மும்பை: பரந்தளவில் காணப்படும் விவசாயிகள் பிரச்சனை -- அதன் எதிரொலியாகவே 2018 நவ.30-ல் டெல்லியில் 1,00,000 பேர் பங்கேற்ற பேரணி நடந்தது --ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இம்மூன்று மாநிலங்களில் பதவியில் இருந்த பாரதிய ஜனதாவை தோற்கடித்தஇந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ் கட்சி), 2018 டிசம்பர் 11 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், மூன்று மாநிலங்களில் அரசு அமைக்க ஆயத்தமானது.

விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் 21 சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் 2018, நவ. 30-ல் நடந்த விவசாயிகளின் கிஸான் முக்தி என்ற பேரணியை, காங்கிரஸ் கட்சி உட்பட நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

கடந்த 2014 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் மத்தியப்பிரதேசத்தில் 16,932 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதாவது, ஒவ்வொரு நாளும் மூன்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை என்ற இந்த விகிதம், தேசிய அளவில் அதிகபட்ச அளவாகும் என, 2018, அக்.22-ல் பேக்ட்செக்கர்.இன் பகுப்பாய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது.

இதை தொடர்ந்து சத்தீஸ்கரில், நாளொன்றுக்கு மூன்று விவசாயிகள் என, 12,979 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தேசிய அளவில், 5வது அதிகபட்சமாகும். இதே காலகட்டத்தில், 5,582 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள ராஜஸ்தான் 11வது இடத்தில் உள்ளது.

கடந்த 2017-ல் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி, இதற்கு முன்பு இல்லாதவகையில் இருந்தது. அதேபோல் 2017-18ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடு, 111% அதிகரித்தது என, 2018 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. இருப்பினும் விலைகள் சரிந்தன; செலுத்தப்படாத விவசாயக் கடன்கள், 2017ஆம் ஆண்டில் 20% வளர்ச்சியடைந்தது. விவசாயத்தை சார்ந்திருக்கும் 600 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் போராட்டம் தொடர்ந்தது.

எனினும், இளம் இந்திய மாநிலமான தெலுங்கானாவின் தேர்தல் முடிவுகளில் விவசாயிகளின் துயரங்கள் எதிரொலிக்கவில்லை. இங்கு, 55.5% விவசாயிகள் உள்ள நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி- டி.ஆர்.எஸ். (TRS) மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானாவில் குத்தகை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்; சிறு விவசாயிகள், விவசாயம் செய்வதற்கு அதிக நிலத்தை பயிரிட முற்படுகிறார்கள் என்று, 2018 டிசம்பர் 6-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. எனினும், நில உரிமம் இல்லாமல் குத்தகை விவசாயிகள் எந்த வங்கியிலும் கடன் பெறவோ, அரசின் உதவிகள், மானியங்களை பெறவோ முடியாமல் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெறுவது, நமது கள ஆய்வில் தெரிய வந்தது.

இந்திய கிராமப்புற விவசாயிகளின் துயர் குறித்து இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட கட்டுரைகளின் பட்டியல் இதோ:

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.