (உ.பி.) காட்டும் அளவீட்டின்படி, 2014இல் அக்கடி மாநிலத்தில் பெற்ற 71 இடங்கள் என்பதைவிட 10க்கும் குறைவான (62) இடங்களில் முன்னிலை, வெற்றி பெற்றிருந்தது. சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி..) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) ஆகியன தோல்வியை தழுவியுள்ளன. இது ஒரு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

"சமாஜ்வாதி - பி.எஸ்.பி அல்லது காங்கிரஸ் கட்சிகள் ஒரு பெரும் மாற்றாக உருவானதாக நான் நினைக்கவில்லை. மதச்சார்பற்ற அரசு என்ற காங்கிரஸின் பழைய கோஷம், மோடியின் வாக்குறுதிகளால் வழங்க முடியாத பலவீனம் ஆகிவிட்டதாக தோன்றுகிறது " என்று, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆட்சித்துறை பேராசிரியர் ஏ. நாராயணா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "உ.பி.யில், மஹாகத்பந்தன் [பெரும் கூட்டணி] சாதி கணக்கீடுகளை அதிகம் நம்பியிருந்தது; வாக்காளர்களை நம்பவைக்கும் குறுகிய காலமாக இது தெரிகிறது. இது, வாக்காளர்களை சமாதானப்படுத்தும் குறுகிய காலத்தில் வழியாக தோன்றியது" என்றார்.

கிழக்கில் எடுத்துக் கொண்டால், ஒடிசாவில் வலுவாக உள்ள பிஜு ஜனதாதளம் (பி.ஜே.டி.) கோட்டைக்குள் ஊடுருவி, பா.ஜ.க. தடம் பதித்துள்ளது. 2014இல் இங்கு ஒரு தொகுதியை மட்டுமே வென்ற பாஜக இம்முறை, மே 24 பகல் 11. 15 நிலவரப்படி, ஏழு இடங்களை வென்று, ஒன்றில் முன்னிலை பெற்றிருந்தது.

மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் எண்ணப்பட்ட நிலையில், 98 இடங்களில் வெற்றி பெற்றும், மே 24 பகல் 11.15 மணி நிலவரப்படி 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் பிஜேடி மீண்டும் அங்கு ஆட்சியை அமைக்கிறது. இங்குள்ள சட்டசபையில் உறுப்பினர் எண்ணிக்கை, 146 ஆகும்.

அதேபோல், வேறு மூன்று மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் மாநில மற்றும் மக்களவை தேர்தல்கள் நடைபெற்றன. 55 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தில், பா.ஜ.க. 33 இடங்களைக் கைப்பற்றி 1 இடத்தில் முன்னிலையில் இருந்தது; காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக பாஜக உறவை நிராகரித்த சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா 2019 தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் 17இல் வெற்றி பெற்றது.

ஆந்திராவில், யுவஜன ஸ்ரமிகா ரிது காங்கிரஸ் கட்சி எனப்படும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP), 175 இடங்கள் கொண்ட சட்டசபையில் 150 இடங்களை வென்று, மே 24, பகல் 12;55 மணியளவில் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றிருந்தது. அதேபோல், மக்களவை பொதுத்தேர்தலிலும் அது, 25 இடங்களில் 21ஐ வென்று, ஒரு தொகுதியில் முன்னணி வகித்திருந்தது.

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக, கணிசமான இடங்களை - 42 தொகுதிகளில் 18ஐ- முதல் முறையாக வென்றுள்ளது. இங்கு பாஜக மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் இடையே வன்முறை, மோதல்கள் வெடித்த பல சம்பவங்கள்(அத்தகையன இங்கே மற்றும் இங்கே) மத்தியில் அதிகாரத்தை பிடிக்க மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. 22 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது, 2014இல் வென்ற 34 என்பதைவிட குறைவாகும்.

"மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிக்கான வாக்குகள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)] பாஜகவுக்கு சென்றுள்ளதாக தோன்றுகிறது," என நாராயணா கூறினார். ஒடிசாவில், - ஒரு வலுவான பிராந்திய தலைவராக நவீன் பட்நாயக் இருந்தாலும் - ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களுக்கு மாற்றத்தை தேட தூண்டியிருக்கலாம். இது அடுத்த தேர்தலிலும் மோடிக்கும் கூட இருக்கக்கூடும்” என்றார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ) என்ற பெயரில் இம்முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது. தென்னிந்திய பிராந்தியக் கட்சியான இது, அதன் தலைவர் ஜெ. ஜெயலலிதா இல்லாததை உணர்ந்துள்ளது.

மாநிலத்தின் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதன் எதிரியான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.), 23 இடங்களை கைப்பற்றியது. 2019 ஏப்ரலில் வாக்குப்பதிவுக்கு முன் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டதால், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் தாமதமானது.

மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக

கிளர்ச்சியாளர் தாக்குதல்களுக்கு ஆளாகும் மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர் (J & K) ஆகியவற்றில் 2014 ல் வெற்றி பெற்ற அதே எண்ணிக்கை தொகுதிகளை பாஜக இம்முறையும் தக்கவைத்துக் கொள்வது போல் தெரிகிறது- அதாவது முறையே 10 மற்றும் மூன்று என்ற எண்ணிக்கையில்.

சத்தீஸ்கரின் தெற்கில் உள்ள பாஸ்டர் தொகுதிக்குட்பட்ட மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிரம்பிய பாஸ்டர், தண்டேவாடா, நாராயன்பூர் மற்றும் பிஜப்பூர் பகுதிகள் இம்முறை காங்கிரஸுக்கு வாக்களித்தன; மே 23 இரவு 7:30 மணி நிலவரப்படி இங்கு 38,982 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. 2014 தேர்தலில் இங்கு, பா.ஜ. 124,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2014இல் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) உடன் பா.ஜ.க. இணைந்ததால், மாநிலத்தில் மூன்று இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை உரிமை கோர முடிந்தது. ஜம்மு காஷ்மீர் இம்முறை தேசிய மாநாடு கட்சியானது, பி.டி.பி. வென்ற இந்த மூன்று இடங்களில் முன்னணி பெற்றது; ஏற்கனவே கூறியபடி பாஜக தனது மூன்று தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது.

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களில் காணப்படும் தொடர்ச்சியான போக்காக, பா.ஜ.க இம்முறை 13 இடங்களில் முன்னணி பெற்றது; இது, 2014இல் பெற்ற எட்டு என்பதைவிட ஐந்து இடங்கள் கூடுதலாகும்.

வரலாற்று ரீதியாக, வடகிழக்கு பகுதியாந்து மத்திய அரசை இயக்கும் கட்சிக்கு வாக்களித்து வந்துள்ளது. மத்திய அரசியன் வங்கி மானியங்கள் மற்றும் நிதி மீதான அவர்களின் கடும் சார்பு காரணமாக, 1999 மற்றும் 2014க்கு இடைப்பட்ட காலத்தில், பா.ஜ. முழுமையாக அனுபவித்ததைவிட, 2014 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் வெற்றிக்குப் பெரும் ஆதரவு உள்ளது என்று, மார்ச் 17, 2017இல் மிண்ட் கட்டுரை தெரிவித்தது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் கோட்டையாக இருந்த திரிபுராவில், அந்த மாநிலம் உருவான 1972ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இரண்டு இடங்களையும் பா.ஜ.க. பெற்றது.

கடந்த 2018இல் இங்கு சட்டசபை தேர்தலில் இரண்டு இடங்களை பா.ஜ.க. வென்றது; அத்துடன் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியுடன் அந்த மாநிலத்தில் கூட்டணி அரசை அமைத்தது.

துல்லியத்தாக்குதல்கள்

"பா.ஜ.க. இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் பிரச்சினையை பெரும் கவலையாக சித்தரித்தது; இது அவர்களுக்கு தேர்தலில் நன்கு கைகொடுத்திருக்கிறது, " என்று, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் மனோஜ் ஜோஷி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நாட்டை ஒருவித அச்சுறுத்தலுக்கு உட்படுத்திய பிறகு, நாட்டை பாதுகாப்பதில் மோடி ஒரு தீர்க்கமான, வலுவான தலைவர் என்றும் காட்டப்பட்டார்" என்று அவர் கூறினார்.

பா.ஜ.க. ஒரு "பரந்த பிரச்சினை" தேடுகிறது; 1990களில் இருந்து ராமர் கோவில் விவகாரத்தை எடுத்தது; பிறகு துல்லியத்தாக்குதலை கண்டுபிடித்தது என்றார் ஜோஷி. "புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, பாலகோட் துல்லியத் தாக்குதல் நடத்தி அதை பாஜக தேர்தல் பிரசாரங்களில் மையப் பொருளாக்கி, சந்தர்ப்பவாதத்திய பிரதிபலித்தது; இது இந்தி பேசும் மாநிலங்களில் - துல்லிய தாக்குதல்கள் பற்றி ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டதும் வாக்காளர்களின் கற்பனையை ஈர்த்து- தொலைதூர கிராமங்களில் கூட நல்ல பலனை தந்தது; என்று ஜோஷி குறிப்பிட்டார்.

பாலகோட் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினையை விளங்கியது; புல்வாமா தாக்குதல் தேசிய பிரச்சினையாக இருந்தது என்று, மேம்பட்ட ஆய்வுக்கான தேசிய கல்விக்கழகத்தின் சர்வதேச உத்திகள் மற்றும் பாதுகாப்பு படிப்புக்கான பேராசிரியர் சுபா சந்திரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பாலகோட் விவகாரத்தால் இந்தியாவின் கதை மாறுவது மட்டுமல்ல; பாகிஸ்தானிலும் தான், "என்று அவர் கூறினார். இதுபோன்ற ஒரு கூற்றில் பிரச்சனை என்னவென்றால் [இன்னொரு] சம்பவம் நிகழ்ந்தால், இராணுவத்திற்கு பதிலளிக்க அரசுக்கு அழுத்தம் இருக்கும் - இது எங்கள் உத்தி நலனா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார்.

"பாலகோட் [துல்லிய தாக்குதல்கள்] பா.ஜ.க. வாக்குகளை உறுதிப்படுத்த உதவியிருக்கலாம்," என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நாராயண இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். அவர், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட பாஜகவை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஆதரவு தற்காலிகமானது என்று போக்குகள் காட்டுவதை நாம் காண்கிறோம்" என்றார்.

"முன்னதாக, முஸ்லீம்களைப் பற்றியும் பிரசாரங்களில் பாஜக பேசியது. ஆனால் இம்முறை முஸ்லிம்கள், பாகிஸ்தான், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஒரு சக்திவாய்ந்த தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டன," என்று நாராயணா கூறினார்: "எனவே பா.ஜ.க. வாக்காளர்களை சுற்றி சில திட்டங்களை - பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா [PMAY] மற்றும் உஜ்வாலா, நகர்த்தியது - அவர்களால் பிற வாக்குறுதிகளை வழங்க முடியாத போதிலும்; பா.ஜ.க. வழங்கிய ஒரு உணர்வை இது காட்டுகிறது" என்றார்.

இந்தியாவில் பா.ஜ.க.வின் எழுச்சி என்பது, உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதோடு இணக்கமாக தெரிகிறது என்று, மும்பை பல்கலைக்கழக சிவில் மற்றும் அரசியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் உத்தாரா சகஸ்ராபுதே தெரிவித்தார். "அது மோடியோ, அது [அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்] டிரம்ப் ஆகவோ இருக்கட்டும்; இவர்கள் இன்னும் பாதுகாப்பு நடவடிக்கைககளுக்கு வேலை செய்கின்றனர்" என்றார்.

இந்த புதிய தலைவர்கள் தேசியவாதத்தை பயன்படுத்தி, தேசிய இறையாண்மையை எதிர்க்கும் சுதந்திர வர்த்தகத்தை சித்தரித்து மற்றும் பாதுகாப்புவாத வர்த்தக கொள்கைகளை எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்; பாதுகாப்புவாத கொள்கைகளை இறைமை வெளிப்பாடு எனக் கொள்வதற்கான உரிமையாக காட்டுகின்றனர். “மேக் இன் இந்தியா திட்டம் என்பதும், பாதுகாப்புவாதம் தொடர்பானது” என்றார். "எனவே ஒரு விதத்தில் [பா.ஜ.க வலுப்படுத்தும் நிலைப்பாடு] வெளியில் காணப்பட்ட போக்குடன் ஒத்திருக்கிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், அவர்கள் குடியேறுபவர்களாக உள்ளனர் - இந்தியாவின் குடியுரிமை பதிவு மசோதா இதேபோன்ற குடியேற்ற எதிர்ப்பு கொள்கையாகும்".

விவசாயிகள் துயரம்

கடந்த 2014இல் பா.ஜ.க. 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது; இதில், 206 தொகுதிகள் விவசாய துயரங்களை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் இதில், பா.ஜ.க. 26 ஐ இழக்க நேரிடும்; 180-ஐ தக்க வைத்துக் கொள்ளும்.

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களில் பண்ணை துயரங்கள் முக்கியமாக இடம்பெற்றன; விவசாய உற்பத்திகளின் விலை வீழ்ச்சி, வாக்குறுதி அளித்தபடி போதுமான கொள்முதல் விலைகளை வழங்குவதில் அரசின் இயலாமை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் கடன் மற்றும் தற்கொலை போன்றவையும் இடம் பெற்றன. (மே 24, 2019 அன்று 11.15 மணியளவில் முன்னணி மற்றும் முடிவுகளின் அடிப்படையில்).

Note: Based on leads and results as of 11:15 am on May 24, 2019

அதிகரித்து வந்த விவசாயப் பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டில் உள்ள ஏறத்தாழ 200 அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், நவம்பர் 2018 ல் டெல்லியில் பேரணி நடத்தினர். விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும்; மொத்த விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தியாவின் பொருளாதாரத்தில், 2016-17 உடன் முடிந்த 12 ஆண்டுகளில் வேளாண் பங்கு 5 சதவீதம் வரை குறைந்து, 12.2% ஆக இருந்ததாக, 2018 டிசம்பர் 3இல் லைவ் மிண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. ஆயினும்கூட, பெரும்பாலான நடவடிக்கைகளால், விவசாயம் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகள், 50%க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

பா.ஜ.க. 60க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்ற உத்தரப்பிரதேசத்தில், கரும்புக்கான தொகை நிலுவையில் இருப்பது மட்டும் 2019 மார்ச் 12இன் படி, ரூ.11,845 கோடி ஆகும் என்று, மார்ச் 20, 2019ல் தி இந்து பிஸினஸ்லைன் கட்டுரை தெரிவித்தது. இதில் கிட்டத்தட்ட 52% அல்லது ரூ .6,168 கோடி, ஷாம்லி (கைராணா தொகுதி), சஹரன்பூர், முசாபர்நகர், கஜியாபாத், மீரட், பாக்பத் மற்றும் புலாந்த்ஷாஹர் பகுதி சாகுபடிக்கானது. இதில், சஹரன்பூர் மற்றும் மீரட் தவிர எல்லாவற்றிலும் பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

இந்தியாவின் நிலப்பரப்பில் 42% வறட்சி, விதிவிலக்காக 6% - கடந்த ஆண்டு வறட்சியின் பரப்பளவு நான்கு மடங்கு அதிமானது என்று, ஏப்ரல் 3, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. தெற்கு உ.பி.யில் புந்தல்காண்டில் உள்ள வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளான ஹமீர்பூர், பண்டா, ஜான்சி மற்றும் ஜலூன் ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் பாஜக வெற்றி முகம் கொண்டிருந்தது; இதில் மூன்று வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று, 2018 ல் பட்டியல் இடப்பட்டதாக, ஏப்ரல் 29, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. பா.ஜ.க. இங்கு அனைத்து இடங்களையும் வென்றது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில், வேளாண் துயர் நிறைந்ததாக, 23 இடங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இங்கு பா.ஜ.க அனைத்து 23 இடங்களையும் வென்றது. இங்கு மூன்று முறை பதவி வகித்த பா.ஜ.க. ஐந்து மாதங்களுக்கு முன்னர், 2018 சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது; இதற்கு விவசாயிகளின் அவநம்பிக்கையே காரணம் என்று கூறப்பட்டது.

கடந்த 2017 ஜூன் மாதத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மந்த்சூரில் பாஜக தனது பிடிப்பை தக்க வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், இரவு 7:30 மணி நிலவரப்படி 375416 வாக்கு வித்தியாசத்தில் பாஜக முன்னணியில் இருந்தது.

மகாராஷ்டிராவில் உள்ள 48 இடங்களில் 23 தொகுதிகளில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1980-இல் கட்சி உருவானதில் இருந்து, இந்த இரண்டு மாநிலங்களில் அதன் சிறந்த செயல்பாடு இதுவாகும். 2016 ல் மகாராஷ்டிரா அதிக விவசாயிகள் / சாகுபடி செய்தவர்கள் தற்கொலை (ஆண்டில் 2,550 அல்லது நாளுக்கு ஏழு), அடுத்து கர்நாடகா (1,212) என்று, 2019 மார்ச் 21 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

மகாராஷ்டிராவின் மராத்வாடாவின் வறண்ட நிலப்பகுதியில், 2015 ஆம் ஆண்டின் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்ட பீட் தொகுதியை பா.ஜ.க. 160,000 வாக்குகள் வித்தியாசத்தில் தக்க வைத்துக் கொண்டது.

"பி.எம். -கிஸான் போன்றவை சில பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நான் நினைக்கிறேன். பா.ஜ.க. இதை பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும் "என்று, பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் இந்தியா ஸ்பெண்ட்டிடம் கூறினார்.

"அனைத்து அரசுகளுமே திட்டங்களைக் கொண்டிருந்தன, ஆனால் பா.ஜ.க. போல் திட்டங்களை இயக்கும் ஒரு செயல்முறை அவர்களிடம் இருந்ததில்லை. உதாரணத்திற்கு நூறு நாள் வேலை உறுதித்திட்டம் பற்றி காங்கிரஸ் எதையும் கூறவில்லை” என்று, உலகின் மிகப்பெரிய வேலை உத்தரவாத திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை சுட்டிக்காட்டி, நாராயணா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

வகுப்பு வன்முறை

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பசு தொடர்பான வன்முறைகள் நடந்த பகுதிகள் என்று இந்தியா ஸ்பெண்ட் அடையாளம் கண்ட 83 தொகுதிகளில், 2014 தேர்தலில் இங்கு பாஜக 60 இடங்களை வென்றிருந்தது. இம்முறை, 2019 மே 24ஆம் தேதி பகல் 11.15 மணி அளவில் பாஜக 63 இடங்களை வென்றது.

Note: Based on leads and results as of 11:15 am on May 24, 2019

"நமது இந்திய சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறோம்," என்று கோஷ் கூறினார். "பா.ஜ.க. பிரச்சாரம் பகிரங்க வகுப்புவாத, பிளவுபடுத்தும் நிரலில் இயங்கியது. இந்து ராஷ்டிரா (தேசம்) என்ற ஒரு பார்வை சுமத்தும் வாக்குறுதி தந்து அது நமது அண்டை நாடுகளிலும், சிறுபான்மையினரிடமும் கடந்து செல்லும் வகையில் செய்தனர். பொருளாதார முன்முயற்சி மற்றும் தொழில் நிறுவனங்களின் அழிவு ஆகியவற்றில் பாஜக அரசு தோல்வியை பெற்றிருந்தாலும் வாக்காளர்களின் கணிசமான பகுதியினர் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருந்தனர்" என்றார்.

"வாக்காளர்கள் பொருளாதார நலன்களை நேர்மையாக கருத்தில் கொள்வதைவிட வகுப்புவாத நலன்களாலும், கலாச்சார முன்னுரிமைகள் தந்து செயல்படுவது போல் தெரிகிறது" என்று, பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, தாமஸ் பிகேட்டி மற்றும் அமோரி கெதின் ஆகியோருடன் இணைந்து 2019 மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

"பொருளாதார நலன்கள் அடிப்படையில் அரசால் எதையும் கொடுக்க முடியாது என்று வாக்காளர்கள் நம்பத் தொடங்கினால், பின்னர் அவர்கள் குழுவாத கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும். மக்கள் குழுவாத பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே கவனித்துக் கொண்டால், கட்சிகள் அதை ஊக்குவிக்கின்றன. பின்னர் நாம் முற்றிலும் உடைந்துபோன அரசியல் நிலையில் முடிந்துவிடும்" என்று, 2019 மே மாதம் 15ஆம் தேதி இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் பானர்ஜி குறிப்பிட்டார்.

"பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இன்னும் இருக்க வேண்டும்; ஏனெனில் சமூகப் பிரிவுகளை உருவாக்காமல் நாம் வழங்கக்கூடிய அம்சங்களே இவை… அவை அடிக்கடி தீர்க்கப்படலாம் அதே நேர்ம குழுவாத நலன்களை தீர்க்க முடியாது” என்றார் பானர்ஜி.

இந்தியா தனிமைப்படுத்தப்படக் கூடாது என்று, தேசிய கல்வி நிறுவகத்தின் சந்திரா கூறினார். "நாடு முழுவதும் வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சி உள்ளது" என்றார் அவர். "தாராளவாத ஜனநாயகக்களில் ஒரு தீவிரமான நெருக்கடி உள்ளது, அங்கு குடியேறுபவர்கள் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. வெறுமனே இடதுசாரிகள் விலகியிருந்ததால், அது தோல்வியடைந்தது. இத்தகைய சூழ்நிலைகளில், வெற்றிடத்தை வலதுசாரி நிரப்புகிறது " என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.