மும்பை: உலகில் கரியமில வாயு வெளியேற்றும் முதல் 10 நாடுகளில், சரியான நடவடிக்கைகளால் தெளிவான முன்னேற்றம் கண்டுள்ளவை இந்தியாவும், கனடாவும் தான் என்று புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவின் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் போதாது; இது விவசாய நெருக்கடிகளை அதிகமாக்குவதோடு, அதன் வருமானத்திலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.

அனைத்து நாடுகளும் 2015 பாரீஸ் உடன்படிக்கையின்படி 1.5° செல்சியஸ் வெப்பநிலையை குறைக்க முயன்றாலும், 2100 ஆம் ஆண்டில் புவியின் வெப்பம் 3° செல்ஷியஸ் அதிகரிக்கும் என்று, கிளைமெட் ஆக்‌ஷன் டிராகர் (CAT) அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இது, 32 நாடுகளின் காலநிலை மாற்ற கொள்கைகளை ஆய்வு செய்யும் மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.

சமீபத்தில் முடிந்த பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் 24 வது மாநாடு - சி.ஓ.பி.24 (COP24) முன்னிட்டு, 2018 டிச. 11-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 196 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் போலந்தின் கோடோவைஸ் நகரில் கூடி, 2015 பாரீஸ் உடன்படிக்கையை நிறைவேற்றும் வழிமுறைகளை வகுத்து கையெழுத்திட்டனர். இரண்டு வாரங்கள் நடந்த விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின் கோடோவைஸ் பருவநிலை தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது.

”கோடோவைஸ் பருவநிலை தொகுப்பை உள்ளடக்கிய வழிமுறைகள் 2020 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் செயல்படுத்தும் அடிப்படையை வழங்கும்” என்று, பொருளாதார நிபுணரும், சி.ஓ.பி.24 தலைவருமான மைகேல் குர்ட்கா தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே நிலவும் பேரழிவுகள், வறட்சி மற்றும் கடும் வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றத்தால் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த தொகுப்பில் கூறப்பட்ட நிலையில் உலகளாவிய கார்பன் உமிழ்வுகளை குறைக்க, இந்த தொகுப்பில் உறுதியான எந்த குறிக்கோளும் இல்லை.

"வளரும் நாடுகள் அவசரமாக ஏற்றாக வேண்டிய தேவைகள், இரண்டாம் வர்க்க நிலைக்கு தள்ளியுள்ளது" என்று கூறிய எகிப்து தூதரும் மற்றும் ஜி77 பிளஸ் தலைவருமான வெயல் அபுல்மாக், வளரும் நாடுகளை உள்ளடக்கிய சீனா பேச்சுவார்த்தை கூட்டணி கருத்து தெரிவித்தன.

வெப்பநிலை வரம்பை 1.5 ° செல்சியஸ் குறைக்க அதிக நோக்கம் தேவை என்பதை தெளிவாகக் கூறாமல், காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழு (ஐ.பி.சி.சி.) சிறப்பு அறிக்கையை எவ்வாறு அங்கீகரிக்கிறது என்பதில் நாடுகள் மோதிக் கொண்டதாக, பருவநிலை விஞ்ஞானம் மற்றும் பருவநிலை ஆற்றல் கொள்கையை உள்ளடக்கிய இங்கிலாந்து வலைத்தளமான கார்பன் பிரீப், 2018 டிச. 16 அறிக்கை தெரிவித்திருந்தது. சுகாதாரம், வாழ்வாதாரங்கள், உணவு பாதுகாப்பு, தண்ணீர் வழங்கல், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பருவநிலை தொடர்பான ஆபத்துகள், 1.5° செல்சியஸ் வெப்பநிலை மேலும் 2° செல்சியஸ் ஆகும் போது அதிகரிக்கும் என்று, ஐ.பி.சி.சி. சிறப்பு அறிக்கை 2018 அக். 8 வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாடுகள் எடுத்த முயற்சிகள்

Source: Climate Action Tracker

நாடுகளின் வெப்பமயமாதல் உயர்ந்து வருவதால் அவற்றின் கொள்கைகள் சிஏடி மதிப்பிடும். இந்த ஆய்வில் 32 நாடுகள் 1.5° செல்சியஸ் கீழ் புவி வெப்ப மயமாதலை குறைக்க கொள்கைகள் எதுவுமில்லை. மொராக்கோ மற்றும் காம்பியா நாடுகள் பாரீஸ் உடன்படிக்கை இலக்கான 1.5° டிகிரி வெப்பநிலையை உயர்த்தும் பணியை செய்தன.

மேலும், 2017 ஆம் ஆண்டில் உலக கார்பான் வெளியேற்ற அளவு, மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து, பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் புதிய உச்சத்தை எட்டியதாக, உமிழ்வு இடைவெளி அறிக்கையை சுட்டிக்காட்டி, 2018 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP)- 2018 அறிக்கை தெரிவிக்கிறது. இந்த போக்கு தலைகீழாக மாறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிக்கை குறிப்பிட்டது. பாரீஸ் உடன்பாட்டு இலக்குகளை எட்ட, நாடுகள் தங்களின் முயற்சிகளை மும்மடங்கு முடுக்க வேண்டும் என்று, அது மேலும் தெரிவித்தது.

கார்பன் வெளியேற்றத்தின் வேகம் குறைக்கப்படாவிட்டால், அடுத்த 10 - 12 ஆண்டுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்று டெல்லியை சேர்ந்த கிளைமெட் டிரண்ட்ஸ் ஆய்வு நிறுவனம், தனது 2018 நவம்பர் அறிக்கையில் கணித்துள்ளது. புவி வெப்பமடைதலால் கடும் வெள்ளம், பெரும் வறட்சி, அனல்காற்று மற்றும் சூறாவளி போன்ற நிகழ்வுகள் அதிகரித்து ஏழைகளை அது இன்னும் மோசமாக பாதிக்கும்; அவர்களை மேலும் வறுமைக்குள் தள்ளும் என்று 2018 நவ. 30-ல் டெல்லியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலால் மிகவும் பாதிக்கப்படும் ஏழைகள்

இயற்கை ஆபத்து வாய்ப்புள்ள பகுதிகளில் அதிகம் வசிக்கும் வருவாய் குறைந்த ஏழை மக்களுக்கு, அதிக வருவாய் உடைய பிரிவினரை விட உயிரிக்கு ஆபட்தான சூழல் ஏழு மடங்கு அதிகம்; காயம் அல்லது இடம் பெயரும் வாய்ப்பு ஆறு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்று, கிளைமெட் டிரெண்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

அதிக வருமானம் உள்ள பகுதிகளில் பேரிடர் காலங்களில் முழு பொருளாதார இழப்புகள் அதிகமாக இருந்தாலும், ஏழைகளும் தங்கள் சொத்துக்கள் மற்றும் வருவாயில் பெரிய பகுதியை இழந்துவிடுவதாக, “அதிர்ச்சி அலைகள் - ஏழ்மை மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நிர்வகித்தல்” என்ற தலைப்பில் 2016 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் தங்களது செல்வத்தை வீடு அல்லது கால்நடை போன்ற வடிவங்களில் வைத்திருக்கிறார்கள். அவை பேரிடர் ஆபத்தை குறைந்தளவே தாக்குபிடிக்கும் திறன் கொண்டவை. உதாரணத்திற்கு வெள்ளம் ஏற்பட்டால் வசதி உள்ளவர்கள் வீட்டை விட ஏழைகளின் குடிசை வீடுகளே முற்றிலுமாக அடித்து செல்லப்படுகின்றன.

இயற்கை பேரழிவுகள் ஏழ்மையானவர்களுக்கு நோய் பாதிப்பையும், வாழ்வாதார இழப்புகளையும் உண்டாக்குகிறது.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் பாதி பகுதிகள் மிதமாக, கடுமையாக பாதிக்க வாய்ப்பு

பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியா 14ம் இடத்தில் உள்ளது; வானிலை மாற்றத்தால் 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் 2,726 பேர் இறந்துள்ளனர். இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய மக்கள் தொகையில் 44.8% பேர் (60 கோடி பேர்) இன்று வசித்து வரும் பகுதிகள், 2050ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தால் மிதமானது முதல் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய இடங்களாகும் என்று “பாதிப்புக்கும் தெற்காசிய பகுதிகள்: பருவநிலை, வெப்ப நிலை மாற்றத்தால் வாழ்க்கைத்தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம்” என்ற தலைப்பில், 2018 ஜூலையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2050 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கக்கூடிய இரு நகரங்கள் சண்டிகர் மற்றும் மத்தியப்பிரதேசம்; இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் 9% குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியன அடுத்த இடங்களில் உள்ளன.

எதிர்காலத்தில் இந்தியா இரண்டு வேறுபட்ட போக்குகளை சந்திக்கும்: ஒன்று, அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, கடும் வெள்ளங்களுக்கு வழிவகுக்கும்; மற்றொன்று மத்திய இந்தியாவில் பருவ கால மழைப்பொழிவு குறைந்துவிடும் என்று, கிளைமெட் டிரண்ட்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய பருவம் தவறும் மழையால், 56% சாகுபடி செய்யப்படாத நிலங்கள் இந்தியாவில் உணவுப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.

கிராமப்புற விவசாயிகள் மோசமாக பாதிக்கப்படும் அபாயம்

வெப்பநிலை 1° செல்சியஸ் உயரும் போது, விவசாயிகளின் வருவாய் காரீப் (குளிர்காலம்) பருவத்தில் 6.2%, ரபி (பருவமழைக்காலம்) பருவத்தில் 6% குறையும் என்று, 2018 மார்ச் 22-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு இருந்தது. சராசரி மழை அளவில் ஒவ்வொரு 100 மி.மீ. குறையும் போதும் விவசாயிகள் வருவாய் காரீப் பருவத்தில் 15%, ரபி பருவத்தில் 7% வீழ்ச்சி அடைகிறது. இது இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விலை, ஏழைகளை மேலும் பாதிக்கும். இது மேலும், விவசாயத்துறையை சார்ந்திருக்கும் பாதிக்கும் மேலான இந்திய மக்களை கடுமையாக பாதிக்கும்.

பருவநிலை மாற்றங்கள். நகர்ப்புறங்களில் வாழும் மக்களை விட கிராமப்புறங்களில் வாழும் மக்களை அதிகமாக பாதிக்கும் என்று கிளைமெட் டிரண்ட்ஸ் தெரிவிக்கிறது. இது ஏனெனில், கிராமப்புற மக்கள் -- சந்தை, மூலதனம் மற்றும் காப்பீடு ஆகியவற்றை குறைந்தளவே அணுகுவதால்-- பேரிடரை சமாளிக்கவும், தங்களை மறுசீரமைக்கவும் குறைந்த வளங்களை கொண்டிருக்கின்றன.

வறுமையில் தள்ளப்படும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள்

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மோசமான வறுமையில் வாழும் மக்களுக்கு மட்டுமானது அல்ல. 2030ஆம் ஆண்டுக்குள், பருவநிலை மாற்றம் இல்லாத காட்சிகளுடன் ஒப்பிடும் போது, அடிமட்ட 40% மக்களின் வருமானம் குறையும் என்று, 2016 உலக வங்கி அறிக்கை மதிப்பிட்டுள்ளது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று, அது மேலும் கூறுகிறது.

செல்வத்திற்கான இடைவெளி அதிகரிப்பு, ஏழைகள் மீதான பருவநிலை தாக்கம் போன்றவை துரிதமான வளர்ச்சி கொண்ட நாடுகளில் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

உலக வங்கியின் 2016 அதிர்ச்சி அலைகள் அறிக்கை, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலகின் தற்போதைய தேர்வுகளின் விளைவுகளை புரிந்து கொள்ள இரு சூழல்களைக் கருதுகிறது - 'செழிப்பு சூழ்நிலை' மற்றும் 'வறுமை சூழ்நிலை'- என்பதாகும். 2030 ஆம் ஆண்டில் உலகில் மிக அதிகமான வறுமை 3% க்கும் குறைவாக குறைக்கப்படும் என்று செழிப்புக் கோட்பாடு கருதுகிறது. வறுமை சூழ்நிலை மக்கள் தொகையில் 11% மிகவும் வறுமையில் தொடர்ந்து இருப்பதாக கருதுகிறது. வறுமை மீதான பருவநிலை மாற்ற விளைவுகள், வறுமையின் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது செழிப்பு சூழ்நிலையை கணிசமாக குறைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழ்மை மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

குறிப்பு: அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் தீவிர ஏழைகளின் எண்ணிக்கை (மொத்த மக்கள் தொகையில் %).

பருவநிலை மாற்றத்தின் நீண்டகால அச்சுறுத்தலை குறைக்க, அரசுகள் ஏழைகளுக்கு ஆதரவு அனைத்து வளர்ச்சிக் கொள்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும் என்று, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் இலக்குகளை கொண்ட நடவடிக்கைகள், வறுமையில் இருப்பவர்களை, பருவநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க செய்வது, செல்வ இடைவெளியை குறைக்க உதவும்.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் தரவு ஆய்வாளர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.