பருவநிலை இலக்கை அளவிடுவதால் இந்தியா தனது ஜி.டி.பி.யை 3 மடங்கு சேமிக்கலாம்; ஆனால் மாசுபடுத்துவோரே செலுத்த வேண்டும்
மும்பை: உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் (oC) என்பதற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்ட, இந்தியா தனது பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை அளவிட்டால், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) அளவில் மூன்று மடங்கு சேமிக்கலாம்; மேலும் உலகம் முழுவதும் ஒரு மில்லியன் பேரை காப்பாற்ற இயலும் என்று, உலக சுகாதார அமைப்பு (WHO) 2018 டிச. 5-ல் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது, 2015 பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 2 டிகிரி C என்பதைவிட எளிதான இலக்காகும்.
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளால் சுகாதார பிரச்சனைகளில் ஆதாயம் ஏற்பட்டு, இந்நடவடிக்கைக்கான செலவினங்களை அது ஈடுகட்டும் என்று, உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறுகிறது. இந்த ஆதாயங்கள் 3.28-8.4 டிரில்லியன் டாலர்களுக்கு சமமாக இருக்கும்; இந்தியாவின் தற்போதைய டி.ஜி.பி. -மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $ 2.8 டிரில்லியனை விட இது பல மடங்கு அதிகமாகும்.
எனினும், இதை செய்ய பெரிய முதலீடு தேவைப்படும். அதேநேரம், செல்வந்த, தொழில்மயமான நாடுகளான, வரலாற்று முக்கியத்துவம் பெறும் உமிழும் நாடுகள், பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் நிதி வழங்கும் தங்கள் கடமைகளை செய்ய தவறிவிட்டன. "தற்போதைய சூழ்நிலையில், காலநிலை மாற்றத்தின் வேகத்திற்கு ஈடாக, நிதி பங்களிப்பு வேகம் போதுமானதாக இல்லை. இதுபற்றி முறையாக விவாதிக்கப்படவும் இல்லை," என, இந்திய நிதி அமைச்சகம் டிசம்பர் 4-ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. போலந்து கட்வொயிஸில் உள்ள காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் 24வது மாநாடு (COP24) உடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
பருவநிலை மாற்றத்துக்கு காரணமாக இருக்கும் வரலாற்று குற்றவாளிகள், உமிழ்வதை குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வளரும் நாடுகளின் கோரிக்கையை இந்தியா எப்பொழுதும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு சிஓபி -15 மாநாட்டில், வெப்பநிலையை கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (இது டெல்லியின் ஜி.டி.பி.க்கு சமம்) வீதம் 2020 ஆம் ஆண்டு வரை வளரும் நாடுகளுக்கு வழங்க, வளர்ந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் உடன்படிக்கை, இத்தொகையை மதிப்பாய்வு செய்து 2025 ஆம் ஆண்டு வரை அளவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
பாரிஸ் உடன்படிக்கையை -- அதாவது காலநிலை மாற்ற இலக்குகளை கண்காணித்தல், அறிக்கை செய்தல் மற்றும் சரிபார்ப்புக்கான நடைமுறைகள், வழிமுறைகள் மற்றும் நிறுவன வழிமுறைகளை -- நடைமுறைப்படுத்துவதற்கு உலகத் தலைவர்கள் ஒரு "ஆட்சேபனை" எழுந்த நிலையில், காலநிலை நிதி மற்றும் நிதியியல் கணக்கியல் முன் மற்றும் விவாத மையம் இருக்க வேண்டும், அந்த அறிக்கை கூறுகிறது.
செயல்பாட்டை சிறப்பாக செய்யாத வளர்ந்த நாடுகள்
2017 வரை, வளர்ந்த நாடுகள் தங்களின் நிதி கடமைகளில் 12% மட்டுமே செய்ததாக, இந்திய நிதிஅமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகள் தங்களின் நிதி பங்களிப்பை 41 பில்லியன் டாலர் (உத்தரகாண்டின் ஜி.டி.பி.க்கு சமம்) என்று உயர்த்திக் காட்ட, 2013-14 வரை முறையற்றா கணக்கு முறைகளை கையாண்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"இந்திய அரசின் 2015 விவாதக் கட்டுரை ஒன்று, உண்மையான பருவநிலை நாடுகளுக்கு நிதி செலவிடப்பட்ட அரசின் நம்பகமான எண்ணிக்கை என்பது, 2013-14 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் டாலர் தான்” என்று குறிப்பிட்டது. மீதமுள்ள பணம் இன்னமும் வழங்கப்படவோ அல்லது கடன் போல் நிதி உதவியாக தரப்படவில்லை.
செல்வந்த நாடுகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன என்று, உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான லாபநோக்கற்ற அமைப்பான ஆக்ஷன் எய்ட் ஹர்ஜித் சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "மோசமாது என்னவென்றால், வணிக கடன்களின் வடிவில் இந்த உறுதிப்பாட்டை அடைய முயற்சிக்கிறோம், வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் அநீதியான கடனாக வேலை செய்கிறோம், "என்றார் அவர்.
பருவநிலை சார்ந்த புதிய உதவி மட்டும் 16-21 பில்லியன் டாலர்கள் (2018 க்கு) இருக்கலாம் என்று, நிதிஅமைச்சக அறிக்கை கூறுகிறது. “வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி எனில், ஏற்கனவே குறிப்பட்டது போல் அது துல்லியமா இல்லாமல், பகுதியாக மட்டுமே இருக்க முடியும். பொது பருவ நிலை நிதியின் வருடாந்திர இருதரப்பு வரத்துகள், 10 பில்லியன் டாலர்களுக்கும், 15 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கும்” என்று அது மேலும் கூறுகிறது.
பருவநிலை நிதி கணக்கியலில் அதிக அனுகூலத்தை யுஎன்எப்சிசிசி வழிகாட்டல் அனுமதிக்கின்றன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆக்ஷன் எய்ட் சிங் ஒப்புக் கொள்கிறார்: "அடுத்தது, சர்வதேச பருவநிலை நிதிகளின் கீழ் பெறப்பட்ட மொத்த தொகையை அளவிட இயலாது; பல்வேறு நாடுகள் மற்றும் ஏஜென்சிகள் தங்கள் சொந்த வரையறைகளை கொண்டிருப்பது மிகவும் சிக்கலாக உள்ளது. சிலர் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பருவநிலை திட்டங்களாக கருதுகின்றனர் ".
எனவே, கோடோவைஸ் மாநாட்டில் கணக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து பேச்சு நடத்தி, விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகள் கூறுகின்றன.
இருப்பினும் பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து ஏற்கனவே வெளியேறிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய யூனியன், பிற வளர்ந்த நாடுகளுக்கு பருவநிலை நிதி அளித்தல் அறிக்கையில் சிக்கல் இருப்பதாக, 2018 டிச.6ஆம் தேதி பிஸினஸ் ஸ்டேண்டர்ட் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
வளர்ந்த நாடுகள், தங்களது நிதி பங்களிப்பு, அது குறித்த தகவல்களை வழங்கும் ஒரு தேதியை வெளிப்படையாக அறிவிக்க மாட்டோம் என்று கூறுகின்றன. நிதி போதுமானதா என்று பார்க்கவோ, மதிப்பிடுவதற்கான தேதியை முடிவு செய்யக்கூட அவை மறுத்துவிட்டன. தங்களது நிதி ஆதரவை மதிப்பீடு செய்ய தேவைப்படும் எந்தவொரு யோசனையும் அந்நாடுகள் ரத்து செய்தன.
மாறாக, ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் என்ற முழுமையான நிதி ஆதரவு போதுமானதல்ல என்று நிதி அமைச்சக அறிக்கை கூறுகிறது. "$ 100 பில்லியன் என்பது, வளரும் நாடுகளுக்கு மதிப்பீடு செய்யப்படும் உண்மையான தேவைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியது. ஐ.நா.பருவநிலை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட பருவநிலை திட்ட அறிக்கையில் குறிப்பிட்டவாறு, வளரும் நாடுகளின் அனைத்து தேவைகளை சுமார் $ 4.4 டிரில்லியன் - உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% சேர்த்துக் கொள்வதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உண்மையான நடவடிக்கைக்கு உண்மையான பணம் இல்லாமல், உலகில் அவசர மாற்றம் எதையும் அடைய முடியாது" என்றார் சிங்.
விஷயங்கள் எங்கே: வெப்பமயமாக்கல், இந்தியாவின் இலக்குகள், மற்றும் முந்திய முனைப்பு
தொழிற்சாலைகளுக்கு முந்தைய காலத்தில் (1800 களுக்கு முன்பு) புவி வெப்பமயமாதல் 1டிகிரி செல்சியஸ் என்றிருந்தது, 70-90% பவள திட்டுகள் நசுக்கப்பட்டத்தில் இருந்து அதிகமான விளைவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, வெப்ப நாட்கள் அதிகரித்தல், கடல் மட்டங்கள் உயருதலுக்கு காரணமாகிறது. வறட்சி அதிகரிப்பதோடு, காட்டுத்தீ, சூறாவளி உண்டாகுதல் போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன.
வெப்பம் அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்ட, உலகம் அதன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை 2030 க்குள் (2010 அளவுகள் தொடர்பானது) பாதியாக குறைக்க வேண்டும். ஆனால், உலகின் 58% மாசு உமிழ்வுக்க் காரணமான நான்கு பெரிய நாடுகள் - சீனா (27%), ஐக்கிய அமெரிக்கா (15%), ஐரோப்பிய யூனியன் (10%) மற்றும் இந்தியா (7%) - இணைந்து 2018- அதிகபட்ச கரியமில வாயு வெளியேற்றியுள்ளன; இது, 2017-ல் 2.7 சதவீதம் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் 6.3% உமிழ்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; 2017 ல் 2% என்பதைவிட நான்கு சதவிகித புள்ளிகள் ஆகும்.
2016 ஆம் ஆண்டுடனால 16 ஆண்டுகளில் இந்தியாவின் கரியமில வாயு (CO2) வெளியேற்றம் ஆண்டுக்கு 6% வளர்ச்சியுற்றது; இது, சீனாவின் 3.2% மற்றும் உலக சராசரியான 1.3% என்பதைவிட அதிகம். தென் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் இணைந்து வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவைவிட இந்தியா அதிகமாக வெளியேற்றுவதாக, தி எகனாமிஸ்ட் பத்திரிகை 2018 டிசம்பர் 6 இதழில் செய்தி வெளியிட்டது.
அதே நேரம், இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான 2,726 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. அவை தீவிரமான வானிலை மாற்றம் அதாவது --தீவிர அனல்காற்று, புயல்கள், எதிர்பாராத வெள்ளம் மற்றும் கடும்வறட்சி -- என நேரடியாக தொடர்புடையவை. இதன் விளைவாக இந்தியா 13.8 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை சந்தித்தது என, 2018 டிசம்பர் 4-இல் வெளியிடப்பட்ட குளோபல் கால்டிவ் ரிஸ்க் இன்டெக்ஸ் 2019 அறிக்கை தெரிவிக்கிறது. பாதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், 2017 மரியா புயால் அழிவை சந்தித்த, கரிபியன் தீவு நாடான போர்டொ ரிக்கோ முதலிடத்தில் உள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பொருளாதார அர்த்தத்தை தருகிறது; இந்தியா, வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ் என்பதை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் கட்டுப்படுத்தினால் கூட, 8.4 டிரில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும், இது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
நிறுவப்பட்ட மின்சக்தி திறனில் 40% மாசு உமிழா பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் என்று, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா உறுதியளித்தது. மேலும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளியேற்றத்திற்கு 2030 ஆம் ஆண்டளவில் 33-35% (2005 ஆம் ஆண்டு முதல்) குறைக்கும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதாகும். இவ்விரு குறிக்கோள்களும் ஏறத்தாழ அடையப்பட்டுள்ளதாக, ஐ.இ.இ.எப்.ஆ. தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சர்வதேச பங்களிப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; பத்தாண்டுக்கு முன்பே இலக்கை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் தொடர்பான நாட்டின் மூன்று முக்கிய இலக்குகளில் இரண்டு -- (புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிகரிக்கும் பங்கு; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த உமிழ்வு தீவிரம் -- என்பது 2030ம் ஆண்டு என்ற காலக்கெடுவுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே எட்டும் என, அமெரிக்காவை சேர்ந்த எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) 2018, டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கணித்துள்ளது.
மூன்றாவது முக்கிய இலக்கான - கூடுதலாக 2.5-3 பில்லியன் டன் கார்பன் மூழ்கிகளை உருவாக்குதல் [கூடுதல் காடுகள் மற்றும் மரங்களை நடுவது மூலம் கரியமில வாயு சேகரித்து வைக்கும் நீர்த்தேக்கங்கள்] என்பது மட்டும் இந்தியாவுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது.
இந்தியாவின் வனப்பகுதி 2017 ஆண்டுடனான இரண்டு ஆண்டுகளில் 1% உயர்ந்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகக்கூட இருக்கலாம்; அழிந்த காடுகள், தோட்டங்களை உள்ளடக்கியிருக்கலாம் என, 2018 ஜூலை 4-ல் பேக்ட் செக்கர் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தியா தனது இலக்கை எட்ட வேகத்தை இரட்டிப்பாக்க வேண்டும்; ஆனால், அதுமட்டுமே போதாது. இந்தியாவின் தற்போதைய இலக்குகள் போதிய லட்சியத்துடன் இல்லை; புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஷுக்கு குறைப்பதற்கு இணக்கமாக இல்லை என்று, அறிவியல் குழுவான க்ளைமெட் ஆக்ஷன் ட்ராக்கர் தெரிவித்துள்ளது.
(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.