பெங்களூரு: மத்திய அரசு, 2019 பட்ஜெட்டில் குழந்தைகளுக்கு ரூ .90,594 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது; ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 0.01% புள்ளிகள் அதிகரித்து, 3.2% அளவுக்கு உள்ளதாக அரசுசாரா அமைப்பான சைல்டு ரைட்ஸ் அண்ட் யு - ‘க்ரை’ (CRY) அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 40% குழந்தைகள். எனினும் அவர்களின் கல்வி, வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதி கிட்டத்தட்ட மாறாமல் அப்படியே உள்ளது என்று அது தெரிவிக்கிறது.

இதில் பெரிய அளவாக கல்வி (68%), வளர்ச்சி (26%), சுகாதாரம் (3%) மற்றும் பாதுகாப்பு (2%) என செலவிடப்படுகிறது. இதில் கடந்தாண்டுடன் ஒப்பிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு 1.1% புள்ளிகள் குறைந்தும், பாதுகாப்புக்கான நிதி 0.6% புள்ளிகள் அதிகரித்தும் உள்ளன.

"2019 இடைக்கால பட்ஜெட் நமது சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளுக்கு நேர்மறையான போக்குகளைக் காட்டியுள்ளது, இதில் விவசாயிகள், சிறிய தொழில் முனைவோர் மற்றும் வரி செலுத்துபவர் நடுத்தர வர்க்கங்கள் உள்ளனர்" என்று ‘க்ரை’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா தெரிவித்தார். “இந்திய மக்கள் தொகையில் 40% குழந்தைகள் என்றிருந்தும் அவர்கள் பட்ஜெட் உரையில் ஒரு பகுதியாகவோ அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் 10 புள்ளிகளில் ஆன பார்வையாகவோ எங்கும் காணப்படுவதாலும், குழந்தைகள் நாட்டிடம் எதிர்பார்ப்பதை நிறைவேற்ற பட்ஜெட் தவறிவிட்டது.”

கல்வி ஒதுக்கீடு சரிவு; மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித்தொகை சுருங்குகிறது

2015-16ஆம் ஆண்டில் (பட்ஜெட் மதிப்பீடு அல்லது ப.ம..) 79% என்ற கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தற்போது “தெளிவான ஆனால் படிப்படியான சரிவு” என்பதை காட்டும் வகையில் 2019-20ல் (ப.ம.) 68% என்று உள்ளதாக, அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல், 2018 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை சமக்ர சிக்ஷாஅபியான் அல்லது பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ரூ. 75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

கடந்த 2018 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது - மழலையர் பள்ளி தொடங்கி மெட்ரிகுலேஷன் வரை - சர்வ சிக்ஷா அப்யான் (அனைவருக்கும் கல்வி) உள்பட அனைத்தையும் ஒன்றின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தை கொண்டது. ராஷ்டிரீய மத்யமக் சிக்ஷா அப்யான் (தேசிய நடுநிலை கல்வி இயக்கம்), ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் ஒரே குடையின் கீழ் உள்ளன.

இந்தியாவில், பள்ளியில் ஐந்தாண்டு கல்வி முடித்த 10-11 வயதில் உள்ள குழந்தைகளில் பாதி பேர் (51%) மட்டுமே இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை (ஏழு முதல் எட்டு வயதுக்கு ஏற்றது) படிக்க முடிகிறது என்று, 2019 ஜனவரி 15ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது. இது, 2008 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை படிக்கக்கூடிய ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் விகிதமான 56% என்பதை விட குறைவு.

மெட்ரிகுலேஷனுக்கு முந்தைய -பிந்தைய கல்விக்கான உதவித்தொகையானது விளிம்பு நிலையில் உள்ளோருக்கு அதாவது பட்டியலின வகுப்பு (SCs), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) "தேக்க நிலை அல்லது உண்மையில் குறைக்கப்பட்டுள்ளது".

இந்த பிரிவுனருக்கான மெட்ரிக்குலேஷனுக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு சரிந்து, மெட்ரிகுலேஷனுக்கு முந்தைய கல்வி உதவித்தொகை அதிகரித்துள்ளது.

மெட்ரிகுலேஷனுக்கு முந்தைய கல்வி உதவித்தொகை அதிகரிப்பானது (சதவீத அடிப்படையில்) அதிகபட்சமாக எஸ்.சி.(156%), சிறுபான்மையினர் (122%), ஓ.பி.சி. (53%) உள்ளது. மெட்ரிக்குலேஷனுக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை சரிவில் எஸ்.சி.(-60%), ஓ.பி.சி. (-17%) ஆகும்.

Allocation For Scholarship Schemes For Scheduled Castes, Other Backward Castes And Minorities, 2017-18 To 2019-20
Scholarship 2017-18 2018-19 2019-20 Change From Last Budget (in %)
Pre-Matriculation for scheduled castes 45 125 319.5 156%
Post-Matriculation for scheduled castes 334.8 300 120 -60%
Pre-Matriculation for minorities 950.00 980 1100 122%
Post-Matriculation for minorities 550.00 692 530 -23%
Pre-Matriculation for other backward castes 127.8 232 108 53%
Post-Matriculation for other backward castes 88.5 110 90.9 -17%

Source: Child Rights and You, 2019
Note: All figures in Rs crore are budget estimates

பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான நிதியில் சரிவு; அங்கன்வாடிக்கு ஊக்கம்

குழந்தைகள் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் 0.5% குறைந்து, 3.4% என்று உள்ளது. -குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் உலகின் மிகப்பெரிய சிறுபருவ குழந்தைகள் ஒருங்கிணைப்பு திட்டமான - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள்- ஐசிடிஎஸ் (ICDS) திட்டத்திற்கு நிதி 19% அதிகரித்தது 19,428 கோடி என்று உள்ளது. இந்த "கணிசமான அதிகரிப்பு" அங்கன்வாடிகளின் (குழந்தை பராமரிப்பு மையங்கள்) தேவைகளை பூர்த்தி செய்வதற்கு "போதுமானதல்ல" என்று ஆய்வு கூறுகிறது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பள்ளிக்கு முந்தைய முறைசாரா கல்வி, சுகாதார கல்வி மற்றும் நோய்த்தடுப்பு போன்ற சேவைகளை அங்கன்வாடி மையங்கள் வழங்குகின்றன. இது,கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிக ஒதுக்கீடு என்று அறிக்கை கூறுகிறது.

"அங்கன்வாடி மற்றும் ஆஷா யோஜனாவின் கீழ், அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் மதிப்பூதியம் 50% சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது." என்று தற்காலிக நிதி அமைச்சரான பியூஷ் கோயல், 2019 பிப். 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.

ஐ.சி.டி.எஸ்.இன் இந்தியா 11.8 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் (AWWs), 11.6 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்களின் சேவைகளைப் பயன்படுத்துகிறது என்று, 2018 பிப். 23ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் 2015ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடி பணியாளர்கள் (AWWs), அங்கன்வாடி உதவியாளர்களுக்கு (AWH), சம்பளத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மதிப்பூதியம் அதிகரிப்பு "மிகவும் தேவைப்படும் நேர்மறையான மற்றும் மேம்பட்ட பொறுப்புக்களை தூண்ட வேண்டும்", என்று க்ரை அறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தை பாதுகாப்பு ஒதுக்கீடு இரட்டிப்பு; பேடி பச்சோ, பேடி பதொவ் தொடர்ந்து தேக்கநிலையில்

அதேபோல் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு, கடந்தாண்டு முதல் ரூ.1,500 கோடி என்று இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவித் திட்டம் அரசு -மக்கள் சமூக கூட்டு மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலினம் சார்ந்து கருவில் குழந்தையை தேர்ந்தெடுப்பதை நீக்குதல் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்ட பேடி பச்சோ, பேடி பதொவ் திட்டத்திற்கான ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டிலிருந்து ரூ.280 கோடி என தேக்கமடைந்துள்ளது.

பேடி பச்சோ, பேடி பதொவ் திட்டத்திற்கு 2014-15 முதல் 2018-19 வரை ஒதுக்கப்பட்ட நிதியில் 56%, "ஊடகங்கள் தொடர்பான நடவடிக்கைகள்" மற்றும் 25சதவீதத்திற்கும் குறைவானது, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாக, 2019 ஜனவரி 21ல் தி க்விண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

“பேடி பச்சோ, பேடி பதொவ் திட்டத்தின் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை (பெண் விகிதம்) அதிகரித்து வருகிறது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதாக,2018 அக்டோபர் 13ல் என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டிருந்தது.

"பல அப்பாவிகள் உரிமையை பெற்றுள்ளனர். வாழ்வது மட்டுமே அர்த்தம் அல்ல; கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பது தான். "

பட்ஜெட்டில் உழைக்கும் குழந்தை தொழிலாளர்களை மறுசீரமைக்கும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்திற்கான ஒதுக்கீடு, கடந்த பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது 17% குறைந்து ரூ.100 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1,01 கோடி குழந்தைகள் - இது உத்தரகாண்ட் மக்கள் தொகைக்கு சமம் - “முக்கிய தொழிலாளி” ஆகவோ அல்லது “விளிம்பு நிலை பணியாளர்” ஆகவோ பணி புரிந்து வருவதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.