புதுடெல்லி: அடுத்த பத்து ஆண்டுகளில், கூடுதலாக 11 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க திறன் அல்லது, தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 11 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம், 2027-28ஆம் ஆண்டுகளில், மின் துறையில் கர்நாடக மாநிலம் தன்னிறைவை எட்டவுள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் புதைபடிவ எரிபொருள் கணக்கிடப்படவில்லை.

கர்நாடகாவில், 23 ஜிகாவாட் அல்லது 60% மாநில மின்திறன் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், வரும் 2027-28ஆம் ஆண்டின் தேவையான, 110 டி.டபிள்யூ.எச். என்பதில், 43% உற்பத்தியை, அதாவது தற்போதுள்ளதைவிட 27% அதிக உற்பத்தியை கர்நாடகா எட்டும் என்று, இந்திய எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணம் கடுமையாக இருக்காது. கடந்த 2017-2018ல், புதுப்பிக்கத்தக்க மின் திறனை, 12 ஜிகாவாட் ஆக எட்டும் வகையில், கூடுதலாக, 5 ஜிகாவாட் புதுப்பிக்கப்பட்டது. இது, மாநிலத்தின், 27 ஜிகாவாட் என்ற நிறுவப்பட்ட திறனில், 46% ஆகும். இந்த உற்பத்தி மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், 2018 மார்ச் மாதம், 11 ஜிகாவாட் என்ற தமிழ்நாட்டின் சாதனையை கர்நாடகா முறியடித்து, முதலிடத்தை பிடித்துள்ளது.

”மின் கட்டமைப்பில், கர்நாடகத்தின் இந்த முற்போக்கு தலைமை, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சிறந்த முன்மாதிரியாக உள்ளது என, ஆஸ்திரேலியாவுக்கான ஐ.இ.இ.எப்.ஏ-வின் ஆற்றல் நிதி ஆய்வு இயக்குனர் டிம் பக்லே மற்றும் ஐ.இ.இ.எப்.ஏ ஆராய்ச்சியாளர் காஷிஸ் ஷா எழுதியுள்ளனர்.

”கர்நாடகாவை பிற மாநிலங்களும் பின்பற்றினால், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில், இந்தியா உலகளாவிய தலைவராகும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. குறைந்த செலவிலான புதுப்பிக்கத்த ஆற்றல் தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்பதன் மூலம், அதிக செலவினமுள்ள படிம எரிபொருள் இறக்குமதியை காலாவதியாக்குதல் மாற்றுப்பாதை வழங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2015 பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்கு ஏற்ப, 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவ இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. உலகின் பெரிய திட்டமான இது, தற்போதுள்ளதை விட 3 மடங்கு பெரியது. 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், 175 நிலக்கரி மின் ஆலைகளுக்கு மாற்றாக இது போதுமானது. புவி வெப்பமாவதற்கு காரணமாக புதைபடிம எரிபொருளை குறைத்து, பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்கின்றன.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கில், 100 ஜிகாவாட் சூரியஒளி மின்சாரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகாவின் பங்கு முக்கியமானது.

மின்சாரம் இறக்குமதியில் இருந்து, சுயசார்பு நோக்கி

கர்நாடகாவின் அனல், புனல், அணுசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவுதலால், 2018 மார்ச்சில் 27 ஜிகாவாட் என்ற அதன் திறன், 43% உயர்ந்து, 2027-2028ல் 38 ஜிகாவாட் ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில தேவையை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் தேவையான, 49 டி.டபிள்யூ.எச். மின்சாரத்தை, ’நிகர பூஜ்ஜிய இறக்குமதி’ அதாவது, இறக்குமதி செய்யாமல் பூர்த்தி செய்யவுள்ளதாக, அந்த அறிக்கை கூறுகிறது.

வரும் 2027-2028ல் நிகர பூஜ்ஜிய இறக்குமதி என்பது ஒரு பழமைவாத மதிப்பீடாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை விரிவாக்குவதன் மூலம், மின்சார ஏற்றுமதியாளராக கர்நாடகா மாற முடியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-2018ல் கர்நாடகாவின் மொத்த தேவை, 68 டி.டபிள்யூ.எச். மின்சாரம் என்ற நிலையில், 61 டி.டபிள்யூ.எச். மின்சாரத்தை உற்பத்தி செய்தது; பற்றாக்குறையான, 7-ஐ, பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்தது.

கர்நாடகா உற்பத்தி செய்த 61 டி.டபிள்யூ.எச். மின்சாரத்தில், 27% புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலாகும். இது, 12 ஜிகாவாட் நிறுவப்பட்ட, அல்லது 45% மாநிலத்தில் நிறுவப்பட்ட திறனான 27 ஜிகாவாட்டில், 46% மூலம் பெறப்பட்டது.

அதிக அளவான, 49% மின்சாரம், 9.8 ஜிகாவாட் திறன்கொண்ட, 35% பணித்திறன் கொண்ட, நிலக்கரி அனல் மின் நிலையங்களில் இருந்து பெறப்பட்டது. மற்ற 24% மின்சாரம், 4.5 ஜிகாவாட் திறன் கொண்ட புனல் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 12 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உள்ள நிலையில், 11 ஜிகாவாட்டை கூடுதலாக கர்நாடகா வெற்றிகரமாக நிறுவியுள்ளதை பார்த்தோம். தற்போதைய நிலையின்படி, நிறுவப்பட்ட அனல் மின் உற்பத்தி திறனை, 9 ஜிகாவாட் குறையாமல் பராமரிக்கிறது. இது, மாநிலத்திற்கான மின்சாரத்தை இறக்குமதி செய்யாமல், தேவையை சமாளிக்க உதவுவதாக, அந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு சிக்கல் மட்டும் என்னவெனில், 1.7 ஜிகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் குழாய் வழி திட்டங்களால் கிடைக்கவுள்ள 1.32 ஜிகாவாட் மின்சாரம் மூலம், முடிவுக்கு வரும் திட்டத்தை ஈடுகட்ட முடியும் என்று கருதப்படுகிறது. எனினும், 2018-ல் 9.8 ஜிகாவாட் என்ற நிலையில் இருந்து 4% சரிந்து, 9.4 ஜிகாவாட் ஆக, இம்மாநிலம் இருக்கும்.

இன்னும் திறனுடன் இயங்குவதன் மூலம், குறைந்தளவு திறன் என்ற நிலையை, நிலக்கரி அனல் மின் நிலையங்கள் பூர்த்தி செய்ய இயலும். "தற்போது 35% பயன்பாட்டு விகிதம் [திறன்] குறைவாகவே உள்ளது," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரும் பத்து ஆண்டுகளில், சற்றே குறைக்கப்பட்ட நிகர திறனானது, ஒரு மேம்பட்ட சராசரி திறன் பயன்பாடாக, 53% என இருப்பது, ஏற்கன்வே நெருக்கடியில் உள்ள மாநில அனல் நிலக்கரி மின் நிலையங்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை என்று, அறிக்கை தெரிவிக்கிறது.

நிலக்கரியில் இருந்து விலகுவது கர்நாடகாவிற்கு ஏன் முன்னேற்ற பாதையாக இருக்க வேண்டும்?

நாம் ஏற்கனவே கூறியது போல், கர்நாடகாவின் மின்தேவை நிலக்கரி அனல் மின் நிலையங்களை சார்ந்துள்ளது. கர்நாடகாவில் நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத நிலையில், ஒடிசா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் மாநில சுரங்கங்களில் இருந்து, ரயில்களில் 700 – 1200 கி.மீ. தொலைவு கடந்து, நிலக்கரி பெறப்படுகிறது. கடல்பாசி நிலக்கரியை சார்ந்தே, இம்மாநிலம் உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்தால், டன் ஒன்றுக்கு ரயில் போக்குவரத்து செலவு, ரூ.2130 கூடுதலாகிறது. (இது, அடிப்படை நிலக்கரி செலவில், 90% கூடுதலாகும்). அத்துடன், வரிகளால் நிலக்கரி விலை டன் ஒன்றுக்கு, ரூ. 2,268/ ஆகிறது. அத்துடன், கடும் தளவாட பிரச்சனைகளும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் நிலக்கரி மின் நிலையங்கள், கடந்த 2 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதிக்கு செலவிட்ட தொகை, ரூ.2000 கோடி (300 மில்லியன் டாலர்) என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழல்கள், இந்திய நிலக்கரி மின்சாரத்தை, கிலோ வாட் ஹவர் ஒன்றுக்கு ரூ.3-5 எனவும், இறக்குமதி நிலக்கரி மின்சாரம், ரூ.5-6 ஆகவும் மாற்றியுள்ளது.

உள்நாட்டு மற்றும் இறக்குமதி நிலக்கரியின் அதிகரித்து, (சர்வதேச நிலக்கரிக்கான, பண மதிப்பு குறைப்புடன்) இதன் விலையை உயர்த்தியுள்ளது. நுகர்வோரை பல்வேறு எரிபொருள் விலைகள் கடந்து செல்வதாக, அறிக்கையின் இணை ஆசிரியரான காஷிஸ் ஷா, ‘இந்தியா ஸ்பெண்ட்’டிடம் கூறினார்.

நிலக்கரி மின்சாரத்தின் விலை காரணமாக கர்நாடகா வினியோக நிறுவனங்கள், சூரிய ஒளி மின்சாரம் அல்லது காற்றாலை மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு, ரூ.3/-க்கு கீழ் என்று பெற, ஊக்குவிப்பு தொகையை வழங்குவதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மையில் கர்நாடகாவில் சூரிய ஒளி மின்சாரத்திற்கான ஒப்பந்தம், மிக குறைந்த அளவாக, யூனிட் ஒன்றுக்கு ரூ.2.82 – ரூ.3.06 என ஏலம் போனது. 2018 ஜூன் மாதம், ஏலமுறையில் மாற்றங்களை கர்நாடகா அறிமுகம் செய்தது. போட்டி முறையில் நடந்த ஏலத்தில், காற்றாலை மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.3.45 என்ற விலை கிடைத்தது. இது, நிலக்கரி மின்சாரத்திற்கான விலையுடன் ஒப்பிடும் போது, 30-50% வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

(பாஸ்கர் திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட்டின் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.