புதுடெல்லி: பழங்குடியினத்தவரின் நில உரிமைகளை முறையாக அங்கீகரிக்கும் வன உரிமைகள் சட்டத்தை (எப்.ஆர்.ஏ) மெதுவாக அமல்படுத்துவதவால் ஏற்பட்டுள்ள பழங்குடியினரின் அதிருப்தி, வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் 81 தொகுதிகளில் 62க்கும் மேற்பட்டவற்றில் (77%க்கும் மேல்) வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என்று, ஒரு சுயாதீன ஆய்வுக்குழுவின் பகுப்பாய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

வன உரிமைகள் சட்டத்தின் (எப்.ஆர்.ஏ) கீழ் நில உரிமைகளுக்கு தகுதியான பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த தேர்தலில் 62 இடங்களில் 94% (58 இடம்) என்ற வெற்றி வித்தியாசத்தை விட அதிகம் பெற்றது என்ற உண்மை அடிப்படையில் இந்த பகுப்பாய்வு நடந்தது. ஜார்கண்ட்டில் சக்ரதர்பூர், கும்லா, லதேஹர் மற்றும் சிம்டேகா ஆகிய பகுதிகளில் உள்ள தொகுதியில் கிட்டத்தட்ட 70% பேர் எஸ்சி / எஸ்டி மக்கள் ஆவர்.

இந்த 62 தொகுதிகளில், 2014 சட்டசபை தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், வன உரிமைகள் சட்டம் மற்றும் பழங்குடியினரின் நில உரிமைகளை பாதுகாக்கும் பிற சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதாக உறுதியளிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும், தற்போதைய பாரதிய ஜனதாவை (பாஜக) தோற்கடிக்க முடியும் என்று கருதுகின்றனர்.

கடந்த 2006இல் நடைமுறைக்கு வந்த வன உரிமைகள் சட்டம், ஜார்க்கண்டில் குறைந்தது 38 லட்சம் எஸ்சி / எஸ்டி வாக்காளர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது; இது, 2014 வாக்காளர் புள்ளி விவரங்களின்படி மொத்தம் உள்ள 73 லட்சம் வாக்காளர்களில் 52% ; எஸ்சி / எஸ்டி வாக்காளர்களில், 75% (29 லட்சம் பேர்) பட்டியலின பழங்குடியினத்தவர்கள் (இது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சொல்) என்பதை, Community Forest Resource-Learning and Advocacy (CFR-LA - சிஎஃப்ஆர்-லா) அமைப்பின் உறுப்பினர்களும், இந்த பகுப்பாய்வை நடத்திய ஆய்வாளர்களுமான துஷர் ஷா மற்றும் அர்ச்சனா சோரெங் கண்டறிந்தனர்.

ஜார்க்கண்டில் நவம்பர் 30 முதல் 2019 டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன; முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி அறிவிக்கப்படும்.

வன உரிமை சட்டத்தின் தாக்கம் உள்ள பகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில், குறைந்தது நான்கு சட்டசபை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. 2019 அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடந்த மகாராஷ்டிராவில் வன உரிமைகள் சட்டத்தின் தாக்கத்தால், பாஜக சுமார் 22% இடங்களை இழந்தது; இதனால், அரசு அமைப்பதற்கு பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதுபற்றி பின்னர் நாங்கள் விளக்குகிறோம்.

இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் 2018 சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு ஓரளவு வன உரிமைகள் சட்டம் காரணமாக இருந்துள்ளதாக, சிஎஃப்ஆர்-லாவின் சட்டசபை தேர்தல் பகுப்பாய்வு காட்டுகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, 1947 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தில் ஒரு சர்ச்சைக்குரிய திருத்தத்தை திரும்பப் பெற்றது; இது மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டது. அதன்படி வன அதிகாரிகள் துப்பாக்கி பயன்படுத்த, தற்காப்பு அதிகாரங்களை வழங்க இது முன்மொழியப்பட்டதாக, லைவ்மின்ட் 2019 நவம்பர் 16 செய்தி கூறியது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பழங்குடியினர், 2019 நவம்பர் 21இல், டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடி வன உரிமைகள் சட்டத்தின் பாதக அம்சங்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

வன உரிமை சட்ட அமலாக்கலில் பின்தங்கிய ஜார்கண்ட்

சமூக உரிமைகள் (மலைவாழ் மக்களுக்கு, அவர்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் இயற்கை வனத்தை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் உரிமை உண்டு) வன உரிமைகள் சட்டத்தின் மிக முக்கியமான ஏற்பாடுகளில் ஒன்றாகும். பழமைவாத மதிப்பீடுகளால் கூட, 19 லட்சம் ஹெக்டேர் காடுகளுக்கு (குவைத்தின் பரப்பளவை விட பெரியது) சமூக உரிமைகளை விநியோகிக்கும் திறன் ஜார்க்கண்டிற்கு உள்ளது என்று, வாஷிங்டனை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான, ரைட்ஸ் அண்ட் ரிசோர்ஸ் 2015 ஆய்வு தெரிவிக்கிறது.

அரசு தரவுகள்படி, ஏப்ரல் 2018 வரை ஜார்கண்ட் தனது சமூக உரிமைகோரல் திறனில் 2% க்கும் அதிகமானதை 40,380 ஹெக்டேருக்கு மேல் அங்கீகரித்துள்ளது. தனிநபர்கள் தாக்கல் செய்த உரிமை கோரல்களில் பாதிக்கும் மேலானதை மட்டுமே இது அங்கீகரித்துள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமைகோரல்களை தவறாக நிராகரித்ததாக அரசு ஒப்புக் கொண்டது. நிராகரிக்கப்பட்ட உரிமைகோரல்களை மறுஆய்வு செய்யவும், தவறாக நிராகரிக்கப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவும், வரும் 2020 ஜூலை வரை அவகாசம் கேட்டது.

இத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான உரிமைகோரல்கள், வன உரிமைகள் சட்டத்தை செயல்படுத்தும் பட்டியலில் ஜார்க்கண்டிற்கு மோசமான இடத்தை தந்துள்ளது. இது, லாப நோக்கற்ற அமைப்பான ஆக்ஸ்பாமின் 2018 அறிக்கையில் “பின்தங்கிய நிலை” என்ற குறிக்கப்பட்டுள்ளது. "தனது மக்கள்தொகையில் 26% மலைவாழ் மக்கள், 31% கிராமப்புறங்களில் வசிப்பவர்களை கொண்ட மாநிலத்தில் இத்தகைய போக்கு கவலைக்குரியது" என்று அறிக்கை கூறியுள்ளது.

வன உரிமைகள் சட்டம் என்பது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு நிதி வலுவூட்டலுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். ஜார்க்கண்டில், ஒவ்வொரு இரண்டாவது நபரும் (49%) பட்டியலின பழங்குடியினர்; ஒவ்வொரு ஐந்து பேரில் இருவர் (40%) பட்டியலினத்தவர் (எஸ்.சி.) சாதியினர்; இவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் என்று நிதி ஆயோக் 2017 அறிக்கை கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜார்க்கண்டில் 39.1% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் - இது தேசிய சராசரியான 29.8% ஐ விட அதிகம்.

FRA Implementation In Jharkhand, As Of April 2018
Types of Forest Rights Gram Sabha Claims Received Approved Rejected Approved Forest Area (hectares) Claims Disposed off (% of Claims Received)
Individual Rights 105363 58053 NA 41649.4 NA
Community Forest Rights 3667 2090 NA 40380.34 NA
Total Jharkhand 109030 60143 29521 82029.77 89664 (82.24%)

Source: Ministry of Tribal Affairs, India

வாக்களிக்கும் முறைகள்

தேர்தல் முடிவுகளில் வன உரிமைகள் சட்டம் செலுத்தப்போகும் ஆதிக்கம், அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அடிப்படையில் தொகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் மூன்று ‘மதிப்பு’ பிரிவுகளாகப் பிரித்தனர்: சிக்கலானது, உயர் மற்றும் நல்லது. ‘சிக்கலான’ இடங்களில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வன உரிமைகள் சட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர்; அப்பகுதி, மக்கள் தொகையில் அதிகம் பேர் பழங்குடியினர் மற்றும் ஒரு பெரிய பகுதி வனத்தின் கீழ் வருகிறது. ‘நல்லது’ என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த பழங்குடியின மக்கள், வனப்பகுதிகள் கொண்டவை.

How Important Was FRA In The 2014 Jharkhand Assembly Elections?
Value of FRA as an electoral factor Seats BJP JMM Others
Won 2nd Won 2nd Won 2nd
Critical Value 10 555 4 1 2 4 4
High Value 26 99 2 11 0 6 4
Good Value 26 1212 2 7 2 7 3

Source: Independent analysis by Tushar Shah and Archana Soreng, FRA researchers

கடந்த 2014 சட்டசபை தேர்தலில், ஆளும் பாஜக முக்கியமான 62 இடங்களில் 42% இடங்களை வென்றது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) சுமார் 30% இடங்களை வென்றது. 2001இல் மாநிலம் அமைக்கப்பட்டதில் இருந்து ஒருபோதும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெறாத காங்கிரஸ், சுமார் 5% இடங்களை மட்டுமே வென்றது; மீதமுள்ள 23% பேர் ‘பிற’ கட்சிகளின் வேட்பாளர்கள்.

ஜே.எம்.எம் மற்றும் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் 62 இடங்களில் 37% இடங்களைப் பிடித்தனர். வன உரிமைகள் சட்டம் அமல்படுத்துவதை அவர்கள் தேர்தல் பிரச்சினையாக வலியுறுத்தியிருந்தால், அதிக இடங்களில் வெற்றியை உறுதி செய்திருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தல்களில் வன உரிமைகள் சட்டத்தை வலியுறுத்தத் தவறினால், அது 2014 ஆம் ஆண்டை விட குறைவான இடங்களை வெல்லக்கூடும்.

வன உரிமைச்சட்டம் மற்றும் வாக்களிக்கும் முடிவு

கடந்த முறை வன உரிமைச்சட்ட விவகாரத்தால் குறைந்தது நான்கு சட்டசபை இடங்களை பாஜக இழந்துள்ளது. மகாராஷ்டிரா அண்மையில் அந்த கட்சி சிக்கலான, உயர் மற்றும் நல்ல மதிப்புள்ள வன உரிமைகள் சார்ந்த பகுதிகளில் 22% இடங்களை இழந்ததை, அக்டோபர் 2019 இல் நடந்த மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில் தெரிகிறது. 2014 இல், பாஜக ஏழு சிக்கலான இடங்களில் மூன்று இடங்களை வென்றது. 2019 இல், அந்த மூன்றையும் அது இழந்தது.

வன உரிமைச்சட்டம், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டசபை இடங்களில் குறைந்தது 70% முடிவுகளை மாற்ற முடியும் என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 அக்டோபர் 18 கட்டுரை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 2018 சட்டசபை தேர்தலில் பாஜகவின் தோல்வியில், வன உரிமை சட்ட விவகாரமும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

சத்தீஸ்கரில் 2018 சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. இதன் மூலம் 2013 தேர்தலை விட எஸ்சி /எஸ்.டி.களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த 39 இடங்களில் 68% அதிக இடங்களை அது வென்றது. சி.எஃப்.ஆர்-லா பகுப்பாய்வின்படி, கடந்த தேர்தலில் பாஜக வென்ற 75% இடங்களை இழந்தது.

சத்தீஸ்கரை விட காங்கிரஸ் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், நில உரிமை பிரச்சினையை அக்கட்சி தீவிரமாக முன்வைக்கவில்லை என்று பகுப்பாய்வு கூறுகிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.