புதுடில்லி: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 70% மாசுபடுத்தும் தொழில் வகைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை பலவீனமாக்கி உள்ளது; மாசுபாடுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை இது தடுக்கக்கூடும் என, 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான அரசு அறிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

கடந்த 2015இன் முற்பகுதியில் இருந்து 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், 206 வகுப்பு மாசுபடுத்தும் தொழில்களில் 146-க்கு, வழக்கமான ஆய்வுகளில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இந்த வகைப்பாட்டில் இடம் பெற்றுள்ள தொழில்துறை அலகுகள், இப்போது இணக்க நிலையை சுய சான்றிதழ் செய்து கொள்ளலாம் அல்லது ‘மூன்றாம் தரப்பு சான்றிதழ்’ பெறலாம். முன்பு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) தான் அவற்றை சோதனை நடத்தும்.

இந்த மாற்றம் நிலக்கரி சுரங்கங்கள், கல் குவாரிகள், சாம்பல் அகற்றும் பணி, ரயில்வே சைடிங்க் மற்றும் உணவு பதப்படுத்துதல் (பலவும் மோசமான பதிவுகளை கொண்டவை) போன்ற துறைகளில் உள்ள அலகுகளை நேரடி ஒழுங்குமுறை மேற்பார்வை இல்லாமல் செயல்பட அனுமதித்துள்ளது. சுய கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் இதுவரை சிறப்பான தொழில்துறை இணக்கத்திற்கு வழிவகுக்கவில்லை அல்லது மாசுபடுத்தும் தொழில்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் சட்ட வழக்குகளை குறைக்கவில்லை என்று பொது கொள்கை சிந்தனைக்குழுவான கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2019 ஆய்வறிக்கை தெரிவிக்க்கிறது.

பல்வேறு மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் கடந்த காலங்களில் தொழில்துறை அலட்சியத்தின் நிகழ்வுகளை மூடிமறைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் நோக்கம், வணிகத்தை எளிதாக்குவது மற்றும் மாசு ஆய்வாளர்கள் மீதான சுமையை குறைப்பதே ஆகும். நிபுணர்களின் கருத்தும் தரவும் இது ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுடன் இணக்கமாக நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கிறது.

பல ஆய்வுகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) இந்தியாவில் மாசு அளவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது. உலகின் மாசுபட்ட காற்றைக் கொண்ட 15 நகரங்களில் கான்பூர், பாட்னா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் பாட்டியாலா உள்ளிட்ட 14 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன. நச்சுக்காற்றின் தொடர் வெளிப்பாடு, இந்தியரின் சராசரி ஆயுட்காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு மேல் குறைத்தது என, சிகாகோ பல்கலைக்கழகத்தின் 2017 ஆய்வில் கண்டறியப்பட்டது.

2018 அறிக்கையின்படி, நீரின் தரத்தை பூர்த்தி செய்யாத 351 நதிகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) அடையாளம் கண்டுள்ளது.

தொழில்துறை மாசுபாடு, ஒட்டுமொத்த மாசு நிலையில் ஒரு பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. உதாரணமாக, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 2018 ஆய்வின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் தொழில்துறை மாசுபாடு 23% பங்களித்தது.

சமீபத்தில் பல துறைகளின் விரிவாக்கத் திட்டங்களுடன், சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதும் ஒத்துப்போகிறது. விலக்கு வகைகளில் இருந்து பல திட்டங்கள், சமீபத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவது குறித்த செய்திகள் இருந்தன. இத்தகைய இணக்கமான போக்கு பலவீனமானது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக்கொண்ட போதிலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வண்ண குறியீடு வகைப்பாடுகளின் நீக்கம்

நீர் மற்றும் காற்று தொடர்பான சட்டங்களின் கீழ், மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்ற வாய்ப்புள்ள தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கின்றன அல்லது காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கும் பகுதிகளில் நடவடிக்கைகளை அமைக்க முற்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் சில நிபந்தனைகளை - உமிழ்வு அடுக்குகளின் உயரம், கழிவு நீர் / உமிழ்வுகளின் தரம், கழிவுகளை வெளியேற்றும் இடம், வெளியேற்றும் வீதம் மற்றும் பல - அலகுகள் பூர்த்தி செய்தால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில், 2016 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, இந்த நிபந்தனைகளுக்கு எதிராக அனுமதிக்கப்பட்ட அனைத்து தொழில்களின் இணக்கத்தையும் சரிபார்க்க, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டன. இத்தகைய அடிக்கடி நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு அல்லது பச்சை என வகைப்படுத்துதல் மாறுபடும். குறுகிய இடைவெளியில் அதிக மாசுபடுத்தும் தொழில்கள் (சிவப்பு), நடுத்தர ஆபத்து (ஆரஞ்சு), நீண்ட இடைவெளியில் மற்றும் குறைந்த இடைவெளியில் குறைந்த மாசுபடுத்துவன (பச்சை) என்று இது ஆய்வு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசு மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மற்றும் ஒப்புதல் புதுப்பித்தல் மற்றும் இணக்கமான கண்காணிப்புக்கான சுயச்சான்றிதழ் என்ற கருத்தை அறிமுகம் செய்தது. 2016இல் மத்திய அரசு தொழில் வகைப்படுத்தலை மாற்றி, 84 தொழில் வகைகளை குறைந்த கடுமையான வகைப்பிரிவுக்கு மாற்றியது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில், பசுமை வகை தொழில்களை ஆய்வுகளிள் இருந்து முற்றிலும் விலக்கிக் கொள்ளவும், ஆரஞ்சு வகை தொழில்களை ‘மூன்றாம் தரப்பினரால்’ தணிக்கை செய்ய அனுமதிக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்த வழியில், கண்காணிப்பு நெறிமுறைகள் தற்போதுள்ள ‘குறைவான - கடுமையான’ தொழில்துறை நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாக 84 தொழில் வகைகளுக்கும் தளர்த்தப்பட்டன.மாநிலங்களால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்பது 146 தொழில் வகைகளில் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் ஆய்வுகளை தவிர்க்கலாம் என்பதாகும். 83 தொழில் வகைகளில், சிறப்பு முகவர் நிறுவனங்கள் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் சார்பாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும் 63 வகைகளில் தொழில்கள் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு பதிலாக தங்கள் உமிழ்வை சுயமாக அறிவிக்க முடியும்.

Norms Relaxed
Dilution of compliance protocols: 146 industry types
Self-certification: 63 industry types
Third Party inspections: 83 industry types

*Total number of polluting industry types: 206 (excluding the newly-created non-polluting white category)

சிவப்பில் இருந்து பச்சை நிறத்திற்கு செல்லும் அதிக ஆபத்துள்ள அலகுகள்

கடந்த 2016 பிப்ரவரி 29இல் வெளியான தொழில் வகைப்பாடு, காற்று மாசுபடுத்திகள், நீர் மாசுபடுத்திகள், அபாயகரமான கழிவுகள் மற்றும் வளங்களின் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் 0-100 மாசு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெறும் தொழில்கள் சிவப்பு, 41-59 ஆரஞ்சு, 21-40 பச்சை, மற்றும் 20 அல்லது அதற்கும் குறைவான வெள்ளை என வகைப்படுத்தப்படுகின்றன. வணிகத்தை எளிதாக்குவதற்காக "மாநில மாசு வாரியங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களின்" கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட "வெளிப்படையான" நடவடிக்கை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சிபிசிபி அழைத்தது. முந்தைய வகைப்படுத்தல் (பெட்டிச் செய்தியில் காண்க) "உமிழ்வு (காற்று மாசுபடுத்திகள்), கழிவுகளை (நீர் மாசுபடுத்திகள்) வெளியேற்றுவதால் ஏற்படும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம்" பற்றி கருதவில்லை என மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிக்கையானது முந்தைய வகைப்பாட்டை மதிப்பெண் முறையால் ஆதரிக்கவில்லை என்று கூறியது. இருப்பினும், இரண்டு வகைப்பாடு நடவடிக்கைகளுக்கு இடையிலான ஒப்பீடு, அதிக வித்தியாசத்தை வெளிப்படுத்தாது.

இந்த மறுவகைப்படுத்தல் சிவப்பு வகைப்பாட்டு தொழில்களின் எண்ணிக்கையை 60 ஆக (85 இல் இருந்து), ஆரஞ்சு தொழில்களின் எண்ணிக்கையை 83 ஆகவும் (73 இல் இருந்து), பச்சை நிற வகைப்பாட்டு தொழில்களை 63 ஆகவும் (86 இல் இருந்து) கொண்டு வந்தது; இது புதிய தொழில் பிரிவில் 36 தொழில் வகைகளையும் வைத்தது. இந்நடவடிக்கையில், முன்னர் ஒதுக்கப்பட்டதை விட ஆறு தொழில்கள் மட்டுமே தீவிர வகைபாட்டுக்கு மாற்றப்பட்டன; 152 தங்களது முந்தைய வகைப்பாடுகளை தக்க வைத்துக் கொண்டன; மேலும் 84 முன்னர் ஒதுக்கப்பட்டதை விட குறைவான வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்டன.

Source: Final Document on Revised Classification of Industrial Sectors, CPCB, February 2016

Change in Industry Categories due to Reclassification
Red (60) Red-Red Orange-Red Green-Red
60 0 0
Orange (83) Orange-Orange Red-Orange Green-Orange
51 26 6
Green (63) Green-Green Red-Green Orange-Green
41 3 19
White (36) Red-White Orange-White Green-White
0 2 34

Source: Final Document on Revised Classification of Industrial Sectors, CPCB, February 2016

ஜல்லி உடைக்கும் கிர்ஷர்கள், நிலக்கரி சுரங்கங்கள், கலவை ஆலைகள் மற்றும் சுண்ணாம்பு உற்பத்தி போன்ற தொழில்கள் சிவப்பு வகைகளில் இருந்து ஆரஞ்சு நிற வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்டன. சாம்பல் துகள் ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் வெளியேற்றுதல், ரயில்வே சைடிங், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் பாதை (அனைத்தும் சுற்றுச்சூழலுக்கான அதிக ஆபத்துள்ள தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன) சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கோக் ப்ரிக்வெட்டிங், பேக்கேஜிங் பொருள் உற்பத்தி, பளிங்கு வெட்டுதல் மற்றும் மெருகூட்டல் மற்றும் எமெரி தூள் உற்பத்தி ஆகியன ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Key Industry Types That Have Been Moved To A 'Less Severe' Category Under New Classification
Category change Industry Types
Red to Orange stone crusher, coal washery, hot mix plants, lime manufacturing
Red to Green Fly ash export, transport and disposal; railway sidings; and oil and gas pipelines
Orange to Green Coke briquetting, packaging material manufacturing, cutting and polishing of marble, emery powder

Source: Final Document on Revised Classification of Industrial Sectors, CPCB, February 2016

Industry categories based on their pollution potential -- red, orange and green

Colour-coding of industries was introduced in 1989 in a notification granting Doon Valley a special protection status called ‘Ecologically Sensitive Area (ESA)’. Non-hazardous and non-polluting industries that do not use fuel and employ less than 100 persons were termed green. Orange units were those that discharge technologically controllable liquid effluents, have daily fuel consumption under 24 metric tonnes and employ less than 500 persons. Any unit that consumed more fuel than this or employed more workers was classified red and considered highly polluting. This coding allowed authorities to restrict red industries, regulate the operation of orange ones and permit green units in ESAs. However, it was made mandatory for orange units wishing to locate themselves in ESAs to obtain permission from SPCBs and the environment ministry.

Over time, pollution boards across India adopted the colour code. But observing variations across SPCBs, the CPCB formed a working group in December 2010, with representations from all boards, to create a uniform list of colour-coded industries. Before this, the CPCB had identified 54 types of industries as red and 17 categories as grossly polluting--ones that discharge more than 100 kilolitres of wastewater per day and/or hazardous chemicals.

In its report, the working group suggested a common categorisation based on the pollution potential, the likely impact of pollution on the environment, type (air, water, noise) of pollution and hazard potential of an industry. Scale (large, medium, small) of an industry and fuel use were also considered. In June 2012, based on these recommendations, the CPCB issued a consolidated list of industries under the three categories and directed state PCBs to adopt it. There were 85 red category industries, 73 orange and 86 green.

15 மாநிலங்களில் உள்ள ‘பசுமை’ பிரிவுகளில் மூன்று ஆண்டுகளாக ஆய்வு இல்லை

வியாபாரத்தை எளிதாக்குவதை ஊக்குவிக்க, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், 2014 முதல், வணிக சீர்திருத்த செயல் திட்டங்கள் (Business Reform Action Plans- BRAP) என்று அழைப்பை விடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அவை மாநிலங்களை வரிசைப்படுத்துகின்றன. சீர்திருத்தங்கள் நில ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் கண்காணிப்பு, கட்டுமான அனுமதி, தொழிலாளர் விதிமுறைகள், பயன்பாட்டு அனுமதி மற்றும் தகவல் அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில், 95%-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் ‘சிறந்த சாதனையாளர்கள்’ என்றும் 90 முதல் 95% வரை மதிப்பெண் பெற்றவர்கள் ‘சாதனையாளர்கள்’ என்றும் தொகுக்கப்பட்டுள்ளன. 2017-18 திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமீபத்திய தரவரிசை ஒன்பது சிறந்த சாதனையாளர்களையும் ஆறு சாதனையாளர்களையும் அடையாளம் கண்டுள்ளது.

கடந்த 2018இல் முதல் 15 மாநிலங்களில் நடந்த சில மாற்றங்களைப் பார்க்கலாம்.

Reforms Implemented by the Top 15 States as per BRAP Assessment 2017-18
State BRAP Rank 2017-18 Month/year of allowing Exemption to Green category Duration of change (in months)* Month/year of allowing third party verification for Orange category Duration of change (in months)*
Andhra Pradesh 1 May-16 42 Jun-16 41
Telangana 2 Nov-15 48 Apr-16 43
Haryana 3 Oct-17 25 not implemented
Jharkhand 4 Jun-15 53 not implemented
Gujarat 5 Feb-16 45 Feb-16 45
Chhattisgarh 6 Jan-16 46 Jun-16 41
Madhya Pradesh 7 Apr-15 55 Jun-16 41
Karnataka 8 Jun-16 41 Jun-16 41
Rajasthan 9 Jun-16 40 Jun-16 41
West Bengal 10 Oct-17 25 Nov-16 36
Uttarakhand 11 Jun-16 41 Jun-16 41
Uttar Pradesh 12 Jun-16 41 not implemented
Maharashtra 13 Mar-16 44 Dec-16 35
Odisha 14 Feb-17 33 Jun-16 41
Tamil Nadu 15 not implemented

*Duration of change has been calculated till end of November 2019
Source: Webpages of Business Reform Action Plan (BRAP) 2017-18 and state pollution control boards (last accessed on Nov 10)

கடந்த 2017-18 தரவரிசையில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது என்பதை தொகுப்பு காட்டுகிறது. மே 2016 இல், சில ஆரஞ்சு வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கு - பால், காய்கறி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல் - மூன்றாம் தரப்பு ஆய்வுகளை அரசு அனுமதித்தது. கடந்த ஜூன் 2016 இல், பசுமை வகைப்பாடு தொழில்களுக்கு கடந்த காலங்களில் ‘திருப்திகரமான இணக்கத்தை’ வெளிப்படுத்தியிருந்ததால் வழக்கமான ஆய்வுகளில் இருந்து விலக்கு அளித்தது. இதேபோல், மூன்றாவது இடத்தில் உள்ள ஹரியானாவும் 2017 அக்டோபரில் இதையே செய்தது.

முதலிடம் வகிக்கும் 15 மாநிலங்களில், தமிழ்நாடு தவிர மற்ற அனைத்தும் வழக்கமான ஆய்வுகளில் இருந்து பசுமை வகைப்பாடு தொழில்களுக்கு விலக்கு அளித்துள்ளன. நான்கு தவிர (ஜார்கண்ட், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம்) ஆரஞ்சு வகைப்பாடு தொழில்களுக்கு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆய்வுகளுக்கு பதிலாக மூன்றாம் தரப்பு சான்றிதழை அனுமதித்துள்ளன. சிறிய சிவப்பு நிற வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கும், சுய சான்றிதழ் அடிப்படையில் அனைத்து ஆரஞ்சு மற்றும் பச்சை வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கு ஒப்புதலை புதுப்பிக்க, 2014 அக்டோபர் முதல் தமிழ்நாடு ஒரு நெறிமுறையை கொண்டிருந்தது. இருப்பினும், மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு பிறகு இணக்க ஆய்வுகள் குறித்த புதிய நெறிமுறைகளை இது அறிமுகப்படுத்தவில்லை. சராசரியாக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 15 மாநிலங்களில் பசுமைத் தொழில்கள், இணக்க ஆய்வின்றி செயல்பட்டு வருகின்றன என்பதை இது குறிக்கிறது; 12 மாநிலங்களில் ஆரஞ்சு வகை தொழில்கள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரால் அல்லாமல் மூன்றாம் தரப்பினரால் ஆய்வு செய்யப்படுகின்றன.

கர்நாடகாவில் 22,000 க்கும் மேற்பட்ட இயக்க அலகுகளில் 5,500 ஆரஞ்சு நிற வகைப்பாட்டிலும், 12,000 பச்சை நிற முத்திரையிடப்பட்டவை (மார்ச் 2018 நிலவரப்படி); குறைந்தது இரண்டு ஆண்டுகளாக வாரியத்தின் ஆய்வுகள் நடக்கவில்லை.

மூன்றாம் தரப்பு ஆய்வுகளில் சிக்கல்

மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தெலுங்கானா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (ஈபிடிஆர்ஐ) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) ஹைதராபாத் ஆகியன, தங்கள் வரிசை பட்டியலில் மூன்றாம் தரப்பினராக தேர்வு செய்துள்ளது. ஆரஞ்சு வகை தொழில்களைத் தணிக்கை செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (NEERI) மகாராஷ்டிரா பயன்படுத்துகிறது. ஆந்திர பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம் ஆகியவற்றை கொண்டு ஆய்வு செய்ய ஆந்திரா மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் அடையாளம் கண்டுள்ளது. உத்தரகண்ட் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம், சிபிசிபி அல்லது எந்த மாநில வாரியங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்தின் சான்றிதழையும் ஏற்றுக்கொள்கிறது.

இவற்றில் பல ஏஜென்சிகள், திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளன; மேலும் அவ்வப்போது தவறான தகவல்களை வழங்குதல், தரவுகளை ஏமாற்றுதல் மற்றும் திட்டங்களின் முக்கியமான விவரங்களை மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள கர்ச்சம் வாங்தூ நீர் மின் திட்டத்திற்கான இ.ஐ.ஏ. அறிக்கையைத் தயாரிக்க, சரிபார்க்காமல் திட்ட ஆதரவாளரின் மறு செய்கையை நம்பியதாக நீரி (NEERI) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழில்துறை பகுதியான ஹைதராபாத் பார்மா சிட்டிக்கு, இ.ஐ.ஏ. அறிக்கையைத் தயாரிக்கும் போது முக்கியமான தகவல்களை மறைத்து, திருட்டுத்தனத்தை அனுமதித்ததற்காக, இ.பி.டி.ஆர்.ஐ. (EPTRI) மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த விமர்சனம் குறித்து கருத்தறிய நீரி (NEERI) மூத்த முதன்மை விஞ்ஞானி பி கே லாபசேத்வாரை, இந்தியா ஸ்பெண்ட் அணுகியது. "ஈ.ஐ.ஏ மற்றும் பிற ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் போது, நீரி விடாமுயற்சியுடன் செயல்படுகிறது," என்று அவர் கூறினார், 2001-03 ஆம் ஆண்டில் கர்ச்சம் வாங்டூ அறிக்கையைத் தயாரித்தவர்ர்களில் பெரும்பாலான விஞ்ஞானிகள் இப்போது ஓய்வு பெற்றவர்கள்.

மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு ஆய்வுகளை மாற்றுவது சுமை குறைவு அல்லது எதிர்பார்த்தபடி சிறந்த இணக்கத்திற்கு வழிவகுத்திருக்காது. "மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்களின் பணிகளை பதில் கண்காணிப்புக்கு மட்டுமே மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு கடுமையானது என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன" என்று பெங்களூருவைச் சேர்ந்த அசோகா டிரஸ்ட் ஃபார் ரிசர்ச் ஆப் எக்கோலஜி அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் நிர்வாகத்தை சேர்ந்த சரச்சந்திர லெலே கூறினார்.

ஆய்வு நடைமுறை குறித்த எங்கள் கேள்விகளை 2020 ஜனவரி 7 அன்று ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர்களுக்கு மின்னஞ்சல் செய்தோம். ஆந்திர மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை சுற்றுச்சூழல் பொறியாளர் பதிலளிப்பார் என்று தொலைபேசியில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது; ஆனால் அந்த அதிகாரியிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. கர்நாடக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஈபிடிஆர்ஐ தலைவருக்கு நாங்கள் ஜனவரி 8, 2020 அன்று மீண்டும் மின்னஞ்சல் செய்தோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கப் பெற்றதும் இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

‘திருப்திகரமான கடந்தகால இணக்கத்தை’ எவ்வாறு வரையறுப்பது

ஒழுங்குபடுத்தப்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு ஒரு நிலையான உறுதிப்பாட்டை நிரூபித்திருக்கும்போது, அல்லது காலப்போக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாட்டின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் சரிவு ஏற்பட்டால் மட்டுமே, சுய சான்றிதழ் அல்லது ஒழுங்குமுறை மேற்பார்வை எளிதாக்குதல் என்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில், ஒழுங்குமுறை தளர்த்தல்கள் வழங்கப்பட்ட சாம்பல் அகற்றல் மற்றும் ரயில்வே சைடிங் போன்ற துறைகள் மீண்டும் மீண்டும் இயல்புநிலை, கடும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

‘திருப்திகரமான கடந்தகால இணக்கம்’ என்ற சொற்றொடரைச் சேர்ப்பது, மீண்டும் குற்றவாளிகளுக்கு வெகுமதி அளிப்பதற்கான வாய்ப்பை நீக்கியிருக்கக்கூடும். இருப்பினும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ‘திருப்திகரமான இணக்கம்’ என்பதை தெளிவாகவோ அல்லது போதுமானதாகவோ வரையறுக்கவில்லை. வாரியத்தின் மூடல் / உற்பத்தி நிறுத்த உத்தரவுகள் இல்லை மற்றும் நீதிமன்றங்களின் தடை உத்தரவுகள் எதுவும் இல்லை என்று ஆந்திரா வரையறுக்கிறது. ஆனால், இணங்காத நிகழ்வுகளில் சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கக்கூடிய வாரியம் அல்லது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இது தவறவிடுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அல்லது கடந்த மூன்று தொடர்ச்சியான ஆய்வுகளில் அல்லது உமிழ்வு / கழிவுகளை கண்காணிப்பதற்கான ஆன்லைன் அமைப்புகளை நிறுவுதல் போன்ற சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்ண்டும் என்று ஹரியானா மாசுகட்டுபாட்டு வாரியம் வரையறுக்கிறது. ஆனால் இந்த உத்தரவு, ஆன்லைன் கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர, வாரியம் எவ்வாறு இணக்கத்தை மதிப்பிடும், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நீதிமன்றம் அல்லது குழு உத்தரவுகளிய அத்தகைய மதிப்பீடு கருத்தில் கொள்ளப்படுமா என்பதை குறிப்பிடவில்லை. மேலும், இதுபோன்ற திட்டங்களை சுற்றியுள்ளவர்கள் எழுப்பிய குறைகளை, கடந்த கால அல்லது தற்போதைய இணக்கத்தை மதிப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையில் இடம்பெறவில்லை.

இந்த எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, சுய சான்றிதழ் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வுகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு வழிவகுக்கும்.

(கபூர், சுயாதீனமான சுற்றுச்சூழல் கொள்கை ஆய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.