பெங்களூரு: "விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான 'சமூக ஒப்பந்தத்தில் 'ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றியதே பயத்தின் மூல காரணம்," என்று, அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வேளாண் மேலாண்மை மையத்தின் பேராசிரியரும், முன்னாள் தலைவருமான சுக்பால் சிங் கூறினார். இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண்மை சட்டங்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்கான காரணத்தை, அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்.

கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில் நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் போது உழவர் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் - 2020 (FPTC), அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம்- 2020, மற்றும் விலை உத்தரவாத மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) வேளாண் சேவைகள் சட்டம்- 2020 (FAPAFS) ஆகியன நிறைவேற்றப்பட்டன.

இந்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தேசிய தலைநகரான டெல்லியின் புறநகர் பகுதியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்னவென்றால், இந்த தொலைநோக்கு மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு, அரசு தங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்பதும், மாநிலங்களின் கீழ் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு நிர்வகிப்பதாக அவர்கள் நினைப்பதாகவும், சிங் தெரிவித்தார்.

இந்த சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) கீழ் உணவு தானியங்களை பெறுவதை பாதிக்கலாம் என்று விவசாயிகள் கருதுகின்றனர், இது அரசால் பெறப்பட்ட சில விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று சிங் கூறினார். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து பெரிய அளவில் அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு 'சட்ட உரிமை' ஆக்குவது தீர்வல்ல என்று சிங் கூறுகிறார். அத்தகைய சட்டம், மாநிலத்தில் விவசாயச் சந்தையை "கொல்லும்", ஏனெனில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்க வேண்டுமென்று தனியார் வாங்குவோரை கட்டாயப்படுத்தினால், அவர்கள் மலிவாக தொகையில் வேறு இடங்களில் இதை எதிர்பார்க்கக்கூடும் என்று, சிங் விளக்கினார்.

அதற்கு பதிலாக தேவை என்னவென்றால், உற்பத்திக்கு முந்தைய ஆதரவு (விதைகள், உரங்கள், கடன், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு) மற்றும் உற்பத்திக்கு பிந்தைய ஒருங்கிணைப்பு (உழவர் கூட்டுறவு மூலம் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ஆகியன அடங்கும் என்றார் அவர். கட்டாய விற்பனையை குறைப்பதற்கு, கிடங்கு மற்றும் குளிர்பதன சேமிப்பு வசதிகளில் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

பின்தங்கிய விவசாயிகள் மற்றும் 2011 ஆம் ஆண்டில், அப்போதைய திட்டக்குழுவின் விவசாய சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு தொடர்பான பணிக்குழுவில் உறுப்பினராக சுக்பால் சிங் இருந்தார். விவசாயிகள் போன்ற முதன்மை உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (FPO), தயாரிப்பாளர் அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கொள்கையை வகுப்பதற்கான பஞ்சாபின் நிபுணர் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்தவர்.

இந்தியா ஸ்பெண்ட் உடனான நேர்காணலில் சிங், புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் (APMC), ஒப்பந்த விவசாயத்தில் உள்ள சிக்கல்கள், தனியார் பங்களிப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடனான பிரச்சினைகள் மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களில் ஆர்தியாக்கள் அல்லது கமிஷன் முகவர்களின் வலிமை குறித்து பேசினார். நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்களின் தலைமையில், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம், குறிப்பாக இந்த இரண்டு மாநிலங்களில் ஏன் இத்தகைய கடுமையான எதிர்ப்பு உள்ளது? இதன் முக்கிய பிரச்சினைகள் யாவை?

முதலாவதாக, விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் ஆகிய பங்குதாரர்களுடன் அரசு போதிய ஆலோசனை செய்யவில்லை. அத்துடன், அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டு, பின்னர் கோவிட் தொற்றுநோய் காலத்தில் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவதாக, ஒப்பந்த வேளாண்மை தொடர்பாக சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மாநிலத்திற்கான உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதித்து வருகிறதோ என்ற உணர்வு, சில மாநிலங்களில் உள்ளது, இந்த உரிமை விவசாயத்துடன் தொடர்புடையது [இது மாநில பட்டியலில் உள்ளது]; மற்றும் குறைந்த சந்தைப்படுத்துதலுடன் [மூல விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, வர்த்தகம், வழங்கல் மற்றும் விநியோகம் போன்ற நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் பட்டியலில் உள்ளன, அவை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றன]. 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து வேளாண் சந்தைகளை விரைவாகவும், திட்டமிட்டபடி திறக்கவும் மாநிலங்களை சமாதானப்படுத்த, மத்திய அரசால் முடியவில்லை என்று தெரிகிறது, இல்லையெனில் அது மாநிலங்களின் கைகளில் இருந்த ஒரு விஷயத்தில் போட்டு மிதிக்காது. சீர்திருத்தங்களைச் செய்ய மாநிலங்கள் தயக்கம் காட்டிதால், மத்திய அரசு இந்த வழியை தேர்ந்தெடுத்தது.

மூன்றாவதாக, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் அல்லது மண்டிக்கு வெளியே புதிய வர்த்தக பகுதிகளில் வேளாண் உற்பத்தி பரிவர்த்தனைகளுக்கு இப்போது வரி விதிக்க முடியாது என்பதால் பஞ்சாப் வருவாயை இழக்கும் (6% மற்றும் 3% மண்டி கட்டணம் மற்றும் 3% கிராம மேம்பாட்டு நிதி வரி உட்பட). மண்டி வரி மற்றும் செஸ் மூலம் பஞ்சாப் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ .4,000 கோடியை சம்பாதித்து வருகிறது.

நான்காவதாக, பஞ்சாபில் கமிஷன் ஏஜெண்டுகள் அல்லது ஆர்தியாக்களுக்கு 2.5% கமிஷன் கிடைக்கிறது, இது ஆண்டுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய். புதிய சட்டப்படி புதிய வர்த்தக பகுதிகள் வளர்ந்தவுடன், சந்தைக்கு கமிஷன் முகவர்கள் தேவையில்லை. வாங்குபவர்கள் இந்த முகவர்கள் வழியாக சென்றாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கமிஷன்கள் கடுமையாக வீழ்ச்சியடையும்.

மிக முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மற்றும் சில வட இந்திய மாநிலங்களில், கடன் மற்றும் உற்பத்தி சந்தையில் ஒரு குறுக்கீடு உள்ளது, அங்கு ஏஜெண்டுகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறார்கள் மற்றும் [விவசாயியின்] விளைபொருட்களின் விற்பனையில் இருந்து [கடனை] மீட்டுக்கொள்கிறார்கள். இந்திய உணவுக் கழகம் (FCI) போன்ற கொள்முதல் ஏஜென்சிகள் (பஞ்சாபில்) கமிஷன் ஏஜெண்டுகளூக்கு பணம் செலுத்துகின்றன, ஆனால் நேரடியாக விவசாயிகளுக்கு அல்ல, ஏனெனில் மாநில அரசு இதற்கு வசதி செய்து வருகிறது. இந்த முகவர்கள் மூலம் விவசாயிகளை வழிநடத்துவதற்கு பதிலாக விவசாயிகளுக்கு நேரடி பணம் செலுத்துவது இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மாநிலத்தில் ஒரு பிரச்சினையாக உள்ளது. மத்திய முகமைகள் [விவசாயிகளுக்கு] நேரடியாக பணம் செலுத்த ஆர்வமாக இருந்தன, ஆனால் மாநில அரசு அதை ஆதரிக்கவில்லை. இந்த காரீப் பருவத்தில்தான், முதன்முறையாக இந்திய காட்டன் கார்ப்பரேஷன் [CCI] விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை வாங்கியதுடன், கமிஷன் ஏஜெண்டுகளுக்கு கமிஷனை செலுத்தவில்லை. திருத்தப்பட்ட மாநில வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை) சட்டம்-2017 இன் கீழ், 2020 ஆம் ஆண்டில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தாலும், [அரசு] விவசாயிகளுக்கு மறைமுகமாக கமிஷன் ஏஜெண்டுகள் மூலமாக மட்டுமே பணம் செலுத்துகிறது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு சில ஆயிரம் ரூபாய்களை [ரூ .10,000 வரை] கமிஷன் ஏஜெண்டுகள் செலுத்த அனுமதிக்கிறது.

மேலும், கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இணைப்பு காரணமாக இந்த சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுகின்றனர். சாந்தா குமார் கமிட்டி அறிக்கை மற்றும் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (CACP) அறிக்கைகள் போன்ற சில முந்தைய ஆவணங்களில் இருந்து இந்த அச்சம் வந்துள்ளது; அந்த அறிக்கைகள், இந்திய உணவுக்கழகத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான கொள்முதல் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து திறந்த-கொள்முதல் முடிவுக்கு பரிந்துரைத்தது. பெரும்பாலான தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தால் வாங்கப்படுகின்றன. சந்தைக் கட்டணம் மற்றும் எஜெண்ட் கமிஷன் போன்ற அதன் கொள்முதல் செலவுகளைக் குறைக்க புதிய வர்த்தகப் பகுதியிலிருந்து இந்திய உணவுக் கழகம் நேரடியாக வாங்கத் தொடங்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது மாநிலத்தின் [பஞ்சாபின்] விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான 'சமூக ஒப்பந்தத்தில்' ஏற்படும் மாற்றங்களைப் பற்றியது, இது அச்சத்தின் மூல காரணமாகும்.

உழவர் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம்-2020, திறந்த சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்துமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை கட்டாயமாக்குவதற்கு ஒரு சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். புதிய சட்டம் குறைந்தபட்ச ஆதரவு விலையை எவ்வாறு பாதிக்கிறது? மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை கட்டாயமாக்குவதற்கான சட்டம் சாத்தியமா?

பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பல தனியார் வாங்குபவர்களை அனுமதிப்பதில்லை; அரசே பெரும்பாலான உற்பத்திகளை (கோதுமை மற்றும் நெல்) வாங்குகிறது. ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக இந்திய உணவுக்கழகமானது வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களில் இருந்து வெளியேறினால் மற்றும் சந்தைக் கட்டணம் / செஸ் ஐ மாநில மண்டி வாரியத்திற்கு வழங்கினால், ஏஜெண்டுகளும் மண்டிகளில் இருந்து வெளியேறுவார்கள்; இதனால் மண்டிகள் வீழ்ச்சியடையும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான ஆதரவு தேவை என்று விவசாயிகள் கருதுவதற்கு காரணம், 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கொள்முதல் என்பது, ஒரு சில பயிர்கள் மற்றும் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகள் (பஞ்சாப் மற்றும் ஹரியானாவைத் தவிர) குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே, நெல் மற்றும் கோதுமை போன்ற பெரிய பயிர் சாகுபடிகளைக்கூட, விற்பனையை முடிக்கிறார்கள். மேலும், வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் தனது 2017-18ம் (காரீஃப்) அறிக்கையில், "விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வாங்குவதற்காக நம்பிக்கையை வளர்ப்பதற்கு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்க உரிமை 'வழங்கும் சட்டத்தை கொண்டு வரலாம்" என்று பரிந்துரைத்தது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு சட்ட உரிமையாக கோரும் விவகாரத்தில் நான் உறுதியாக நம்பவில்லை. ஒரு தனியார் அமைப்பானது குறைந்தபட்ச ஆதரவு விலையில் தாங்கள் வாங்குவதற்கு மாறாக விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்று முடிவு செய்தால், அத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு காரணங்களுக்காக கொள்முதல் செய்யக்கூடாது என்று இந்திய உணவுக்கழகம் முடிவு செய்கிறது என்றால், விவசாயி எங்கே விற்பனை செய்வார்? குறைந்தபட்ச ஆதரவு விலையை கட்டாயமாக்கும் வேளாண் செயல்களில் பஞ்சாபின் திருத்தங்கள் தவறான ஆலோசனையாகும், ஏனெனில் இந்த சட்டம் அவர்களின் சொந்த வேளாண் சந்தையையே கொன்றுவிடும், மேலும் தனியார் வாங்குபவர்கள் பெறுவதை அது ஊக்கப்படுத்துகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே கோதுமை மற்றும் நெல் விற்பனைக்கு எதிராக பஞ்சாப் ஒரு சட்டத்தை ஏற்படுத்தியுள்ள போதும், ஒரு விவசாயி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாரா என்பது மாநிலத்திற்கு எப்படித் தெரியும்? அத்தகைய சட்டத்தை அமல்படுத்துவது கடினம். அத்தகைய உத்தரவுகளின் மூலம் விவசாய சந்தைகளை இயக்க முடியாது. ஒரு விவசாயி விற்க ஆசைப்படுகிறார், சந்தை முற்றத்தில் கொண்டு வந்தபின் உற்பத்தியை சேமிக்கவோ அல்லது திரும்ப எடுத்துச் செல்லவோ விரும்பமாட்டார். எனவே, அவர் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே விற்க ஒப்புக்கொள்வார்.

தற்போது, ​​தனியார் சந்தையில் விற்பனை செய்வதுதான் விவசாயிகளுக்கு உள்ள கடைசி வாய்ப்பாகும். அங்கு பொது கொள்முதல் நடைபெறாது, மேலும் கடுமையான விதிகளை (அபராதம் அல்லது சிறை) உருவாக்குவதன் மூலம், அரசு [ஒரு மாநிலத்தின்] எந்த விற்பனையும் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கக்கூடும். மகாராஷ்டிரா தங்களது வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் சட்டத்தில், 2018 ஆம் ஆண்டில் இதேபோன்ற பிரிவை உண்டாக்கியது, ஆனால் வர்த்தகர்களின் எதிர்ப்பிற்கு பிறகு, அதை மாற்றியமைக்க வேண்டியிருந்தது.

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசியல் அல்லது நிர்வாக வாக்குறுதி அல்லது விவசாயிகளுக்கு அரசு அளித்த முடிவு என்பதை உணர வேண்டியது அவசியம். ஒரு தனியாரை ஏன் அதனுடன் இணைத்து அபராதம் விதிக்க வேண்டும்?

மறுபுறம், தனியாரில் உள்ள வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக, சந்தையை தாராளமயமாக்க மற்றும் திறப்பதற்கு அரசு முயற்சிக்கிறது, ​​அதே நேரத்தில் அவர்கள் எந்த விலையில் வாங்க வேண்டும் என்று கட்டளையிட முடியாது (இந்த விஷயத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே இல்லை).

உழவர் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் - 2020, விவசாயிகளை மண்டிகளுக்கு வெளியே வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. "ஏஜெண்டுகள் முறையை ஒழிப்பதற்கான ஒரு கனிந்த நேரம்" என்று உங்களைப் போன்ற வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், மண்டி முறை எவ்வாறு விவசாயிகளுக்கு பாதுகாப்பதாக இருந்தது என்பதை வரலாற்று ரீதியாக நீங்கள் விளக்க முடியுமா?

தற்போது நம்மிடம் கூட்டுறவு நிறுவனங்கள், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற பல பங்குதாரர்கள் உள்ளனர், அவர்கள் காலடி எடுத்து விவசாயிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விற்க உதவலாம், அதற்காக ஏஜெண்டுகளை நம்ப வேண்டிய அவசியமில்லை. 1980ம் ஆண்டுகளில் மத்தியப்பிரதேசம் ஏஜெண்டுகள் முறையை ஒழித்துவிட்டது, பின்னர் வாங்குவோர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறுகின்றனர்.

ஒரே இரவில், இந்த புதிய சட்டங்களுக்கு பிறகு, ஏஜெண்டுகள் சேவை வழங்குநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களை 'அவசியமான தீங்கு' என்கிறார்கள். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிறுவன கடன் மற்றும் நிதி போதுமான அளவு கிடைக்காதபோது, நவீன விவசாயத்தின் அதிக செலவு காரணமாக ஏஜெண்டுகள் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். இப்போது கூட, 30-35% வேளாண் கடன்கள் ஏஜெண்டுகள் போன்ற முறைசாரா மூலங்களில் இருந்து, குறிப்பாக பல சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வந்தவை. இதன் காரணமாக, கடன் மற்றும் உற்பத்திச் சந்தையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், வேளாண் துறைக்கு அதிக நிதி கிடைப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் மட்டுமே ஏஜெண்டுகள் உரிமம் பெறுகிறார்கள், மேலும் கடன் வழங்குவது போன்ற அவர்களின் வணிகத்தின் பிற அம்சங்கள் முறைசாராவை, சட்டவிரோதமானவை. அவர்களின் செயல்பாட்டை கண்காணிக்க முடியாது. சில மாநிலங்களில், அவர்கள் உள்ளீடுகளை அதிக விலைக்கு வாங்குகின்றன, குறைந்த விலை உற்பத்தி செய்கின்றன மற்றும் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கின்றனர். பலருக்கு விளைபொருட்களை வாங்குவதற்கான உரிமம் மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு அப்பால் பெரிய வேளாண் தொழில்துறை நலன்களும் உள்ளன, ஆனால் அவை வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிறுவன நிதி அணுகல் போதுமானதாக வழங்கப்படாவிட்டால், அவர்கள் இந்த முகவர்களைச் சார்ந்து இருப்பார்கள். எனவே, அவற்றின் சந்தைப்படுத்தல் சிக்கல்களுக்கான தீர்வுகள் சந்தைகளுக்கு வெளியே உள்ளன.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் பங்கை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள், புதிய சட்டத்தால் நீங்கள் என்ன தாக்கத்தை காண்கிறீர்கள்?

வாங்குபவரின் கொள்முதல் செலவைக் குறைக்க மத்தியப் பிரதேசம், மண்டி வரியைக் குறைத்துள்ளது, மேலும் அரசு அமைப்புகளும் (நிதி ஆயோக் போன்றவை) மற்ற மாநிலங்களுக்கும் இதை அறிவுறுத்தி உள்ளன, இதனால் வாங்குபவர்கள் தொடர்ந்து வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் மண்டிகளில் இருந்து வாங்குகிறார்கள். ஆனால், பஞ்சாப் போன்ற மாநிலத்தில், கொள்முதல் செலவுகள் அதிகம் உள்ள நிலையில், புதிய வர்த்தக பகுதிகளுடன் போட்டியிடுவது மண்டிகளுக்கு கடினமாக இருக்கும். வாங்கும் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால், வாங்குபவர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் கூட புதிய வர்த்தக பகுதிகளுக்கு செல்லக்கூடும்.

நிலையில்லாத களம் இல்லாவிட்டால் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் கூட இழப்பை சந்திக்கும். எனவே, ஏஜெண்டுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் செய்வதை சுற்றி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் சிறந்த விலையை உணர உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஏஜெண்டுகளின் ஆர்வம் உண்மையில் கொள்கைக்கு முக்கியமல்ல. ஏஜெண்டுகள் நம்புவதற்கு பிற வணிகங்கள் உள்ளன, மேலும் புதிய வர்த்தகப்பகுதிகள் அல்லது பிற சந்தை வரிசைகளில் புதிய பாத்திரங்களை விரைவில் காணலாம்.

ஒப்பந்த வேளாண்மை மூலம், விவசாயிகள் தனியாருடன் ஈடுபட அனுமதிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு குறைகளை / தகராறு தீர்க்கும் வழிமுறை எவ்வளவு வலுவானது? உழவர் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் - 2020 இன் உட்பிரிவுகள் மூன்று நாட்களுக்குள் விவசாயிக்கு தொகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் சுயாதீனமாக பெரிய விவசாய நிறுவனங்களை எடுக்க முடியுமா? தகராறு தீர்க்க மாவட்ட மாஜிஸ்திரேட் ஒருவரை அணுகுவது நடைமுறையில் உள்ளதா? சர்ச்சைகள் எழும்போது சிறந்த வழிமுறை என்ன?

இந்தியாவில், பயிர்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறையில் உள்ள ஒப்பந்த வேளாண்மை, குறு மற்றும் சிறு விவசாயிகள் பொதுவாக விலக்கப்படுவதையும், விவசாயிகளுக்கு எதிராக பல முறைகேடுகள் இருப்பதையும் காட்டுகின்றன. இதில் ஒருதலைப்பட்ச (ஒப்பந்த சார்பு நிறுவனம்) ஒப்பந்தங்கள், தாமதமான பட்டுவாடா, தரம் அடிப்படையாகக் கொண்ட தேவையற்ற நிராகரிப்புகள் மற்றும் வெளிப்படையான மோசடி ஆகியன அடங்கும், தவிர மாநில அரசுகளால் ஒப்பந்த விவசாய விதிகளை மோசமாக அமல்படுத்துகின்றன. எனவே, அதை ஒழுங்குபடுத்த ஒரு வலுவான ஒப்பந்த விவசாயச்சட்டம் தேவைப்பட்டது.

கடந்த 2003 மாதிரி வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் சட்டத்தின்படி, அது தொடர்பான மோதல்களை தீர்க்க வேண்டும். இது ஒரு சிறந்த அமைப்பாக இருந்தது, ஏனெனில் குழு உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை விவசாயி அறிந்திருந்தார். மேலும், ஒரு வர்த்தகர் அல்லது கமிஷன் முகவருக்கு உரிமம் வழங்கப்படும்போது, ​​எதிர் ஆபத்துறுதி உள்ளது. விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் சிக்கல் இருந்தால், குழு கவனத்தில் கொண்டு அதைத் தீர்க்க முயற்சிக்கிறது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் அலுவலர்களுக்கான தேர்தல்கள் உள்ளன. வர்த்தகர்கள், கமிஷன் முகவர்கள், விவசாயிகள், கூட்டுறவு மற்றும் அரசு பிரதிநிதிகள் தேர்தலில் நிற்கிறார்கள். எனவே, மண்டிகளின் ஏகபோகம் மற்றும் சுரண்டல் என்ற வாதம் முற்றிலும் உண்மை இல்லை. அதே சமயம், ஏறக்குறைய 40 ஆண்டுகளில் பஞ்சாப் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கான தேர்தலை நடைபெற்றதில்லை. அங்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை மட்டுமே அரசு பரிந்துரைக்கிறார்கள்.

இப்போது, ​​புதிய வர்த்தகப் பகுதியில் [சட்டம் உருவாக்கும்], எதிர்தரப்பு ஆபத்தை வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பான் கார்டு உள்ள எவரும் விவசாய விளைபொருட்களை வாங்கலாம், இது அனைவருக்கும் சுதந்திர சூழ்நிலையாகத் தெரிகிறது.

ஒரு ஒப்பந்தத்தில் கட்டாய மற்றும் விருப்ப விதிகளுடன் மாதிரி ஒப்பந்த ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த 2003 மாதிரி வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் சட்டத்திற்கு அரசு திரும்பிச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புதிய சட்டத்தில் உற்பத்தி ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள்ள விதம், கார்ப்பரேட் விவசாயம் குறித்த ஒப்பந்த வேளாண்மை பற்றி, விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. விவசாய நிலங்களை ஒப்பந்த நிறுவனத்தால் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ வாங்கவோ முடியாது என்று சட்டம் தெளிவாகக் கூறிய போதும், நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்யும்போது அல்லது விவசாயிகளால் வழங்குவதில் தாமதம் ஏற்படும்போது என்ன நடக்கும் என்று சட்டம் விவாதிக்கவில்லை என்பதால் விவசாயிகளும் கவலைப்படுகிறார்கள்.

விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டத்தில், விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தத்தின் மற்ற சிக்கலான அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச உத்தரவாத விலையை தவிர, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் அல்லது மின்னணு வர்த்தக விலை தான். இது ஒப்பந்த வேளாண்மை என்ற கருத்துக்கு எதிரானது. ஒப்பந்த விலையை முடிவு செய்ய ஒப்பந்தக்காரர்களுக்கு விட வேண்டும். மேலும், மண்டிகள் விலைகளை சரியாகக் கண்டுபிடிக்கவில்லை என்பது புரிதல் என்றால், ஏன் அத்தகைய விலைக்கு ஒப்பந்த விலை? ஒப்பந்த வேளாண்மை சட்டம் ஒப்பந்த விவசாயத்தின் பல அதிநவீன அம்சங்களை விட்டுச்செல்கிறது.

இந்த புதிய "தாராளமயமாக்கல்" சட்டங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும்?

துரதிர்ஷ்டவசமாக அவை ஒப்பந்த வேளாண்மையின் ஒரு பகுதியாக இல்லை, ஏனெனில் ஒப்பந்த முகவர்கள் அவற்றை ஈடுபடுத்தும் அளவுக்கு கவர்ச்சிகரமானதாகக் காணவில்லை. கொள்கை குழு ஒப்பந்தங்களுக்கான ஒரு ஏற்பாட்டை உருவாக்கி அதை ஊக்குவித்திருக்க வேண்டும். மேலும் இந்த சட்டம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை [FPO ] விவசாயிகள் என்று வரையறுத்துள்ளது, இது அவர்களுக்கு வினியோக தரப்பில் மட்டுமே தடை விதிக்கிறது. இது ஒப்பந்த வேளாண்மையையும் மேற்கொள்ளலாம் என்பதை உறுதி செய்வதற்கு பதிலாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஒரு அடிப்படை சிகிச்சையை அளித்துள்ளது (சில உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செய்கின்றன). எந்தவொரு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் உற்பத்தியிலும் இல்லை. எனவே, அவர்களை விவசாயிகளாகக் கருதுவது இந்தச் சட்டத்தின் நல்ல அம்சமல்ல.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, விற்பனைக்கு கடைசி இடமாக மண்டி இருந்தது. வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டால், அவற்றில் அதிகமானவை உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒப்பந்த வேளாண்மை அல்லது நேரடி கொள்முதல் செய்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஈர்க்கப்படாவிட்டால், அவை ஆதாயத்தை விட அதிகமாக இழக்கும்.

பீகாரில் உள்ள தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய 2019 ஆய்வில், 2006ல் ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்த போதிலும், புதிய சந்தைகளை உருவாக்குவதில் தனியார் முதலீட்டின் பற்றாக்குறை இருந்தது என்றும், தற்போதுள்ள வசதிகளை வலுப்படுத்துவது, "குறைந்த சந்தை அடர்த்திக்கு வழிவகுக்கிறது" என்றும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு என்ன நடந்தது?

முதலீடுகள் சட்டத்தின் மாற்றத்தால் வருவதில்லை, மாறாக ஊக்கத்தொகையால் கிடைக்கிறது. சீர்திருத்தத்திற்கு பதிலாக சந்தையை மட்டுமே பீகார் கட்டுப்படுத்தியது. ஊக்கத்தொகை உள்கட்டமைப்பு மற்றும் துணை கொள்கைகள் பற்றியது, அவை [பீகாரில்] நடக்கவில்லை. புதிய வாங்குபவர்களை நேரடியாக வாங்குவதற்கு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் மற்றும் தனியார் சந்தைகளில் பொது-தனியார் முறையில் கூட அதிக முதலீடுகள் இருந்திருக்கலாம் மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் சிறந்த நிர்வாகம் இருந்திருக்கலாம். கொள்முதல் மற்றும் கொள்முதல் மையங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் மாநிலத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் கட்டமைப்பு சரிந்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையில் போலல்லாமல், தனியார் வசம் உள்ள மண்டிகளில் விவசாயிகள் கமிஷன் செலுத்துகின்றனர். புதிய உள்ளூர், தனியார், முறைசாரா சந்தைகள் விவசாயிகளுடன் நெருக்கமாக உள்ளன, ஆனால் நீண்ட காலமாக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைத் தவிர விவசாயிகள் இதன் மூலம் பயனடையவில்லை.

"நமது விவசாயிகளின் துயரங்களை சரிசெய்ய புதிய உரிமைகள் தொடங்கியுள்ளன" என்று பிரதமர் கூறியுள்ளார், ஆனால் விவசாயிகள் மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். வேளாண் சட்டங்களை மேம்படுத்த என்ன திருத்தங்களை பரிந்துரைக்கிறீர்கள்? விவசாயிகளுக்கு சிறந்த வருமானம் என்பதை இந்தியா எவ்வாறு அடைய முடியும்?

ஒரு வர்த்தகர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் வரையறை போன்ற இரண்டு சட்டங்களிலும் [FPTC மற்றும் FAPAFS] பல விதிகள் உள்ளன, உழவர் நிலத்தில் தகராறு மற்றும் தற்காலிக கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏபிஎம்சி விலையுடன் கூடுதல் ஒப்பந்த விலை இணைப்பு மற்றும் ஒப்பந்த வேளாண்மைச் சட்டத்தில் விவசாயிகளின் ஆர்வத்தைப் பாதுகாக்க மறுபரிசீலனை செய்ய வேண்டிய பிற விதிகள் எனவே இரு தரப்பினரும் விதிகளின்படி ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்வது மற்றும் கையாள்வது மென்மையானது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, விவசாயிகள் கூட்டாக இருக்க வேண்டும் (உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் உள்ளதைப் போல). சிறிய மற்றும் குறு விவசாயிகள் நவீன, பெரிய வாங்குபவர்களை சமாளிக்க ஒரே வழி இதுதான். சிறு விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள் என்பதால் உற்பத்தி அம்சங்களில் நாம் தலையிடத் தேவையில்லை. நமது முன் தயாரிப்பு (விதைகள், உரங்கள், கடன், இயந்திரங்கள் போன்றவை) மற்றும் உற்பத்திக்கு பிந்தைய ஒருங்கிணைப்பு [உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றவை] தேவை. நம்மிடம் கிடங்கு பற்றுச் சட்டம் இருப்பதால் சேமித்து வைக்கப்பட்ட பொருட்களுக்கு எதிராக கடன்களைப் பெறக்கூடியதால், துயர விற்பனையை குறைக்க அரசு கிடங்கு மற்றும் குளிர்ப்பதன சேமிப்பில் முதலீடு செய்ய வேண்டும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.