‘இரட்டிப்பு வருவாயை மறந்து விடுங்கள், அனைத்து வருமானமும் பெருகினாலே விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்’
பெங்களூரு: அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் மற்றும் ஊரடங்கு அமலால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களை இந்தியா கையாண்டு வரும் சூழலில், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு விவசாயத்துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை புதுப்பிக்க அறிவிப்புகள் மற்றும் அவசர சட்டங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேளாண் உற்பத்தி பொருட்கள் (வணிக ஊக்குவிப்பு) அவசர சட்டம்- 2020; விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம்- 2020, அத்துடன் திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியன அவசர சட்டங்கள் வாயிலாக மத்திய அரசு கொண்டு வந்தது.
சர்வதேச நாணய நிதியம் (IMF - ஐ.எம்.எப்.) மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2020-21 ஆம் ஆண்டில் 4.5%, உலகப் பொருளாதாரம் 4.9% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்தநிலையையும், தனது முதலாவது வேளாண்மை அல்லாத மந்தநிலையையும் இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, “விவசாய உற்பத்தியின் வளர்ச்சியானது அதிகரித்து வரும் தேவைக்கு பொருந்த வேண்டும்”, இல்லையெனில் “குறைந்து வரும் தேவைக்கு அதிகமான வழங்கல் விலைகளை குறைக்கும்”, என்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின் பொருளாதார இணை பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகிறார்.
மத்திய அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் “கடந்த இரண்டு தசாப்தங்களாக நடந்து வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்”, “சந்தைச் சீர்திருத்தங்கள் மட்டுமே குறைந்துவரும் தேவை மற்றும் பொருட்களின் விலை மந்தமாக இருந்தால் விவசாயிகளுக்கு ஊதிய விலையை வழங்காது” என்று, இந்த நேர்காணலில் அவர் கூறுகிறார்.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்துறை முக்கியமானதாக இருக்கும் சூழலில், விவசாய வளர்ச்சி 3% என மதிப்பிடப்பட்டுள்ளதாக, நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், 2020 ஏப்ரலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நேர்மறையாக இருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது என்று பொருளல்ல. "வருமானத்தை இரட்டிப்பாக்குவதை மறந்து விடுங்கள், வருமானத்தில் சாதகமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள்" என்று ஹிமான்ஷு கூறினார்.
சென்டர் டி சயின்சஸ் ஹுமெய்ன்ஸில் இணை ஊழியராக உள்ள ஹிமான்ஷு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம்-வைடர் (WIDER) மற்றும் கிரேகாம் (GREQAM) ஆகியவற்றில் சிறப்பு அமர்வுகளை நடத்தியுள்ளார். வறுமையை அளவிடுவதற்கான நிபுணர் குழு (டெண்டுல்கர் கமிட்டி), தேசிய புள்ளிவிவர ஆணையம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் உள்ளிட்ட அரசு குழுக்களின் ஒருபகுதியாகவும் இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், நிக்கோலஸ் ஸ்டெர்ன் மற்றும் பீட்டர் லாஞ்சோவ் ஆகியோருடன் இணைந்து, How Lives Change: Palanpur, India and Development Economics ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
அரசால் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள், வேளாண் வருவாய் வளர்ச்சிக்கான கண்ணோட்டம் மற்றும் கோவிட் -19 இன் வீழ்ச்சியாக கிராமப்புற தேவை குறைதல் குறித்து அவர் எங்களுடன் பேசுகிறார்.
திருத்தப்பட்ட பகுதிகள்:
கடந்த இரு தசாப்தங்களாக இந்தியா உபரி உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆயினும்கூட, வேளாண் வருமானம் போதுமானதாக இல்லை. மத்திய அரசின் அறிவிப்புகள் இந்த யதார்த்தத்தை எவ்வாறு மாற்றப்போகின்றன?
வேளாண் வருமானம் என்பது, விவசாயி ஈட்டிய வருவாய் மற்றும் அதன் செலவுகளை பொறுத்தது. உபரி உணவு தானியங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் சம்பாதிக்கும் வருவாய் செலவினங்களை விட குறைவாக இருந்தால், தானாகவே அதிக லாபம் ஈட்டாது. உற்பத்தி விலையானது, கிடைக்கும் விலையை விட மெதுவாக உயர்ந்தால், அது நிகழலாம். கடந்த ஆண்டு ஐந்து மாதங்களின் சுருக்கமான காலத்தைத் தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி விலை மெதுவாகவே உயர்ந்து கொண்டிருந்தன அல்லது குறைந்துவிட்டன. இதன் விளைவாக, உற்பத்தி 2% முதல் 3% வரை அதிகரித்திருந்தாலும், வருமானத்தில் விரைவான அதிகரிப்புக்கு இது பங்களிக்கவில்லை.
வேளாண் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து குறைவாக இருந்தால், மத்திய அரசின் அறிவிப்புகள் அதிக உற்பத்தி விலைக்கு வழிவகுக்கும். அதிகரித்து வரும் டீசல் விலை, மின்சார கட்டணம் மற்றும் உரங்களின் விலை ஆகியவற்றால், அதிகமாக உற்பத்தி செய்தாலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படலாம். இந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்தால் விவசாய பொருட்களின் விலை உயரும். [ஆனால்] இது உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையைப் பொறுத்தது, இவை இரண்டும் இந்திய விவசாயிகளுக்கு குறைந்து வருகின்றன.
இந்தியாவில் இந்த மந்தநிலை மற்றும் பொருளாதார பின்னடைவு, முதலாவது விவசாயம் சாராத மந்தநிலையாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் விவசாயத்துறை எவ்வாறு செயல்படுவதாக நீங்கள் காண்கிறீர்கள்? மேலும், ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, 2022 ஆம் ஆண்டளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பாதையை நோக்கி இந்தியா செல்கிறதா?
தேவை குறைந்து வருவதன் காரணாமகவே மந்தநிலை உண்டாகிறது. ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் விவசாயம் குறைவாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், விவசாய உற்பத்தியின் வளர்ச்சியானது அதிகரித்துவரும் தேவைக்கு பொருந்த வேண்டும். இல்லையெனில், குறைந்துவரும் தேவையுடன் அதிகப்படியான வழங்கல் என்பது, விலைகளை குறைத்துவிடும். பால் மற்றும் கோழி உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் விலை குறித்த சமீபத்திய தகவல்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட விலையில் கடும் சரிவைக் காட்டுகின்றன. சர்வதேச விலைகளும் குறைந்து வரும் போக்கை காண்பிப்பதால், விவசாய விலைகள் மீதான நெருக்கடி, மேலும் தீவிரமடையப் போகிறது.
ஒட்டுமொத்த விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மறையானதாக இருக்கலாம், ஆனால் இது விவசாயிகளுக்கு வருமானத்தில் அதிகரிப்பு என்று அர்த்தமல்ல. பொருளாதாரத்தின் பிற துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து வருவதால், தேவை கடுமையாக குறையும் என்று தெரிகிறது. அது நடந்தால், விவசாய உற்பத்தியில் அதிகரிப்பு விவசாயிகளுக்கு விவசாயத்தில் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வாய்ப்பில்லை.
வருமானத்தை இரட்டிப்பாக்குவதை மறந்து விடுங்கள், அனைத்து வருமானமும் வளர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நீண்டகால மாற்றங்களுக்கான அறிவிப்பு வந்தாலும், விளைபொருட்களுக்கான தேவை இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு ஊதிய விலைகள் கிடைக்காது. தற்போதைய பொருளாதார சூழலில் என்ன நிவாரணம் - அல்லது சலுகை வழங்கப்பட வேண்டும்?
தேவைகளை புதுப்பிக்க ஒரே வழி, கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை தந்து செலவினங்களை அரசு அதிகரிப்பதன் மூலம் மற்றும் மொத்த நுகர்வுகளில் பெரும் பங்கை உணவு உள்ளிட்ட விவசாய விளைபொருளாக நுகரும் ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் செய்யலாம். இதற்கு நேரம் ஆகலாம், குறுகிய காலத்தில் அரிசி மற்றும் கோதுமை மட்டுமல்லாமல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற முக்கிய பயிர்கள் போன்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் [MSP] முடிந்தவரை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அதே நேரம், வாங்கும் விலையை குறைப்பதற்கான முயற்சிகள், குறிப்பாக டீசல் மற்றும் உரங்களில் இருக்க வேண்டும். உரங்களின் சமீபத்திய உயர்வு வாங்கும் செலவினங்களை அதிகரிக்கும், இது விவசாயிகளின் லாபத்தை குறைக்கும்.
கரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனா திட்டம், 116 மாவட்டங்களில் திரும்ப வந்து குடியேறியவர்களுக்கு வேலை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி (6.6 பில்லியன் டாலர் ) அரசு அறிவித்துள்ளது. நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்திற்கு [MGNREGA] கூடுதலாக ரூ. 40,000 கோடி (5.3 பில்லியன் டாலர்) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் கிராமப்புற தேவைகளை புதுப்பிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசமாகவும் பயனளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனாவுக்கு ரூ.50,000 கோடி என்பது கூடுதல் செலவு அல்ல. இவை அனைத்தும் ஏற்கனவே 2020-21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை. இது திரும்ப காட்டப்பட்டுள்ளது. கூடுதல் அரசு செலவினங்களைப் பொறுத்தவரை, அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், இவற்றில் சில உள்கட்டமைப்பு திட்டங்கள்; அவை களத்தில் செயலாற்ற நேரம் எடுக்கும். ரூ.50,000 கோடியில் உண்மையில் எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது, மாநில அரசுகளின் ஆயத்த நிலையைப் பொறுத்தது, அவை நிதிகளுடன் போராடுகின்றன மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றுகளை நிர்வகிப்பதில் சுமையாக இருக்கின்றன. இதேபோல், தொழிலாளர்கள் பெருமளவில் கிராமப்புறங்களுக்கு குடிபெயர்ந்துள்ள சூழலில், நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்திற்கு கூடுதல் ரூ. 40,000 கோடி என்பது போதுமானதாக இல்லை; வேலைவாய்ப்புக்கான மற்ற எல்லா வழிகளும் குறைந்து வருவதால், இந்த திட்டம் வேலைவாய்ப்பை வழங்கி தூக்கிவிட வேண்டியிருக்கும். அதிகரித்த ஊதியங்களுடன், கடந்த ஆண்டு மட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு கூடுதல் தொகை போதுமானதாக இல்லை. பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கனவே தங்கள் மொத்த ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை செலவிட்டுவிட்டன. இது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், 100,000 கோடி [13.2 பில்லியன் டாலர்] வரை பெரிய தொகை தேவைப்படும்.
[ஆசிரியரின் குறிப்பு: நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தில், ரூ. 20 கூலி உயர்த்தப்பட்டு, 2020 ஏப்ரல் 1 முதல், நடைமுறைக்கு வந்துள்ளது.]
விவசாய விளைபொருட்களுக்கான தேசிய சந்தையை உருவாக்க அரசு ஒரு அவசரச்சட்டத்தை பிறப்பித்துள்ளது. தனியாரிடம் இருந்து விவசாயிகள் ஊதிய விலைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் மதிப்பீடு என்ன, இது குறைந்தபட்ச ஆதரவு விலையை [MSP] எவ்வாறு பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது?
பெரும்பாலான அறிவிப்புகள் கடந்த இரு தசாப்தங்களாக நடந்து வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். குறைந்துவரும் தேவை மற்றும் மந்தமான பொருட்களின் விலைகள் இருந்தால் விவசாயிகளுக்கு சந்தை சீர்திருத்தங்கள் மட்டுமே ஊதிய விலையை வழங்காது. விவசாயிகளுக்கு ஆதரவாக தனியார் துறை நஷ்டத்தை ஏற்படுத்தப்போவதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை பொருத்தவரை இது எதையும் மாற்றாது; இது தற்செயலாக அரிசி மற்றும் கோதுமைக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவில் [APMC -ஏபிஎம்சி] வர்த்தகம் செய்யப்படும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை கிடையாது.
தனியார் சந்தைகளின் வெற்றி, அந்த சந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பையும் சார்ந்துள்ளது. உள்கட்டமைப்பை வழங்குவதற்கான செலவு அரசிடம் இருந்து வர வேண்டும்.
லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள், வாழ்வாதாரத்தை சார்ந்துள்ளனர்; விளைபொருட்களை வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவிற்கு எடுத்துச் சென்று தனியாருக்கு விற்பனை செய்வதற்கான செலவை ஈடுகட்ட வேண்டும். இது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும்? அடிப்படையில் இதை மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டுமா?
இது ஒரு உத்திசார்ந்த பிரச்சினை. வேளாண் சந்தைப்படுத்தல் என்பது மாநில அரசுகளின் கீழ் உள்ளது. மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பொறுத்து, அது உள்ளது. சீர்திருத்தம் என்பது விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கு பல லட்சம் தனியார் பல கோடி ரூபாயுடன் காத்திருக்கிறார்கள் என்று பொருளல்ல. விற்பனை விலையை விட கொள்முதல் செலவு அதிகமாக இருந்தால், அவர்கள் அதை செய்யப்போவதில்லை. ஆனால் தனியாரில் கூட, அவர்கள் விவசாய விளைபொருட்களை தங்கள் வீட்டு வாசலில் பெறப்போவதில்லை. பேக்கேஜிங், வரிசையாக்கம், தரம் பிரித்தல், போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகியவற்றின் செலவை யாராவது ஏற்க வேண்டியிருக்கும். விவசாயி இல்லையென்றால் தனியார், அதாவது அவர்கள் கையகப்படுத்தும் செலவு அதிகமாக இருக்கும்.
பிரச்சனைகளுக்கான தீர்வு அல்லது மத்தியஸ்தம், விவசாயிகளுக்கு குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு சவாலாக இருக்கும். விவசாயிகளுக்கு சிறந்த விலையைப் பெற உதவும் ஒப்பந்த வேளாண்மை, பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரத்துவத்தை நம்பி இருக்குமா?
இது ஒப்பந்தங்களின் தன்மையை பொறுத்தது. எத்தனை விவசாயிகள் இதை தேர்வு செய்கிறார்கள், ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா எங்கே பதிவானது என்பதை பார்க்க வேண்டும். இப்போதைக்கு, அரசு இன்னும் மாதிரி ஒப்பந்தங்களை கொண்டு வரவில்லை; அது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், வழக்கு செலவுகள் நிச்சயமாக விவசாயிகளுக்கு அதிகமாக இருக்கும். ஒரு சிறிய அல்லது குறு விவசாயி, ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராக நிற்பது சாத்தியமில்லை. இது நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பல கேள்விகள் உள்ளன. நினைவில் வைத்து கொள்ளுங்கள், நம்முடையது, கிட்டத்தட்ட அனைத்து விவசாய (குத்தகை) ஒப்பந்தங்களும் சட்டப்பூர்வ உத்தரவாதமின்றி வாய்வழியாக கொண்டிருக்கும் ஒருநாடு. இந்த குத்தகை ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஒப்பந்த விவசாயத்திற்கு ஒத்திருப்பவை. ஆனால் குத்தகைதாரர் சட்டங்களின் இருப்பு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் இருவருக்கும் கிடைக்கக்கூடிய சட்ட தீர்வுகளைப் பயன்படுத்துவதை விட மாநிலத்தை தவிர்க்க ஊக்குவித்தது. இது ஒப்பந்தங்களின் தன்மையைப் பொறுத்தது. எத்தனை விவசாயிகள் இதைத் தேர்வு செய்கிறார்கள், ஒப்பந்தங்கள் எங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். இப்போதைக்கு, அரசு இதுவரை மாதிரி ஒப்பந்தங்களை கொண்டு வரவில்லை, ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், வழக்கு செலவுகள் நிச்சயமாக விவசாயிகளுக்கு அதிகமாக இருக்கும். ஒரு சிறிய அல்லது குறு விவசாயி ஒரு பெரிய நிறுவனத்திற்கு எதிராக நிற்பது சாத்தியமில்லை. இது நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பல கேள்விகள் உள்ளன. நினைவில் வைத்து கொள்ளுங்கள், நாங்கள் கிட்டத்தட்ட அனைத்து விவசாய (குத்தகை) ஒப்பந்தங்களும் சட்டப்பூர்வ உத்தரவாதமின்றி வாய்வழியாக இருக்கும் ஒரு நாடு. இந்த குத்தகை ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஒப்பந்த விவசாயத்திற்கு ஒத்தவை. ஆனால் குத்தகைதாரர் சட்டங்களானது, நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் இருவருக்கும் கிடைக்கக்கூடிய சட்ட தீர்வுகளை பயன்படுத்துவதை விட மாநிலத்தைத் தவிர்ப்பதை ஊக்குவித்தது.
பயிரின் ஒரு யூனிட்டுக்கு சாகுபடி செலவு, மாநில வாரியாக மாறுபடும். பெரும்பாலும் நெல் மற்றும் கோதுமை தவிர பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறைவாக உள்ளது, இது விவசாயிகளை துயரகர விற்பனைக்கு தள்ளுகிறது. புதிய அறிவிப்புகள் இந்த சிக்கலை தீர்க்குமா?
இல்லை, குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்ட 23 பயிர்களை கூட அரசு வாங்குவதில்லை. அரிசி மற்றும் கோதுமை தவிர, சில பருப்பு வகைகளுக்கு சிறிய அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அரிசி மற்றும் கோதுமைக்கு கூட, மூன்று அல்லது நான்கு மாநிலங்கள் பங்களித்த மொத்த கொள்முதல், நான்கில் மூன்று பங்கிற்கு மேல் பெரிய பிராந்திய மாறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக, தற்போதைய கோதுமை அறுவடைக்கு, பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை கொள்முதல் செய்வதில் 85% பங்கைக் கொண்டுள்ளன; பீகார், ஜார்க்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட மிகக் குறைவான [கொள்முதல்] உள்ளது. புதிய அறிவிப்புகள் இந்த சிக்கல்களை தீர்க்காது.
ஐந்தாண்டுகளில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்க அரசு விரும்புகிறது. தற்போதைய சூழ்நிலையில், அவை என்ன பங்கு வகிக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிலகாலமாக செயல்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் அதை, செயல்படுத்த தவறிவிட்டது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கு விவசாயிகள் மத்தியில் ஒத்திசைவு மற்றும் அரசின் சில ஆதரவும் தேவை. அரசிடம் இருந்து மிகக்குறைந்த ஆதரவு கிடைத்தாலும், கிராமப்புறங்களில் தற்போதுள்ள உற்பத்தியின் கட்டமைப்பால் அது செயல்படவில்லை. சாதி, குத்தகை, பயிர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற பிரச்சினைகள் [பிற சிக்கல்களுக்கிடையில்] உள்ளதால், வெற்றிபெற வேறுபட்ட நிலையிலான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.