ஒவ்வொரு குளிர்காலத்திலும், பல ஆண்டுகளாக டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500க்கு மேல் செல்கிறது, ஆனால் சுவாசத்திற்கான பாதுகாப்பான காற்று, 0 முதல் 50 வரை என்ற காற்றுத் தரக் குறியீட்டை கொண்டிருக்கிறது. செய்தி சேனல்களில் இதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், அரசாங்கங்கள் குறுகிய தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன, ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் பாதிப்பை எதிர்கொள்பவர்களுக்கு, இந்த நடவடிக்கைகள் சிறிதளவும் பயன்படவில்லை. இதனால் பாதிக்கப்படுவது கார்களில் செல்லும் செல்வந்தர்கள் அல்லது பெரும்பாலான நாள் அலுவலகங்களுக்கு வெளியே வேலை செய்பவர்களோ அல்ல; மாறாக ஏழைகள், தெருவில் வேலை செய்பவர்கள் மற்றும் ஏற்கனவே கட்டுமானம் போன்ற மாசுபடுத்தும் வேலைகளில் பணிபுரிபவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் காற்று மாசுபாட்டிற்கு மிகக் குறைவான பங்களிப்பை வழங்குகிறார்கள் - அவர்களுக்கு சொந்தமாக கார்கள் இல்லை அல்லது பெரிய மின் கட்டணங்கள் இல்லை என்பதில் முரண்பாடு உள்ளது. ரோஹித் உபாத்யாயின் வீடியோ, உங்களுக்கு மேலும் சொல்கிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.