காய்ச்சல் போன்ற தொற்றுநோய் உலகளவில் 8 கோடி பேரை கொல்லக்கூடும், 5% உலக ஜி.டி.பி.யை அழிக்கும்: புதிய அறிக்கை
மும்பை: அதிகரித்துள்ள இடம் பெயர்வு, ஆயத்தமில்லாத சுகாதார வசதிகள் மற்றும் ஆயுதமாகாத நோய் சாத்தியம் ஆகியன, வைரஸ் சுவாச நோய் விரைவாக உலகம் முழுவதும் பயணிக்க முடியும்; இது 8 கோடி மக்களைக் கொல்லும்; அத்துடன், உலகப் பொருளாதாரத்தில் 5% ஐ அழிக்கும் திறன் கொண்டது என்று, ஒரு புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
இத்தகைய ஒரு தொற்றுநோயால், இந்தியா ஜி.டி.பி. (GDP) எனப்படும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% இழக்கும் - அதாவது ரூ.3.8 லட்சம் கோடி (53.5 பில்லியன் டாலர்) அல்லது 2019-20 ஆம் ஆண்டின் மத்திய விவசாய பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இரு மடங்கு அதிகம்.
உலகத் தலைவர்கள் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நிதியை அதிகரிக்காதவரை மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்கி தங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்காதவரை, இது தொடரும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வங்கி கூட்டிய உலகளாவிய ஆயத்த கண்காணிப்பு வாரியம்-ஜி.பி.எம்.பி. (GPMB) தெரிவித்துள்ளது.
கடந்த 2009இல் எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா தொற்று மற்றும் 2014-16இல் எபோலா வைரஸுக்கு பிறகு வல்லுநர்கள் அளித்த பரிந்துரைகளை, மற்ற அறிக்கைகள் மற்றும் தரவுகளுடன் வரைந்து, 15 பேர் கொண்ட வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முகவர் தலைவர்கள் குழு தொற்றுநோய்களைக் கையாள்வதில் நாடுகளின் தயார்நிலையை மதிப்பிட்டனர். இக்குழுவில், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குனர் க்ரோ ஹார்லெம் ப்ருண்ட்லேண்ட் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் பொதுச் செயலாளர் எல்ஹாட்ஜ் அஸ் சை ஆகியோர் அடங்குவர்.
எபோலா, கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் நோய் பரவல் வேகம் என்பது, முன்பை விட அதிகமாகவும், அது பரவும் குறைவான நேரத்தில் நிர்வகிப்பது மிகவும் கடினம் என்று, 2019 செப்டம்பர் 18 அறிக்கை தெரிவிக்கிறது. பெரிய மக்கள்தொகை சுகாதார அணுகல் இல்லாத நிலையில், வளர்ச்சியடையாத நாடுகளில் மேலாண்மை இன்னும் கடினம்.
சரியான நேரத்தில் மற்றும் போதுமான பதிலை உறுதி செய்வதற்காக சுகாதார அவசரநிலைகளை கண்டறியும் கட்டமைப்புகளுக்கான செலவினங்களை, நாடுகளும் நன்கொடை நிறுவனங்களும் அதிகரிக்க வேண்டும்; தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க தடுப்பூசிகள் போன்ற தரவுகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வாரியம் பரிந்துரைத்தது.
நோயால் ஆபத்தில் இருக்கும் வாழ்வும் வாழ்வாதாரங்களும்
உலகளவில் 5 கோடி மக்களை (2.8% மக்கள்) கொன்ற, 1918ஆம் ஆண்டு காய்ச்சல் தொற்றுநோய்க்கு பிறகு மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அத்துடன், ஒரு கொடிய வைரஸைச் சுமக்கும் ஒருவர் உலகின் எந்தப்பகுதிக்கும் 36 மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும், இது உலகமயமாக்கப்பட்ட பரவலாக மாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது; இது உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
சார்ஸ், எபோலா, ஜிகா, நிபா வைரஸ் உள்பட, 1,483 தொற்றுநோய்களை 2011 மற்றும் 2018க்கு இடையில் 172 நாடுகளில் உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தது. இது, 50 ஆண்டுகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் முன்னர் அறியப்படாத வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை வரைபடமாக்கியது.
ஏழை நாடுகளில் ஏற்கனவே சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை, இதனால் தொற்று நோய்கள் பரவினால் அதை சமாளிப்பது மிகவும் கடினம். பாகிஸ்தானில் கண்டது போல், அரசு நிறுவனங்களின் மீதான நம்பகமின்மை, நோய் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை குறைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான செலவு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது, பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 2014-16இல் சியரா லியோன், கினியா மற்றும் லைபீரியா - மூன்று நாடுகளில் 99.8% நோயாளிகளுக்கான எபோலா தொற்றுநோய்க்கான மொத்த செலவு - 2.8 பில்லியன் டாலர்கள். பொருளாதார செயல்பாடு மோசமாக பாதிக்கப்பட்டது: ஒவ்வொரு நொடியும் லைபீரிய தொழிலாளியும் தொற்றுநோய் காரணமாக ஒன்பது மாதங்கள் தங்கள் வேலையை இழந்தனர்; இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% இழப்பை ஏற்படுத்தியது. சியரா லியோன் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை பாதியாக குறைந்தது; மூன்று நாடுகளில் வரி இனமாக அரசுக்கு கிடைத்த வருவாய் 4.9 - 9.4% குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
நாங்கள் கூறியது போல, அத்தகைய தொற்றுநோய்களால், இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% இழக்க நேரிடும்; அறிக்கையில் பயன்படுத்தப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்னறிவிப்பு மாதிரிகள் தெரிவிக்கின்றன.
மோசமானவற்றுக்குத் தயாராகுங்கள்
நன்கொடையாளர்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகள் மற்றும் பிற சிகிச்சையின் வளர்ச்சியில், போதுமான முதலீட்டை உறுதி செய்ய வேண்டும்; தொற்றுநோய்களின் போது குறுகிய அறிவிப்பில் தடுப்பூசிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் மற்றும் பொருத்தமான பொது பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.
பரவலுக்கு பதிலளிப்பதற்கான தற்போதைய அமைப்புகள், போதுமானதாக இல்லை; தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உண்மையான தொற்றுநோயை குறைத்திருக்க வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது; புதிய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் கண்டறியும் நுட்பங்களை உருவாக்க வேண்டும், இதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு -ஆர்&டி (R&D) தேவைப்படுகிறது.
நோய்த்தொற்றுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க, நாடுகள், உதவி முகவர் நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற பலதரப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிதியை அதிகரிக்க உலகளாவிய ஆயத்த கண்காணிப்பு வாரியம் ஜி.பி.எம்.பி பரிந்துரைத்தது. கூடுதலாக, தொற்றுநோய் கையாள்வதற்கான வளரும் நாடுகளின் திறன்களை அதிகரிக்க வேண்டும்.
நாடுகளின் சுகாதார திறனை மேம்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலக சுகாதார அமைப்பு உதவியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கான நிதி 7% அதிகரித்து 2016 மற்றும் 2017 க்கு இடையில் 10 ஆண்டு உயர்வை எட்டியுள்ளது என்று ஜி.பி.எம்.பி. குறிப்பிட்டது.
தற்போது, 640 கோடி டோஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிலையில், 4 கோடி டோஸ் தொற்றுநோய்களின் தடுப்பூசிகளை தற்போது உலகம் வைத்திருக்கிறது, இது ஒரு தொற்றுநோய் ஏற்பட்டால் உலக மக்கள்தொகையில் 43% இரண்டு மருந்துகளுடன் தடுப்பூசி போட பயன்படுகிறது. எப்படியானாலும், உலகளாவிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை உருவாக்குவதே, அதன் இறுதி நோக்கம், மேலும் உலகத்தலைவர்கள் செப்டம்பர் 2020ஆம் ஆண்டு என்ற ஒரு காலக்கெடுவுக்குள் உறுதியளித்து, அத்தகைய தடுப்பூசியை உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று ஜி.பி.எம்.பி விரும்புகிறது.
நோயறிதல் தொழில்நுட்பம் - பாதிக்கப்பட்ட நபர்களை சரியான நேரத்தில் அடையாளம் காணவும், தடுப்பூசிகளின் செயல்திறனை சோதிக்கவும் உதவுகிறது - இது தொற்றுநோய்களின் போது செலுத்தும் ஒரு முக்கியமான முதலீடாகும். குளோபல் இன்ஃப்ளூயன்சா கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பு 115 நாடுகளில் 151 ஆய்வகங்களைக் கொண்டுள்ளது; இது சார்ஸ் மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) வைரஸ்கள் உள்ளிட்ட சுவாச நோய்க்கிருமிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவும் திறம்பட கண்காணிக்கவும் அனுமதிக்கிறது என்கிறது ஜி.பி.எம்.பி.
அதிக பிரசவ மற்றும் குழந்தை இறப்பு உள்ள நாடுகளில் தொற்றுநோய்கள் இருக்க முடியாது: அறிக்கை
ஒரு நாடு சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அடிப்படை சுகாதார வழங்கல் மிக முக்கியமானது: தாய், குழந்தை ஆரோக்கியம் போன்ற மிக அடிப்படையான சுகாதார வசதிகள் இல்லாவிட்டால், ஒரு நாடு தொற்றுநோய்க்கு தயாராக முடியாது என்று ஜி.பி.எம்.பி. கூறியுள்ளது.
சுகாதார பாதுகாப்பு மேம்படுத்துவதற்கும், மதத் தலைவர்கள், உள்ளூர் அரசுகள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கும், அவசரநிலை ஏற்படுவதற்கு முன்னர் போதுமான அளவு சோதிக்கப்படும் சமூக-குறிப்பிட்ட திட்டங்களை வகுக்க வாரியம் அழைப்பு விடுத்தது.
ஜி.பி.எம்.பி-யின்படி, உள்ளூரில் அரசு நிறுவனங்களால் வழங்கக்கூடிய மற்றும் திறமையான பராமரிப்பு மக்கள் நம்பிக்கையை வளர்க்கும். கூடுதலாக, எபோலா பரவலின் போது போலியோ பராமரிப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்ட நைஜீரியா போன்ற அவசர காலங்களில் இருக்கும் வசதிகளையும் வளங்களையும் திரட்ட முடியும்.
இந்தியாவில், 2018ஆம் ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் கொரியா குடியரசில் மெர்ஸ் வைரஸ் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களை குறைக்க உதவும் உத்திகளை, வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், நோய் கொண்ட திறன்களுக்கான முதலீடு பலனளிக்கிறது. அதே ஆண்டில், உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையிலுள்ள நாடுகள் எபோலா நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது, இது சிறந்த தயார்நிலையை பிரதிபலிக்கிறது.
சுகாதார நெருக்கடிகளின் போது முயற்சிகளை வழிநடத்த ஒவ்வொரு நாட்டிலும் தேசிய அளவிலான அமைப்புகள், ஆணையங்கள் அல்லது அரசியல் அதிகாரம் மற்றும் பொறுப்பேற்கும் தன்மை கொண்டை முகவர்கள் அமைக்க வேண்டும் என்று ஜி.பி.எம்.பி. பரிந்துரைத்தது. இது எபோலா மற்றும் ஜிகா மறுமொழிக்கு சாட்சியாக இருப்பது போன்ற முடிவெடுப்பதில் தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
முன்னோக்கி செல்லும் வழி: தெளிவான தலைமை, அதிக பணம், வள பகிர்வு ஒப்பந்தங்கள்
சுகாதார அமைப்புகளில் 340 கோடி ரூபாய் முதலீடு செய்வது 3000 கோடி ரூபாய்க்கான நன்மையை வழங்கும், பொருளாதார மற்றும் மனித இழப்பைக் குறைக்கும், ஆரோக்கியத்தை ஒரு பயனுள்ள முதலீடாக மாற்றும். ஆனாலும் கூட, அரசுகள் தொடர்ந்து ஆரோக்கியத்தை புறக்கணிப்பதை, ஜி.பி.எம்.பி கவனித்தது.
ஏழை நாடுகளால் சுகாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியவில்லை, இது உலகத்தை ஒரு தொற்றுநோய்க்கு ஆளாக வைக்கிறது. 2018 ஆம் ஆண்டு டி.ஆர்.சி.யில் எபோலா வைரஸ் பரவலுக்கு பிறகு உலக சுகாதார அமைப்பின் அவசரகால நிதி (CFE) குறைக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள், உலக சுகாதார அமைப்பின் அவசர கால நிதிக்கு தங்கள் பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும்; மேலும் தொற்றுநோய்களைக் கையாள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க, வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் எனவும் வாரியம் பரிந்துரைத்தது.
தொற்றுநோய்களின் போது மட்டுமல்லாமல், சுகாதார நெருக்கடிகளுக்கு ஆயத்தமாவதை உறுதி செய்வதிலும் தேசிய தலைவர்கள் முயற்சிகளை வழிநடத்த வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. தொற்றுநோய்களின் காலங்களில், ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியன, நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்பார்வையிட ஒரு தலைவரை ஒருமனதாக அறிவிக்க வேண்டும்.
கிழக்கு டி.ஆர்.சி மற்றும் ஏமன் போன்ற மோதல் மண்டலங்களில் சுகாதார அவசரநிலைகளைச் சமாளிக்க புதிய அணுகுமுறைகள் தேவை. வறுமை மற்றும் நிலையற்ற ஆளுகை ஆகியவை ஒரு நோயை பரவச் செய்வதால் அரசு நிறுவனங்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.
(இக்பால், பொருளாதார பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.