கடந்த ஏப்ரல் 20, 2020 அன்று, கோவா தனது ஏழாவது மற்றும் கடைசி கோவிட் 19 நோயாளியை சிகிச்சையில் இருந்து விடுவித்து, நோயாளிகள் எண்ணிக்கையில் பூஜ்ஜியம் எட்டிய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பு நிலைக்கு மாறியது; இம்மாநிலம், மார்ச் 27, 2020 அன்று தனது முதல் நோயாளியை கண்டறிந்த 24 நாட்களுக்கு பிறகு இது சாத்தியமானது. கடந்த 2018 ஆம் ஆண்டில், இம்மாநிலம் 80 லட்சம் சுற்றுலா பயணிகளை-- சமீபத்திய தகவல் கிடைக்கும் ஆண்டு கணக்கின்படி -- ஈர்த்தது; கோவிட் 19 தொற்றுநோயின் பரவலால், இத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்க்கு ஆயத்தமானது, தனது முதல் நோயாளியை சந்திக்கும் முன்பே ஊரடங்கு அமல், பரிசோதனை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பிற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் போன்றவை, இத்தொற்றுக்கு எதிராக கோவா மாநிலத்தை எதிர்த்துப் போராடுவதில் உதவியுள்ளதாக, அதன் சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் பி ரானே, எங்களுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

இந்தியாவில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டியுள்ளது, மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

சுரங்கம் மூடல் மற்றும் சுற்றுலாத்துறை பாதிப்புக்குள்ளான நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிதும் சார்ந்துள்ள கோவா மாநிலத்தின் ஒரே “வலிமையான தூண்”, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாதது சிக்கல் என்று, தொழில் வர்த்தகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ரானே கூறினார்.

நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

இருந்த ஏழு கோவிட்19 நோயாளிகளும் இப்போது குணமடைந்துள்ள நிலையில், கோவா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஆரம்பத்தில், இந்தியாவில் கொரொனா நோயாளிகள் மெதுவாக உயரத் தொடங்கியபோதே, ஊரடங்கு அறிவித்த முதல் மாநிலங்களில் நாங்கள் ஒருவராக இருந்தோம்; மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டம் கூடாது என்று வலியுறுத்தி வந்தோம். நாங்கள் எங்கள் அமைப்புகளை உரிய வகையில் கட்டமைத்தோம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம், [நாவல்] கொரோனா வைரஸ் பற்றி மக்களிடையே மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மிக முக்கியமாக, எங்கள் ஆய்வகங்களை சரியான இடத்தில் வைத்தோம் - தேவையான அனைத்து நெறிமுறைகளும், உரிய நேரத்தில் உரிய இடத்தில் செய்யத் தொடங்கினோம். நாங்கள் [நோயாளிகள் எண்ணிக்கையில்] பூஜ்ஜியமாக இருந்தபோது, சரியான வகை எச்சரிக்கைகளிய எழுப்பத் தொடங்கினோம், எங்களது ஊழியர்களுக்கு சரியான பயிற்சியை அளித்து, திறன்களை உருவாக்கினோம்.

நீங்கள் எப்போது முழு வீச்சாக பணியை மேற்கொண்டீர்கள்?

உண்மையில், கோவாவில் [முதல்] நோயாளியை நாங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, நெறிமுறைகளை வரையத் தொடங்கினோம். முதல் நோயாளியை கண்டறிந்த நிமிடமே, அடிப்படையில் எங்கள் முழு அமைப்பும் செயல்படுத்தி, நோயாளியின் அனைத்து கண்காணிப்புகளையும் (அவர் எங்கிருந்து வந்தார்) எல்லா நெறிமுறைகளையும் நாங்கள் செய்து கொண்டிருந்தோம்; பாதித்த மக்களை எளிதாக கண்டறியும் வகையில் எங்கள் அமைப்பு நன்கு நிறுவப்பட்டு இருந்தது. நோய் கண்டறியப்பட்டு நேர்மறையாக இருந்த ஏழு பேரும் ஒரே கப்பலில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிந்தோம்; நான் எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பது போல, எங்கள் கவலை எல்லாம் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற இடங்களில் இருந்து கப்பல்களில் இருந்து மக்களை பற்றி தான்.

ஒரு உத்தியாக, அடிப்படை நெறிமுறைகள் எதுவானாலும் நாங்கள் ரேண்டம் சோதனைகளை நெறிமுறைப்படுத்தி பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல் பணிகளை செய்தோம். கூடுதலாக, நாங்கள் அனைத்து வெளி நோயாளி பிரிவுகளை தற்காலிகமாக மூடினோம். கோவாவில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்க முயன்றோம். ரேண்டம் சோதனை நெறிமுறையை பின்பற்றினோம். மக்களைச் சரிபார்க்க ரேண்டம் சோதனைகளை மேற்கொண்ட முதல் மாநிலம் நாங்கள் தான் என்று நினைக்கிறேன், இங்கிருந்த வெளிநாட்டவர்களை கூட பரிசோதித்தோம். எனவே, கோவா மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை மதிப்பிடும் அளவுக்கு சிறந்த முறையில் நாங்கள் இருந்தோம். அதே நேரத்தில், கால்டாக் (இன்று டெல்லி அரசால் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் தொலைபேசி ஆலோசனைகள் போன்ற தொழில்நுட்பங்களின் புதுமைகளை பயன்படுத்தி மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க முயற்சித்தோம். அதே நேரம், சோதனை அடிப்படையில் நெறிமுறைகளை மேம்படுத்தி வந்தோம்.

. நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். கோவா இன்று நோயாளிகள் எண்ணிக்கையில் பூஜ்ஜியம் நிலையில் இருந்தாலும் கூட, உண்மையான நிலையை நாங்கள் அறிவோம் - உங்களிடம் தெரிவித்தபடி, தொழில்துறை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ரேபிட் சோதனை கருவிகளில் சிக்கல்கள் இருப்பதை அறிவீர்கள். நாம் பேசும் போது, சோதனையின் வீச்சை நீங்கள் அதிகரிக்கும்போது, வைராலஜி ஆய்வகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் எனது செயலாளரிடம் கூறியுள்ளேன், பல மாவட்ட மருத்துவமனைகளிலும் பிற இடங்களிலும் சோதனை அமைப்புகளை அதிகரிக்க வேண்டும். இதனால் தொழில்துறை தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ரேண்டம் அடிப்படையில் சோதிக்கப்பட வேண்டிய நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படலாம். நான் உங்களுக்குச் சொன்னது போல, நாங்கள் வைத்திருக்கும் சீரற்ற சோதனை நெறிமுறை இன்று நமக்கு உதவுகிறது.

இப்போது, நாம் சொன்னது போலவே, பாதித்தவர்கள் மாநிலத்திற்கு வருவது ஒரு பெரிய பிரச்சினை. அதை கையாள்வதில் நாங்கள் இப்போது மிகச் சிறந்தவர்கள்.

கோவாவின் பல்வேறு இடங்களில் சிறிய மையங்கள் அமைத்து, அங்கு மக்கள் எளிதில் சென்று சோதனை செய்யலாம். இப்போது ஊரடங்கின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, மக்கள் தொழில்களை தொடங்கியுள்ள நிலையில், இப்போது நீங்கள் பின்பற்றும் உத்தி என்ன?

அடிப்படையில், இப்போது நாங்கள் நோயெதிர்ப்பு பரிசோதனையை செய்யவில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு ஹாட்ஸ்பாட் அல்ல. ஆனால் எங்கள் பகுதியில் சில இடங்கள் உள்ளன, அவை நம்மைச் சுற்றியுள்ள ஹாட்ஸ்பாட்கள். இது எங்களுக்கு ஒரு பெரிய சவால் - கோவாவை கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா சூழ்ந்துள்ளது. இப்போது, சோதனை மையங்களை எல்லைகளில், தொழில்துறை பகுதிகளில் கிடைக்கச் செய்கிறோம், மாதிரி சேகரிப்பையும் எளிதாக்குகிறோம்.

இரண்டாவது அம்சம் என்னவென்றால், எங்களுடன் இணைந்திருக்க தொழில்துறையை ஊக்குவிக்கிறோம். ஊரடங்கு உள்ளது, மக்கள் 14 நாட்களுக்கு மேல் வீட்டில் இருக்கிறார்கள். இருந்தும் கூட முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மிகுந்த எச்சரிக்கையுடன், அரசின் பரவலான கண்காணிப்பை முடித்து, வீட்டுக்குவீடு கணக்கெடுப்பு நடத்தியது மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5,000 பேரை அடையாளம் கண்டுள்ளது; கோவா போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் [கோவாவில் 2018 இல் 1.5 மில்லியன் மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது] கோவிட்19 பாதிப்பு என்ற இந்த எண்ணிக்கை பெரியது. நிமோனியா மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் இவர்கள். நாங்கள் அமைதியாக எங்கள் செயல்பாட்டைச் செய்கிறோம்; ஐ.சி.எம்.ஆர் [இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்] வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், மற்றும் இணையாக நிபுணர்களுடன் பேசுவது மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த நெறிமுறைக்குள் எங்கள் சொந்த நெறிமுறையை வரைந்தோம்.

உங்கள் மருத்துவமனைகளின் திறனை, அது தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளின் தற்போதைய சுமை என்ன?

எங்களிடம் போதுமான எண்ணிக்கையிலான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தில் மணிப்பால் குழு மருத்துவமனைகள் மற்றும் ஹெல்த்வே என்ற இரண்டு பெரிய மருத்துவமனைகள் உள்ளன - உள்ளூரில் முக்கிய மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன; எங்களிடம் விக்டர், அப்பல்லோ உள்ளது, எங்களிடம் அரசு திறன்கள் உள்ளன. ​​போதுமான படுக்கை வசதிகள் உள்ளன, குறிப்பாக அரசு மருத்துவக்கல்லூரியிலேயே போதுமான படுக்கை எண்ணிக்கை உள்ளது; நாங்கள் அதை நிர்வகித்துள்ளோம். எங்களிடம் பிரத்யேக கோவிட்19 மருத்துவமனை உள்ளது. இப்போது நாம் [தொற்று உள்ளவர்] பூஜ்ஜியமாக இருப்பதால், கோவிட் 19 மருத்துவமனையில் திறன்களை உருவாக்க முயற்சிக்கிறோம். எங்களுக்கு இப்போது நேரம் உள்ளது, எனவே நாங்கள் திறன்களை உருவாக்குகிறோம். இந்நேரத்தில், அரசு மருத்துவமனைகளில், வென்டிலேட்டர்களை பற்றி நீங்கள் என்னிடம் கேட்டால், அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் எவருக்கும் வென்டிலேட்டர் தேவையில்லை, மேலும் வரையறுக்கப்பட்ட நெறிமுறையின்படி அவற்றை எதிர்மறையாக அறிவிக்க முடிந்தது. எங்களது அமைப்பில் 100 வென்டிலேட்டர்கள் உள்ளன, ஆனால் 400 வென்டிலேட்டர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு ஆர்டரை கொடுத்திருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே எங்கள் ஊழியர்களுக்கு போதிய பயிற்சியளித்து வருகிறோம், செவிலியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளிக்கிறோம், எனவே எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்வு அல்லது சூழ்நிலை ஏற்பட்டால் நாங்கள் அதற்கும் தயார்படுத்துகிறோம்.

நீங்கள் ஏழு நோயாளிகளை குறிப்பிட்டுள்ளீர்கள், அவர்களில் யாருக்கும் அது தீவிரமடையவில்லை என்று சொன்னீர்கள். அவர்கள் அனைவருக்கும் அடிப்படை அறிகுறிகள் இருந்தனவா, அல்லது அவர்களில் யாருக்கேனும் கடும் அறிகுறிகள் என்ற நிலைக்கு முன்னேறியதா?

அவர்களில் ஆறு பேர் ஒரு கப்பலில் இருந்து வந்தார்கள், வெளிநாட்டில் இருந்து பயணம் செய்து மும்பைக்கு வந்தவர்கள்; அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து மும்பைக்கும் பின்னர் கோவாவுக்கும் வந்தார், மற்றவர்களும் கோவா மாநிலத்திற்கு வந்த அதே பாதையில் கப்பலில் வந்திருந்தனர். கடல் பயணம் மற்றும் கடல் வழிகள் மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் இருந்தன. எனவே அடிப்படையில், அவர்கள் கோவாவுக்குள் வந்ததும், நாங்கள் பரிசோதித்தோம்; அவர்களில் ஒருவர், தனது கோவிட்19 உறுதியானதை நண்பர் போனில் தெரிவித்ததாக கூறினார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்; நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமான நிலையத்தில் அனைவரையும் சோதித்து அவர்களின் பயண வரலாறுகளையும் ஆய்வு செய்தோம். எனவே, நாங்கள் பின்தங்கிய நிலையில் அவர்களை அனுமதிக்க முடியும், நாங்கள் சோதித்த நிமிடத்தில், அவர்களுக்கு நேர்மறையாக இருந்தன. எனவே அடிப்படையில், நாங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பிற விஷயங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது, இது நாம் பின்பற்ற வேண்டிய சாதாரண நெறிமுறை. ஆனால் அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவர் கப்பலில் இருந்து வந்த சிறுவர்களில் ஒருவரின் சகோதரர். ஆனால் அவர்கள் நல்ல நிலையில் இருந்தனர்; அவர்களுக்கு சிகிச்சை அளித்தோம், அவர்களில் யாருக்கும் வென்டிலேட்டர் தேவை என்ற நிலை கிடையாது.

கோவா ஒரு அசாதாரண மாநிலமாகும், மக்கள் கோவாவுக்குள் வருகின்றனர்; இங்கிருந்து செல்வதை விட தங்கி பார்வையிடவே விரும்புகின்றனர்;இது மற்ற இடங்களுடனும், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்திலும் நடக்கிறது. நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனும் போதும், மே 3ம் தேதியை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

நாம் இருவரும் பேசுகிறோம்; நாட்டில் நோயாளிகள் அதிகரித்து வருவதை நாம் இருவரும் அறிவோம். உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில், செயல்பாட்டில் உள்ளவர் எண்ணிக்கை கொண்டு மூடப்படுகின்றன. இது மிகுந்த கவலைக்குரிய சூழ்நிலை. எங்களுக்கு, வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமரும் அவரது வழிகாட்டுதலும் அவ்வப்போது உத்வேகம் அளித்தன. மேலும், இந்திய அரசு சுகாதார அமைச்சர் கூட.

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, கோவாவுக்கு வருவதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. இப்போது அது நல்லது தான்; ஆனால் மக்கள் கோவா மாநிலத்திற்கு அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கும் சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை. எனது அமைச்சரவையின் முதலமைச்சருக்கு நான் பரிந்துரைத்திருப்பது என்னவென்றால், அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, கோவிட் இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். ஆனால், பயணங்கள் அவ்வளவு வேகமாக தொடங்கிவிடும் என்பதை நான் காணவில்லை. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் பலரின் கூற்றுப்படி, மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் என்று நாம் கூறினாலும், நோயாளிகள் அதிகரித்து வருவதால், நாம் அனைவரும் எச்சரிக்கையாக நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.

தொழில், சுற்றுலாவை பொருத்தவரை, அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் இது புத்துயிர் பெறும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால், நம்மில் எவரும், நான் கூட, இலவச டிக்கெட் கொடுத்து மும்பை அல்லது டெல்லிக்கு பறக்கச் சொன்னால், எந்த இடத்திற்கும் பறக்க விரும்பவில்லை என்பதே இப்போதைய நிலை. எல்லோரும் தங்கள் இடத்திலேயே இருக்கப் போகிறார்கள், எல்லோரும் கவலைப்படுகிறார்கள், ஏனென்றால் நாம் பேசும்போது கோவிட் 19 தொற்றுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. எல்லோரும் சேனல்களில் மூழ்கி இருக்கின்றனர். நீங்கள் தினமும் பார்ப்பது கோவிட்19, மற்றும் அது தொடர்புடைய மரணம் பற்றியது. எனவே, எல்லோருடைய மனதிலும் பயம் இருக்கிறது. சுற்றுலாத்துறை உடனே புத்துயிர் பெறும் என்று நான் நினைக்கவில்லை.

இதன் விளைவாக, உங்களிடம் கூறியவாறே, தொழில், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பது கவுரவமாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் முழக்கமாக இருந்து வருகிறது, மேலும் அவை இரண்டும் சீரானதாக இருக்க வேண்டும். இதன் மூலம் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம். எட்டக்கூடிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. முழுமையான சோதனைகள் செய்யாமல் யாரையும் கோவா மாநிலத்திற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை; எல்லைகளில் நோயெதிர்ப்பு சோதனைகளை பயன்படுத்தலாமா என்று இந்திய அரசிடம் இருந்து தெளிவு பெற காத்திருக்கிறோம்; ஆனால் அவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர், ஏனென்றால் எல்லைகளில் நோயெதிர்ப்பு சோதனை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐசிஎம்ஆர் நம்பிக்கை கொள்ளவில்லை. இதேபோல், மக்கள் கோவா மாநிலத்திற்கு கோவிட் இல்லையென்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் கண்டிப்பாக இருக்க விரும்புகிறோம், எங்களுடையது ஒரு சிறிய மாநிலம், எங்களுக்கு வரம்புக்கு உட்பட்ட திறன்களே கிடைத்துள்ளன, அதை கொண்டு நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம், நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம்; ஆனால் சுற்றுலாவுக்கு மாநிலத்தை அனுமதித்தால், நிலைமையை கையாள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தொழில், பெண்கள் மற்றும் குழந்தை நலன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை கூடுதல் இலாகாக்களையும் நீங்கள் கையாளுகிறீர்கள். நீங்கள் எதிர்நோக்கும், பொது சுகாதார நெருக்கடிக்கு அப்பால் உள்ள விஷயங்கள் எப்படி இருக்கும்? அதையும் மீறி கோவாவின் அதிர்ஷ்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

மருந்து துறை போலவே தொழில் கவலைக்குரியது- நாங்கள் இங்கே மருந்து துறையை வலியுறுத்தி வருகிறோம், மருந்து தயாரிப்புகளின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக கோவா உள்ளது. இது தவிர, தொழில்துறையில் இருந்து கோரிக்கை வந்துள்ளது, இந்த பட்டியல் ஏற்கனவே உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனவே, அனைத்து பட்டியலும் டி-ஐ பின்பற்றும். இந்திய அரசு வழங்கிய விதிமுறைகளின்படி வசதி செய்யவும் முயற்சிக்கிறோம், மேலும் வர்த்தகம் மற்றும் பிற விஷயங்களின் சரியான ஓட்டம் இருப்பதை உறுதிசெய்கிறோம். எந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை தொடங்க வேண்டிய தொழில்கள் என்பதால் நாங்கள் பின்பற்ற முயற்சிக்கிறோம்.

கோவாவில் எங்களை பொறுத்தவரை, எங்களுக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன - ஒன்று சுற்றுலா; இதை தான் நாங்கள் முற்றிலும் சார்ந்து இருக்கிறோம்; இரண்டு, சுரங்கம், நாங்கள் ஒரு பெரிய அளவிற்கு இதை சார்ந்து இருந்தோம். சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளன, சுற்றுலா பாதிக்கப்படுகிறது, எனவே வருவாயைப் பொறுத்தவரை மிகப்பெரிய பற்றாக்குறை உள்ளது. இது கவலைக்கு ஒரு முக்கிய காரணம். தொழிற்துறை பின்னடைவுக்கு அனுமதிக்க முடியாது. தொழில் இப்போது பலமான ஒரு தூணாக உள்ளது, கோவா மாநில அரசுக்கு, இத்தொழில் சுமுகமாகவும் அதே நேரத்தில் உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டு உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதையும் நாம் காண வேண்டும். அப்போதும் கூட, உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படப்போகிறது. உற்பத்தி முழு திறனாக இருக்கப்போவதில்லை.

மேலும், கோவா மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு [அவர்கள் பயணித்த போது] திரும்பிச் சென்றுள்ளனர். எனவே, ஒரு பெரிய கேள்வி உள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டதும், நிறைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்; எனது இந்த கணிப்பு தவறாகக்கூட இருக்கலாம். அவர்கள் கோவாவில் தங்க விரும்பவில்லை, எல்லோரும் வீடு திரும்பவே விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கொரோனா வைரஸின் பயம் அதிகம் - அவர்கள் ஒரு கட்டுமானத் தொழிலாளியோ அல்லது சாலைப் பணியாளராக இருந்தாலும் சரி - அவர் மாநில அரசின் எந்த உதவியையும் விரும்பவில்லை. அவர் விரும்புவது எல்லாம் வீட்டிற்கு திரும்பிச் செல்வது ஒன்று தான். எனவே, இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அவர்கள் மீண்டும் [திரும்பிச் ] சென்றால், இது ஆற்றலை குறைக்கும்.

நீங்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் நகரங்களை போலவே, புலம்பெயர்ந்த உழைப்பையும் சார்ந்து இருக்கிறீர்கள் தானே.

நிச்சயமாக, நாங்கள் சார்ந்துள்ளோம். கோவா மாநிலத்தில் அவர்கள், எங்களது ஒரு முக்கிய பகுதியாகும். அவர்கள் தொழில்களில், உற்பத்தியில் மற்றும் திறனற்ற உழைப்பைக் கொண்ட பல தொழில்களான பேக்கிங் மற்றும் பிற தொழில்கள், அவை பயன்படுத்தப்படுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட, சுற்றுலாத் துறையிலும் மருத்துவமனைகளிலும், அவர்கள் எங்களுக்கு உதவுகின்றன. திரும்பிச் செல்ல விரும்பும் மக்களில் ஒரு பெரிய பகுதி இருப்பதை நான் காண்கிறேன். தொழிற்துறையை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது மிகவும் கடினமாக இருக்கும், இது ஒரு சவால், ஆனால் நாங்கள் சவாலுக்கு ஏற்ப வாழ்வோம் ... அவற்றை எவ்வாறு சிறப்பாக கவனிப்பது என்பதை பார்க்க முயற்சிக்கிறோம். எல்லா தொழில்களும் - அரசு எவ்வாறு காலடி எடுத்து வைக்க முடியும் என்பது இப்போது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் இந்த அம்சத்தை கவனித்துக் கொள்ளலாம்: ஊரடங்கிற்கு பிறகு என்ன நடக்கப் போகிறது, அவர்கள் இங்கே இருப்பது அவசியமில்லை. உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டால், அது மாநில அரசுக்கு ஒரு பெரிய சவால் ஆகும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.