‘வன உரிமைகள் 133 (25%) தொகுதிகளின் தேர்தல் முடிவை தீர்மானிக்கும்’
புதுடெல்லி: வன உரிமை சட்டத்தின் (FRA) மோசமான செயல்பாடு, வரும் 2019 பொதுத்தேர்தலில், 543 நாடாளுமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட கால் பங்கு (133) தொகுதிகளின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று, அரசு சாரா அமைப்பான சமூக வனவளம் கற்றல் மற்றும் ஆலோசனை (CFR-LA) அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
கடந்த 2014 பொதுத் தேர்தல் முடிவுகளில், பழங்குடியின மக்கள் அதிகமுள்ள 133 தொகுதிகளை பகுப்பாய்வு செய்ததில், 95% தொகுதிகளில் வெற்றிக்கான வித்தியாசத்தைவிட, வன உரிமை சட்டத்தின் கீழ் நிலம் பெறத்தகுதி உடைய பழங்குடி மக்களின் எண்ணிக்கை அதிகம்.
வன உரிமைகள் சட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதாகவும், நில உரிமைகளுக்கு உரிய சட்ட பாதுகாப்பு தருவதாகவும் வாக்குறுதி தரும் கட்சிகள், தற்போதைய ஆளும் பாரதிய ஜனதா (பா.ஜ.க.) கட்சியை, இத்தொகுதிகளில் எளிதாக தோற்கடிக்க முடியும். நீதிமன்ற விசாரணைகளின் போது பழங்குடியின மக்கள் உரிமைகளை பாதுகாக்கவில்லை என்று, பாஜக அரசு விமர்சிக்கப்பட்டது. இது, நிலம் தொடர்பான மலைவாழ் மக்களின் உரிமை கோருவதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுக்கவும், அந்தந்த மாநிலங்கள் நிராகரிப்பதற்கும் வழி வகுத்தது. இந்த உத்தரவை பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் 2018 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு சி.எப்.ஆர்.-ஏல்.ஏ.வுக்கு ஆதரவாக அது வாதிட்டதே காரணம் என்று குறிப்பிடப்பட்டது.
மலைவாழ் மக்களுக்கு நில உரிமையை பெற்றுத்தரக்கூடிய 2006 வன உரிமை சட்டம், குறைந்தபட்சம் 20 கோடி இந்தியர்களின் - அதாவது ஜெர்மனியின் மக்கள் தொகைக்கு சமம்- உரிமை மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது. அதன் செயல்பாட்டை வைத்து இதுவரை, வன உரிமை சட்டம் மலைவாழ் மக்கள் மற்றும் அரசுகளுக்கு இடையில் ஒரு கருத்தாக இருந்துள்ளது. இதன் விளைவாக 550,000 ஹெக்டேர் வனம் தொடர்பான (தில்லி மாநிலத்தின் நான்கு மடங்கு) நில மோதல்கள் ஏற்பட்டன. இத்தகைய மோதல்கள் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதிப்பதாக, நாடு முழுவதும் நில மோதல்களை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர்களை கொண்ட சுயாதீன அமைப்பான லேண்ட் கான்பிளிக் வாட்ச் சேகரித்த தரவுகள் தெரிவிக்கிறன.
வாக்களிக்கும் முறை எப்படி மாறும்
சி.எப்.ஆர்.-எல்.ஏ. பகுப்பாய்வு செய்த அனைத்து 133 தொகுதிகளிலும், வன உரிமை சட்டத்தின் கீழ் வரக்கூடிய 10,000 க்கும் அதிகமான ஹெக்டேர் காடுகள் உள்ளன; இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட 20% க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2014 பொதுத்தேர்தலில், ஆளும் பாஜக இந்த 133 இடங்களில் 59% இடங்களை வென்றது. காங்கிரசுக்கு 4% தான் கிடைத்தன, அதனால், 62% இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாம் இடத்தை மட்டுமே பெற்றது.
சத்தீஸ்கரில், 2018 சட்டப்பேரவை தேர்தலின் போது, வன உரிமைகள் சட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அக்கட்சி, 2013 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது 68% அதிக இடங்களை பெற்றது; இதில் 39 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின (SC-ST) மக்களுக்கு ஒதுக்கப்பட்டவை. பா.ஜ.க. 75% இடங்களை இழந்ததாக, சி.எப்.ஆர்.-எல்.ஏ. இன் சட்டமன்ற தேர்தல் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
"வன உரிமைகளைச் சார்ந்த ஒரு பிரச்சாரம், பா.ஜ.க.வுக்கு பாதிப்பைக் கொண்டுள்ளது" என்று, பகுப்பாய்வுகள் கூறுகின்றன.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்றா வெற்றியை போல், காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலங்களில் நில உரிமை விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக விவாதிக்கப்படவில்லை என்பதை பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் தவிர, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அதாவது ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் போன்றவற்றில், வன உரிமைகள் சட்டம் "மோசமாகவும், சட்டத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் நோக்கிலும்" செயல்படுத்தப்படுவதாக, பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
Read IndiaSpend’s coverage of FRA violations from across the country:
Story 4: $6.5bn Afforestation Fund Has Pitted Forest Depts Against Tribals, Again
Story 5: Conflicts Across India As States Create Land Banks For Private Investors
நில உரிமை இழக்கலாம் என்று அஞ்சும் வாக்காளர்கள்
குறைந்தபட்சம் 4 கோடி ஹெக்டேர் வன நிலங்கள் - இந்தியாவின் வனப்பகுதியில் 50% க்கும் அதிகமாகவும், உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை விடவும் பெரியது - வன உரிமைச்சட்டம் மற்றும் மலைவா மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடையது.
குறைந்தபட்சம் 170,000, கிராமங்களில் அதாவது நாட்டின் மொத்த கிராமங்களில் நான்கில் ஒரு பகுதி, வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமைகள் பெற தகுதியுடையவை என்று பகுப்பாய்வு கூறுகிறது.
சி.எப்.ஆர்.-எல்.ஏ.வில் லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில தொகுதிகள் சேர்க்கப்படவில்லை; இங்கு அதிகளவில் பழங்குடி மக்கள் உள்ளனர்; ஆயினும் வன நில உரிமை வைத்திருப்பவர்கள் பற்றிய தரவு கிடைக்கவில்லை.
Core FRA Potential Seats For 2019 General Elections | |||||||
---|---|---|---|---|---|---|---|
Value Of FRA As An Electoral Factor | Of Seats | BJP | INC | Others | |||
Won | 2nd | Won | 2nd | Won | 2nd | ||
Critical Value | 30 | 21 | 3 | 0 | 21 | 9 | 5 |
High Value | 20 | 12 | 7 | 1 | 9 | 7 | 4 |
Good Value | 35 | 18 | 2 | 2 | 22 | 15 | 11 |
Medium Value | 48 | 28 | 4 | 2 | 31 | 18 | 14 |
Total constituencies where FRA is a core factor (at least 20% voters are also potential Forest Rights Act right-holders) | 133 | 79 | 16 | 5 | 83 | 49 | 34 |
Source: Community Forest Resource-Learning and Advocacy
இத்தரவுத்தளத்தை ஒன்றாக இணைக்க, சி.எப்.ஆர்.-எல்.ஏ. இரண்டு ஆதாரங்களை பயன்படுத்துகிறது - இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட, 2014 நாடாளுமன்ற தொகுதி முடிவுகள் அடிப்படையிலான தரவுகள் மற்றும் வன உரிமைச் சட்டத்தின் கீழ், தகுதியுள்ள தொகுதிகளின் 2011 கணக்கெடுப்பு தரவு ஆகியன.
இந்த 133 நாடாளுமன்ற தொகுதிகளில், வனநில உரிமைகள் தவறான நிராகரிப்பட்டது அதிகளவில் நடந்துள்ளன; இது பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் வெளியேற்றம் என்ற வகையில் பாதிப்பை ஏற்படுத்தின என்று, ஒடிசா சார்ந்த ஆராய்ச்சியாளரும், சி.எப்.ஆர்.-எல்.ஏ. உறுப்பினருமான துஷார் தாஸ் தெரிவித்தார். வன உரிமை சட்டத்தின் மோசமான நடைமுறை, வன உரிமை மீறல் மீறல்கள், வன துறையினரால் கட்டாயமாக பயிரிடப்படும் தோட்டங்கள் போன்ற அத்துமீறல்கள் நடந்ததாக, இத்தொகுதிகளுக்குட்பட்ட வனப்பகுதி சமூகத்தினர் தெரிவித்ததாக, அவர் மேலும் கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் பிறகு, பழங்குடியின மக்கள் மற்றும் பிற மலைவாழ் மக்களின் வெளியேற்றத்திற்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யுமஆறு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களை அதன் தலைவர் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். முன்னதாக, பழங்குடி மக்களின் உரிமைகள் பாதிக்கக்கூடிய முந்தைய அரசின் முடிவுகள், கொண்டுவரப்பட்ட மாற்றங்களையும் திரும்பப் பெறுமாறு, காங்கிரஸ் முதலமைச்சர்களை அவர் வலியுறுத்தி இருந்தார். வன உரிமை சட்டம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்காமல் மத்திய அரசுக்கு "அமைதியான பார்வையாளராக" இருந்ததாக, பாஜக அரசை ராகுல் விமர்சனம் செய்திருந்தார்.
I have spoken to all CMs of BJP ruled states in the situation arising out of Supreme Court's order on eviction of Tribals living in Forest Areas.
— Chowkidar Amit Shah (@AmitShah) February 25, 2019
The states will be soon filing review petition and care will be taken to safeguard the rights of our tribals and prevent eviction.
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதிய இரு நாட்களுக்கு பிறகு, பாஜக தலைவர் அமித் ஷாவும் தனது கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு இதே போன்ற அறிவுரைகளை அனுப்பினார். "வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றுவதில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் நான் பேசினேன்," என்று, 2019 பிப்ரவரி 25 அன்று அவர் ட்வீட் செய்திருந்தார். "விரைவில், மாநிலங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யும். நமது பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கவும், வெளியேற்றப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின், உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு மத்திய அரசு ஒரு தற்காலிக தடை கோரியது. நிலம் உரிமை கோரிக்கைகள் நிராகரிக்கப்புக்கு மாநிலங்களின் செயல்பாடு குறைகளே என்று குற்றஞ்சாட்டியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை நிறுத்தி வைத்து, மத்திய அரசின் குற்றச்சாட்டுகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நான்கு மாதங்கள் அவகாசத்தையும் தந்தது.
எப்படி தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படலாம்
கடந்த 2006இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன வன உரிமை சட்டத்தை இயற்றியது. ஆனால் 2014 பொதுத்தேர்தலில் வன உரிமைச்சட்டம் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்த பகுதிகளின் நாடாளுமன்ற தொகுதிகளில், அக்கட்சி மோசமாக தோல்வி அடைந்ததாக சி.எப்.ஆர்.-எல்.ஏ. பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. எப்படியானாலும், வனப்பகுதி சார்ந்த 133 தொகுதிகளில்(62%) காங்கிரஸ் கட்சி (83%) இரண்டாம் இடத்தை பெற்று தோற்கடிக்கப்பட்டது.
இந்த 133 இடங்களில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. நேரடி போட்டி நிலவிய 68 இடங்களில் காங்கிரஸ் 3 இடங்களை மட்டுமே வென்றது. "இந்த 68 தொகுதிகள் அடுத்த அரசு அமைவதில் ஆதிக்கம் செலுத்தும் என்பது தீர்க்கமானவை என்பதை உறுதியாகக் கூறலாம்" என்று பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இருப்பினும், பா.ஜ.க.வும் காங்கிரஸும் நேரடியாக மோதும் ஒன்பது மாநிலங்களில் நான்கிற்குட்பட்ட 68 இடங்களில், பதவியில் இருந்த பா.ஜ.க. அரசு சட்டசபை தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டிருந்ததை, பகுப்பாய்வு காட்டுகிறது.
(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.