புதுடில்லி: 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், காடு, நீர் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்.

வனவியல் அல்லாத பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பதற்கான 99% திட்டங்களுக்கு (ஜூன் 2019 வரை) இந்தியா ஒப்புதல் அளித்தது. இது, 2019ஆம் ஆண்டில் அதிக தண்ணீர் நெருக்கடியை சந்தித்த நாடுகளில் 13வது இடத்தை பிடித்தது. ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்துமாறு நாட்டினரை பிரதமர் கேட்டுக் கொண்டும் கூட மாநிலங்களின் செயல்பாடு குறைவாகவே உள்ளது.

வனத்துறை

கடந்த 2019இன் முதல் ஆறு மாதங்களில், வன நிலங்களை பயன்படுத்துவதை திசை திருப்பக் கோரும் 240 திட்டங்களில், இந்திய அரசு வெறும் ஏழை மட்டுமே இந்திய அரசு நிராகரித்தது - 98.99% வன நிலங்களை பயன்படுத்த அனுமதித்ததாக கருதப்படும் நிலையில் அவற்றில் வனம் சாராத பயன்பாடுகளுக்கு அனுமதி தரப்பட்டதாக, டெல்லியை சேர்ந்த ஆலோசனை வழங்கும் லைப் (Legal Initiative for Forest and Environment - LIFE) அமைப்பின் ஆகஸ்ட் 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

இத்தகைய திசைதிருப்பல் விகிதம் “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று பகுப்பாய்வு கூறியுள்ளது.

கடந்த 2019 ஜூன் வரை வேறுபணிகளுக்கு திருப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட வனப்பகுதி சுமார் 92.20 சதுர கி.மீ. ஆகும். இது, 2017 மற்றும் 2018இல் இருந்து திசைதிருப்புவதற்கு ஒப்புதல் தரப்பட்டது, பகுப்பாய்வின்படி, 588.20 சதுர கி.மீ (புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்தை விட பெரியது) ஆகும்.

கடந்த 2019இல் திசைதிருப்ப பரிந்துரைக்கப்பட்ட வன நிலங்களில் சுமார் 43% சுற்றுச்சூழல் ரீதியாக பதற்றம் நிறைந்த வனவிலங்கு வாழ்விடங்களில் உள்ளது என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜூன் 2014 முதல் மே 2018 வரை நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், ‘சுற்றுச்சூழல்-உணர்திறன் மண்டலங்களில்’ 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேசிய வனவிலங்கு வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்டன. இது முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ.) அரசின் 2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட காலத்தில் 260 திட்டங்களுக்கு அனுமதி என்பதைவிட அதிகம் என இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.

சராசரியாக, ஜூன் 2014 முதல் மே 2018 வரை ஆண்டுதோறும் நிராகரிக்கப்படாத திட்டங்கள், 1.1% க்கும் அதிகமானவை; இது, 2009 மற்றும் 2013 க்கு இடையில் முந்தைய ஐ.மு.கூ. அரசின் கீழ் 11.9% என்பதைவிட குறைவு என டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

இதை ஈடுசெய்வதறாக நடப்படும் மரங்கள், செடி வளர்த்தல் போன்றவை, பெரும்பாலும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறிய பங்களிப்பையே சேர்க்கும்; அத்துடன் மலைவாழ் மக்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்ததற்கு மேலும் வழிவகுக்கிறது என, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 25, 2019 கட்டுரை தெரிவித்தது.

தண்ணீர்

கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு சாதாரண மழைக்காலங்களுக்கு பிறகு, இந்தியாவின் பல பகுதிகள் மீண்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன - நகரின் நீர் இருப்பு பகுதிகளில் தண்ணீர் இருப்பு 1% கொள்ளளவுக்கு சரிந்தபோது சென்னை நகரன் நெருக்கடி அதிதீவிரமானது. தாமதமான 2019 பருவமழையால் இந்த நெருக்கடி அதிகரித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் 5 கட்டுரை தெரிவித்தது.

இந்தியா - 60 கோடி மக்கள், அதாவது மக்கள் தொகையில் பாதிப்பேர், ஒவ்வொரு ஆண்டும் “அதிகபட்சம் முதல் அதிதீவிர” தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் - ஆகஸ்ட் 2016 தண்ணீர் நெருக்கடி சந்தித்த நாடுகளின் உலகளாவிய பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு மேலே உள்ள நாடுகள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளைச் சேர்ந்தவை; அவை, இந்தியாவின் வருடாந்திர மழையில் பாதியைப் பெறுகின்றன மற்றும் குறைவான இயற்கை நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தை 2019 மே 31 அன்று தொடங்கியது; இந்த அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீரை ‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தால் இப்பணி மேற்கொள்ளப்படும்; இது குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா புனரமைப்பு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த திட்டத்திற்கு முதல் சவால், தண்ணீர் கிடைப்பதாக இருக்கும் என்று இந்தியா ஸ்பெண்ட் தனது ஜூன் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர் சீரான விகிதத்தில் குறைந்து வருகிறது; இந்தியாவின் 40% மக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் குடிநீரை பெற முடியாத அவலம் ஏற்படும். 2050 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் நீர் தேவைக்கான செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை ஏற்படுத்தும்; தண்ணீருக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாக இருக்கும். இந்த தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் சுகாதாரச்சுமையை அதிகரிக்கும்: தற்போது, சுத்தமான தண்ணீர் கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இந்தியர்கள் இறக்கின்றனர்.

‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குழாய் நீரை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, கிராமப்புற வீடுகளில் 18.41% க்கும் அதிகமானோர், குழாய் நீரை பெறுவதில்லை. இந்த இலக்கை 2024 இறுதிக்குள் அடைய வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டும் 16% வீடுகள் குழாய் நீர் வசதியுடன் இணைக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.

‘நல் சே ஜல்’ திட்டத்தில், “நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்” மற்றும் உள்ளூர் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்று, டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சிந்தனைக்குழு மையத்தின் நீர் மேலாண்மை நிபுணர் மஹ்ரீன் மாட்டோ, ஜூலை 2019 இல் டவுன் டூ எர்த் பத்திரிகையில் எழுதினார். “... முக்கிய கேள்விகள்: வினியோகிக்க தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும்?”

பிளாஸ்டிக் கழிவுகள்

பிரதமர் நரேந்திர மோடி 2019இல் பல சந்தர்ப்பங்களில் வரும் 2022-க்குள் நாட்டில் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.

இதன் பிறகு, பல மாநிலங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் இல்லாத நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தன. மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின: ஒடிசா, கோவா மற்றும் ஆந்திரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தன; தலைமைச் செயலக வளாகத்தில் அசாம் அரசு அதை தடை செய்தது; கொல்கத்தா மாநகராட்சி நிறுவனம், நகரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது; இந்திய விமான நிலைய ஆணையம் அதன் 40%-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்தது.

இந்தியா ஆண்டுதோறும் 94.6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது (10 டன் என்பது, டிரக்கில் 946,000 லோடுக்கு சமம்) இதில் எஞ்சிய 40% சேகரிக்கப்படாமல் உள்ளது என, பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்றி வட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முன்முயற்சியான அன்-பிளாஸ்டிக் கலெக்டிவ் ஆகஸ்ட் 2019 ஆய்வு தெரிவிக்கிறது.

பிளாஸ்டிக் பெரும்பாலும் நிலப்பரப்புகள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் கலந்து அவற்றை மூச்சுத்திணறச் செய்து, இறுதியில் கடலில் கலக்கிறது. அங்கு அது கடல் விலங்குகளால் உட்கொள்ளப்படுகிறது. இது ஏப்ரல் 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி மண்ணிலும் நீரிலும் பிளாஸ்டி கலந்து, இயற்கை சூழலை நச்சு கொண்ட டையாக்ஸின்களால் மாசுபடுத்துகிறது.

பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி, சேகரிப்பு மற்றும் அகற்றல் பற்றிய துல்லியமான தகவல்கள் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை குறித்த ஒருங்கிணைந்த கொள்கையை வகுப்பதற்கு தேவை. ஆனால் நம் நாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முழுமையானதாக இல்லை என்று எங்கள் அறிக்கை கூறியுள்ளது. 2020இல், ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2 கோடி டன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்; 2022இல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாமல் போக வாய்ப்பில்லை.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு இருந்தபோதும், பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் நகரங்களால் இவ்விதிகளை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஏப்ரல் 18 கட்டுரை தெரிவித்தது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).