புதுடெல்லி: உலகளாவிய புகையிலை நெட்வொர்க்கிங் அமைப்பின் உயரியதான புகையிலை தொழில்துறை நிகழ்வு, அக்டோபர் 2010 இல் பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்திய புகையிலை நிறுவனம் லிமிடெட்டிற்கு (ITC) சொந்தமான ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்வில், இந்திய புகையிலை வாரியமும் கூட்டு சேர்ந்திருந்தது.

புகையிலை வர்த்தக அமைப்பின் நிகழ்வில், ஒரு அரசு நிறுவனம் கூட்டு சேர்ந்தது, புகையிலை மற்றும் அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் தடைசெய்யும் ஒரு இந்திய சட்டத்திற்கு எதிரானது என்று, உபேந்திர போஜானி உள்ளிட்ட சில பொது சுகாதார நிபுணர்கள் கருதினர்.

இந்த நிகழ்வை எதிர்த்து , போஜானியின் பணியிடமான பொது சுகாதார நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. புகையிலை வாரியம் அதன் ஸ்பான்சர்ஷிப்பை வாபஸ் பெறவும், நிகழ்விலிருந்து வெளியேறவும் வேண்டுமென்ற அந்த மனுவில் கோரப்பட்டது. புகையிலைத் தொழிற்துறையுடனான அனைத்து தேவையற்ற தொடர்புகளை அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சகங்கள் முழுவதையும் தடுக்கும் ஒரு கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும் என்றும், அவர்கள் விரும்பினர்.

சிறிது காலத்திற்கு பின்னர், புகையிலை வாரியம் அதிலிருந்து விலகிக் கொண்டதோடு, தனது நிதியையும் திரும்பப் பெற்றது. புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தைப் பின்பற்றுவதாகவும், அரசுக் கொள்கைகளில் புகையிலைத் தொழில்துறையின் தலையீடு மற்றும் செல்வாக்கைத் தடுப்பதற்கான கொள்கையை வகுப்பதாகவும், மத்திய அரசு நீதிமன்றத்திற்கு ஒரு உறுதிமொழியைக் கொடுத்தது, அதைத் தொடர்ந்து அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பொது சுகாதாரக் கொள்கைகளில் புகையிலை தொழில்துறை தலையிடுவதைத் தடுக்க, அரசு அதிகாரிகளுக்கு ஐந்து பக்க நடத்தை விதிமுறைகளைக் கொண்டுவர அரச்சுக்கு முழு தசாப்தம் ஆகியுள்ளது. ஆனால் நடத்தை விதிமுறைகள், உள்ளமைக்கப்பட்ட வரம்புடன் வருகிறது: பொதுக் கொள்கையில் புகையிலைத் தொழில்துறையின் செல்வாக்கு மிகவும் பரவலாக இருந்தாலும், சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

புகையிலைத் தொழில்துறையின் குறுக்கீட்டைக் கட்டுப்படுத்துதல்

"கடந்த 2010 ஆம் ஆண்டில், நீதிமன்ற உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு கொள்கையை கொண்டு வர அரசை விரைவாகத் தூண்டும் என்று நான் நம்பினேன்," என்று, இக்கொள்கையில் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வந்த போஜனி கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக, இக்கொள்கையின் ஏற்பட்ட முன்னேற்றத்தை சரிபார்க்க, போஜானி தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் மனுக்களை தாக்கல் செய்தார், அத்துடன் நிலுவையில் உள்ள விஷயத்தை நினைவூட்டுவதற்காக, 2010ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு புதிய சுகாதார செயலாளரையும் அவர் தொடர்பு கொண்டார். "சில வருடங்களுக்குப் பிறகு, இது அவ்வளவு சுலபமாக நடக்கப்போவதில்லை... குறிப்பாக புகையிலை நலன்கள் தொடர்பாக சுகாதார அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்திற்கு இடையே வேறுபாடு இருப்பதால், நடக்காது என்பதை நான் உணர்ந்தேன் " என்று, இப்போது பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநரான போஜானி கூறினார்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல வல்லுநர்கள் இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், இந்த புதிய நடத்தை நெறிமுறைகளால் பெருமளவு மகிழ்ச்சியடைவதாகவும், அதன் உள்ளார்ந்த வரம்புகள், கவனத்தை ஈர்த்ததாகவும் கூறினர். எடுத்துக்காட்டாக, கர்நாடக உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டில் தடுத்து நிறுத்திய, உலகளாவிய புகையிலை வலையமைப்பு மன்றம் போன்ற நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது, ஏனெனில் புகையிலை வாரிய அதிகாரிகள், அல்லது வர்த்தகம் அல்லது நிதி அமைச்சகங்களின் அதிகாரிகள் புகையிலை தொழில் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதை இந்த விதிமுறை தடை செய்யவில்லை.

இருப்பினும், இந்த நிறுவனங்கள் புகையிலை சாகுபடி மற்றும் விற்பனை தொடர்பான பல சிக்கல்களை, அதாவது இந்தியாவில் வளர்க்கப்படும் புகையிலை அளவு, ஏற்றுமதி, சுங்கம், வரிகள் மற்றும் புகையிலை மற்றும் புகையிலை பொருட்களான சிகரெட் மற்றும் குட்கா மீதான வரி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. புகையிலை சாகுபடி, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே புகையிலை வாரியத்திற்காக தொகையாகும்.

நடத்தை விதிகளுக்கும் வரம்புகள் உள்ளதாக, விமர்சகர்கள் தெரிவித்தனர். எடுத்துக்காட்டாக, புகையிலை நிறுவனங்களில் அரசு முதலீடு (ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐ.டி.சி-யில் உள்ள பிற பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகள் போன்றவை) மற்றும் புகையிலை நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிதி போன்ற பிரச்சினைகளை இது நேரடியாகக் குறிப்பிடவில்லை. புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது அவற்றின் பொதுத் தோற்றத்தை மேம்படுத்தவும்" செயல்படுகிறது என்று போஜனி கூறினார்.


புகையிலை தொழில்துறை தலையீட்டைத் தடுக்க கொள்கையை வகுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்ட சூழலில், 2011 ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் ஒருபகுதி இது.

புகையிலை தொழில் குறுக்கீட்டில் இந்தியாவின் மதிப்பெண்

நவம்பரில் வெளியிடப்பட்ட உலகளாவிய புகையிலை தொழில்துறை குறுக்கீடு குறியீ- 2020 இல், இந்தியா சில முன்னேற்றம் கண்டது. இந்தியா இந்த ஆண்டில் 61/100 என்ற மதிப்பெண்களை ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டில் 69 ஆகவும், 2017 இல் 72 ஆகவும் இருந்தது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தில் புகையிலைத் தொழிலில் இருந்து அதிக தலையீட்டைக் குறிக்கிறது.

புகையிலை தொழில்துறை குறுக்கீடு குறியீடானது, புகையிலை கட்டுப்பாடு தொடர்பான புகையிலைத் துறையின் உதவியை அரசு ஏற்றுக்கொள்கிறதா / ஆதரிக்கிறதா / ஒப்புக் கொள்கிறதா, புகையிலை நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டங்களில் அரசு பங்கேற்கிறதா, தொழில்துறைக்கு சிறப்பு நிதிச்சலுகைகள் வழங்கப்படுகிறதா மற்றும் அரசு அதிகாரிகள் புகையிலை தொழில் நிர்வாகிகளை சந்திக்கிறார்களா என்பது போன்ற 20 அளவுருக்கள் மீதான மதிப்பெண்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்துகிறது.

புகையிலை தொழில்துறை குறியீட்டின் முதன்மை ஆசிரியரான மேரி அசுண்டா தனது சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கான இந்தியாவின் புதிய நடத்தை நெறியை விவரித்த விதம் ஒரு "நல்ல தொடக்கமாகும்". அனைத்து அரசு அதிகாரிகளையும் உள்ளடக்கும் போது இது "மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" ஏனெனில் "புகையிலை தொழில், வர்த்தகம், நிதி மற்றும் வேளாண்மை போன்ற சுகாதாரம் சாராத துறைகளை அதன் நலன்களை வென்றெடுப்பதில் மிகவும் இழிவானது என்பதால்" என்று, புகையிலை கட்டுப்பாட்டில் உள்ள நல்லாட்சிக்கான உலகளாவிய மையத்தின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை தலைவரான அசுண்டா கூறினார். ஆஸ்திரேலியா, புருனே, தாருஸ்ஸலாம், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே ஒரு தேசிய நடத்தை விதிமுறை அல்லது வழிகாட்டுதல் உள்ளது, அது அவர்களின் முழு அரசுக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

சில சந்தர்ப்பங்களில் புகையிலைத் தொழிலைத் தக்க வைத்துக் கொண்டதற்காக இந்திய அரசை இந்த அறிக்கை பாராட்டியது. அரசு, "இந்தியாவில் இ-சிகரெட்டுகளைத் தடைசெய்து 2019 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தை ஆதிக்கம் செலுத்துவதற்கும் நிறுத்துவதற்கும் தொழில்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நிராகரித்தது" என்று அது கூறியுள்ளது.

"தொழில்துறை தலையீட்டைத் தடுப்பதற்கான இந்தியாவின் புதிய நடத்தை விதிமுறை அடுத்த குறியீட்டிலும் மேம்பட்ட மதிப்பெண்களில் பிரதிபலிக்கும்," என்று, பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இலாப நோக்கற்ற HRIDAY நிர்வாக இயக்குனர் மோனிகா அரோரா கூறினார். "ஆனால் குறியீட்டுக்குள் உள்ள சில கூறுகள் புகையிலை நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டங்களின் பங்கு மற்றும் செல்வாக்கு போன்ற முன்னேற்றத்தைக் காட்டவில்லை" என்றார்.

புகையிலை தொழில் அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் அதிகாரிகள் தொடர்பு கொண்ட பல எடுத்துக்காட்டுகளை இந்த அட்டவணை பட்டியலிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆயுள் காப்பீட்டுக் கழகம் உட்பட பல அரசு நிறுவனங்கள் ஐ.டி.சி லிமிடெட் மற்றும் பிற புகையிலை நிறுவனங்களில் நிதிப் பங்குகளைக் கொண்டுள்ளன. முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், முன்னாள் தூதர் மீரா சங்கர் மற்றும் சுற்றுலா அமைச்ச முன்னாள் செயலாளர் ஷிலாபத்ரா பானர்ஜி போன்றவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் புகையிலை நிறுவனங்களின் வாரியத்தில் அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் புகையிலை தொழில் அனுபவிக்கும் நிதி நன்மைகளான செஸ் மீதான விலக்கு மற்றும் பீடி பொருட்கள் விற்பனை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றையும் இது கொடியிட்டது.

புகையிலை நிறுவனமான பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல் நிதியளித்த ஒரு அறக்கட்டளையின் தலைவருக்கும், வர்த்தக அமைச்சகத்தின் இளைய அமைச்சருக்கும், நிதி ஆயோக்கின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளின் பிற எடுத்துக்காட்டுகளையும் இந்த அட்டவணை, ஆவணப்படுத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் ஐ.டி.சி ஹோட்டல்களைத் திறந்து வைத்தனர், பான் மசாலா நிறுவனமான ரஜ்னிகாந்தா நிதியுதவி அளித்த டைம்ஸ் லிட் ஃபெஸ்ட், தலைமை விருந்தினராக மத்திய அமைச்சர் கலந்து கொண்டது, விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க நிதி ஆயோக் உடன் ஐ.டி.சி கூட்டு சேர்ந்ததை குறிப்பிடலாம்.

கடந்த 2004 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சக அறிக்கை, நாட்டின் பொது சுகாதார முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தில் புகையிலை தொழில்துறை தலையிட்டதற்கான பல எடுத்துக்காட்டுகளை விவரித்தது. பொது சுகாதார நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஆய்வில் அதிக நிகழ்வுகளை பதிவுசெய்தது, அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டில் பல பகுதி ராய்ட்டர்ஸ் விசாரணையில், இந்தியாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 2016 ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாடு குறித்த உலகளாவிய மாநாட்டின் போது,புகையிலை நிறுவன நிர்வாகிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதை ஆவணப்படுத்தியது.

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), எஸ்சி குப்தா (பாரதிய ஜனதா கட்சி), ஹர்வன்ஷ் ரத்தோர் (பாஜக), ஷைலேந்திர ஜெயின் (பாஜக) மற்றும் ஷ்ரவன் படேல் ( இந்திய தேசிய காங்கிரஸ்) போன்ற பல இந்திய அரசியல்வாதிகள் புகையிலை நிறுவனங்களில் வணிக பலன்களை பெற்று வருகின்றனர்.

புகையிலைத் தொழிலுக்கும் அரசுக்கும் இடையிலான தடை

புகையிலைத் தொழில்துறை தலையீட்டைத் தடுக்க இந்தியாவின் புதிய நடத்தை விதிமுறை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும், அதன் அனைத்து துறைகளுக்கும், அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தன்னாட்சி நிறுவனங்களுக்கும், அதன் சார்பாக செயல்படும் எந்தவொரு நபருக்கும் பொருந்தும்.

புகையிலைத் தொழிலுடன் தற்போதுள்ள எந்தவொரு கூட்டாண்மை, ஒப்பந்தங்கள் அல்லது ஒத்துழைப்புகள் நிறுத்தப்பட வேண்டும், புதிய நடத்தை விதிகள் தேவைப்படுகிறது. பொது அதிகாரிகள் புகையிலைத் தொழிலுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் அல்லது தொடர்பு கொள்ள முடியாது, அவர்கள் கூட்டாண்மைகளை உருவாக்க முடியுமா அல்லது புகையிலை நிறுவனங்களிடம் இருந்து பங்களிப்புகளை எடுக்க முடியுமா, நலன் தொடர்பான மோதலை எவ்வாறு தடுப்பது மற்றும் இந்த நடத்தை விதிமுறைகள் எப்படி மீறப்படுகிறது என்பதை இது விதிக்கிறது.

உலகளாவிய உடன்படிக்கைக்கு - அதாவது உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாடு குறித்த கட்டமைப்பு மாநாடு (FCTC), இணங்க இந்த நடத்தை விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு, 2004 ஆம் ஆண்டில் மற்ற 181 நாடுகளுடன் இந்தியா ஒப்புதல் அளித்தது.

நாடுகள் "புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ அல்லது தகர்த்தெறியவோ புகையிலைத் துறையின் எந்தவொரு முயற்சியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பின் மாநாட்டின் முன்னுரை கூறுகிறது. ஒப்பந்தத்தின் 5.3 வது பிரிவு, நாடுகள் தங்கள் பொது சுகாதாரக் கொள்கைகள் புகையிலைத் தொழிலின் வணிக மற்றும் சொந்த நலன்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்கின்றன. நாடுகள் புகையிலைத் தொழிலுடனான தொடர்புகளை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், "புகையிலைத் தொழில் மற்றும் புகையிலைப் பொருட்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்கு எப்போது, ​​எப்போது கண்டிப்பாக அவசியமானாலும்" மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கிறது.

இந்தியாவில், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் -2003 (COTPA) வாயிலாக, புகையிலை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் விளம்பரம் செய்யத் தடை மற்றும் வர்த்தகம், வணிகம், உற்பத்தி, புகையிலை மற்றும் அதன் தயாரிப்புகளின் விநியோகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. புகையிலை பொருட்களுக்கான அணுகலை மட்டுப்படுத்தவும், மக்கள் மீதான அவற்றின் தாக்கத்தை குறைக்கவும் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் பல ஷரத்துகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள அனைத்து புகையிலை பாக்கெட்டுகளில் புகைபிடித்தல் பற்றிய சித்திர எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம் பெறும்போது எச்சரிக்கை வாசகம், குழந்தைகளுக்கு அல்லது பள்ளிகளுக்கு அருகில் புகையிலை விற்பனை செய்வது மற்றும் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்கிறது.

இந்த நடத்தை நெறிமுறையை மத்திய அரசு கொண்டு வர 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல மாநில அரசுகள் கடந்த சில ஆண்டுகளாக இதே கொள்கையின் சொந்த பதிப்புகளை ஏற்கனவே வைத்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் அவ்வாறு செய்துள்ளன.

அரசு துறைகள் முரண்படுகின்றன

அரசு தரவுகளின்படி, புகையிலை ஆண்டுதோறும் சுமார் 8,00,000-9,00,000 இந்தியர்களைக் கொல்கிறது, ஆனால் இது நாட்டின் கருவூலத்திற்கு பெரிய பணத்தையும் திரட்டுகிறது.

இந்தியாவின் புகையிலை ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 2016-17ம் ஆண்டில் ரூ.6,211.5 (958 மில்லியன் டாலர்) மற்றும் 2015-16ம் ஆண்டில் ரூ. 6,513.9 கோடி (982 மில்லியன்). சுமார் 100 நாடுகளுக்கு இந்தியா புகையிலையை ஏற்றுமதி செய்கிறது.

மறுபுறம், புகையிலை என்பது உலகளவில் "தடுக்கக்கூடிய இறப்புகளின் மிகப்பெரிய ஆதாரமாக" உள்ளது, இது ஆண்டுக்கு 70 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளைக் கொண்டுள்ளது. "முன்கூட்டியே இறக்கும் புகையிலை பயனர்கள் தங்கள் குடும்பங்களின் வருமானத்தை சுரண்டுகிறார்கள், சுகாதார செலவினங்களை உயர்த்துகிறார்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளனர்" என்று புதிய நடத்தை விதிமுறை கூறியுள்ளது.

ஒருபுறம் புகையிலையின் லாபமும், மறுபுறம் அதன் மோசமான தாக்கங்களும் இருப்பதனால், அரசின் பல்வேறு பிரிவுகள் தங்களுக்குள் முரண்படுகின்றன. இந்தியாவின் புகையிலைக் கொள்கையில் குழப்பம் தெளிவாக தெரிகிரது - பல அரசுத் துறைகள் இதில் ஈடுபட்டுள்ளன, அவை வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சுகாதாரத்துறையில் புகையிலையின் மோசமான விளைவுகள் மற்றும் சிகரெட், பீடிகள் மற்றும் புகையிலை பொருட்களின் நோய் மற்றும் இறப்பு திறன் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அக்கறை கொண்டுள்ளது. இந்த அமைச்சகம் புகையிலை நுகர்வு குறைப்பதற்கும் பொது சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் செயல்படுகிறது. இந்த அமைச்சகம் தான், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தை நிர்வகிக்கிறது.

அதேநேரம், மாற்று வாழ்வாதாரங்களுக்கு புகையிலை விவசாயிகள் மாறுவதற்கும், பிற பயிர்களை வளர்ப்பதற்கும் பல்வகைப்படுத்த மத்திய விவசாய அமைச்சகம் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. சட்ட விரோத புகையிலை வர்த்தகத்தை, நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய் துறை கவனிக்கிறது.

ஆனால், வணிக அமைச்சகத்தின் கீழுள்ள புகையிலை வாரியம் போன்ற அரசின் பிற பிரிவுகள் சுகாதாரம், நிதி மற்றும் வேளாண் அமைச்சகங்களின் முயற்சிகளுடன் முரண்பட்டு நிற்கிறது.

புகையிலை வாரியம் "புகையிலை உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய புகையிலை தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி" குறித்து அக்கறை கொண்டுள்ளது. இது புகையிலை உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கும், புகையிலை ஏலங்களை ஏற்பாடு செய்வதற்கும், வெளிநாட்டு சந்தைகளில் இந்திய புகையிலைக்கான தேவையை அதிகரிப்பதற்கும் செயல்படுகிறது. விவசாயிகள் தங்கள் பயிருக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, 2017 ஆம் ஆண்டில், புகையிலை வாங்க ஐ.டி.சி உடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது.

புகையிலை வாரியமானது, புகையிலை கட்டுப்பாடு குறித்த புகையிலை கட்டுப்பாடு கட்டமைப்பு மாநாட்டின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாவட்டங்களில் பயிரிடக்கூடிய புகையிலை அளவு மற்றும் வகையை வரையறுக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.

எவ்வளவு புகையிலை பயிரிடலாம் என்பதற்கான வாரியத்தின் கட்டுப்பாடுகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.5,000 என்பது, இந்த பணப்பயிரை பயிரிடுவோருக்கு ஒரு சிறிய தொகையாகும், அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.