கயா: 23 வயதாகும் சரோஜா தேவி, அதை பொருத்தியிருந்தால் மூன்று குழந்தைகளை பெற்றிருக்க மாட்டார். ஆனால் அவரிடம் கருத்தடை சாதனம் இல்லை. அவரது கணவர் கருத்தடை, அறுவை சிகிச்சை கருத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்; அவள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் அவர் பேச்சை மறுக்கத் துணியவில்லை.

சரோஜா தேவியின் இக்கட்டான நிலை, தெற்கு பீகாரில் உள்ள கயா மாவட்டம் முழுவதும் பல பெண்களால் பகிரப்பட்டுள்ளது. இந்தியா ஸ்பெண்ட் ஆய்வின்படி இந்தியாவில் அதிக கருவுறுதல் விகிதம் உள்ள மாநிலத்தில் குடும்பத் திட்டத்தின் தொடர் தோல்வி, பெண்ணுக்கு அதிக குழந்தைகள் இருப்பது குறித்து ஆய்வு செய்தது. 90%-க்கும் அதிகமான பெண்கள் தங்களின் கணவருடன் குடும்பக் கட்டுப்பாடு குறித்து விவாதித்தனர்; ஆனால் அவர்களில் 18% பேருக்கு மட்டுமே இறுதி முடிவு குறித்த கருத்து இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

சரோஜா தேவி வசிக்கும் பீகார் தெற்கு மாவட்டமான கயாவில், டிசம்பர் 2017 முதல், ஏப்ரல் 2018 வரை 900 பெண்களிடம் நடத்தப்பட்ட எங்கள் கணக்கெடுப்பில், திருமணமான பெண்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாடு தேவைப்படாதது 2017ஆம் ஆண்டில் 36.5% என்று இருந்தது. 2015-16இல் இந்தியாவின் சராசரி பூர்த்தி செய்யப்படாத தேவை - 12.9%. குடும்பக் கட்டுப்பாடுக்கான பீகாரின் ஒட்டுமொத்த பூர்த்தி செய்யப்படாத தேவை 21.2% ஆகும்; இது இந்தியாவில் மூன்றாவது அதிகபட்சமாகும்.

பீகார், இந்தியாவின் நாட்டின் மிக உயர்ந்த கருவுறுதல் விகிதமான 3.4 ஐ கொண்டிருக்கிறது. ஆனால் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களும் தாங்கள் விரும்பிய குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுமே கொண்டிருந்தால், இந்த விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளாக இருந்திருக்கும் என, 2015-16 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -(என்.எச்.எஃப்.எஸ் -4 (NHFS-4) தெரிவிக்கிறது.

பூர்த்தி செய்யப்படாத தேவை, ஒரு பெண்ணின் இனப்பெருக்க நோக்கங்களுக்கும் அவளது கருத்தடை நடத்தைக்கும் இடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகிறது. கருத்தடை அணுகல் இல்லாததால் இடைவெளி ஏற்படலாம்; ஆனால் இது கருத்தடை செய்வதைத் தடைசெய்யும் அல்லது குடும்பக் கட்டுப்பாடு குறித்து சுதந்திரமான முடிவுகளை எடுக்க பெண்களை அனுமதிக்காத கலாச்சார, சமூக மற்றும் மத நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும்.

இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பீகாரில், குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளின் தோல்வி குறித்த எங்கள் தொடரின் இரண்டாவது மற்றும் நிறைவுப்பகுதியான இதில், கருத்தடைக்கான பூர்த்தி செய்யப்படாத காரணங்கள், குடும்ப கட்டுப்பாடுகளை முடக்கும் காரணிகளை நாங்கள் கவனிக்கிறோம். முதல் பகுதியில், 15-49 வயதுடைய பாலியல் ஆர்வமுள்ள பெண்களில் 94% பேர், தற்போதுள்ள எட்டு கருத்தடை முறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை அறிந்திருந்தாலும், ஐந்தில் ஒருவர் (20.1%) மட்டுமே எதையும் பயன்படுத்துகிறார்கள் என்பதை முடிவு செய்தோம்.

கல்வி இல்லாத பெண்கள் மற்றும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பீகாரில் முறையே 40.1% மற்றும் 40.6% என்று - அதிகபட்சமாக பூர்த்தி செய்யப்படாத தேவைகளை கொண்டிருந்ததாக, என்.எச்.எப்.எஸ் -4 உண்மைத் தாள் கூறுகிறது. 35 முதல் 39 வயதிற்குட்பட்ட பாலியல் சுறுசுறுப்புள்ள அதிக தேவை இல்லாத பெண்கள் - 42.5% ஆகும். மொத்த பிறப்புகளில் சுமார் 12.5% பதின்வயது பெண்களிடையே நிகழ்ந்தது; இது இந்தியாவில் இப்பிரிவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையாகும்.

முடிவெடுப்பது பெரும்பாலும் ஒரு ஆண் உரிமையாகும்

பொதுவாக, அதிக அளவு சுதந்திரம் உள்ள பெண்கள் மத்தியில், குறைந்த குடும்ப எண்ணிக்கை மற்றும் விரும்பியவாறு கருவுறுதல் ஆகியவை காணப்படுகின்றன என்று இந்தியா ஸ்பெண்ட் ஏப்ரல் 2017 கட்டுரை தெரிவித்துள்ளது. அதிகமான தனிநபர் கட்டுப்பாடு கொண்ட பெண்கள் மத்தியில் அதிக கருத்தடை பாதிப்பு பதிவாகியுள்ளது மற்றும் அதிக முடிவெடுக்கும் அதிகாரங்கள் உள்ள பெண்கள் மத்தியில் குழந்தை இறப்பு விகிதங்கள் குறைவாக காணப்பட்டன.

கணக்கெடுக்கப்பட்ட திருமணமான பெண்களின் 4.8% பேரில், கணவன் மட்டும் நவீன கருத்தடை பயன்பாடு குறித்து முடிவுகளை எடுப்பதை நாங்கள் கண்டறிந்தோம்; 18% பெண்கள் தாங்கள் மட்டுமே தேர்வு செய்வதாகக் கூறினர். இந்த பெண்கள் கருத்தடை மாத்திரைக்கு விருப்பம் காட்டினர்.

கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (50.2%) 15-19 வயதிற்குட்பட்டவர்கள், முதல் கருத்தடை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குழந்தையைப் பெற்றனர். கல்வியின் அளவை பொருட்படுத்தாமல், அதிகபட்ச சதவீத பெண்கள் தங்கள் முதல் குழந்தையை பெற்ற பிறகே, முதல் கருத்தடையை பயன்படுத்தினர்.

மேலும், தேவையற்ற கர்ப்பத்தின் சில சந்தர்ப்பங்களில், பெண்கள் தேவையான பராமரிப்பு இல்லாமல் மோசமான சூழ்நிலையில் கருக்கலைப்பு செய்ய முனைகிறார்கள், இதன் விளைவாக அவர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

4 குழந்தை பெற்ற பெண்கள் மத்தியில் பூர்த்தி செய்யப்படாத தேவை

பீகாரில் மூன்று பெண்களில் ஒருவருக்கு திட்டமிடப்படாத குழந்தை உள்ளது என்று ஆசிய அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனம் 2018 ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. திருமணமான மூன்று பெண்களில் ஒருவருக்கு மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் கிடைத்தன. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் மார்ச் 2018 செய்தியின்படி, பீகாரில் கிட்டத்தட்ட 40 லட்சம் தம்பதிகளுக்கு கருத்தடை வழங்க மாநில சுகாதாரத் துறை தவறிவிட்டது.

மொத்த பூர்த்தி செய்யப்படாத தேவைகள், 9.6% இடைவெளி என்று, என்.எப்.எச்.எஸ்.4 தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஐக்கிய நாடுகளின் குடும்ப திட்டமிடல் தரவு பீகாரின் புள்ளிவிவரங்களை 41% ஆகக் கொண்டுள்ளது, இது அனைத்து இந்திய மாநிலங்களுக்கு இடையில் மிக உயர்ந்ததாகும்.

இந்தியா ஸ்பெண்ட் கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஐந்து படிக்காத பெண்களில் இருவர், குடும்பக் கட்டுப்பாடு தேவைப்படாதது என்று தெரிவித்தனர். கணக்கெடுப்பின் போது குழந்தை பெற்ற அல்லது குழந்தை இல்லாத திருமணமான பெண்களின் பூர்த்தி செய்யப்படாத தேவை அதிகபட்சமாக நான்கு (41%) என்றிருந்தது.

கயாவில் கிராமப்புற திருமணமான பெண்களில், 36.5% பேர் 2015-16 ஆம் ஆண்டில் குடும்பக் கட்டுப்பாடு தேவைப்படாததை வெளிப்படுத்தினர். இது 2012-13 ஆம் ஆண்டில் 31.9 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீத புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 11% ஆக இருந்து 2015-16 ஆம் ஆண்டில் 27.6% ஆக - இடைவெளியின் பூர்த்தி செய்யப்படாத தேவையில் 15% புள்ளிகள் அதிகரிப்பு இருந்தது.

கயாவில் 15-49 வயதுடைய திருமணமான பெண்களில், குடும்பக் கட்டுப்பாடுக்கான மொத்தத் தேவை 2017 இல் 36.5% ஆக இருந்தது, இது பத்து ஆண்டுகளில் 32.6% ஆக அதிகரித்து இருந்தது. நகர்ப்புறத்தை விட (29.1%) அதிகமான கிராமப்புற பெண்களுக்கு (37.9%) குடும்பக் கட்டுப்பாடு உதவி தேவைப்பட்டது, ஆனால் அது கிடைக்கவில்லை.

கருத்தடைக்கான அணுகல்

கயா முழுவதும் எங்கள் கணக்கெடுப்பில், விநியோக அடிப்படையிலான கருத்தடைகளைப் பயன்படுத்திய 75% பெண்கள், 2017 ஆம் ஆண்டில் நாளின் எல்லா நேரங்களிலும் அரசு குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் கிடைப்பதாக உணர்ந்ததைக் கண்டறிந்தோம். கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்திய பெண்களில், 51.5% பேர் அவற்றை பெற, 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே பயணம் செய்தனர்.

நவீன கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி கயாவில் உள்ள அனைத்து பெண்களும் - காப்பர் செப்பு குழாய், கருப்பையக சாதனம், கருத்தடை மாத்திரை மற்றும் பிற நவீன முறைகள் போன்ற கருத்தடை மருந்துகளுக்கு மருந்தகங்கள் முக்கிய ஆதாரமாக இருந்தன - 53.5% மருந்தகங்களில் அவற்றை வாங்க விரும்பினர்; 18.5% ஒரு சுகாதார மையத்திலிருந்து அவற்றை வாங்கியது. 10 கிராமப்புற பெண்களில் ஏழு பேர், ஒரு மருந்தகத்தில் நவீன கருத்தடைகளை வாங்கினர்; மற்றும் நகர்ப்புற பெண்கள் சுகாதார மையங்களுக்கு முன்னுரிமை (37%) காட்டினர்.

இதில், 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள், மருந்தகத்தில் இருந்து கருத்தடை வாங்குவதை விரும்பினர்; அதே நேரத்தில் 45 வயதிற்குட்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் மருத்துவமனையை தேர்வு செய்தனர்.

படிக்காத ஐந்து பெண்களில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் (62.5%) மருந்தகங்களைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் கல்வி நிலைகள் அதிகரித்ததால், விருப்பத்தேர்வுகள் மருத்துவமனைகள் அல்லது சுகாதார மையங்களுக்கு மாற்றப்பட்டன. மருந்தகங்களுக்கான விருப்பம் 49 வயது வரை தொடர்ந்தது, அதையும் தாண்டி பெண்கள் தங்கள் கருத்தடைகளை வாங்க மருத்துவமனைகளுக்கு வருவதையே விரும்புகிறார்கள்.

ஊசி மற்றும் கருத்தடை

பீகார் அரசு ஜூலை 2018 இல் அன்டாரா என்ற ஊசி போடக்கூடிய கருத்தடை ஒன்றை அறிமுகப்படுத்தியது, இது மூன்று மாதங்கள் வரை கர்ப்பத்தைத் தடுக்கக்கூடும். அரசு துண்டுப்பிரசுரத்தில் கருத்தடை மருந்தின் கடைசி டோஸுக்கு பின், 7-10 மாதங்களுக்கு பிறகு கர்ப்பம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இலவசமாக வழங்கலால், இது மாநிலத்தின் ஒவ்வொரு சுகாதார மையத்திற்கும் கிடைத்தது. ஆனால் இந்த கருத்தடை மருந்துகள் சர்ச்சைக்குரியவை - அவை ஆஸ்டியோபோரோசிஸ், மார்பக புற்றுநோய் மற்றும் கருவுறுதல் தாமதம் உள்ளிட்ட சுகாதார பிரச்சினைகளுடன் தொடர்புடையது என இந்தியா ஸ்பெண்ட் அக்டோபர் 2017 கட்டுரை தெரிவித்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில், கயாவில் 257 பெண்கள் அண்டாரா கருத்தடை மருந்தின் முதல் டோஸ் பெற்றனர்; 161 பேர் நான்காவது டோஸ் பெற்றனர் என்று, சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கருத்தடை செய்த 50% க்கும் மேற்பட்ட பெண்கள் இதை ஒரு அரசு மருத்துவமனை மூலம் செய்தனர்; 25% தனியார் வசதிகளை தேர்வு செய்தனர்.

கடந்த 2014இல் சத்தீஸ்கரில் 13 பெண்கள் சுகாதாரமற்ற நிலையில் கருத்தடை செய்யப்பட்டபோது இறந்ததை தொடர்ந்து, சுகாதாரமான கருத்தடைகளை நடத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2017-18 இல் கயாவில் பெண் கருத்தடை நிகழ்வுக்கு பிறகு, அங்கு எந்த மரணமும் ஏற்படவில்லை; ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்களில் 35 பேர் இருந்ததாக, சுகாதார வசதிகளுக்கான திட்டமிடல் நடைமுறையை ஆதரிக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் டிஜிட்டல் முன்முயற்சியில் பெறப்பட்ட சுகாதார முகாமைத்துவ தகவல் அமைப்பில் கிடைத்த சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கருத்தடை மூலத்தை அடைவது 30 நிமிடங்களுக்கும் குறைவானது

கயாவில் வினியோக அடிப்படையிலான கருத்தடைகளை பயன்படுத்தும் இரு பெண்களில் ஒருவர், தங்கள் கருத்தடை மூலத்தை அடைய 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே செல்ல வேண்டும் என்று கூறினார்; அதே நேரத்தில் 32% பேர் 30 முதல் 59 நிமிடங்கள் வரை எடுத்ததாகக் கூறினர். 3.3% பெண்கள் மட்டுமே தங்கள் கருத்தடை வினியோகஸ்தரை அடைய 2-3 மணி நேரம் பிடித்ததாகக் கூறினர்.

பீகாரின் மக்கள்தொகை நெருக்கடி குறித்த எங்களின் இரண்டு பகுதிகள் கொண்ட தொடரின் நிறைவு பகுதி இது. முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

(தாஸ், இந்திய சர்வதேச வளர்ச்சி மையத்தில் திட்ட கொள்கை மேலாளர்; லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் சமூகக் கொள்கையில் முதுகலை ஆராய்ச்சி பட்டமும், சசக்ஸ் பல்கலைக்கழக மேம்பாட்டு ஆய்வுகள் கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.