மும்பை: மத மற்றும் சமூக வழிகளில் செல்வதால் இந்தியாவின் பசு பாதுகாப்பு இயக்கம் விவசாயிகளை பாதிக்கிறது என, சர்வதேச அரசு சார்பற்ற அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) 2019, பிப்ரவரி 19 புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2014ல் பாரதிய ஜனதா அரசு (பா.ஜ.க.) மத்தியில் பொறுப்புக்கு வந்த பின், சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது. இது, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பை பாதித்துள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2010-11 முதல் 2017-18 வரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன.

2010 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் பசு தொடர்புடைய வன்முறையாக, 123 தாக்குதல்கள் நடந்துள்ளன - இதில் 98% மத்தியில் பிரதமர் மோடியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் நடந்தவை என, இத்தகைய குற்றச் செயல்களை கண்காணித்த பேக்ட்செக்கர்.இன் தரவுகள் தெரிவிக்கின்றன. வேறு சிலருடன் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இத்தரவுகள் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாழ்வாதாரம், அன்னிய செலாவணி கையிருப்பை பாதிக்கும் கண்காணிப்பு

பல இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுகின்றனர்; 99.38% இந்தியர்கள் தற்போது பசு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாழ்வதாக, 2017 ஏப்ரல் 14ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 2019 பிப்ரவரியில், பசு பாதுகாப்புக்காக ஒரு தேசிய ஆணையத்தை மத்திய அரசு அறிவித்தது.

"இந்த கொள்கைகள் மற்றும் கண்காணித்து தாக்குதல்களை நடத்துவது இந்தியாவின் கால்நடை வர்த்தகம், கிராமப்புற விவசாயம், அதேபோல் தோல் மற்றும் இறைச்சி ஏற்றுமதி தொழில்களையும் பொருளாதாரத்தையும் பால் துறைகளுடன் தொடர்புடையவற்றையும் பாதிக்கிறது” என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, மாட்டிறைச்சி ஏற்றுமதி ஆண்டு ஒன்றுக்கு 400 கோடி டாலர் அளவில் நடக்கிறது. ஆனால், 2014 முதல், இந்த ஏற்றுமதிகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன.

இந்திய மாட்டிறைச்சி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் கொள்கைகள், அத்துறை வணிகத்தின் எதிர்காலத்தை மேலும் நிச்சயமற்றதாக்கும் வகையில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

கடந்த 2014-15ல், இந்தியா 478 கோடி டாலர் மதிப்புள்ள எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்துள்ளது - இது 2010ல் இருந்து அதிகபட்சமாகும். எனினும் வளர்ச்சி, 2013-14ஆம் ஆண்டில் 35.93%ல் இருந்து 2014-15ஆம் ஆண்டில் 9.88% என, 26.05% குறைந்துள்ளது. அதன் பின்னர், ஏற்றுமதி அளவு 400 டாலரை கடந்து, 2016-17ல் 3.93% குறைந்து, பிறகு 2017-18ல் 3.06% என சற்று அதிகரித்துள்ளது.

Source: Human Rights Watch

அதேபோல், உலக தோல் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு, 13% ஆகும். தோல் தொழிலால் ஆண்டுக்கு 1200 கோடி டாலர் வருவாய் கிடைக்கிறது; இதில் 48% ( 570 கோடி டாலர்) ஏற்றுமதி மூலம் கிடைப்பதாகும். மேலும் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது; -அவர்களில் 30% பெண்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டில் ஆடை மற்றும் தோல் துறையில் உலக அளவில் உள்ள போட்டித்தன்மையை, அரசு அடையாளம் காட்டியது மற்றும் வளர்ச்சிக்கு வேலைகளை உருவாக்குவதே "மிகுந்த பொருத்தமானது" என்றது. அதே நேரம் "ஒரு பெரிய கால்நடை எண்ணிக்கையை கொண்டிருப்பினும், இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதில் வரம்பு நிர்ணயக்கப்பட்டதால் இந்தியாவின் கால்நடை தோல் ஏற்றுமதி சரிந்து வருவதாக, அரசு கணக்கெடுப்பு ஒப்புக்கொண்டது.

Source: Human Rights Watch

பசுவதையை கண்காணித்தல், நூற்றுக்கணக்கான வதைக்கூடங்களை மூடுதல் போன்றவை மாட்டிறைச்சி கிடைக்காமல் செய்கிறது என அறிக்கை கூறுகிறது.

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 18% க்கும் அதிகமாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 9%; 2015-16ஆம் ஆண்டில் 20% அதாவது -9.86% குறைந்துவிட்டது. இது மீண்டும் 2017-18ஆம் ஆண்டில் குறைந்த அளவாக 1.4% என்று வளர்ந்ததாக, அரசு தரவுகளின் பகுப்பாய்வு அறிக்கை கூறுகிறது.

"ஹிந்துத்துவா தலைவர்கள், தங்களின் சொந்த இந்து சமூகத்திற்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்; அவர்கள் தங்களது நாட்டிற்கு இழப்பை உண்டாக்குகிறார்கள்" என, ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த நூலாசிரியரும், கால்நடை வளர்ப்புதுறை நிபுணருமான எம்.எல். பரிஹர் தெரிவித்தார்.

சிறுபான்மையினரை இலக்காக வைத்து வன்முறை; ஆனால் பொருளாதார ரீதியாக பெரும்பான்மையின இந்துக்களையும் பாதிக்கிறது

அண்மை ஆண்டுகளில் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் சிறுபான்மையின மக்களை பாதிக்கக்கூடிய வகையில் கடும் சட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்தியதாக, அறிக்கை கூறுகிறது. தாக்குதல் குழுக்கள் பெரும்பாலும் பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளோடு தொடர்பு கொண்டவை; முஸ்லீம், தலித் அல்லது மலைவாழ் மக்கள் (பழங்குடி இனக்குழுக்கள்) சமூக பெரும்பாலும் இலக்காவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கால்நடை இறைச்சிகளிய அகற்றும் பொறுப்பு, தோல் விற்பனை மேற்கொள்ளும் தலித்கள், இறைச்சி விற்பனையை பாரம்பரியமாக மேற்கொள்ளும் முஸ்லீம்கள் ஆகியோர், பசு பாதுகாப்பு குழுக்களின் வன்முறைக்கு இலக்காகின்றனர் என்கிறது அந்த அறிக்கை

இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்படுவோரில் முஸ்லீம்கள் மற்றும் தலித் 56% மற்றும் 10% என்ற நிலையில் இந்துக்கள் 9% பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று பேக்ட்செக்கர்.இன் பகுப்பாய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இத்தகு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் முஸ்லீம்கள் 78% பேர் என்கிறது பேக்ட்செக்கர்.இன் காட்டுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் இல்லாதது கால்நடைகளோடு தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டுள்ள இந்துக்கள் உட்பட் பாதிக்கப்பட்டவர்களை புண்படச் செய்வதாக, அந்த அறிக்கை கூறுகிறது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கால்நடை போக்குவரத்து, இறைச்சி வணிகர்கள் மற்றும் தோல் தொழிலாளர்கள் அடங்குவர்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 55% பேர், விவசாயம், அது தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றர். இது, நாட்டின் மொத்த மதிப்பு பங்களிப்பில் 17% ஆகும். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளரான இந்தியாவில் 19 கோடி கால்நடைகளும், 10.8 கோடி எருமைகளும் உள்ளன. விவசாயிகள் தங்களது வருமானம் மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்ய கால்நடைகளை பராமரித்து வர்த்தகம் செய்கின்றனர்.

ஆனால், பசு தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதால், அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை வளாகங்களில் கால்நடை விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. உதாரணமாக, ராஜஸ்தான் மாநில அரசு ஆண்டுதோறும் 10 கால்நடை கண்காட்சிகளை நடத்துகிறது. 2010-11 ஆம் ஆண்டில், 56,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் எருதுகள், இந்த விழாக்களுக்கு கொண்டு வரப்பட்டு 31,000க்கும் மேற்பட்டவை விற்பனையாகின. ஆனால், 2016-17 ஆம் ஆண்டில், 11,000 கால்நடைகளே கொண்டு வரப்பட்டு அதில் 3000 க்கும் குறைவாக மட்டுமே விற்பனையானதாக, அறிக்கை கூறுகிறது.

வேளாண்துறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல் காரணமாக விவசாயிகள் பசுக்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; ஏனெனில் அவற்றை பராமரிக்க ஆகும் செலவுகளை அவர்களால் தாங்க முடியவில்லை என்று அறிக்கை கூறுகிறது. இது, கேட்பாரற்ற கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க செய்துகிறது; இது விளை பயிர்களை சேதப்படுத்துகிறது. பாதிப்பிய எதிர்கொள்வதற்கான மாநில அரசின் நடவடிக்கைகள், சுகாதார மற்றும் கல்வியை மேம்படுத்தும் சமரச முயற்சிகளாக இருப்பதாக, அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்தியா சர்வதேச மனித உரிமைகள் சட்ட ஒப்பந்தங்களை முக்கியமானதாக கருதுகிறது; இனம் அல்லது மத அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கிறது; சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்க அரசு தேவைப்படுவதாக, அறிக்கை தெரிவிக்கிறது.

"மத மற்றும் பிற சிறுபான்மையின மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிராக பாகுபாடு மற்றும் வன்முறைக்கு பொறுப்பானவர்களை முழுமையாக, நியாயமாக தண்டிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது" என்று கூறும் அறிக்கை “கால்நடை வளர்ப்புடன் பிணைந்துள்ள வாழ்வாதாரம் குறித்த கொள்கைகளை, குறிப்பாக கிராமப்புற சமூகங்களுக்கானதை அதிகாரிகள் மாற்ற வேண்டும்; மற்றும் ஜாதி அல்லது மத பாகுபாடு காரணமாக உரிமைகள் மறுக்கப்பட்டால், அதை தடுக்கும் கடமை தவறிய காவல்துறையினர், பிற அமைப்புகளை அதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும்” என்கிறது.

(சல்தானா, இந்தியா ஸ்பெண்ட் துணை ஆசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.