புதுடெல்லி: கடந்த வாரம், உலகின் முதன்மையான பசுமை இல்ல வாயு உமழும் நாடான சீனா, ஒரு தேசிய கார்பன் சந்தையை திறப்பதாக அறிவித்தது, இது ஒரு வகை உமிழ்வு வர்த்தக அமைப்பு. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்குகளை பூர்த்தி செய்ய முடியாத தொழில்துறை அலகுகள், இந்த அமைப்பின் கீழ், அவற்றைச் சந்தித்த அலகுகளில் இருந்து உபரி இலக்குகளை வாங்க வேண்டும்.

செப்டம்பர் 2019 இல், குஜராத்தின் சூரத்தில் செயல்படுத்தப்பட்ட துகள்களின் மாசுபாட்டிற்கான ஒரு முதன்மைத்திட்டமான, உலகின் முன்மைத்திட்டமான, உமிழ்வு வர்த்தக திட்டம் (ETS- இடிஎஸ்), இதேபோல் செயல்படுகிறது. இந்த முதன்மைத் திட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சாலைகள், தொழில்களுடன் ஒப்பிடுகையில், வணிகத்தின் வழக்கம் போல் சுற்றுப்புற காற்றின் தர நிர்ணயங்களுடன் இணங்குவதற்கான வழக்கமான கட்டுப்பாட்டின் கீழ், அவற்றின் துகள் மாசுபட்டை 24% குறைத்தன (8% விளிம்பு பிழையுடன்) என்று, திட்டத்தின் செயல்திறன் குறித்த ஆரம்பகட்ட பகுப்பாய்வு மதிப்பிட்டுள்ளது.

தொழில்துறை தொகுப்புகளிலும், அதைச் சுற்றியுள்ள காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணமாக. பி.எம். எனப்படும் பர்ட்டிகுலேட் மேட்டர் அதாவது , காற்றில் கலந்துள்ள திடமான துகள்கள் மற்றும் திரவத்துளிகளின் கலவை உள்ளது. இந்த நுண்ணிய துகள்களை நாம் சுவாசிக்கும் போது மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழைந்த பிறகு, நுரையீரல் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும் காரணி ஆகிறது. 2017 ஆம் ஆண்டில், காற்று மாசுபாடு ஒவ்வொரு எட்டு இறப்புகளில் ஒன்றுக்கு காரணமாகவும், மற்றும் இந்தியாவில் மொத்தம் 1.24 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தியது என்று இந்தியாஸ்பெண்ட் 2018 டிசம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இந்த முதன்மைத்திட்டம் அகமதாபாத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். லூதியானாவிலும் இதேபோன்ற முறையை உருவாக்க, பஞ்சாப் அரசு ஜூன் 7 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சூரத் மற்றும் லூதியானா ஆகியன, இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறை தொகுப்புகளை கொண்ட நகரங்களில் முக்கியமானவை.

உமிழ்வு வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது?

சூரத்தின் உமிழ்வு வர்த்தக திட்டத்தின் (இடிஎஸ்) கீழ், நியமிக்கப்பட்ட அரசாங்க அமைப்பானது, தொழிற்சாலைகள் வெளியேற்றக்கூடிய மாசுபாட்டின் அளவுக்கு, ஒரு வரம்பை அல்லது மூடியை நிர்ணயிக்கிறது. முதன்மைத் திட்டத்தின் மூன்றாம் கட்டம், நவம்பர் 16, 2019 அன்று தொடங்கிய சூரத்தின் விஷயத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட துகள்களின் உமிழ்வுகளின் மொத்த பரத்த மூடியிஒ, ஒரு தொழில்துறை அலகுக்கு 276 டன்களாக அமைக்கப்பட்டுள்ளது. மூடி என்பது அரசின் தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்பு அமைப்பில் இருந்து (சிஇஎம்எஸ்) உமிழ்வு தரவின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.

பங்கேற்றுள்ள தொழிற்சாலைகள், மாசுபாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை நிறுவுவதன் மூலமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாசுபடுத்தலுக்கான வரம்பை விட அதிகமாக உமிழ்வதற்கு 'உமிழ்வு அனுமதிகளை' வாங்குவதன் மூலமோ, இதற்கு இணங்கலாம். இது, இந்த முதன்மை திட்ட அமைப்பின் வர்த்தக பகுதி. உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை நிறுவிய மற்றும் உபரி அனுமதிகள் மீதமுள்ள தொழிற்சாலைகள், இத்தகைய தொழில்நுட்பத்தை நிறுவுவது விலை உயர்ந்ததாகக் கருதும் பிற தொழிற்சாலைகளுக்கு விற்கலாம். இந்த வழியில், தொழிற்சாலைகள், உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை நிறுவுவதன் மூலமும் சம்பாதிக்கின்றன.

சூரத்தின் விஷயத்தில், குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (ஜிபிசிபி) பொறுப்பான அரசு அதிகார அமைப்பாகும், இதுபோன்ற வர்த்தகம் செய்யக்கூடிய உமிழ்வு அனுமதிகளின் எண்ணிக்கையை, அது நிர்ணயிக்கிறது. அவை இணக்கம் அல்லது வர்த்தகத்தின் ஒவ்வொரு காலகட்டத்தின் தொடக்கத்திலும் உருவாக்கப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல், டிசம்பர் 31 வரையிலான வர்த்தக காலத்திற்கு, குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 80% (220.8 டன் மதிப்புள்ள உமிழ்வு) அனுமதிகளை, பங்கேற்கும் தொழிற்சாலைகளுக்கு, வர்த்தக தொடக்கத்தில் இலவசமாக விநியோகித்தது. ஒரு தொழில்துறை அலகு கொதிகலன் மற்றும் ஹீட்டர் திறன் அடிப்படையில் சார்பு அலகுகள் இருந்தன. மீதமுள்ள 20% உமிழ்வு அனுமதிகளை, National Commodities and Derivatives Exchange Limited மின் சந்தை மூலம் ஜிபிசிபி ஏலம் விட்டது.

"ஒரு குறிப்பிட்ட வர்த்தக காலத்தின் முடிவில், ஒரு தொழிற்சாலையின் மொத்த உமிழ்வுகள், அவை வைத்திருக்கும் உமிழ்வு அனுமதிகளுடன் ஒப்பிடப்படுகின்றன மற்றும் இணக்கமாக இருக்க, அனுமதி வைத்திருப்பவர்கள் உண்மையான உமிழ்வுகளுக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க வேண்டும்," என்று, சிகாகோ பல்கலைக்கழகத்தின் (ஈபிஐசி) எரிசக்தி கொள்கை நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனரும், சூரத்தின் திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடும் நான்கு முதன்மை விசாரணையாளர்களில் ஒருவருமான ஆனந்த் சுதர்சன்,, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"எனவே, வர்த்தகத்திற்குப் பிறகு, அனுமதிகள் மறுவிநியோகம் செய்யப்படும். ஒப்பீட்டளவில் மலிவான மற்றவர்களிடம் இருந்து மாசு வாங்கும் அனுமதியைக் குறைக்கும் செலவு மிக்க ஆலைகளை நாங்கள் காண்கிறோம். உமிழ்வைக் குறைப்பது மலிவானது யாருக்கு அனுமதி விற்கக்கூடிய நிலையில் உள்ளது" என்று சுதர்சன் தெரிவித்தார்.

சூரத்தின் முதன்மைத் திட்டத்தை பின்பற்றும் அகமதாபாத், மாசு கண்காணிப்பு கருவிகளை வாங்குவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று சுதர்சன் தெரிவித்தார். கண்காணிப்பு உபகரணங்களின் விலையை யார் ஏற்க வேண்டும் - அதாவது, இது முற்றிலும் தொழில்துறையால் செலுத்தப்பட வேண்டுமா (குஜராத்தில் உள்ளதைப் போல) அல்லது தொழிற்சாலையும், அரசும் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பதை பஞ்சாப் அரசு தற்போது தீர்மானிக்கிறது

இது ஏன் முக்கியமானது?

உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மாதிரியைப் பின்பற்றும் வழக்கமான ஒழுங்குமுறை முறையின் கீழ், தொழிற்சாலைகள் குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் மாசுபடுத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிமுறைகளுக்கு இணங்க மற்றும் அபராதங்களைத் தவிர்ப்பதற்கு, தொழிற்சாலைகள் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை நிறுவ வேண்டும், இது பெரும்பாலும் செலவு மிகுந்ததாகும்.

சந்தை அடிப்படையிலான உமிழ்வு வர்த்தக வழிமுறையானது, குறைந்த செலவில் மாசுபாட்டைக் குறைக்க, தொழில்களுக்கு நிதி சலுகைகளை அளிக்கிறது, மேலும் உமிழ்வு அனுமதிகளின் வர்த்தகம் மூலம் இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என்று நிபுணர்கள் விளக்கினர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அனுமதிகள் மட்டுமே கிடைப்பதால், தொழில்கள் மாசு குறைப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் இணங்க வேண்டும், அல்லது அவர்கள் அனுமதி வாங்க வேண்டும்.

"உமிழ்வு வர்த்தக திட்டத்தின் குறிக்கோள், ஒரு குறிப்பிட்ட மாசு இலக்கை குறைந்தபட்ச விலையில் அடைவதே ஆகும்" என்று சுதர்சன் கூறினார். வழக்கமான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் ஒப்பிடும்போது, ஒரு வர்த்தக பொறிமுறையில் நெகிழ்வுத்தன்மை இருப்பதாக சுதர்சன் வாதிட்டார், இது ஒவ்வொரு ஆலைக்கும் இலக்குகளை நிர்ணயிக்கிறது மற்றும் பெரும்பாலும் அதை அடைவதற்கு, தொழில்நுட்பம் அல்லது வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். இது மிகவும் விலை உயர்ந்ததாகவும், வளர்ச்சியை இழுத்துச் செல்லக்கூடியதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

உமிழ்வு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது மற்றும் இணங்காததன் விலை என்ன?

வர்த்தக காலத்தில் உமிழ்வுகள், உமிழ்வு கண்காணிப்பு அமைப்பின் தரவைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன. வர்த்தக காலத்தில் ஒரு யூனிட்டின் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பு தரவுகளில் 50% க்கும் அதிகமானவை காணவில்லை அல்லது ஒழுங்கற்றதாக இருந்தால், மூன்று மாதங்களுக்கு முந்தைய அலகின் முன் உமிழ்வுகள் கொண்டு, உமிழ்வு கணக்கிடப்படுகிறது.

குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி, வர்த்தக காலத்தின் முடிவில், அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு அலகு உமிழ்வை கொண்டிருந்தால், கிலோவுக்கு ரூ.200 வீதம் சுற்றுச்சூழல் சேதம் இழப்பீடு விதிக்கப்படுகிறது. பங்கேற்கும் அலகுகள் ஒரு 'சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டு வைப்புத்தொகையை' சமர்ப்பிக்க வேண்டும், இது சிறிய அலகுகளுக்கு ரூ .2 லட்சம், நடுத்தர அளவிலான அலகுகளுக்கு ரூ .3 லட்சம், பெரிய அளவிலான தொழிற்சாலைளுக்கு ரூ.10 லட்சம் வரை மாறுபடும்.

இந்த திட்டம் மாசுபாட்டைக் குறைக்க உதவியதா?

சூரத்தின் முதன்மைத்திட்ட முன்முயற்சி குறித்த முழு அளவிலான பகுப்பாய்வு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், சிகாகோ மற்றும் யேல் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் இணைந்து, இத்திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடும் சுதர்ஷனுக்கு, மாசு குறைப்புக்கான சில ஆரம்ப அறிகுறிகள் தெரிந்துள்ளன. சூரத்தில் 317 தொழில்துறை அலகுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், 162 இந்த உமிழ்வு சந்தையில் பங்கேற்றன.

"சந்தையில் பங்கேற்க தோராயமாக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகள், கட்டுப்பாட்டு ஆலைகளுடன் ஒப்பிடும்போது, [வழக்கமான காற்று தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ்] வழக்கமான மாசு வெளியேற்றத்தில் இருந்து, 24% குறைக்கின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம் " என்று சுதர்சன் கூறினார். இருப்பினும், இவை மிக ஆரம்ப முடிவுகள்தான் என்று, அவர் எச்சரிக்கை செய்தார். மேலும் தரவு சேகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.