மும்பை: இந்தியாவின் வேலையின்மை விகிதம் தற்போது சுமார் 24% ஆக உள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மறுபுறம், வேலை தேடாத பலர் வேலைச்சந்தையில் இருந்து திரும்பி வந்துள்ளனர், அதாவது இது மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனால் இது நாம் காணும் பெரிய இருண்ட மேகங்களுடைய ஒரு சிறிய வெள்ளி நிறப்பகுதி மட்டுமே.

ஊக்கத்தொகுப்பு அல்லது பொருளாதார ரீதியான ஒரு பதிலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. நிறைய நிதி உதவியாக வாக்குறுதி தரப்பட்டுள்ளது அல்லது இரு வழிகளில் அது ஒப்படைக்கப்படலாம்: ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (MGNREGA) பணிக்கான ஊதியம் என்ற வடிவில் நேரடியாக மக்களுக்கு வரும் பணம். இரண்டாவதாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன்கள் மூலம் வரக்கூடிய பணம், அவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிறைய பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். நாம் முன்பு பட்டியலிட்டுள்ள எண்ணிக்கை, 12 கோடி மக்கள் வேலையின்றி வெளியேறி இருப்பார்கள்; அதனுடன் இணைந்திருப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர் தொகுப்பின் ஒரு பகுதியாக உள்ள சுமார் 7 கோடி மக்கள், அவர்களில் பலர் வேலையில்லாமல் இருக்கலாம்.

இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிப்பு என்பது ஓரளவிற்கு உதவக்கூடும், ஆனால், அதில் முன்பு அறிவிக்கப்பட்ட சில ஊதியம் அதிகரிப்பு விகிதத்திற்கு இந்த நிதி சென்றடையும். கிடைக்கக்கூடிய வேலைகளை அதிகரிக்க, ஒரு பகுதியே இருக்கும் என்று, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகிறார். மத்திய அரசின் ஊக்கத்தொகுப்பின் பெரும்பகுதி, நாட்டில் கடனை உயர்த்தவே வழிவகுக்கிறது. இது "மிகவும் புத்திசாலித்தனமான தீர்வு அல்ல" என்ற அவர், பொருளாதாரத்திற்கு "நிபந்தனையற்ற, ஒருதலைப்பட்ச செலவுத்திறன்" தேவை என்றார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இந்தியாவின் வேலையின்மை விகிதம் 24% ஆக உள்ளது. நாம் அதை ஒருவிதத்தில் நல்ல செய்தியாகப் பார்க்க வேண்டுமா அல்லது இதைவிடவும் அது மோசமடைய முடியாது என்பதால், இது உச்சபட்சமாக இருக்கிறதா?

ஒரு விதத்தில், நாம் 24% என்பதை விட மோசமாக இல்லை என்பது ஒரு நல்ல செய்தி. இது, ஒரு குறுகிய காலத்திற்குள் அதிகமாக செல்லக்கூடும் என்று தோன்றியது. எடுத்துக்காட்டாக, இது 27% ஆக உயர்ந்தது. ஆனால் அதன்பின், அது மீண்டும் 21% ஆக வந்து, பின்னர் 23 - 24% ஆக அளவிடப்பட்டது, மேலும் இது 24% ஆக உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தொழிலாளர் பங்கேற்பு வீதம் (வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கை) சற்று அதிகரித்துள்ளது. இது 35% ஆகக் குறைந்துவிட்டது, [ஆனால்] மீண்டும் 36% க்கும் மேலாக உயர்ந்து, 37% க்கு அருகில் உள்ளது, இது ஒரு நல்ல அறிகுறி. அதாவது, மக்கள் முன்பு போல் சோர்வடையவில்லை.

இந்த கடினமான தருணங்களில் கூட மக்கள் வேலையை தேடுகிறார்கள் என்பது அவர்களின் விரக்தியை குறிக்கிறது. வேலைகள் கிடைக்காதபோது யார் வேலை தேடி வெளியே செல்ல முயற்சிப்பார்கள்? வெளிப்படையாக சொன்னால், இது ஒப்பீட்டளவில் மிகவும் அவநம்பிக்கையாக மக்களுக்கு இருக்கும். ஒரு கொடிய நோய்க்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால் சிறந்த தருணமாக இல்லாத சூழ்நிலையில், வேலைக்குச் செல்லவும் விரும்பவில்லை. எனவே, இது வெளிப்படையான விரக்தி. மக்களை நீண்ட காலத்திற்கு முடக்கி வைக்க முடியாது என்பதன் [அறிகுறி] இது. மிகக் கடினமான காலங்களில் கூட, மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வெளியே சென்று வேலைகளைத் தேட தயாராக உள்ளனர். எனவே, இது ஒரு கலவையானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அது நிச்சயம் வீழ்ச்சியடைந்த தொழிலாளர் பங்கேற்பு வீதமும் அதிக வேலையின்மை விகிதமும் இருந்திருக்கக்கூடிய அளவுக்கு மோசமானதல்ல.

ஆனால், இது மேலும் இரண்டு புள்ளி விவரங்களாகப் பிரிக்கிறது: நகர்ப்புற வேலையின்மை 27% ஆகவும், கிராமப்புறங்களில் 23% ஆகவும் உள்ளது. எனவே, இப்போது அதை ஒருவர் அதை எவ்வாறு காண்பார்?

கிராமப்புற இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஏனென்றால் இது நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக வட இந்தியாவில் ரபி பயிர்கள் அறுவடை காலம். நாட்டின் சில பகுதிகளில்,இந்த தாமதமான அறுவடையில் மக்கள் தீவிரமாக இறங்குகிறார்கள், ஆனால் நாட்டின் பல பகுதிகளில், அவர்கள் காரீஃப் விதைப்புக்கான விவசாய பணிக்கு தயாராகி வருகின்றனர், இது ஜூன் தொடக்கத்தில் எப்போதாவது வர வேண்டும். எனவே, விவசாயத்துறை காரணமாக கிராமப்புற இந்தியா செயல்பாட்டில் உள்ளது.

இரண்டாவதாக, கிராமப்புற இந்தியாவில் ஊரடங்கு தளர்வு தரப்பட்டுள்ளது. அங்கு, அதிகமான கொரோனா பசுமை மண்டலங்கள் உள்ளன, எனவே சில இடங்களில் உள்ளூர் பணிகள் தொடங்கியுள்ளன, எனவே, கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் சற்று குறைந்து, தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. ஆனால் நகர்ப்புற இந்தியாவில் முன்னேற்றம் அவ்வாறு இல்லை, அங்கு அதிகமான ஊரடங்கு தளர்வுகள் இல்லை, இழந்த வேலைகளைக் கண்டுபிடிப்பதும் எளிதல்ல.

அவ்வகையில், இந்த 27% சராசரியுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது நாட்டிற்கான வேலையின்மை விகிதத்தை குறிக்கிறதா?

நகர்ப்புற இந்தியாவில் எப்போதும் முறையாக அதிக வேலையின்மை விகிதம் உள்ளது. நகர்ப்புற வேலையின்மை கிராமப்புற வேலையின்மையை விட குறைவாக உள்ளது என்று ஒருபோதும் இருந்ததில்லை. நகர்ப்புற இந்தியா, சிறந்த தரமான வேலைகளை வழங்குகிறது, அங்கு படித்தவர்கள் உள்ளனர்.விவசாய நிலத்தில் அழுக்குடன் மண்ணுடன் வேலை செய்வதாகக் கூறுவதற்கும், அதற்கு சமமான ஒரு வேலையை பெறவும் அவர்கள் தயாராக இல்லை. கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பின் பெரும்பகுதி உண்மையில் மாறுபட்ட வேலையின்மையாகும். நகர்ப்புற இந்தியாவில் நீங்கள் அதை செய்ய முடியாது. எனவே, நகர்ப்புற இந்தியா நாட்டின் உண்மையான நிலைமையை முன்வைக்கிறது, நம்மிடம் 27% என்ற மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் உள்ளது.

உலகின் பிற பகுதிகளில் உள்ள நகரங்களில் வேலையின்மை விகிதங்களுடன், இதை எவ்வாறு ஒப்பிடலாம்?

நான் மற்ற நாடுகளை அதிகம் நான் கவனிக்கவில்லை, ஆனால் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடுகளில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, தெற்கு ஐரோப்பாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை பொதுவாக மிக அதிகமாக உள்ளது. போர்ச்சுகல் [மற்றும்] இத்தாலியின் சில பகுதிகளைப் போலவே ஸ்பெயினிலும் மிக அதிகமான வேலையின்மை விகிதம் உள்ளது. ஆனால் மற்ற நாடுகளுடன் பார்த்தால், அது மோசமானதல்ல. நினைவில் கொள்ளுங்கள், இந்த நாடுகளில் பலவும் பெரும்பாலும் நகர்ப்புறங்களாகும். நமது நகரமயமாக்கல் விகிதம் அந்த நாடுகளை விட மிகக் குறைவு. ஆனால் ஒரு ஒப்பீடு கொடுக்க (நான் நினைவில் இருந்து நினைவுபடுத்துகிறேன்) அமெரிக்காவில் ஏப்ரல் வேலையின்மை விகிதம் 14%, நம்மிடம் 23.5% உள்ளது; நகர்ப்புற இந்தியாவில், இது 27% என்று உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை என்ன?

இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இது 6.5 - 7% ஆக இருந்தது. நகர்ப்புற இந்தியாவில், இது கடந்த ஆண்டு 8.5% ஆக இருந்தது, இப்போது அது 27% ஆக உள்ளது.

நீங்கள் பேசிய மற்ற தரவு புள்ளி என்னவென்றால், கிராமப்புற இந்தியா 2019-20 ஆம் ஆண்டில் 27.6 கோடி மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அது 2020 ஏப்ரலில் 19.7 கோடியாக குறைந்தது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் வேலையின்றி உள்ளனர். நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தில் அதிக தொகை மற்றும் பிற வகையானவற்றில் தொகை செலவிடுதல் எந்த அளவிற்கு உதவும்?

நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தில் (MGNREGA) அதிக பணம் செலுத்துவதற்கான அரசின் நடவடிக்கை ஒரு நல்ல நடவடிக்கை. இது ஓரளவிற்கு உதவும், ஆனால் அதிகமாக இருக்காது. நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தால் மட்டுமே அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியாது. இது கொஞ்சம் உதவுகிறது. இது கிராமப்புற இந்தியாவில் ஊதிய விகிதத்தை உயர்த்த உதவும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தின் ஒதுக்கீடு அதிகரிப்பு 13-14% என்றளவில் உள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் முன்பு வாக்குறுதியளித்த ஊதிய விகித உயர்வும், இதில் உள்ளது. எனவே, ஒதுக்கீட்டின் ஒரு பகுதியையாவது அதிக ஊதிய விகிதத்தை நோக்கிச் செல்லும், மேலும் அதில் ஒரு பகுதி மட்டுமே மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு அல்லது அவர்கள் பயன்படுத்தும் “மனித நாட்களின்” எண்ணிக்கையை நோக்கி செல்லும். ஒரு வருடத்திற்கு என்று பார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, நடப்பு ஆண்டில் நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் 10% அல்லது 12% வேலைவாய்ப்பு அதிகரிப்பு போன்றதை நான் எதிர்பார்க்கிறேன், ஆனால் இது கிராமப்புற இந்தியாவில் ஒரு பகுதி பிரச்சினையை மட்டுமே தீர்க்கும்.

எனவே, கிராமப்புற இந்தியாவில் வேலையில்லாத 8 கோடி மக்களில், 10% பேர் மட்டுமே தங்கள் வேலைகளை திரும்பப் பெறுவார்கள் என்று சொல்கிறீர்களா?

அவ்வாறும் ஒப்பீடு செய்ய முடியாது, ஆனால் நீங்கள் அதை கட்டைவிரல் விதியாக எடுத்துக் கொள்ளலாம், ஏனென்றால், நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தில் கணக்கிடப்படும் வழி [ஆட்களின் வருகை நாட்கள் அல்லது தரப்பட்ட பணியின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நான் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கையை கணக்கிடுகிறேன் - இது [மக்கள்] ஒரு வழக்கமான அடிப்படையில் வேலை செய்கிறது. எனவே, அவை சரியாக ஒப்பிடமுடியாது. ஆனால், கட்டைவிரல் விதி என்னவென்றால், இன்று வேலைவாய்ப்பு இருக்கும் இடத்திலிருந்து 10% அதிகரிப்புக்கு வழிவகுக்கும்; ஆனால் நீங்கள் சொன்னது போல், வீழ்ச்சி மிகப் பெரியது. எனவே, 8 கோடி வேலைகளை இழந்தோம். நமக்கு மீண்டும் 8 கோடி வேலைகள் கிடைக்காது; அதில் ஒரு சிறிய பகுதியை தான் நாம் பெறுவோம்.

மற்ற நேரடி குறிக்கீடு அல்லாதவற்றை எடுத்துக் கொண்டால், வங்கிகள் மூலம் கடன்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வேலைகளை வழங்க அல்லது வேலைகளை திரும்பப் பெற அல்லது வருமானத்தை நிர்வகிக்க உதவும் ஒத்த முயற்சிகள் ஆகும். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு [MSME ] அல்லது நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தை [MGNREGA] தவிர வேறு எதற்கும் எந்த உதவியையும் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும், நான் சொன்ன வேறு சில விஷயங்கள், பொருளாதார தொகுப்பின் பெரும்பகுதி உண்மையில் நாட்டில் கடனை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நினைக்கிறேன் - அது வணிகர்கள், அல்லது நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி. அதில் நான் அதிக தகுதியை காணவில்லை. நீங்கள் பணப்புழக்கம் அல்லது அதிக கடன் வசதிகளை வழங்கினால், அது உத்தரவாதமான கடனாக இருந்தாலும், அது கடன்பட்டதற்கு வழிவகுக்கும் - இறுதியில் என்.பி.ஏ.க்கள், கடன் கொடுத்தால் வங்கிகளுக்கு அரசு செலுத்தக்கூடும்.

ஆனால் இன்று பொருளாதாரம் விரும்புவது அதுவல்ல. பொருளாதாரம் அதிக செலவிடும் திறனை விரும்புகிறது - நிபந்தனையற்ற, ஒருதலைப்பட்ச செலவு திறன். எனவே, கடனை உயர்த்துவது மிகச் சிறந்த காரியம் என்று நான் நினைக்கவில்லை. நாளை பொருளாதாரம் குறித்து நாம் கொண்டுள்ள நிச்சயமற்ற தன்மை, நாம் எப்போது மீட்கப்படுவோம் போன்றவை மிக அதிகமாக இருப்பதால், இன்று அந்தக் கடன் பெறும் எவரும் எவ்வாறு திருப்பிச் செலுத்தப் போகிறார் என்பதில் உறுதியாக இல்லாமல் தான் அதை பெறுகிறார். எனவே, இந்த நிலைமைகளில் கடன்களை வழங்குவது மிகவும் புத்திசாலித்தனமான தீர்வு அல்ல என்று நான் நினைக்கிறேன்.

எனவே, இந்த கடன்கள் மிகவும் எளிதான முறையில் வழங்கப்படும் அல்லது அவை எழுதி தயாராக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா.

மிகச்சரி, நாம் நிச்சயமாக வாடிக்கையாளரை கெடுக்கிறோம் இல்லையா? அவர்கள் ஒருபோதும் திருப்பிச் செலுத்தப் போவதில்லை, இந்த கடன் மேளாக்களுடன் பழகத் தொடங்குகிறார்கள். கடந்த காலங்களில் இதை நாம் பெரிய அளவில் பார்த்திருக்கிறொம். விவசாயக்கடன்கள் மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப்படுவது என்ற சிக்கலை உருவாக்கியுள்ளோம். இது இப்போது நுண், சிறு, குறு தொழில் துறைகளுக்கு வெளியே இதை கொண்டு சென்றால், நாட்டில் மிகவும் ஆரோக்கியமற்ற கடன் கலாச்சாரத்தை நாம் உருவாக்கப் போகிறோம், இது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.

எனவே, நீங்கள் பணத்தை நேரடி வழங்குவதை தேர்வு செய்திருப்பீர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய எண்ணிக்கை இரண்டு மாத வருமானம் இல்லாத சூழலில் ரூ.20,000 ஆகும், இந்த மறைமுக வழியை மாற்ற முயற்சிப்பதை விட, இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடனையே அதிகரிக்கும்.

இன்று அந்தக்கடனை பெறுவதற்கான தைரியம் உள்ளவர்களின் கடன்பாட்டை நான் அதிகரிப்பது என்று நான் சொல்வது - முற்றிலும் இல்லை - நேர்மையற்ற ஒன்றாக இருக்கும். மிகவும் தீவிரமாக சிக்கலில் இருக்கும் நேர்மையான நபர் அந்தக் கடனை பெறக்கூடாது. எனவே, வேறு பல நிகழ்வுகளிலும் இதே பிரச்சினைதான் - நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், முந்தைய பி.எம். கிஸான் (PM KISAN) வசதியின் கீழ் கடன் பெறலாம், ஆனால் நீங்கள் நிலமற்ற தொழிலாளர் என்றால், நீங்கள் அதைப் பெற இயலாது. எனவே, பணத்தை வழங்குவதற்கான இந்த வழிமுறைகளைத் தாண்டி செல்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன், இது நாட்டில் கடன் கலாச்சாரத்தை கெடுத்துவிடும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நாம் எதிர்பார்க்கையில், வேலையின்மை எண்ணிக்கை மற்றும் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தாக்கத்தின் அடிப்படையில் வரும் வாரங்களில் இது எவ்வாறு பங்களிக்கும் என்று நீங்கள் கருகிறீர்கள்?

நான் சற்று நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் [பல] செயல்பாடுகள் வளர்ந்து வருவதாகத் தெரிகிறது மற்றும் சிறு தகவல்கள் வரவிருக்கின்றன. இது இரண்டு படிகள் முன்னோக்கி மற்றும் மூன்று படிகள் பின்னோக்கி இருப்பது போன்றது. இப்போது நான் மூன்று படிகள் முன்னோக்கி மற்றும் இரண்டு படிகள் பின்னோக்கி பார்க்கிறேன், இது முன்னேற்றம்.

கட்டுப்பாடுகளில் அதிக தளர்வு இருப்பதாக நான் நினைக்கிறேன், எதிர்வரும் காலங்களில்,இந்நோயை நாம் ஒருவிதமாக ஏற்றுக் கொள்ளலாம், அதை நோக்கி ஒருவித எதிர்ப்பு இருக்கும். எனவே, இது சரியான திசையில் நகர்கிறது என்று நான் நினைக்கிறேன், முந்தையதை விட அதிக தளர்வுகள் உள்ளன. டெல்லி மற்றும் பெங்களூரு சற்று சாதாரண பணிச்சூழலுக்கு திறம்பட திரும்பி வருவதாக எனக்குத் தெரியவந்துள்ளது. இது மேலும் பல இடங்களுக்கும் பரவுகிறது. எனவே, பொருளாதார நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், கடந்த சில வாரங்களில், இது இன்னும் கொஞ்சம் நீட்டிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன், இந்த பாணியில் நாம் தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் வேறுபட்ட ஆனால் இன்னும் நல்ல சாதாரண அமைதிக்காலத்திற்கு வருவோம் என்று நான் இன்னும் கொஞ்சம் நம்புகிறேன்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.