புதுடெல்லி: பாலினத்தை மையப்படுத்தி பட்ஜெட் தயாரித்த மாநிலங்களில் 2005-06 முதல் 2015-16 வரையிலான காலத்தில் திருமண வன்முறைகள், அவ்வாறு இல்லாத காலங்களை விட குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) -3 (2005-06) மற்றும் 4 (2015-16) ஆகியவற்றின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பாலினம் சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்வது, 2004 ஆம் ஆண்டில் தொடங்கியது. பாலின சமத்துவமின்மையை குறைக்கும் நோக்கத்தோடு தற்போது 16 மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன.

சான்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பாலின சமநிலை மற்றும் சுகாதார மைய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மும்பை மக்கள்தொகை அறிவியல் சர்வதேச நிறுவனம் இணைந்து, பாலின திட்டத்தின் ஒரு பகுதியாக [Gender Equity aNd DEmography Research Project] தாய்வழி சுகாதார பராமரிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விளைவுகளில், பாலினம் சார்ந்த பட்ஜெட் ஏற்படுத்தும் விளைவுகளை பகுப்பாய்வு செய்தது. இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 5 - பாலின சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் 3: நல்ல சுகாதாரம் மற்றும் நலம் என்ற நோக்க்கத்திற்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்பட்டது.

பாலினம் சார்ந்த பட்ஜெட்: இந்தியாவில் அதன் தோற்றம் மற்றும் இடம்

பாலினம் சார்ந்த பட்ஜெட் -- இந்த அணுகுமுறை 2001ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது) நாடுகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்காக சமரசம் செய்து கொள்ளப்படும் பாலின சமத்துவமின்மையை எதிர்கொள்ள, நிதி வழிமுறையை அரசு மேற்கொள்வதற்கு அனுமதி தருகிறது. இது பொதுவாக பின்வரும் மூன்று பட்ஜெட் அணுகுமுறைகளின் ஒன்றான, அல்லது கலவையானதை கொண்டிருக்கிறது: 1) பாலினம் சேர்ப்பதை ஊக்குவிக்க பாலினம் தகவலறிந்த ஆதார ஒதுக்கீடு 2) பயனாளிகள் பாலினம் மூலம் வேறுபடுத்தப்படுகிறார்கள் எனில், அதை தீர்மானிக்க பாலியல் முரண்பாடு தரவுகளை பயன்படுத்தப்படுத்தி, பாலின பட்ஜெட் தயாரித்தல். 3) முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேவைகளை கொண்ட, பாலின இலக்குடன் கூடிய பட்ஜெட்டாக இருக்க வேண்டும்.

கடந்த 2001 ஆம் ஆண்டில், இந்தியா தனது பொருளாதார கொள்கைகளை பாலினச் சட்டத்துடன் மதிப்பீடு செய்யத் தொடங்கியது; பெண்கள் மற்றும் சிறுமியரின் தேவைகளை பூர்த்தி செய்வது, பாலின சமத்துவ அளவீட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்று தீர்மானிக்க ஆரம்பித்தது. மாநிலங்கள் அளவில் பாலினம் சார்ந்த பட்ஜெட்டை, 2004-ல் ஒடிசா, அதை தொடர்ந்து 2005-ல் திரிபுரா, உத்தரப்பிரதேசம்; 2006 ஆம் ஆண்டில் குஜராத், கர்நாடகா, அருணாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் ஜம்மு காஷ்மீர் ஆகிய உருவாக்கின.

தற்போது, 16 இந்திய மாநிலங்கள் பாலினம் வரவு செலவு திட்டங்களை கொண்டிருப்பதோடு, மாநில பாலினம் வரவு செலவு கணக்குகளையும் கையாண்டு வருகின்றன. [அட்டவணை 1 மற்றும் படம் 1 ஐ காண்க.] இந்தியாவில் பாலினம் பட்ஜெட் அணுகுமுறைகள் பாலினம் சேர்ப்பு மற்றும் பாலின இலக்கிற்கான ஆதார ஒதுக்கீடுகளை, குறிப்பாக சுகாதார, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் வலியுறுத்தியது.

Table 1: States In India With Gender Budgeting, By Year Of Initiation
Implementation Year States (16 States)
2004 Odisha
2005 Tripura, Uttar Pradesh
2006 Gujarat, Karnataka
2007 Arunachal Pradesh, Chhattisgarh, Jammu & Kashmir, Madhya Pradesh, Uttarakhand
2008 Bihar, Himachal Pradesh, Kerala
2009 Nagaland
2011 Rajasthan
2013 Maharashtra

Source: State Budget Documents

படம் 1: இந்தியாவில் பாலினம் சார்ந்த பட்ஜெட் போடும் மாநிலங்களின் வரைபடம் (GBS) மற்றும் பாலின பட்ஜெட் இல்லாத மாநிலங்களின் (NGBS) வரைபடம்.

உலகம் முழுவதும் சமத்துவமின்மை

உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலினம் சார்ந்து வரவு செலவு திட்டத்தை வரைகின்றன; பாலின பட்ஜெட் ஏற்படுத்தும் தாக்கங்களை பலதரப்பட்ட நாடுகள் ஆய்வு செய்துள்ளன; இது, விளைவுகளை ஏற்படுத்திய நாடுகளில் தான்; மற்றவற்றில் மேற்கொள்ளப்படவில்லை. விளைவைக் காட்டும் நாடுகளில், நிதி ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு ஆகிய இரண்டிலும் ஆவணங்களை மேம்படுத்தலாம்; பொருத்தமற்ற பாலியல் தரவை பயன்படுத்துவது என்பது, பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாலினம் சார்ந்த பட்ஜெட் தாக்கங்களை கண்காணிக்கும் கொள்கை வகுப்பவர்களின் முடிவை பெரிதும் பாதிக்கும்.

பாலினம் சார்ந்த பட்ஜெட்டில் தாக்கத்தை காட்டும் நாடுகள், எடுத்துக்காட்டாக மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்றவற்றில் பெண்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. மற்றும் பாலினம் மூலம் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்வதற்காக பாலின தரவு வரி குறியீடு சீர்திருத்தங்களை ஐஸ்லாந்து வழிநடத்துகிறது. மதிப்பீட்டுக் காலங்களில் விரிவான (அதாவது, குறுக்காக) செயலாக்கம் மற்றும் மாறுபாடு ஆகியன, நாடு முழுவதும் உள்ள சீரற்ற விளைவுகளுக்கு காரணங்களாக கருதப்பட்டன.

இந்தியாவில் பாலினம் சார்ந்த பட்ஜெட் காட்டிய வாக்குறுதிகள்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், பாலினம் சார்ந்த பட்ஜெட்டுக்கும் பெண் கல்வி முன்னேற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆரம்பக்கல்வியுடன் தொடர்புடையது கண்டறியப்பட்டுள்ளது.

2005-06 முதல் 2015-16ஆம் ஆண்டு வரை, தாய்வழி ஆரோக்கியம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு விளைவுகளுடன், பாலினம் சார்ந்த வரவு செலவு திட்டம், சிறந்த மேம்பாடுகளுடன் தொடர்புடையதா என்பதை பாலின திட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதன் விளைவுகள்:

  1. கர்ப்பகால பராமரிப்பு (ANC): கடந்த ஐந்தாண்டுகளின் அனைத்து பிறப்புகளுக்காக, கர்ப்ப கால பராமரிபுக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை வந்த தாய்மார்களின் விகிதம்;
  2. மருத்துவமனைகளில் பிரசவம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் கிளீனிக் அல்லது மருத்துவமனை நிகழ்ந்த தாய்மார்களின் பிரசவ சதவிகிதம்;
  3. குழந்தை/முன்கூட்டியே திருமணம்: 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் சதவீதம், 20 முதல் 24 வயது வரை;
  4. திருமண வன்முறை: திருமணம் செய்த பெண்களுக்கு கணவரின் உடல் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்களின் விகிதம்.

பாலினம் சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்த மாநிலங்கள் 2005-06 மற்றும் 2015-16 ஆண்டுகளில், நான்கு மகளிர் சமநிலை வெளிப்பாடு குறியீடுகள் - ஏ.என்.எச். மற்றவற்றை விட மோசமானதாக இருந்தன; கல்வி வழங்கல், குழந்தை / ஆரம்பகால திருமணம் மற்றும் குடும்ப வன்முறை போன்றவற்றில், 2005-06 அல்லது 2015-16 ஆண்டுகளில் மாநிலங்கள் கணிசமாக வேறுபட்டிருக்கவில்லை. [படம் 2 ஐ காண்க].

பாலினம் சார்ந்த வரவு செலவு திட்டங்கள கொண்ட மாநிலங்கள், அனைத்து சுட்டிகளிலும் காலப்போக்கில் முன்னேற்றங்களை காண்பித்து வந்தது, இந்த மாற்றங்கள் குறித்த ஆய்வில் தெரிய வந்தது. எனினும், குடும்ப வன்முறை மட்டுமே காலப்போக்கில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தியதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

2005-06 முதல் 2015-16 வரை பாலினம் சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்த மாநிலங்களில் குடும்ப வன்முறைகள் 7% வீழ்ச்சியடைந்தன; அத்தகைய பட்ஜெட் இல்லாத மாநிலங்களில் 1% சரிவு (p = .04) என்பது நிரூபணமாகி உள்ளது. [படம் 3].

படம் 2: பாலின பட்ஜெட் இல்லாத மாநிலங்கள் (NGBS) & பாலினம் சார்ந்த பட்ஜெட் மாநிலங்கள் (GBS) இடையிலான பாலினம் சமத்துவ குறிகாட்டி வேறுபாடுகள்: ஏ.என்.எஸ்., மருத்துவமனை பிரசவங்கள், குழந்தை/ முன்கூட்டியே திருமணங்கள், குடும்ப வன்முறை 2005-06 (ஏ) மற்றும் 2015-16 (பி).

குறிப்பு: டி-சோதனைகள் ஒவ்வொரு பாலின சமத்துவ அடையாள காட்டிக்கும் உள்ள இடைவெளிகளில் என்.ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். இடையே கணிசமான வேறுபாடுகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டன;* பி<.05, ** பி <.01,*** பி <.001. குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படவில்லை.trong>

படம் 3: பாலின பட்ஜெட் இல்லாத மாநிலங்கள் (NGBS) & பாலினம் சார்ந்த பட்ஜெட் போடும் மாநிலங்கள் (GBS) இடையே வேறுபாடுகள் மற்றும் 2005-06 முதல் 2015-16 வரை சராசரி சமநிலையில் மாற்றம்.

குறிப்பு: ஒவ்வொரு பாலின சமத்துவ அடையாளம் காட்டிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் என்.ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கண்டறிய டி-சோதனைகள் பயன்படுத்தப்பட்டன. * பி <.05, ** பி <.01, *** பி <.001. குடும்ப வன்முறை மட்டுமே குறிப்பிடத்தக்கது.

புள்ளி விவரங்கள் பற்றாக்குறைவால் ஆய்வில் பாதிப்பு

இந்தியாவில் பாலினம் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தின் சட்டம் இயற்றப்படுவது குடும்ப வன்முறையை தேசிய அளவில் குறைப்புடன் தொடர்புடையது; ஆனால் தாய்வழி சுகாதார சேவைகள் அல்லது குழந்தை திருமணத்தில் குறைப்பு போன்ற பிற முக்கிய பாலின சமத்துவ அடையாளங்களாக அல்ல.

இந்தியாவில் பட்ஜெட் திட்டங்களை பகுப்பாய்வு செய்ததில், பெண்களுக்கு நிதியளிப்பது மிகவும் எளிதானது என்பதைக் காட்டுகிறது. இந்த நிதி மொத்த வரவு செலவு திட்டத்தில் 1%க்கும் குறைவாகவே உள்ளது மற்றும் மீதமுள்ள 99% பட்ஜெட்கள் பொதுவாக துறைகளில் (எ.கா., சுகாதார, சமூக நலன் ) மற்றும் எளிதாக பாலியல் இலக்குகளாக அல்லது கவனம் செலுத்துவதில்லை. இந்த நிதியானது, மொத்த பட்ஜெட் திட்டத்தில் 1%-க்கும் குறைவாகவே உள்ளது; மீதமுள்ள 99%, திட்டத்தில் பொதுவாக துறைகளுக்கு (உதாரணம்: சுகாதாரம், சமூக நலன்) குறிக்கப்படுகிறது, மேலும் பாலின இலக்குகள் அல்லது கவனம் செலுத்த எளிதில் தொகுக்கப்படுவதில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையின் நிதி மற்றும் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள், தாய்வழி உடல்நலன் மற்றும் பாலின திருமணத்தை குறைத்தல் ஆகியவற்றில் குறிப்பிட்ட தாக்கங்களை மதிப்பிடுவதில் சவாலாக இருக்கலாம். இருப்பினும், குடும்ப வன்முறை மீதான பாலினம் சார்ந்த பட்ஜெட் தாக்கத்தை, இவ்வடிவத்தில் இருக்கும் துறை வாரியான திட்டங்களுக்கு அப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறது.

குடும்ப வன்முறை தொடர்பான இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பட்ஜெட் திட்டத்திற்கு திரும்புவதைக் கண்காணிக்க முடியாது; இது பற்றிய தரவு கிடைக்காததால் கொடுக்கப்பட்ட வன்முறை தடுப்பு மீது கவனம் செலுத்தப்பட்டது. பாலின பட்ஜெட் திட்டமானது குறிப்பிட்ட பாலின சமத்துவ அடையாளங்களின்படி பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வழிமுறையை அடையாளம் காண மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்தியாவில் திருமணமான பெண்களில் மூன்றில் ஒருவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாலினம் சார்ந்த பட்ஜெட்டில் அதன் மதிப்பை குறைக்க முடியாது. ஆனால் முன்பு கூறியபடி, பாலினம் சார்ந்த பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்பீட்டளவான தரவுகள் தேவை; இது, தரவுக் கண்டுபிடிப்புகளை நேரடியாக கொள்கைகளுடன் இணைக்க உதவும். அதே நேரம் சரியான நேரத்தில், தரமான தரவுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவைப்படும்; இது, நடப்பு மற்றும் வலுவான பகுப்பாய்வுகளுக்கான பாலினம் சார்ந்த பட்ஜெட் தரவுடன் தொடர்புடையதாக இருக்கும். என்.எப்.எச்.எஸ்.-4க்கு பிறகு என்.எப்.எச்.எஸ்.-5 ஐ விரைவாக செயல்படுத்தல், இம்முயற்சிகளுக்கான ஒரு வரமாக இருக்கும்.

(அனிதா ராஜ், டாடா சமூகம் மற்றும் உடல்நலம் துறை வேந்தர், மருத்துவம் மற்றும் கல்வி ஆய்வுகள் துறை பேராசிரியர் மற்றும் சான்டியாகோ கலிபோர்னியா பல்கலை பாலின சமநிலை மற்றும் சுகாதார மையத்தின் இயக்குனர்; கவுஷிக் பத்ரா, ஒரு ஆராய்ச்சி ஆய்வாளர்; நந்திதா பன் ஒரு ஆராய்ச்சியாளார்; நம்ரதா ராவ், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர். டெல்லியை சேர்ந்த இவர்கள் அனைவரும், சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பாலின சமநிலை மற்றும் சுகாதார மையத்தில் உள்ளனர். லாய்ஷ்ராம் லாது சிங், பேராசிரியர் மற்றும் மும்பையில் உள்ள மக்கள் தொகை அறிவியல் சர்வதேச நிறுவனத்தில் கணித புள்ளிவிவரம் மற்றும் புள்ளியியல் துறை தலைவராக உள்ளார்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.