மும்பை: கர்ப்பிணி பெண் தொழிலாளிக்கு பிரசவ வலி என்று கறுப்பு நிற போனில் வந்த தகவலால் பரபரப்பான தாம்சரி ஒஸ்ரே, பிரசவ பணிக்கு செல்வதற்கு முன்பாக தனது வீட்டு வேலைகளை சீக்கிரம் முடிப்பதில் வேகம் காட்டினார்.

அவர், 29 வயதான ஆஷா (தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதார நலப்பணியாளர் என்ற அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) பணியாளரான தாம்சரி ஒஸ்ரேவின் கிராமம், இந்தியாவின் நிதித்தலைநகரான மும்பையில் இருந்து 95 கி.மீ.யில் உள்ள, தானே மாவட்டம் பால்கார் தெஹில் கிராமம்.

வீட்டில் இருந்து தொலைவில் உள்ள பணியிடத்தில் ஒஸ்ரே, நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் செலவிடுகிறார். ஆனால் வழியில் குழந்தை பிரசவம் என்றால், இது 24 மணி நேரமாகக்கூட உயரும். அத்துடன் வீட்டு வேலைகளாக தண்ணீர் பிடிப்பது, காலை உணவு, தூய்மைப்பணி மற்றும் நடவு மற்றும் அறுவடை பருவங்களில் விவசாய நிலத்தில் கைவேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.

பெரும்பாலும், வீட்டு வேலைகள், அரசு சுகாதார வேலை பொறுப்புகளை நிர்வகிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான சமநிலைப்படுத்தும் செயல்பாடு, அவரது உணர்வை இழந்துவிட செய்கிறது. “நாள் முடிவில் கூட இன்னும் வேலை இருப்பதான சோர்வே அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், நான் ஒரு பிரசவத்திற்கு உதவுமாறு அழைத்தால் அப்படியல்ல," என்று, இந்த மார்ச் பிற்பகலில் இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். "வீட்டு வேலைகளை முடிக்காமல் நான் அங்கிருந்து புறப்படுவது எனக்கு பிடிக்கவில்லை; அப்போது நிறைய பதற்றம் இருக்கிறது" என்றார்.

உலகளாவிய ரீதியில், ஒஸரை போன்ற இந்திய பெண்கள் எந்தவொரு நாட்டிலும் மிக அதிகப்படியான பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளை செய்வதில்லை - கஜகஸ்தானை தவிர; அது இந்தியாவை விட 94% குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (16,300 கோட் டாலர் VS இந்தியாவின் 2,60,000 கோடி டாலர்) ஒரு நாடு. இது, இந்தியா தனது சமூகநலனில் போதிய முதலீடு செய்யவில்லை; "அதன் பெண் மக்களை சுமை சுமக்க விட்டு விட்டது" என்பதை காட்டுகிறது” என, ஆக்ஸ்பாம் இந்தியாவின் ஆராய்ச்சி மேலாளரான தியா தத் தெரிவித்தார். இவர், எதிர்வரும் ஆக்ஸ்பாம் அறிக்கையில் ஊதியமற்ற பணி நலன் மற்றும் வீட்டு வேலைகள் குறித்து ‘Mind The Gap – The State of Employment in India’ என்ற கட்டுரையின் ஆசிரியர். 2019, மார்ச் 28இல் இந்த அறிக்கை வெளியாகிறது.

இது, எங்களது அறிக்கை மற்றும் ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பின் இரண்டாவது இந்தியா சமத்துவமின்மை அறிக்கை, ‘Mind The Gap – The State of Employment in India’ ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக பாலின வேறுபாடுகள், வாழ்க்கை மற்றும் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஐந்து கட்டுரை கொண்ட தொடரின் முதலாவது பகுதியாகும்.

ஊதியமற்ற உழைப்பு சுமையால் இந்தியாவில் பெண்களின் விகிதாச்சாரத்தை குறைக்கிறது. ஏனெனில் சமையல், வீட்டை சுத்தம் செய்தல், தண்ணீர் மற்றும் விறகுகளை எடுத்து வருதல் போன்ற பணிகளை மிகவும் பெரிதுபடுத்துகின்றன; இப்பொறுப்பை ஏற்க ஆண்கள் முன்வராத நிலையில், அது பெண்களின் சமத்துவமற்ற சமூக நிலையை ஊக்குவிப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பெண்கள் தற்போது வீட்டு வேலைகளுக்கு நாளொன்றுக்கு 352 நிமிடங்கள் வரை செலவழிக்கின்றனர்; இது ஆண்களை (52 நிமிடங்கள்) விட 577% அதிகம்; மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் சீன (தரவுகள் கிடைக்கப்பெற்ற மற்ற இரு பிரிக்ஸ் நாடுகள்) பெண்களை விட 40% கூடுதலாகும் என, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தரவுகள் கூறுகின்றன.

வெளியேற வழியில்லை

அதிகாலை 5 மணிக்கு, அதாவது கணவர், குழந்தைகள் எழுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே எழுந்துவிடும் ஒஸ்ரே, வழக்கமான தினசரி வீட்டு வேலைகளை தொடங்கிவிடுகிறார்; இதேபோல் தான், கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் பல பெண்கள், அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் போராடுகின்றனர்.

ஒவ்வொரு நாள் காலையில் கை பம்புக்கு சென்று கையால் அடித்து தண்ணீர் சேகரித்து வர ஒரு மணி நேரமாகிறது. இதேபோல் பணி முடித்து வந்ததும் மீண்டும் அதே வேலை; தினமும் இதற்கென மூன்று மணி நேரம் வரை செலவிட வேண்டியிருக்கிறது. இது அவருக்கு பிடிக்காத வேலை. "எனக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், நான் அதை செய்தாக வேண்டும்," என்று அவர் கூறினார். "குழந்தைகள் குளிக்க வேண்டும். தண்ணீர் பிடித்து தராமல் நான் செல்ல முடியாது" என்றார் அவர்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை பெய்யும் போது வறண்ட நிலப்பரப்பு ஒரு பசுமைக்கு திரும்புகிறது. அருகிலுள்ள நெல் வயல்களில் நடவு செய்யும் பணியில் தாம்சரி ஈடுபடுவார். இப்பணி சோர்வடையச் செய்யும் என்ற அவர் "என் இடுப்பு மற்றும் கால்கள் வலிக்கும்; தொடை முழுவதும் வலியாக இருக்கும் " என்றார். இதை பார்த்தால் கூடுதல் வருவாய் கிடைக்காது.

ஆஷா மையத்தில் அவரது பணிகள் தொடர்கின்றன; அங்கு வேலை முடிந்ததும் வயல்களில் அவருக்கான வேலை காத்திருக்கிறது. அவரது நாளொன்றின் பணி நேரம் நெகிழ்வு தன்மை கொண்டது; சூழலுக்கேற்ப நீட்டிக்கப்படுகிறது.

இந்தியப் பெண்களின் ஊதியம் பெறாத உழைப்பு, பொருளாதார செயற்பாடுகளில் நிலையான பங்கு வகிக்கிறது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% ஆகும். இருப்பினும் இதில் பெரும்பாலான பங்களிப்பு அங்கீகரிக்கப்படாதது அல்லது தவறாக அளவிடப்படுகிறது; இது " மறைந்திருக்கும் மானியங்களை பொருளாதார முறை பரிமாற்றத்திற்கு" அளிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் கடைசியாக 1998-99ஆம் ஆண்டில் 'நேர பயன்பாட்டு ஆய்வு' நடத்தப்பட்டது; அதன் பின் அத்தகைய ஆய்வு நடக்கவில்லை. பெண்களின் ஊதியம் பெறாத உழைப்பு பற்றி புரிந்து கொள்வதில், அதை சரிசெய்தல் முதல் படியாகும்; அதை சரி செய்ய வேண்டும் என, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் பொருளியல் பேராசிரியர் ஜெயதி கோஷ் தெரிவித்தார்.

"ஊதியமற்ற உழைப்பின் முழு புள்ளியையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், அதைக் குறைத்து அதை மறுபகிர்வு செய்ய வேண்டும்," என்று கோஷ் கூறினார். "ஆண்கள், பெண்கள் தங்கள் நேரத்தை எங்கு பணம் செலுத்தும் நடவடிக்கை மற்றும் செலுத்தப்படாத செயல்களில் செலவிடுவர் என்பதை, நேர பயன்பாடு ஆய்வு கூறும். இதுவரை அரசு அதை செய்ய விரும்பவில்லை, ஆனால் பொது மக்கள் அழுத்தம் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) ஆய்வு போதுமானதாக இல்லை; ஏனென்றால் சமையல், வீட்டு தூய்மைப்பணி மற்றும் பிற வீட்டு கடமைகள் போன்ற இரட்டை சுமைகளை, அது கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்ற கோஷ், "இது உங்கள் 'முக்கிய நடவடிக்கையை' தான் கேட்கிறது" என்றார்.

“நேர வறுமையில்’ பாதிக்கப்படும் ஏழ்மையாளர்கள்

ஏழைகளை எடுத்துக் கொண்டால், விளிம்பு நிலைபெண்களுக்கு வீட்டு பொறுப்புகளின் பெரும்பகுதியை சுமப்பதன் தாக்கம் இன்னும் கடுமையானவை என்று தத்தா கூறுகிறார். "நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை குடும்பங்களில் அவர்களது வீட்டு வேலைகளை செய்ய யாரையும் பணியமர்த்தல் என்ற கேள்வியே இல்லை; அவர்களில் பலர் தங்களது பணியை முடிக்க நாளொன்றுக்கு 17-19 மணிநேரம் விழித்திருக்கிறார்கள் " என்றார் அவர்.

அதிக வருமானம் உள்ள பெண்களை விட குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கே ஊதியம் பெறும் பணிக்கான வாய்ப்புகள் அதிகம்; ஏனெனில், அதிக வருவாய் பெறும் பெண்கள், வேலைவாய்ப்பின் சமூக அடையாளமாக இருக்க முடியாது என்கிறது அறிக்கை. வீட்டு வேலைகளுக்கு ஊதிய உறுதி அளித்தல் என்பது, வீட்டிலேயே உழைக்கும் உழைப்பால் ஏழை பெண்கள் 'நேர வறுமை'யால் பாதிக்கப்படலாம். இத்தகைய கடுமையான நேர அழுத்தத்தை அனுபவிக்கும் விதமாக இது புரிந்து கொள்ளப்படுகிறது - ஒரு நேரத்தை ஒதுக்குவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்கு சற்று சுதந்திரம் இருக்கிறது. நேரம் வறுமை அடிப்படையில் பெண்களின் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது; ஏனெனில் அது பெண்களது முகமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.

பணிச்சுமையானது, பெண்களுக்கு மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களின் திறமை அளவை உயர்த்தவும், சொந்த நலனுக்காக அவர்கள் ஈடுபடுத்துவதை தடுக்கிறது.

ஓய்வு நேரம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று, 45 வயது சுனந்தன் போயரிடம் கேட்டபோது புன்னகையுடன் சற்று தர்மசங்கடப்பட்டார். எனினும் சற்று நேரம் கழித்து, “நிச்சயம் நான் தூங்கச் செல்வேன்” என்றார்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பால்கர் தெஹ்ஸில் உள்ள தாம்கிந்த் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய நிலப்பகுதியில் விவசாயம் செய்து போயர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தாம் கர்ப்பமாக இருந்தபோது கூட தமது தினசரி வேலைகள் மாறவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார். குழந்தை பிரசவித்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் விவசாய பணிகளுக்கு அவர் திரும்பினார். அவர் அவ்வாறு செல்லவில்லை எனில், வீட்டு வேலைகளை முடிக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். "எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நானே மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்; பிறகு மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும்," என்றார் அவர்.

உலகின் நான்காவது பெரிய கார்பன்டை ஆக்சைடு உமிழும் இந்தியா, உலகின் மாசுபட்ட 15 நகரங்களில் 13ஐ, 2.5 பி.எம். அளவுடன் கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. இவை சூழலை மாசுபடுத்துகின்றன. மழை குறைவு, வெப்பநிலை உயர்வு, கங்கை சமவெளிப்பகுதியில் நிச்சயமற்ற மழைத்தன்மைக்கு காரணமாகி, 60 கோடி மக்களை பாதிக்கிறது. பிரதமர் மோடியின் தொகுதியும், உலகின் மாசடைந்த நகருமான வாரணாசியில் இருந்து களநிலவரத்தை தரும் இக்கட்டுரை, இந்தியாவின் காலநிலை மாற்றம் குறித்த எமது தொடரில் ஐந்தாவது ஆகும்.

சுனந்தன் போயர், 45, வீட்டு வேலைகளை சுமந்து வருகிறார். வீட்டு வேலைகளை செய்யாவிட்டால், அங்கு எதுவும் நடக்காது என்பது அவருக்கு தெரியும். "எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நானே மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்க வேண்டும்; பிறகு மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும்," என்றார் அவர்.

பெண்களில் 64% பேர், தங்களுக்கு எந்தவிதமான மாற்று வாய்ப்புகளும் இல்லை; ஏனெனில் வீட்டு கடமைகளை நிறைவேற்ற வேறு எந்த குடும்ப உறுப்பினரும் இல்லை' என்று,என்.எஸ்.எஸ்.ஓ. கணக்கெடுப்பின்படி 68வது சுற்று கூறுகிறது.

ஊதியமற்ற உழைப்பின் சுமையானது பெண்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்பதை போயரின் அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன -தனிப்பட்ட விருப்பும் வெறுப்புகளை விட குடும்ப நலன்களுக்கே பெரும்பாலும் பெண்கள் முன்னுரிமை அளிக்கும் கட்டாயம் உள்ளது. உதாரணத்துக்கு, பிரதமரின் மத்ரித்வா வந்தனா யோஜனா (மகப்பேறு முன்னுரிமை திட்டம்; இது முன்பு இந்திரா காந்தி மத்ரித் சயோக் யோஜனா எனப்பட்டது) திட்டத்தின் கீழ் பணப்பரிமாற்றம், கர்ப்பிணிகளுக்கு இன்னும் ஓய்வு இல்லை என்று பொருளல்ல. ஏனெனில் குழந்தை பிறக்கும் வரை அவர்கள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தனர்.

கற்றல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பெண்கள் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறார்கள் என, மத்திய புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சி திட்டமிடல் அமைச்சகம் (MOSPI) 1988 மற்றும் 1999ஆம் ஆண்டுக்கு இடையே நடத்திய நேரம் பயன்பாடு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஊதியம் பெறாத உழைப்பில் ஈடுபடும் பெண்களால், குடும்பம் மற்றும் சமூக உறவுகளை மட்டுமே பாதிக்காமல், வீட்டிற்கு வெளியே ஒரு திறமையான பங்களிப்பு செய்வதை, அவரது திறனை முடக்கி, பாலியல் வளைவை நிரந்தரமாக்குகிறது என்பது இதன் பொருள்.

ஊதியமற்ற உழைப்பு பெண்களின் அதிகாரம், வேலையை பறிக்கிறது

ஊதியம் தரக்கூடிய பணியில் ஈடுபட விரும்புகிறீர்களா என்று போயரிடம் கேட்டபோது அவர் அளித்த தெளிவான பதில்: "நேரம் இல்லை; பிறகு வீட்டு வேலைகளை யார் செய்வது?" என்றார். கூடுதல் வருமானத்தை வரவேற்கலாம் என்றால், வீட்டு வேலைகளின் நீண்ட பட்டியல் அவருக்கு வேலை கிடைப்பதை அனுமதிக்காது.

கடந்த 1990களின் முற்பகுதியில் சந்தை தாராளமயமாக்கல் தொடர்ந்து விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த போதிலும், போயர் போன்ற பல பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வீட்டு வேலைகள் வழங்கவில்லை. 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடையே, வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, 14% குறைந்து, 34.8% என்பது, 27% என்று குறைந்தது.

பெண்கள் மற்றும் அவர்களது திறமைகளுக்கு கிடைக்கும் வேலைகளில் ஒரு பொருந்தாமை, உழைப்பு ஒரு உள்ளார்ந்த பாலின வேறுபாடு, அதேபோல் பெண்களுக்கு சில வேலைவாய்ப்புகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் சமூக விதிமுறைகளும் உள்ளதாக, 2017 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட கட்டுரை தெரிவிக்கிறது.

நாள் முழுவதும் இருக்கும் ஊதியம் பெறாத உழைப்பின் பெரும் சுமையானது, வேலைத்திறனில் பங்கேற்க மற்றொரு "பெரும் தடை" என, ஆக்ஸ்போம் அறிக்கை கூறுகிறது - மேலும் அது அதிகரித்து வருகிறது.

கிராமப்புறங்களில் வீட்டு வேலைகளில் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விகிதம் 2004-05 இல் 51% என்றிருந்தது, 2011-12 இல் 60% அதிகரித்ததாக, என்.எஸ்.எஸ்.ஓ.வின் கடந்த வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

"ஒவ்வொரு நாளும் தண்ணீர் பிடிக்கவே ஆறு மணிநேரத்தை செலவழித்தால், பிறகு வேலைக்கு செல்லவோ வெளியே போகவோ எப்படி முடியும்? "என்று கோஷ் கேட்கிறார். "உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளின் உண்மையான நெருக்கடி, ஊதியமற்ற உழைப்பை பெண்களுக்கு இன்னும் தருகிறது. இது அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய அவசியமான பிரச்சினை" என்றார் அவர்.

தானே மாவட்டம் பால்கர் தெஹில் அடுத்த வெல்கான் கிராமத்தை சேர்ந்த இந்த பெண், கிணற்றில் தண்ணீரை சேகரித்து எடுத்து வருகிறார்.குழாய் தண்ணீர் வசதியில்லாத நிலையில், வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து வெறும் 96 கி.மீ.யில் உள்ள இந்த கிராமத்தில் உள்ள பல பெண்களுக்கும் தங்கள் வீட்டுக்கு தண்ணீர் சேகரிக்க, இவ்வாறு பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது.

பொதுவான வசதிகள் இல்லாதது - அதாவது அடிப்படை உள்கட்டமைப்பு,முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தை வசதிகள் - மற்றும் மலிவு தனியார் துறை சேவைகள், அதாவது வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு சுமைகளை பெண்களே சுமப்பது, பணியிடத்தில் இருந்து அவர்களை வெளியேற செய்கிறது. இது ஒரு மோசமான சுழற்சியை உருவாக்கக்கூடும் என்று கோஷ் கூறினார்.

ஊதியமற்ற உழைப்பின் சுமை ஐந்து ஆண்டுகளில் அதிகரித்ததாக நினைக்கிறீர்களா என்று ஆய்வாளர்கள் கேட்டபோது, பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றில் 1,000 குடும்பங்களை ஒக்ஸ்பாமின் தரவரிசையில் மதிப்பீடு செய்ததில், அத்தகைய பெண்களின் கணிசமானோர் ஆமாம் என்றனர். அவர்கள் மேற்கோளிட்ட ஒரு பொதுவான காரணம் குடும்பங்கள் சிறியதாகி வருகின்றன என்பது தான்.

இந்தியாவில் சராசரியாக குடும்பத்தின் அளவு சுருங்கி வருவதாக அறிக்கை கூறுகிறது - 2001இல் சராசரியாக ஒரு குடும்பத்தில் 4.67 உறுப்பினர்கள் என்று இருந்த நிலையில், 2011இல் இது 4.45 ஆக குறைந்தது. கிராமப்புற இந்தியாவில், தனிக்குடித்தன குடும்பங்களின் விகிதம், ஒவ்வொரு உடன்பிறந்தோர் ஒரு குடும்பத்தைச் சொந்தமாக வைத்திருத்தல் என்பது அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில், 83.9% குடும்பங்கள் தனிக்குடித்தனம் என்றிருந்த நிலையில் இது 2011 இல் 84.5% ஆக அதிகரித்தது.

வீட்டிலேயே வயது வந்த பெண்கள் குறைவாக இருப்பதன் பொருள், அங்கு வீட்டு வேலைக்கு உதவ குறைவான கைகளே உள்ளது என்பதாகும். மேலும் பெண்கள் பள்ளியில் நீண்ட நேரம் இருப்பதால் (கல்வி உரிமை சட்டம்- 2009 இன் ஒரு நேர்மறையான தாக்கம்) மற்றும் வீட்டிற்கு வெளியே அவர்கள் அதிக நேரம் செலவிடுவதால், வீட்டில் இருக்கும் வயதுவந்த பெண்களுக்கு குடும்பப்பணி மேலும் அதிகமாகிவிடுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் 49% பெண்களே மேல்நிலை கல்விக்கு சேர்ந்த நிலையில், 2016 இல் இது 74% என்றிருந்தது. அதே நேரம், ஆண்களின் மேல் நிலை பள்ளி சேர்க்கை, இதே விகிதத்தில் (24 சதவீத புள்ளிகள்) அதிகரித்தது; ஆனால் ஒரு உள்ளார்ந்த பாலின சார்பு என்பது வீட்டு கடமைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுவதில்லை என்பதாகும்.

"உண்மையில் பெண்களுக்கான வருமானம் குறைவு; நிறுவனங்கள் அவர்களுக்கு குறைவாகவே தருகின்றன; வீட்டுக்குள்ளேயும் முடிவெடுக்கும் திறன் குறைவாக உள்ளது; இறுதியில் குறைவான இயக்கத்திய கொண்டிருக்கின்றனர்," என்றார் கோஷ். ஊதியமில்லா வேலைக்கு பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவதால், ஊதியச் சந்தையில் அவர்களின் வேலை வீழ்ச்சியடையும் என்று அவர் மேலும் கூறினார். “பெண்கள் செய்யும் வேலை குறைவானது என்று சமூகம் கருதுகிறது. எனவே அதிகம் பேர் உள்ள தொழிலில் பெண்களுக்கு மோசமான ஊதியம் கிடைக்கிறது” என்ற அவர், "ஊதியமற்ற உழைப்புக்கு அவர்கள் மீது ஊதியக் அபராதம் சுமத்தப்படுகிறது" என்றார்.

இந்தியாவில் சம்பள தண்டனை என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது, "அரசும், பொதுத்துறைகளும் பெண்களுக்கு உரிய ஊதியம் தராத இடங்களில் நாங்கள் இருக்கிறோம்" என்று கோஷ் தெரிவித்தார். அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களை உதாரணம் காட்டிய அவர், பெண்களால் மேலாதிக்கம் செய்யப்படும் தொழில்களில் கூட, குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவு இல்லை என்றார். மாறாக, பொது சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் இந்த அரசு ஊழியர்கள், ரூ. 2,250- 4,400 வரை பெறுகின்றனர்; ஓய்வூதியம், மகப்பேறு விடுமுறை மற்றும் பிற சலுகைகளை அவர்கள் இழக்கின்றனர்.

பெண்களுக்கு உகந்த கொள்கைகள், அவர்களின் ஊதியமற்ற உழைப்பின் சுமையை குறைக்க உதவும்

அரசின் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தை (NRDWP) அணுகும் வீடுகளில் பராமரிப்பு பணிகளில் பெண்கள் நாளொன்றுக்கு 22 நிமிடங்கள் குறைகிறது; ஊதிய பணிகளுக்கு 60 நிமிடங்கள் கூடுதலாக செலவிட முடிகிறது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல், பிரதமரின் உஜ்வல யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் சமையல் செய்ய எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் குடும்பங்களில், பராமரிப்பு பணிகளில் பெண்கள் நாளொன்றுக்கு 49 நிமிடங்கள் குறைகிறது; ஊதிய பணிகளுக்கு ஒரு மணி நேரத்தை கூடுதலாக செலவிட முடிகிறது.

இத்தகைய முடிவுகள், சமூகங்களுக்கு அடிப்படை உள்கட்டமைவு எவ்வாறு நேரம்-பயன்பாட்டு ஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு கணிசமான நன்மைகளை வழங்கலாம் என்பதை முன்னிலைப்படுத்துகின்றன.இருப்பினும், இந்த திட்டங்களில் நீண்டகால முதலீடு மற்றும் திறமையான நிர்வாகத்தை வெற்றிகரமாக உறுதி செய்ய வேண்டும்; அவை, இரு திட்டங்களிலும் இல்லாத கூறுகள் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டுக்கு, கிடைக்கும் நிதியில் 90% செலவழித்தாலும், கிராமப்புற மக்கள்தொகையில் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையே, இலக்கான 35% என்பதற்கு பதில் 18% மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. திட்டங்களின் மோசமான செயல்பாடுகள், "முழுமையற்ற, கைவிடப்பட்ட அல்லது செயல்படாதவை" என அவற்றை விட்டு தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தை தோல்வியடைய செய்தது என, 2018ஆம் ஆண்டின் அரசு தலைமை கணக்காளர்காளின் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் நிரப்புவதற்கு மக்களுக்கு ஆகும் அதிக செலவினம், "சாத்தியமான மிகவும் பயனுள்ள" பி.எம்.யு.ஒய். திட்டத்தை பாதிக்கும் என்று கோஷ் நம்புகிறார். அதன் விலை காரணமாக, சத்தீஸ்கரில் 40%, மத்திய பிரதேசத்தில் 17% குடும்பங்கள் தங்களது எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் நிரம்ப முன்வரவில்லை என்று, ஆலோசனை நிறுவனமான மைக்ரோசேவ் அமைப்பின் 2018 ஆய்வு கூறுகிறது. சிலிண்டர் நிரம்புவதற்கு ஆகும் தொகை ரூ. 700 முதல் ரூ.800 ஆக உள்ள நிலையில், ஏழைகள் தங்களது வருவாயில் குறிப்பிட்ட தொகையை இதற்கு எப்படி செலவிட முடியும் என்பதை அறிய கொள்கை வகுப்பாளர்கள் தவறிவிட்டனர். இதன் விலை சர்வதேச எரிபொருள் சந்தைகளுக்கு ஏற்ப மாறுபடுவதால், இந்த செலவினத்திற்கான திட்டமிடல் என்பது ஏழைகளுக்கு கடினமாக இருக்கலாம்.

"பெரும்பாலான வீடுகளில் இலவசமாக தந்த முதல் எரிவாயு சிலிண்டருக்கு பிறகு மீண்டும் அவற்றை நிரம்புக் கொள்வது கிடையாது," என்று கோஷ் கூறினார், "எனவே, சிறப்பு வாய்ந்த தருணத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அது உபயோகிக்கப்படுகிறது. எஞ்சிய நாட்களில் அவர்கள் விறகுகளை பயன்படுத்தி வருகின்றனர் " என்றார்.

சமமான சமூக விதிமுறைகளுக்கு அவசியம்

தற்போது 48% பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு நான்கு மாதங்களுக்கு அளித்து வேலை நிறுத்தப்படுகிறது; அதேநேரம், 15-24 மற்றும் 25-34 வயதிலான 50% அதிகமான ஆண்கள், குழந்தை வளர்ப்பு காலத்தில் வேலை செய்கிறார்கள் என்று இண்டெலிகேப் ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தை பராமரிப்பு மற்றும் மகப்பேறு விடுப்புக் கொள்கைகளுக்கு அதிக கவனம் செலுத்துவது ஒரு 'தாய்மைக்கான தண்டனை'; இது வேலைகளை விட்டு வெளியேறும் பெண்கள், நீண்ட காலத்திற்கு வேலையின்றி, குறைந்த திருப்தியில் வேலைகளை ஏற்க வேண்டியுள்ளது என, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

கடந்த 2017 மற்றும் 2022 க்கு இடையில் குழந்தை பராமரிப்புக்கான தனியார் துறையினர் ஆண்டுதோறும் 23%; மற்றும் மகப்பேற்று நலன் சட்டம்-2017ன்படி50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பின், அவர்களுக்கு குழந்தைகள் காப்பகம் ஏற்பாடு செய்ய நிறுவன உரிமையாளர்களை கட்டாயப்படுத்துகிறது; ஆனால் சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கான வாய்ப்புகள் வரம்புக்குட்பட்டே உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகளால் குழந்தைகள் பராமரிப்பு என்பது இலவசமாக வழங்க உரிமை உண்டு. ஆனால் உண்மையில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை; பலர் எதுவுமின்றி சென்று விடுகின்றனர். தேசிய குழந்தைகள் காப்பக திட்டத்திற்கான மத்திய நிதியுதவியில் கடும் நிதி வெட்டுக்கள் காரணமாக, 2013-14 மற்றும் 2016-17ஆம் ஆண்டுக்கு இடையே 8,143 காப்பகங்கள் மூடப்பட்டன; தனியார் மாற்றுகளை கடினமாக்குவதற்கு எந்த வழியும் இல்லை என, ஜனவரி 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

தம்சரி ஒஸ்ரே, 29, தனது இரு மகள்களுடன் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். ஒஸ்ரேவின் கிராமத்துக்கு அருகே குழந்தைகள் காப்பகம் இல்லாததால், தனது இளைய குழந்தையை பணி செய்யும் இடத்திற்கே அழைத்து செல்கிறார். இதனால், பணியில் முழுகவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார்.

குழந்தை பராமரிப்பு மற்றும் நெகிழ்வான வேலை பிரச்சனையைப் பற்றி நேர்மறையான கருத்துகள் "ஊதியமற்ற பராமரிப்பு மற்றும் வீட்டு வேலை சுமையை மறுபகிர்வுக்கு ஊக்குவித்தல்" என சமூக நெறிகளைத் தொடங்க உதவுகிறது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் பெற்றோர் இருவரும் வேலைக்கு வெளியே செல்வதை பார்க்கும் குழந்தைகள் மத்தியில், ஒரு பெண்ணின் பாத்திரம் என்பது முற்றிலும் வீட்டை மட்டுமே சார்ந்தது என்ற நிறுவப்பட்ட சமூக நெறிகளை உடைக்க உதவும்.

தற்போதுள்ள ஆணாதிக்க விதிமுறைகளில் "பொது அல்லது சந்தை சேவைகளை எடுத்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு உள்ளது", என்று டெல்லி இந்திய புள்ளி விவர நிறுவனத்தின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அலகின் இணை பேராசிரியர் பர்ஸானா அப்ரிடி தெரிவித்தார். உதாரணத்திற்கு வங்கதேசத்தில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் குழந்தைகள் பராமைரிப்பு மையங்களின் பயன்பாடு குறைவாக இருந்தது. ஏனெனில் “இதை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு; ஏனெனில் வழங்கப்படும் சேவையில் தரம் பற்றி அவர்கள் தான் கவலைப்படுவார்கள்” என்றார் அவர்.

இதற்கு, பொது வசதிகள் வழங்குவதை நாம் விட்டுவிட வேண்டும் என்று பொருளல்ல என்று அப்ரிடி கூறினார். சமமற்ற தொழிலாளர் பிரிவை சமாளிக்க பலவகை அணுகுமுறைகளின் மையத்தில் வளைந்த பாலின மனப்பான்மை பற்றி கல்வி மற்றும் விழிப்புணர்வை வைப்பது. "பெண்களுக்கு கல்வி புகட்டுவது அல்லது அவர்களின் விடுதலை பற்றி அடிக்கடி பேசுகிறோம்; ஆனால் நாம் இதில் எந்தவொரு ஆணையும் சேர்க்கவில்லை, "என்று அவர் கூறினார். "பள்ளி பாடத்திட்டங்களில் தார்மீக மதிப்பை புகுத்தி, குடிமை கடமைகளைப் பற்றி பேசுவதை நாம் படித்து வந்தோம்; ஆனால் இப்போது இது குறைவாக உள்ளது. இது கடினம், எனக்குத் தெரியும், ஆனால் பரிசோதனைகள் இருக்க வேண்டும்; இதை களைய பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

(சங்கேரா, இந்தியா ஸ்பெண்ட் எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.