புதுடெல்லி: உலக வெப்பமயாதல் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பதால் ஏற்படும் தண்ணீர், உணவு, சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள், தீவிர இயற்கை பேரழிவுகளை தவிர்க்க இந்தியா விரும்பினால், சர்வதேச முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தந்து, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வாயு வெளியேற்ற அளவை, 58% குறைத்தாக வேண்டும்.

இதற்கு, எரிபொருள் உற்பத்திக்கான நிலக்கரி பயன்பாட்டை78% குறைத்து, 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அளிப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் அவசியம். உலக வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஷுக்கு மேல் அதிகரித்து, சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மனித செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, தொழிற்சாலைக்கு முந்தைய (1800க்கு முன்) நிலை வர வேண்டுமென்று, பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசு குழுவின் (IPCC) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போதுள்ள விகிதத்தில், 2040ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து விடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அபாய சிவப்புக் கோடு, முன்பு கணிக்கப்பட்டிருந்த 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பு என்பதைவிட விரைவாகவும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தும்.

“நமது செயல்பாடுகளால் ஏற்படும் பருவநிலை மாற்ற தாக்கங்களை நாம் அனுபவிக்கும் காலமும் நேரமும் வெகுதூரத்தில் இல்லை” என்று, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ் (IIHS) நிறுவன இயக்குனரும், 2018 அக்.8-ல் வெளியான ஐ.பி.சி.சி.அறிக்கையின் ஒருங்கிணைப்பு ஆசிரியருமான அரோமர் ரவி கூறினார்.

புவியின் வெப்பம் 1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பால் கேரள வெள்ளம், உத்தரகாண்டில் வனத்தீ, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அனல் காற்று போன்ற தீவிர தாக்கத்தை அனுபவித்தன. புவி வெப்பமாதலால், 600 மில்லியன் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

வெப்பமடைதல் மேலும் அதிகரித்தால், இந்தியா போன்ற நாடுகளில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு, பலவித நோய்கள் ஏற்படும் என்று, ஐ.பி.சி.சி. அறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 0.2 டிகிரி செல்ஷியஸ் என தற்போதைய வெப்பம் அதிகரிப்புக்கு, இப்போதும் கடந்த காலங்களிலும் கார்பன் வெளியேற்றமே காரணம்.

பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள் பரிந்துரைந்த கடும் நடவடிக்கைகள், 2018 அக்.7ல் நாம் தெரிவித்திருந்ததை போல், இந்தியாவுக்கு கடுமையான செய்தியாகவே உள்ளது. கார்பன் வெளியேற்றி மாசுபடுத்துவதில் உலகில் இந்தியா மூன்றாவதாகவும், நிலக்கரி பயன்பாட்டில் இரண்டாவதாகவும் உள்ளது. இன்னமும் 2018, அக். வரை) 15 மில்லியன் குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை.

“ஐ.பி.சி.சி. அறிக்கையானது நிலக்கரி பயன்பாட்டை நாம் தீவிரமாக குறைப்பது அவசியம் என்ற சமிக்கையை தெரிவிக்கிறது” என்று, சிட்னியில் உள்ள எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆற்றல் நிதி ஆய்வுகள் இயக்குனர் டிம் பக்லே கூறினார். ”இதன் பொருள் புதியதாக நிலக்கரிகளுக்கு இனி இடமில்லை என்பதும்; நிலக்கரிக்கு பதில் புதிப்பிக்கத்தக்க ஆற்றலை அரசு தொடங்க வேண்டும் என்பதாகும்”.

வரும் 2030ஆம் ஆண்டு வரை கார்பன் குறிப்பிட்ட அளவு குறைப்பு என்ற நாடுகளின் நோக்கம் போதுமானதல்ல என்று அறிக்கையில் தெரிய வருகிறது. இலக்கை நாடுகள் நிறைவேற்றினாலும் கூட, தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் காரணமாக 2100ஆம் ஆண்டில் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்ஷியஸாக கட்டுப்படுத்த ஐ.பி.சி.சி. தெரிவிக்கும் பாதைகளால் கடல் மட்டம் உயருவதன் வேகம் குறையும்; வெப்பம் அதிகரிப்பு நாட்கள் குறையும். 2100 ஆண்டு வாக்கில் அழியப்போகும் பல உயிரினங்கள் காப்பாற்றப்படும்.

“பெரிய மாற்றங்கள் செய்ய நமக்கு சிறிது அவகாசம் உள்ளது. நமது பொருளாதார ஓட்டமும், சமுதாயம் மற்றும் அரசு நிர்வாக அமைப்பும் இதற்கு வழிவகுக்கும்” என்று ரவி கூறினார். ”புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் வைத்திருப்பது என்பதன் பொருள், நாம் நான்கு பெரிய அமைப்புகளை மாற்ற வேண்டும் என்பதாகும்: பசுமை இல்ல வாயுக்கள், விவசாயம், வனங்களை ஏற்படுத்தும் நமது ஆற்றல் மற்றும் தொழில்துறை அமைப்புகள், ஆபத்துகளில் கவனம் செலுத்தும் நமது நகரங்கள் பரிணாம மாற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன”.

இதை செயல்படுத்த நமது நிர்வாக முறையை மாற்ற வேண்டும்; திட்டங்களுக்கான நிதிக்கு மறுவழி, அனைத்து நிலைகளிலும் இதை செய்ய நிறுவனங்களுக்கான திறன்களை ஏற்படுத்த வேண்டும். அதாவது கிராமங்கள், நகராட்சிகள், மாநிலங்கள், தேசியம் என அனைத்து வழியாகவும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்துவதால் உலகை காப்பாற்ற இயலும்

2015 பாரீஸ் உடன்படிக்கையின் படி, வெப்பநிலை உயர்வானது 2 டிகிரி செல்ஷியஸ் என்பது 1.5 ஆக கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பல்வேறு கடும் இயற்கை விளைவுகள், புவியீர்ப்பு மற்றும் அதிர்வெண் போன்றவற்றை கட்டுப்படுத்தியிருக்க முடியும். சில நன்மைகள்:

பூமியில் சில தீவிரமான வெப்ப நாட்கள்: புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் என்ற வரம்புக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், பூமத்திய ரேகை பகுதிகளில் (இந்தியா உட்பட) வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் உயர்வு என்பது, சுமார் 3 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும்; இது 2 டிகிரி செல்ஷியஸ் ஆகக்கூட இருந்திருக்கலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வெப்ப நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வரையறுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வு: வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்ஷியஸ் என்று இருக்குமானால், உலகளவில் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 0.26 - 0.77 மீட்டர் உயரக்கூடும்; இது, 2 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை இருந்தால் அதிகரிக்கு கடல் மட்ட உயர்வைவிட 0.1 மீட்டர் குறைவாகும்.

“உலகளாவிய கடம் மட்டம் உயர்வு 0.1 மீட்டர் குறைப்பு என்பது, 2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி, 10 மில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்தோடு தொடர்புடையது” என்று அறிக்கை தெரிவிக்கிறது. கடல் மட்ட அதிகரிப்பு என்பது சிறு தீவுகள், தாழ்வான பகுதி கடலோரங்களில் வெளிப்படுகிறது. கடல் நீர் ஊடுருவி உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துகிறது.

பாதுகாக்கப்பட்ட இனங்களை இரட்டிப்பு : ஆய்வு செய்யப்பட்ட, 1,05,000 இனங்களில் 9.6% பூச்சிகள், 8% தாவரங்கள் மற்றும் 4% முதுகெலும்புள்ள பிராணிகளின் பாதிக்கு பாதியை, பருவநிலை மாற்றம், 1.5 டிகிரி செல்சியஷுக்குள் கட்டுப்படுத்தப்படுவது தீர்மானிக்கிறது. ஆனால், வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஷுக்கு கீழ் எனும் போது, இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. அதாவது, பூச்சிகள் 18%, தாவரங்கள் 16%, முதுகெலும்பற்ற பிராணிகள் 8% தங்களின் வீடுகளை இழந்துவிடும்.

நீருக்கான அழுத்தம் குறைவு: புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்தினால், 50% பேருக்கு காரணமாக இருக்கும், பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் தண்ணீர் பிரச்சனை அழுத்தத்தில் இருப்போரின் எண்ணிக்கை குறையும்.

பரவும் நோய்கள்: புவி வெப்பம் அதிகரிக்கும் போது மனித உடல் நலனையும் அது பாதிக்கும் என்றி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் என்பதைவிட குறைவாக, 1.5 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் போது நோயுற்ற விகிதமும், மரண விகிதமும் குறைவாக இருக்கிறது. அதேநேரம் வெப்பம் அதிகரிப்பு 1.5 - 2 டிகிரி செல்ஷியஸ் எனும் போது உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விளைச்சலின்மை குறையும்: வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்துவதால் விளைச்சலின்மைஐ சற்று குறைக்கும். குறிப்பாக சஹாரா ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளின் அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய பயிர்களின் மகசூலை குறிப்பிடலாம். அதேபோல் அதிக கார்பன் வாயு வெளியேற்றத்தால் அரிசி, கோதுமை போன்றவற்றில் ஊட்டச்சத்துகள் குறையக்கூடும்.

கால்நடைகள் மீதான குறைந்த தாக்கம்: உயரும் வெப்பநிலையால் ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய்கள் பரவுதல், நீர் ஆதாரத் தேவைகள் ஆகியவற்றின் அளவைப் பொறுத்து, உலகில் எல்லா இடங்களிலும் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாவதாக அறிக்கை தெரிவிக்கிறது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சேதத்தை தவிர்க்கலாம். உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான (12%) இந்தியாவுக்கு இது கவலை தரக்கூடியதாகும்.

புவி வெப்பமயமாதலை மேலும் கட்டுப்படுத்த என்ன உதவும்

ஐ.பி.சி.சி. விஞ்ஞானிகள், பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கு பிறகு புவி வெப்பமயதலை மேலும் கட்டுப்படுத்துவதற்கானது என்ற முடிவாக தீர்மானித்திருப்பது, 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே.

எல்லா வகையிலும் கார்பன் வாயு வெளியேற்றத்தை அகற்ற வேண்டும் என்பது அவசியமானது. இதன் வெளியேற்ற அளவு 2030ஆம் ஆண்டை எட்டப்போகும் அடுத்த 12 ஆண்டுகளில் 58% (2010ஐ போல்) குறைக்க வேண்டும்; புதுப்பிக்கத்த மின்சாரத்தில் இருந்து 60% பெற வேண்டும்; ஏற்கனவே குறிப்பிட்டபடி, பிரதான மின் சக்தியாக உள்ள நிலக்கரி பயன்பாட்டை, 78% குறைக்க வேண்டும். இந்நிலைமை, 2050 ஆம் ஆண்டு வரையிலான குறைந்த ஆற்றல் தேவைக்கான சமூக, தொழில் மற்றும் தொழில் நுட்பங்கள் உள்ள ஒரு மாதிரிக்காட்சியை (பி1), வளரும்னாடுகளில் ஏற்படுத்துகிறது. ஒரு குறைக்கப்பட்ட எரிசக்தி அமைப்பானது, கார்பன் அகற்றத்தை விரைவாக செயல்படுத்துகிறது. காடு வளர்ப்பு மட்டுமே கார்பன் வாயு அழிப்புக்கான ஒரே வழியாக கருதப்படுகிறது.

பி1 சூழ்நிலைக்கு கார்பன் பிடிப்பு அல்லது சேமிப்பு (CCS) தொழில் நுட்பங்கள் -- அதாவது வளிமண்டலத்தில் உள்ள கார்பனை நிலம் அல்லது கடலின் அடியில் சேமித்து வைப்பது -- 2100 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியம் உமிழ்வு என்பதை அடைவதற்கு தேவைப்படாது.

இதர தீவிர சூழ்நிலையானது, பொருளாதார வளர்ச்சி, உலகமயமாக்கல், பரந்தளவிலான வாழ்க்கை முறையை பின்பற்ற ஆற்றல் மற்றும் தீவிர ஆதாரமான பி4 வழி வகுக்கும்; இதற்கு அதிகளவிலான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தேவை. போக்குவரத்து எரிபொருளுக்கான அதிக தேவை மற்றும், கால்நடை பொருட்கள் நுகர்வு ஆகியவற்றால் இது ஏற்படும்.

இத்தகு சூழலில், வளிமண்டலத்தில் இருந்து 1,218 ஜிகாடன் கார்பன் (GtCO2)

சிசிஎஸ் தொழில்நுட்பங்களால், விரிவான இயற்கை எரிசக்தி பயன்பாட்டுடன் அகற்றப்பட வேண்டும். பி-4ன் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்ற அளவு, 2010ஐ விட 4% கூடுதலாகவும்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு 25% அதிகரித்து, பிரதான எரிசக்தியான நிலக்கரி பயன்பாட்டை 59% குறைக்க வேண்டும்.

தொழில் அமைப்பில் தூய்மைப்படுத்துவது உலகிற்கு ஏன் தேவை

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் என கட்டுப்படுத்தும் பாதையில் உறுதியாக பயணிப்பது, 2010ஆம் ஆண்டு நிலையில் இருந்து, 2050க்குள் தொழிற்சாலைகளின் கார்பன் வாயு வெளியேற்றம் 75-90% ஆக குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. மாறாக, 2 டிகிரி செல்ஷியஸ் என வெப்பநிலை கட்டுக்குள் வந்தால், கார்பன் வெளியேற்ற குறைப்பு 50-80% ஆக இருக்கும்.

புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் என கட்டுப்படுத்த, 2050 ஆம் ஆண்டுக்குள் கட்டிடங்களுக்கு 55-75% மின்சாரம் தேவைப்படுகிறது; இதுவே 2 டிகிரி செல்ஷியஸ் எனில், 50-70% ஆகும். போக்குவரத்து துறையில், குறைந்த கார்பன் வெளியேற்றும் ஆற்றலின் பயன்பாடு, 1.5 டிகிரி செல்ஷியஸ் என கணக்கிட்டால், 2020ஆம் ஆண்டில் 5% என்பது, 2050ஆம் ஆண்டில் 35-65% வரை அதிகரிக்கும். வெப்பமயமாதல்2 டிகிரி செல்ஷியஸ் ஆக கட்டுப்படுத்தப்பட்டால் இது, 25-45% வரை உயரும்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.