புதுடெல்லி: எண்ணெய், எரிவாயு உட்பட புதைபடிவ எரிபொருட்களுக்கான இந்திய அரசின் மானிய உதவிகள், 2017ஆம் ஆண்டுடான மூன்று ஆண்டுகளில் 76% குறைந்துள்ளது; ஆனால் அதே காலத்திற்கான நிலக்கரித் துறை மானிய நிதி நிலையானதாகவே உள்ளதாக, நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்- ஐ.ஐ.எஸ்.டி. (IISD) புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி நுகர்வோர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் நான்காவது மிகப்பெரிய நாடாக, அதாவது உலகின் மொத்த வெளியேற்றத்தில் 7% கொண்டுள்ள இந்தியா, மாசு ஏற்படுத்தும் தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் நிலக்கரி துறைக்கு மானிய உதவி அளித்து வருகிறது. நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் உமிழப்படும் பசுமை இல்ல வாயுக்கள் பூமியை வெப்பமாக்குகின்றன.

எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான மானியங்கள் 2014ஆம் ஆண்டில் ரூ. 1.5 லட்சம் கோடி (21 பில்லியன் டாலர்) என்றிருந்தது, 2017ஆம் ஆண்டில் ரூ. 36,900 கோடி (5.1 பில்லியன் டாலர்) என்று குறைந்தது; நிலக்கரி மானியம் ரூ. 15,650 கோடி (2.20 பில்லியன் டாலர்) என்பது, ரூ. 15,900 கோடி (2.23 பில்லியன் டாலர்) என்று 2% அதிகரித்ததாக, ஐ.ஐ.எஸ்.டி. 2018 டிசம்பர் ஆய்வு தெரிவிக்கிறது.

நிலக்கரி மானியங்களின் மிகப்பெரிய பகுதி, நிலக்கரி மின் உற்பத்தியில் உள்ளீடு செலவுகள் குறைக்கவும், கலால் மற்றும் சுங்கவரிக்கானதும் ஆகும். 2017ஆம் ஆண்டில் நிலக்கரித் துறை, இறக்குமதி சுங்கவரி மீது ரூ.7,523 கோடி (1 பில்லியன் டாலர்) சலுகைகளை பெற்றது.அதே ஆண்டில், நிலக்கரித் துறை ரூ .6,913 கோடி (960 மில்லியன் டாலர்) கலால் வரி சலுகையை பெற்றது. இதன் மூல்ம 2017ஆம் ஆண்டில் 91% (ரூ .14,436 கோடி) நிலக்கரித்துறைக்கு மானியம் அளிக்கப்பட்டதாக ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் நிலக்கரி தேவை 2017-18 நிதி ஆண்டில் 90.8 மில்லியன் டன் (எம்.டி.); ஆனால் உள்நாட்டு உற்பத்தியோ 676 எம்.டி. தான் என்பதால் 34% பற்றாக்குறை என்று நிலக்கரி அமைச்சகம் கூறுகிறது.

இந்த சலுகைகள் மற்றும் அதிக தேவை இருப்பதால் முதலீட்டாளர்கள் முக்கிய இந்திய நிலக்கரி சுரங்கத்தில் தங்கள் பங்குகளை வைத்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கீழ் நிலக்கரி சார்ந்த மின்சார நிறுவனங்கள் 2013ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு சராசரி 10% என, ரூ.25,000 கோடி ($ 3.5 பில்லியன்) வருவாயாக திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று அரசுசாரா சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் மேற்கொண்ட டிசம்பர் ஆய்வு தெரிவிக்கிறது.

சுங்கவரி, வரி விலக்குகள் உட்பட பல மறைமுக வரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறையான சரக்கு மற்றும் சேவை வரி - ஜி.எஸ்.டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிலக்கரி மானியங்களின் மீதான அரசு கொள்கையில் 2017ஆம் ஆண்டில் பெரும் மாற்றங்கள் காணப்பட்டது. இருப்பினும், நிலக்கரி மானியங்களின் நிகர மதிப்பு 2018 ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைக்க சாத்தியமில்லை என ஐ.ஐ.எஸ்.டி. அறிக்கை தெரிவிக்கிறது.

சலுகையற்ற தனிபயன் கடன்களை ரத்து செய்ததால் 2018ஆம் ஆண்டில் இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது; இந்த வித்தியாசத்தை ஈடுசெய்ய ஜி.எஸ்.டி.யின் கீழ் நிலக்கரி விற்பனை வரி விகிதத்தில் 5% புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது என அறிக்கை கூறுகிறது.

2018ஆம் ஆண்டில் நிலக்கரிக்கு வழங்கப்பட்ட மானியச்சலுகை ரூ.12,122 கோடி(1.7 பில்லியன் டாலர்); 2017 ஆம் ஆண்டில் நிலக்கரி மூலம் பெறப்பட்ட மானியங்களில் 84%, முன்பிருந்த கலால் மற்றும் சுங்கவரி கடன்களின் கீழ் ஆகும் என, ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு தெரிவிக்கிறது. இது குறையும் போது, அது நிலக்கரித் தொழிற்துறையால் பெறப்பட்ட உண்மையான மானியங்களின் ஒரு பகுதி மட்டுமே பிரதிபலிக்கிறது.

மறைக்கப்பட்ட மானியம் காரணமாக ஜி.எஸ்.டி.க்கு பின் நிலக்கரி மானியம் குறைக்கப்பட்டது ஒரு மாயை

வெளிப்புற செலவினங்களை உள்ளடக்கிய ஒரு மானியத்தின் குறைவான பழமையான வரையறை, இந்தியாவில் நிலக்கரித் துறைக்கான மானியங்களின் உண்மையான அளவை வெளிப்படுத்தும்.

இந்திய சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்காததற்கான அபராதங்கள் இல்லாதது ஒரு மானியமாக கருதப்படுவதாக, ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு தெரிவிக்கிறது.

விதிகளுக்கு உட்பட்டு, பயன்பாட்டுக்கு முன்பாக சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப நிலக்கரியை சுத்தம் செய்யாத இந்தியாவின் வெப்ப ஆற்றல் (தெர்மல் பவர்) நிறுவனங்கள், 2014 ஆம் ஆண்டில் ரூ. 853 கோடி ($ 119 மில்லியன்) மதிப்புள்ள அபராதத் தொகையில் இருந்து தப்பியுள்ளன; 2017ல் ரூ.981 கோடி (137 மில்லியன் டாலர்) ஆகும்.

"மின்சாரம் தயாரிக்கப்படாத நிலக்கரியும் மின்சக்திகளின் திறனை குறைத்து, ஒட்டுமொத்த குணநலன்களை மேம்படுத்துவதற்கு [உயர்ந்த தரம்] நிலக்கரி இறக்குமதி தேவைப்படுகிறது" ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு கூறுகிறது.

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் நிலக்கரி பயன்பாடு தொடர்பான மொத்த வரிக்கு உட்படாத வெளி செலவுகள் ரூ. 12 லட்சம் கோடி (196 பில்லியன் டாலர்கள்) மதிப்புள்ளவை என்று, உலக நிதி ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பன்னாட்டு நிதி அமைப்பின் கணக்கீடுகளை மேற்கோள்காட்டி ஐ.ஐ.எஸ்.டி. அறிக்கை கூறுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2019-20 பட்ஜெட் தொகையான ரூ .3,111 கோடி என்பதுடன் ஒப்பிடும் போது இது ஏறத்தாழ 400 மடங்கு அதிகம்.

இந்திய மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகம் (T&D) மட்டுமே, மின்சார மானியங்களாக அதிகபட்சம் 2017ஆம் ஆணிட்ல் ரூ. 83,313 கோடி ரூபாய் (11.7 பில்லியன் டாலர்) சலுகைகளை பெற்றது. இந்தியா தனது மின்சார கட்டமைப்புகளை, 20% டி&டி உடன் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் அடிப்படையில்,பசுமைக்கு திரும்ப முயற்சி செய்து வந்தாலும், இந்திய நிலக்கரி மின்சக்தியை 60% நிலக்கரி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, டி&டி ஆதரிக்கிறது. ஐ.ஐ.எஸ்.டி ஆய்வின்படி, இவ்வாறு மானியங்களில் 60% நிலக்கரிக்காக என டி&டி பெறுகிறது. இருப்பினும், 2017ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி மானியங்களை கணக்கிடுவதில் டி & டி மானியங்களை ஐ.ஐ.எஸ்.டி. சேர்க்கவில்லை.

நிலக்கரி - காற்று மாசுபாடு, சுகாதாரம் தொடர்புடைய பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு - ஆகியன் ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ள வெளிப்புற செலவுகள் ஆகும்.

பசுமை மின் உற்பத்திக்கு இந்தியா மாறுவதால் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகும் நெருக்கடியில் உள்ள நிலக்கரித்துறை

2018 ஆம் ஆண்டுடான நான்கு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க வளங்களை (சூரிய, காற்று முதலியன) கொண்ட ஆற்றல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி இந்தியா பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சக்தியின் ஐந்தில் ஒரு பங்காக இப்போது புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கான அரசு மானியங்களும் மூன்று ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்தது; 2014ஆம் ஆண்டில் ரூ. 2,608 கோடி(366 மில்லியன் டாலர்) என்பது 2017ஆம் ஆண்டு ரூ.15,040 கோடி (2.1 பில்லியன் டாலர்) என்று அதிகரித்தது.

இருப்பினும், இந்தியாவின் மின் உற்பத்தியில் 60% நிலக்கரியை சார்ந்துள்ள நிலையில் இத்துறை அழுத்தத்தில் தான் உள்ளது. சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தியை அதிக செலவினம் பசுமை இல்லை வாயு உமிழ்வுக்கான வரி போன்றவற்றால் இத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. நிலக்கரி வினியோகத்தில் மோசமான செயல்பாடு, நிலக்கரி ஆதாரங்களை தொலைதூரத்தில் இருந்து எடுத்து வருதல், காலாவதியான உபகரணங்கள், மின் வினியோகம் தொடர்பான நீண்டகால ஒப்பந்தங்கள் கோராதது போன்றவை நிலக்கரித்துறை நிதி நெருக்கடிகளுக்கு முக்கிய காரணங்கள் என்று நாடாளுமன்ற குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா, 2010ஆம் ஆண்டு முதல், 573 ஜிகாவாட் (GW) மதிப்புள்ள நிலக்கரி உற்பத்தி திட்டங்களை ரத்து செய்தது; அல்லது தற்காலிகமாக நிறுத்தியது - இது தற்போதைய மொத்த உற்பத்தி திறனைவிட 1.5 மடங்கு - என்று எண்ட் கோல் என்ற தகவல் நிலக்கரி வாதிடும் குழுவின் குளோபல் கோல் ப்ளாண்ட் டிராக்கர் அமைப்பின் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 4-5 ஆண்டுகளில், இந்தியா ஆண்டுதோறும் 20 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான வெப்ப ஆற்றல் உற்பத்தி திறனை சேர்த்துக் கொண்டது. ஆனால், 2017-18ல்,இதன் திறன் கணிசமாக குறைந்து வெறும் 5 ஜிகாவாட் நிகர திறன் கூடுதலாக கொண்டிருந்தது என, நிதி பகுப்பாய்வு நிறுவன எரிசக்தி பொருளாதார நிபுணரும், ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வின் இணை ஆசிரியருமான விபூதி கார்க், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். இது நாட்டின் மொத்த வெப்ப திறன் கூடுதலாக இருந்து, நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட திறன் [ஒரு தொழிற்சாலை அதன் சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்குகிறது] ஆகும்.

"2018-19 நிதி ஆண்டில் நிகர கூடுதலாக -0.5 ஜிகாவாட் அல்லது [-500 மெகாவாட்] இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; கடந்தாண்டு திறன் சேர்க்கப்பட்டதைவிட அதிகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை இது குறிக்கிறது. எனவே 2019 [புதைபடிவ எரிபொருளின் அடிப்படையிலிருந்து பசுமை மின்சாரத்துக்கு] முக்கியமானது" என்று கார்க் கூறினார்.

சுமார் 40 ஜிகாவாட் மின்சக்தி திட்டங்கள் கூட நிதி கிடைக்காததால் நிதி மறுக்கப்படுவதால் வேலை தொடங்குகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. இதில் 15.7 ஜிகாவாட் -அல்லது 39% - கூட நியமிக்கப்படவில்லை என்று அரசு தரவுகள் கூறுகின்றன.

இந்த திட்டங்களில் சில குறைந்த கட்டணத்தில் நீண்ட கால ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. நிலக்கரி இறக்குமதிகள் குறிப்பாக அதன் விலை அதிகரித்தால் உந்தப்பட்ட உற்பத்தி விலை அதிகரித்தது - நிலக்கரித் துறைக்கான சரக்கு கட்டணங்களின் செலவினம் இந்த திட்டங்களை நிதி ரீதியாக பொருத்தமற்றதாக்கியது.

டி&டி நிறுவனங்கள் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின் கட்டணத்தை அதிக தொகைக்கு பெற்றன. புதிய கட்டணத்தொகை படி ஒருகிலோவாட்-மணி நேரத்திற்கு ([kWh அல்லது அலகு]) ரூ.4.39, ஒரு புதிய இணக்கமான நிலக்கரி மின்சக்தி ஆலை, அனைத்து சாதகமான சூழல்களுடனும் (எடுத்துக்காட்டு : நிலக்கரி மூலத்திற்கான இடம்), புதுப்பிக்கத்தக்க திட்டத்திற்கான யூனிட்டுக்கு ரூ. 2.5 முதல் ரூ.3.0 என்று, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

"புதிய நிலக்கரி ஆலை நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஆலைகளுடன் வணிகத்தை குறைக்கலாம். நிலக்கரி ஆலைகள் செயல்படாத சொத்துகளாக மாறி வருவதை நாம் காணலாம் " என்று, கிரீன் பிஸ் அமைப்பின் பிரசாரகரான நந்திகேஷ் சிவலிங்கம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

2015 ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்த புதிய கடுமையான உமிழ்வு விதிகளை செயல்படுத்தவும், காற்று மாசுபாடு மற்றும் நீர் நுகர்வு குறைக்கவும், இந்தியாவின் பழைய, திறமையற்ற, மாசுபடுத்தும் நிலக்கரி மின்சக்தி ஆலைகளை மூடுவதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றார் சிவலிங்கம்.

விவாதம்: நிலக்கரி அடிப்படை சுமையை அளிக்கிறது, ஆனால் மாசு மற்றும் உமிழ்வை அதிகரிக்கிறது

இந்திய நிலக்கரி மானியங்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடு பற்றிய பார்வை இந்தியாவின் ஆற்றல் எதிர்காலத்தில் நிலக்கரி மற்றும் மறுசீரமைப்பின் மீதான விவாதத்தால் பெரிதும் பாதிக்கப்படும் என ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு கூறுகிறது, இந்த விவாதத்தின் இரு பக்கங்களையும் வழங்குகின்றது.

இந்தியாவில் எல்லா நேரத்திற்கான வளர்ந்து வரும் மின் தேவைகளுக்கு மலிவானது நிலக்கரியே என்று அதற்கு ஆதரவாக வாதிடுபவர்களும் உண்டு. எரிசக்தி அணுகலுக்கான கோரிக்கை இதில் அடங்கும், ஏனெனில் நுகர்வோருக்கு இது குறைந்த விலையை கிடைக்கிறது. ஒரு வளமான உள்நாட்டு ஆதாரமாக உதவுகிறது. அவர்களின் கூற்றுப்படி, நிலக்கரி மின்சாரமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் ஏற்றத்தாழ்வுக்கான திறனை சமநிலைப்படுத்துகிறது என்பதாகும் என, ஐ.ஐ.எஸ்.டி. ஆய்வு கூறுகிறது. மறுசீரமைப்புகள் உருவாக்கப்படும் ஆற்றல் அலகுக்கு ஒரு பெரிய மானியம் பெறப்படுகிறது; எனவே சம நிலைப்படுத்த நிலக்கரிக்கு மானிய உதவி தேவைப்படுகிறது.

இருப்பினும், அண்மை ஏலங்களை அடிப்படையாக பார்த்தால், கூடுதல் செலவுகள் இல்லாமலே, சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலக்கரியுடன் முழுமையாக போட்டியிடுகிறது. நிலக்கரி பயன்பாடு காற்று மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு தொடர்புடைய சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை குடிமக்கள் மீது சுமத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.