விளக்கம்: இந்தியாவின் பொது சுகாதார காப்பீடு ஏன் சரியாக வேலை செய்யவில்லை
ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகியும், அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றான தடையற்ற, காகிதமில்லா மற்றும் பணமில்லா சேவையை பராமரித்தல் என்ற நோக்கத்தை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை.
கொல்கத்தா: ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY அல்லது PM-JAY) செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில், தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இத்திட்டத்தின் மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றான-ரொக்கமில்லா மற்றும் காகிதமில்லாமல் 'நோயாளிகளுக்கு உடல்நலப் பராமரிப்புக்கான அணுகலை வழங்குதன் என்பதை அடைய முடியவில்லை.
உலகளாவிய சுகாதாரத்திட்டம் (UHC) என்பதை நோக்கிய ஒரு படியாக, "உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி சுகாதாரத் திட்டம்" என்பதாக இது உள்ளது. மேலும் தகுதியான நோயாளிகளுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கி, அவர்களை நிதி நெருக்கடியில் இருந்து அரசு பாதுகாக்கிறது.
இருப்பினும், சத்தீஸ்கரில் ஒரு ஆய்வில் கண்டுடறியப்பட்டபடி, முன்பு இருந்த பொது நிதியுதவி சுகாதார காப்பீடு (PFHI) திட்டங்களில் இருந்த குறைபாடுகளை களைய, பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் தவறிவிட்டது-இது உடல்நலம் அல்லது மருத்துவமனையின் அதிகரித்த பயன்பாட்டிற்கான குடும்பங்களின் சொந்த செலவைக் குறைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது வெளிநோயாளிகளுக்கு ஆலோசனையை வழங்குவதில்லை, மேலும் அதன் பயனாளிகளை ஆதரிக்க, இந்த திட்டம் நிதி அளிக்கப்படவில்லை என்பதை, ஆய்வுகள் மற்றும் நிபுணர்களிடம் பேசியதில் இருந்து நாங்கள் கண்டறிந்தோம்.
என்ன தவறு, அதை எப்படி சரி செய்ய முடியும் என்பதை விளக்குகிறோம்.
ஆயுஷ்மான் பாரத் என்றால் என்ன?
ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, 110 மில்லியன் "ஏழை, பின்தங்கிய கிராமப்புற குடும்பங்கள்" மற்றும் வறியவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் நடைபாதை விற்பனையாளர்கள் போன்ற நகர்ப்புற தொழிலாளர்களின் குடும்பங்களின் குறிப்பிட்ட தொழில் பிரிவுகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைக்கு, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை குடும்ப நல காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது. 2011 சமூக பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, மற்ற இரண்டு மத்திய நிதியுதவி திட்டங்களை-அதாவது ராஷ்டிரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY), 2008 இல் தொடங்கப்பட்டது மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) முறைசாரா துறை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 30,000 வரை காப்பீடு என்ற திட்டங்களை உள்ளடக்கியது. மற்றும் 2016 இல் தொடங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டு திட்டம் (SCHIS), அத்துடன் ராஷ்டிரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் கூடுதலாக ரூ. 30,000 வழங்குகிறது.
ஆயுஷ்மான் பாரத், இந்தியாவின் மிகப்பெரிய பொது-தனியார் கூட்டாண்மை திட்டம் என்று, சுகாதார ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் அடித்தள நெட்வொர்க்கான மக்கள் சுகாதார இயக்கத்தின் (PHM) தேசிய கூட்டு ஒருங்கிணைப்பாளர் சுலக்ஷனா நந்தி எழுதினார். அரசு தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது-எம்பானெல்ட் ஹெல்த் கேர் ப்ரொவைடர்ஸ் (EHCP)-சேவைகள் மற்றும் சிகிச்சைகளை நிலையான விலையில் வழங்குவதை மேற்கொள்கிறது. மருத்துவச் செலவுகளின் எந்தப் பகுதியையும் ஈடுசெய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை இந்த மருத்துவமனைகளை, அரசு தடைசெய்கிறது.
இந்தியாவில் ஆரோக்கியம் என்பது, மாநிலங்கள் சார்ந்த விஷயமாக இருப்பதால், மத்திய சுகாதாரத் திட்டம் மட்டுமின்றி, மாநில அளவில் மாநில சுகாதார நிறுவனங்களால் (SHA) செயல்படுத்தப்படுகிறது. மே 18, 2021 நிலவரப்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. டெல்லியும் ஒடிசாவும் இந்த திட்டத்தில் இருந்து விலகி இருந்தாலும், மேற்கு வங்கம் இந்த திட்டத்தில் இணைந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் ஜனவரி 10, 2019 அன்று முடிவு திரும்பப் பெறப்பட்டது.
அதிகமான சொந்த செலவு (OOPE)
அதிகமான சொந்த செலவு (OOPE) செய்தது பற்றி, ஆயுஸ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் தாக்கம் குறித்து தேசிய அளவில் மதிப்பீடு இல்லை, ஆனால் திட்டம் தொடங்கப்பட்ட ஒரு வருடம் கழித்து, சத்தீஸ்கரில் காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகள், காப்பீடு செய்யப்படாத நோயாளிகளுக்கு நிகரான சொந்த பணத்தை செலவழித்தனர் என்பதை, சத்தீஸ்கரில் உள்ள சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் ராய்பூரை சேர்ந்த மாநில சுகாதார வள மையத்தின் ஆசிரியர்கள், ஒரு ஆய்வைக் கண்டறிந்தனர். காப்பீடு செய்யப்படாதவர்களை விட காப்பீடு செய்யப்பட்டவர்கள், பொது சுகாதார மையங்களில் அதிகம் செலவழித்தார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில், கிட்டத்தட்ட 63% சுகாதாரச் செலவினங்கள் 2018-ல் சொந்த செலவினமாக இல்லை-இது உலகின் பதினைந்தாவது மிக உயர்ந்தது மற்றும் ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் பங்களாதேஷை அடுத்து அண்டை நாடுகளில் நான்காவது அதிகமாகும் என்று, உலக வங்கியின் தரவுகள் காட்டுகிறது. கேரளாவில் ஒரு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அதிகமான சொந்த செலவின் (OOPE) தாக்கம் குறித்த ஆய்வின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு நிதிச் சுமை ஏற்படுவதற்கு, அதிகமான சொந்த செலவு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்தியர்களில் சுமார் 18% பேர் 10% க்கும் அதிகமாகவும், 4% இந்தியர்கள் தங்கள் வருமானத்தில் கால் பகுதிக்கு மேல் சுகாதாரத்துக்காகவும் செலவிட்டதாக இந்தியாஸ்பெண்ட் டிசம்பர் 2019 கட்டுரை தெரிவித்தது.
பேரிடரைத் தரும் சுகாதாரச் செலவு (CHE), பாக்கெட்டில் இருந்து செலுத்தும் நிலையில், இது பெரும்பாலும் ஏற்கனவே ஏழைகளாக உள்ள குடும்பங்களை மேலும் வறியராக்குகிறது. உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அறிக்கையின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தபின், பேரிடரைத் தரும் சுகாதாரச் செலவு ஒரு குடும்பத்தின் மீதமுள்ள வருமானத்தில் 40% க்கும் அதிகமாக இருக்கும் போது சுகாதாரச் செலவு பேரழிவு தரத்தக்கதாக கருதப்படுகிறது.
சத்தீஸ்கரில் ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கான பேரிடரைத் தரும் சுகாதாரச் செலவானது, 51.2%, பயனற்றவர்கள் 47.4% உடன் ஒப்பிடுகையில் பெரியதாக கண்டறியப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நோயறிதல், மருந்துகள் மற்றும் மருத்துவமனைக்கு முந்தைய செலவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று, செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில், ஜார்க்கண்டில் இந்த திட்டத்தின் 2020 பொருளாதார மற்றும் அரசியல் வார இதழின் (EPW) ஆய்வு கண்டறிந்தது. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 93% பேர் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்காக தங்களுக்கு எந்த திருப்பிச் செலுத்தும் கட்டணமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
"தனியார் மருத்துவமனைகளின் மோசடி நடைமுறைகள் காரணமாக பாக்கெட்டில் இருந்து சொந்த பணத்தை செலவிடுவதற்கு (OOPE) திட்டத்தின் முக்கிய குறிக்கோளான சுகாதாரப் பாதுகாப்புக்கான நிதிப் பாதுகாப்பை வழங்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்" என்று, மக்கள் நல இயக்கத்தின் (PHM) நந்தி, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார், மேலும், "சுகாதாரப் பாதுகாப்பு இனி ஒரு உரிமையாகப் பார்க்கப்படுவதில்லை, ஆனால் அது ஒரு பொருளாகும்" என்றார்.
2020 ஆயுஷ்மான் பாரத் திட்ட அறிக்கையின்படி, சுகாதார சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்த, தேசிய சுகாதார நிறுவனம் (NHA), இந்திய தர கவுன்சில் (QCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. தேசிய சுகாதார நிறுவனம், வரிசைப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளின் மாதாந்திர தர தணிக்கைகளை நடத்துகிறது, ஆனால் முடிவுகள் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் கிடைக்கவில்லை.
புறநோயாளிகளுக்கு ஆலோசனை இல்லை
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இலக்கு பயனாளிகள் அல்லது முன்னோடி ஆர்.எஸ்.பி.ஒய் பயனாளிகளான தினக்கூலி தொழிலாளர்கள், தங்கள் தினசரி வருமானத்தை இழக்காமல் இருக்க, மருத்துவமனையில் சேருவதை தவிர்க்கின்றனர் எனவே, புற நோயாளிகள் பிரிவு வசதிகள், நோயறிதல் சோதனைகள் மற்றும் மருத்துவமனை அல்லாத பராமரிப்புக்கான மருந்துகள் ஆகியவற்றுக்கான காப்பீட்டு செலவினங்கள் முக்கியம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மிசோரம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஓ.எஸ்.டி.யை ஆர்.எஸ்.பி.ஒய்-யில் இணைப்பது குறித்து முன்னதாக நடத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த 2020 ஆய்வு தெரிவித்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) சுகாதார கணக்கெடுப்பு, புற நோயாளிகள் பிரிவு வசதிகளைப் பெறும் நபர்களின் தரவை சேகரிக்கவில்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத மக்கள், கிராமப்புறங்களில் 135 மடங்கு மற்றும் நகர்ப்புற இந்தியாவில் 122 மடங்கு என்பதை விட அதிகம் என்று, 75 வது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சுகாதாரக் கணக்கெடுப்பின் தரவு காட்டுகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் போல் அல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS) ரூ .150 என்ற விகிதத்தில், புற நோயாளிகள் பிரிவில் ஆலோசனையை வழங்குகிறது.
ஒட்டுமொத்தமாக சத்தீஸ்கர் ஆய்வில், பொது சுகாதார காப்பீடு என்பது, சுகாதார வசதிகளுக்கான அணுகலில் ஒரு சிறிய அதிகரிப்பை மட்டுமே ஏற்படுத்தியது: ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் மாநிலத்தின் முதலமைச்சரின் ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (MSBY) இல் பதிவு செய்தவர்களில் 6% பேர், இந்த திட்டத்தில் பதிவு செய்யப்படாத 5.7% உடன் ஒப்பிடும்போது, சுகாதார வசதிகளைப் பயன்படுத்தினர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு போதுமான நிதி இல்லை
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான பட்ஜெட்டில், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது, வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்களில் இது, 90:10 என்று உள்ளது.
மத்திய அரசு 2021-22ல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு, ரூ .6,400 கோடி (~ $ 860 மில்லியன்) ஒதுக்கீடு செய்தது. ஆனால் பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் அதை ரூ.3200 கோடியாகக் குறைத்தது ($ 430 மில்லியன்). 2020-21 ஆம் ஆண்டில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 2019-20ல் ரூ .2992.93 கோடிக்கு (~ 402.5 மில்லியன்) குறைவாக ரூ. 2,544.09 கோடி (~ $ 342 மில்லியன்) ஒதுக்கப்பட்டது என்று, ஆகஸ்ட் 2021 மக்களவை பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் சுகாதார பராமரிப்புக்கு நீண்டகாலமாக நிதியளிக்கப்படவில்லை மற்றும் பல மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவமனைகளின் பற்றாக்குறை உள்ளது," என்று, மனநல ஆரோக்கியத்திற்கான பான்ய அகாடமி ஆஃப் லீடர்ஷிபின் விஞ்ஞானி நச்சிகெட் மோர், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.
"சுகாதாரத்துக்கான மாநில அரசின் ஒதுக்கீடுகள், அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 1.25% க்கு அருகில் உள்ளன-இதில் 0.25% மத்திய அரசிடம் இருந்து வருகிறது. 1.25% என்பது மிகக் குறைந்த அளவு பணம், ஏனெனில் விரிவான சுகாதாரப் பாதுகாப்புக்கு தேவையான தொகை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 4 முதல் 6% மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு அருகில் உள்ளது," என்று, மோர் விளக்கினார். ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை மேலும் உடைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன; அதனால் மருத்துவமனை விநியோக இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முடியாது மட்டுமல்லாமல், மாநில சுகாதார துறைகளுக்கு கிடைக்கும் பணத்தை குறைப்பதன் மூலம், அத்தகைய முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவதை அவை தாமதப்படுத்தலாம் என்று மோர் மேலும் கூறினார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.