மும்பை: கடந்த 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் இந்தியா கூடுதலாக 40 மில்லியன் வெப்பமய நிகழ்வுகளை சந்தித்துள்ளது. இது, எதிர்மறை சுகாதார தாக்கங்கள், "ஆபத்தான விளைவு" ஏற்படுத்துமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு வெப்பமய நிகழ்வு என்பது, அனல்காற்றின் தாக்கத்தால் ஒரு நபர் சந்தித்த ஒரு அனுபவத்தை குறிப்பதாகும்.

இந்தியாவில் அனல் காற்றின் தாக்கம், நிகழ்வுகளின் அதிர்வெண், தீவிரம் போன்றவை கடந்த அரை நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. மற்றும் நாட்டின் "பலவீனமான சுகாதார அமைப்புகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்புகளால் பருவநிலை மாற்றத்தால் நாடு மோசமாக பாதிக்கப்படும்” என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லான்சட் கவுண்டவுன் என்று அழைக்கப்படும் ஒரு ஆய்வின் கண்டுபிடிப்புகள் இவை: உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய முன்னேற்றம் கண்காணிப்பு - இது 27 கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு இடையே உலகளாவிய, பல்வகைப்பட்ட ஆய்வுக்கான ஒத்துழைப்பு. இது, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (PHFI) மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் மையம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

நிதியியல், பொருளாதாரம், பொது மற்றும் அரசியல் ஈடுபாடு, குறைப்பு நடவடிக்கைகள், பாதிப்பு உள்ளிட்ட பல துறைகளின் ற்றில் புள்ளி விவரங்கள் பயன்படுத்தி, லான்சட் கவுண்ட் டவுன் ஆய்வுக்கு 41 குறிகாட்டிகளை கண்காணிக்கப்பட்டுள்ளன. இது காலநிலை மாற்றத்திதால் மனித பாதிப்புகளை ஆவணப்படுத்துகிறது; பொது சுகாதார பரிந்துரைகளை வழங்குகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல், உலகின் ஒவ்வொரு பகுதியும் தீவிர வெப்பம் அதிகரிப்பால் சீர்குலைந்து வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017 ஆம் ஆண்டில், 157 மில்லியன் மக்கள் உலகளாவிய வெப்ப நிகழ்வுகளுக்கு சராசரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். "அதே ஆண்டில் கூடுதலாக 1.4 நாட்கள் வெப்பக்காற்றை அனுபவித்து வந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரிப்பால் தொழிலாளர் உற்பத்தி திறன் குறைகிறது. நகர்ப்புற காற்று மாசுபாடு அதிகரிக்கும், சுகாதார அமைப்புகளின் சுமையை அதிகரித்து அவற்றை பலவீனப்படுத்தும். அதிக வெப்பத்தால் காலரா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவலான பகுதிகளிலும் பரவி வருகின்றன.

"காலநிலை மாற்றம் முந்தைய பத்தாண்டுகளின் பொது சுகாதார நலன்களுக்கு ஊறு விளைவித்து வந்துள்ளன; மற்றும் இந்த நூற்றாண்டின் பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும்" என, லான்சட் கவுண்டவுன்: சுகாதார மற்றும் காலநிலை மாற்ற கண்காணிப்பு முன்னேற்றம் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் நிக் வாட்ஸ் தெரிவித்தார்.

"கடந்த காலங்களில்சுகாதார தொழில் மற்றும் மருத்துவ தொழிலில் உள்ளவர்கள் புகையிலை, எச் ஐ வி மற்றும் போலியோ அபாயங்களை ஒருங்கிணைந்து போராடி எதிர் கொண்டிருக்கிறோம்” என்று கூறும் வாட்ஸ் "காலநிலை மாற்றத்தையும் அதோபோல் நாம் சந்திக்க வேண்டியது அவசியம்” என்றார்.

காலநிலை மாற்றத்தால் இந்தியா ஏற்கனவே குறிப்பிடத்தக்க "சமூக மற்றும் பொருளாதார செலவினங்களை" தாங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கூடுதல் டன் கார்பன் டை ஆக்சைடும் இந்தியாவிற்கான 86 அமெரிக்க டாலர் - அதாவது அமெரிக்கா ($48), சவுதி அரேபியா ($47) நாடுகளின் தொகையை விட இரு மடங்காக செலவிடுகிறது என, அறிவியல் இதழான நேச்சர் கிளைமேட் சேஞ்ச் இதழ், 2018-ல் கட்டுரை வெளியிட்டிருந்தது.

காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசுக்குழு (IPCC) உலக வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், நீர் வழங்கல் மற்றும் மனித பாதுகாப்பு ஆகியற்றுக்கு காலநிலை தொடர்பான ஆபத்துகள் மேலும் தீவிரமடையும் என, இந்தாண்டு எச்சரித்துள்ளதை, அக். 2018-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

எனவே, இந்தியா தனது கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசு அளவு குறைக்க வேண்டியது “மிக முக்கியமானது”. குறிப்பாக நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடுகளை குறைத்தாக வேண்டும்.

பல துறைகளில் "குறைந்த கார்பன் பரிமாற்றம்" தொடங்கியுள்ள நிலையில், கடந்த இருபது முதல் முப்பது ஆண்டு காலங்களில் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான செயல்பாடுகள் மந்தகதி, ஒட்டுமொத்தமாக மெதுவான முன்னேற்றம் ஆகியன, "மனித உயிர்கள் மற்றும் தேசிய சுகாதார அமைப்புகளின் நம்பகத்தன்மை அவற்றை சார்ந்து” அச்சுறுத்துவதாக, அறிக்கை எச்சரித்தது.

அனல் காற்று மற்றும் வெப்ப அழுத்தம்

கடந்த இருபது ஆண்டுகளில் வெயில் காலங்களில் அனல் காற்று "குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது", அதே போல் வெப்பக்காற்றால் நோய் பாதிப்புக்குள்ளான இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 2 நாட்களில் இருந்து 2016 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு ஒரு வெப்ப அலை சராசரியாக 150% அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசிய நாட்கள், 2012ஆம் ஆண்டு 2 நாட்கள் என்பது, 150% அதிகரித்து, 2016ஆம் ஆண்டு 5 நாட்களானது.

வெப்பக்காற்று சராசரி வீசும் போது கால அளவு மாற்றம்

Source: Lancet Countdown 2018 Report: Briefing for Indian Policymakers

நாடு முழுவதும் தீவிர வெப்ப நிகழ்வுகளால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டில் 20 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு, 200% மடங்கு அதிகரித்து 60 மில்லியன் ஆனது.

வெப்பநிலைக்கு வெளிப்பாடு மாற்றம் (மில்லியன்)

Source: Lancet Countdown 2018 Report: Briefing for Indian Policymakers

வெப்ப வெளிப்பாடானது பல நோய்களின் ஆபத்தையும், மன அழுத்தத்தையும் உண்டாக்கும் - சாதாரண உடலின் வரம்பைத்தாண்டி வெப்பநிலை அதிகரித்து, அதன் காரணமாக நோய்களுக்கு வழிவகுக்கும்.

மொத்த உடல் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியசுக்கு மேலே உயரும் போது, பல உறுப்புகள் செயல்படாமல் முடங்கி, வலிப்பை ஏற்படுத்தி, இறுதியில் இறப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வெப்ப நடவடிக்கை திட்டங்களை அமல்படுத்துதல், அத்துடன் செயல்திறன்மிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை வாயிலாக, பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக, அரசு வரிசைப்படுத்தி முக்கிய பதில் உத்திகளாக கையாளலாம் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வானிலை மைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் “சூடான மையப்பகுதிகளை” அடையாளம் காண வேண்டும். நெருக்கடிக்குள்ளாகும் பகுதிகளுக்கான தேவைகளை ஒதுக்க வேண்டும்.

தொழிலாளர் இழப்பு

கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியா, கடும் வெப்பத்தால் 75 பில்லியன் மணிநேர உழைப்பை இழந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை "தொடர்ந்து வேலையை கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ செய்யும்" மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை எதிர்மறையாக பாதிக்கிறது.

இது 2000 ஆம் ஆண்டிலிருந்து 30 பில்லியன் மணி நேரங்கள் அதிகரிப்பு ஆகும். 2017- ல் உலகம் முழுவதும் இழந்த மொத்த மணிநேர உழைப்புக்களில் 50% (153 பில்லியன் மணி நேரம்) குறிக்கிறது.

வெப்பநிலை அதிகரிப்பால், வேளாண் துறையில் 2017ஆம் ஆண்டு 60 பில்லியன் மணிநேரங்களை இழப்பு ஏற்பட்டது. இது, 2000ஆம் ஆண்டில் 40 பில்லியன் என்பதை விட, 50 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் தொழிலாளர் இழப்பு நேரங்கள், துறை வாரியாக

Source: Lancet Countdown 2018 Report: Briefing for Indian Policymakers

அதேபோல், தொழிற்துறை மற்றும் சேவைத்துறைகளிலும் 2000 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையே, உழைப்பு நேரம் குறைந்து கொண்டிருந்த போக்கு காணப்பட்டது. இவ்வகையான வேலை இழப்பு மற்றும் கடும் இயல்பின் குறைவான தன்மை, விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

தொழிலாளர் மற்றும் பொருளாதாரம் மீது கணிசமான "காலநிலை தொடர்பான தாக்கங்கள்" இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் -- ஏனெனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயத் துறை 18% பங்களிப்பை கொண்டிருக்கிறது.

அதேபோல், குறைவான மழை மற்றும் வெப்பநிலை மாற்றங்கலால் வாழ்க்கைத்தரங்களில் வீழ்ச்சி ஏற்பட்டு, விவசாயம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரை பாதிக்க கூடும்.

அதிகபட்ச வேலை நேரங்கள் மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகள் ஒழுங்குபடுத்தும் தொழில் சுகாதாரத்தரங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மீது அவசர மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

முதிர்வற்ற மரணங்களை அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு

புதைபடிவ எரிபொருட்களை இந்தியா சார்ந்திருப்பது, 2.5 பி.எம். -- நுண்ணிய நுண்ணுயிரி ஒரு மனித முடிவை விட 30 மடங்கு சிறந்தது. இது மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை தரும் என்று அறியப்படுகிறது -- அளவை தாண்டி அதிகபட்ச சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு பங்களிப்பு செய்கிறது; மேலும் இது முன்கூட்டியே இறப்புகளுக்கு இது வழிவகை செய்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1,07,000 இறப்புக்களுக்கு நிலக்கரி நோய்த்தாக்கம் மட்டுமே காரணமாகிறது- இதில் முக்கால்வாசி (73,000) மின்உற்பத்தி நிலையங்களில்; தொழில் துறையில் 24,000; வீட்டு உபயோகத்துக்கு நிலக்கரி நுகர்வு 10,000 பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் முன்கூட்டிய மரணங்கள், ஆதாரங்கள்

Source: Lancet Countdown 2018 Report: Briefing for Indian Policymakers

தரைவழி போக்குவரத்து, பி.எம். 2.5 தொடர்பான இறப்புக்களின் "கணிசமான எண்ணிக்கையிலான பொறுப்பு" வகிக்கிறது. இந்த இறப்பு ஆண்டுக்கு 12.5% ஆகும். இருப்பினும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் இந்த உமிழ்வுகளை கட்டுப்படுத்த இயலும்.

இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. இது 2018 மற்றும் 2050 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 416 மில்லியன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வகையில்லாத சிறு நகரங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். இந்நகரங்கள் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கார் பயனாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தி, வாகனத்தால் உண்டாகும் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

சிறிய இந்திய நகரங்களில் போக்குவரத்து பயன்பாட்டு வகைகள்

Source: Lancet Countdown 2018 Report: Briefing for Indian Policymakers

அகமதாபாத் மற்றும் புனே ஆகிய இரு நகரங்களும் "குறிப்பிடத்தக்க வளர்ச்சி வீதத்தில்", மோட்டார் வாகன போக்குவரத்து பயனாளர்களின் (வாகன பயனர்கள்) எண்ணிக்கை அதிக விகிதத்தில் உள்ளன. இவை முறையே 42% மற்றும் 48% என்ற அளவில் அனைத்து வகை போக்குவரத்து முறைகளும் உள்ளன.

இத்தகைய மாசுபாடு தொடர்பான பிரச்சினைகள், அவை தொடர்புடைய சுகாதார அபாயங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியன குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கிய வழியாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், உலகளாவிய காலநிலை மாற்றம், சுகாதார பிரச்சினைகள் குறித்த ஊடக செய்திகளின் பங்களிப்பு, 40% அதிகரித்துள்ளது, குறிப்பாக, தென் கிழக்கு ஆசியாவில் பெருகியுள்ளது. 2007 மற்றும் 2017க்கு இடையே டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள், காலநிலை மாற்றம் தொடர்பான செய்திகளை முறையே 458% மற்றும் 415% அதிகரித்துள்ளன.

பிராந்திய மற்றும் ஆங்கிலம் அல்லாத ஊடகங்களில் காலநிலை மாற்றம், சுகாதார பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுகள், செய்திகளுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்தால், “மாநிலம் மாநிலமான கொள்கை மறுமொழி” ஏற்பட்டு பேருதவியாக இருக்கும்.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.