மும்பை: ஒவ்வொரு மூன்றாவது இந்திய போலீஸ்காரரும் “பசு வதை” செய்வோர தண்டிக்கும் குழு வன்முறை “இயற்கையானது” - “ஒரு பெரிய அளவிலானது” அல்லது “ஓரளவு”- என்று கருதுவதாக, ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இத்தகைய வன்முறைகளைக் கண்காணிக்கும் பேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) தரவுத்தளத்தின் கண்டுபிடிப்புகளுடன் இந்தத் தரவு தொடர்புடையது: 2012ஆம் ஆண்டில் இருந்து 133 பசு வதை தொடர்பான தாக்குதல்களில், 28% பேர் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், லாபநோக்கற்ற புதுடெல்லியை மையமாக கொண்ட காமன்காஸ் அண்ட் லோக்நிதி என்ற வளரும் சங்கங்களுக்கான ஆய்வு மையம் நடத்திய ஆய்வு, ஆகஸ்ட் 28, 2019 இல் வெளியான ‘இந்தியாவின் காவல்துறை நிலை அறிக்கை 2019’ இன் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி மற்றும் ஏப்ரல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் 21 மாநிலங்களில் 105 இடங்களில் 11,834 காவல் துறையினரை, ஆய்வுக்காக பேட்டி காணப்பட்டனர். காவல் உள்கட்டமைப்பின் போதுமான தன்மை மற்றும் பல வகையான குற்றங்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்த காவலர்களின் கருத்துக்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

கணக்கெடுப்பில் எழுப்பப்பட்ட கேள்வி: "உங்கள் கருத்துப்படி, பசு வதை வழக்கு என்று ஒன்று இருக்கும்போது குழுவினர் குற்றவாளிகளை தாங்களே தண்டிப்பது இயற்கையானதா?" என்பது தான்.

இதற்கு பதிலளிப்பதற்காக வழங்கப்பட்ட வாய்ப்புகள், “பெரிய அளவில்”, “ஓரளவு”, “அரிதாக” மற்றும் “இல்லவே இல்லை” என்பதாகும்.

21 மாநிலங்களில், 15% பதிலளித்தவர்கள், “பசு வதை” மீதான குழு தாக்குதல் ஒரு பெரிய அளவிற்கு இயற்கையானது என்று தாங்கள் கருதுவதாக கூறினர். 20% பேர் “ஓரளவு இயற்கையானவை” தேர்வு செய்தனர், 16% பேர் “அரிதாக” தேர்வு செய்தனர்; 46% பேர் “இல்லை” என்பதைத் தேர்ந்தெடுத்தனர்.

மூத்த அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு இடையே 8 சதவீத புள்ளி வேறுபாடு இருந்தது: 28% அதிகாரிகள் இது இயற்கையானது என்று கூறினர் (“ஒரு பெரிய அளவிற்கு” அல்லது “ஓரளவு”), 36% கான்ஸ்டபிள்களும் அவ்வாறே கூறினர்.

இத்தகைய வன்முறை இயற்கையானது ("ஒரு பெரிய அளவிற்கு" அல்லது "ஓரளவு") என்று கூறியவர்களில் ஜார்கண்டில் அதிக சதவீதம் (66%) பேர் உள்ளனர்; தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (63%), கர்நாடகா (57%) மற்றும்

ஆந்திரா (52%). மேற்கு வங்கத்தில் மிகக் குறைவானது (3%), தொடர்ந்து நாகாலாந்து (4%), பஞ்சாப் (9%).

Source: Status of Policing in India 2019, a report by Common Cause and Lokniti–Centre for the Study Developing Societies
Note: Figures include personnel who said such violence was “natural to a large extent” and “somewhat natural”.

இத்தகைய "தண்டனை" இயற்கையானது, "ஒரு பெரிய அளவிற்கு" என்று கூறிய காவல்துறையினரில், மத்திய பிரதேசம் தான் அதிக சதவீதம் (39%) கொண்டுள்ளது. இது இயற்கையானது அல்ல என்று கூறியவர்களில் பஞ்சாபில் அதிக சதவீதம் இருந்தது.

இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள், தொடர்ச்சியான பசு தொடர்பான வெறுப்புக் குற்றங்களில் கள நிலவர அதிர்வுகளை காண்கின்றன; காவல்துறையினர் வன்முறை கும்பலுக்கு எதிராக இருப்பதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மிகவும் தீர்க்கமாக நடந்து கொண்டனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் குறைந்தது 133 பசு தொடர்பான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன; இதில், 50 இறப்புகள், 290-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டதாக, இதுபோன்ற தாக்குதல்களை பதிவு செய்யும் பேக்ட் செக்கர்.இன் (FactChecker.in) தரவுத்தளம் தெரிவிக்கிறது. தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களில் சுமார் 98% அல்லது 130, ஆங்கில ஊடக அறிக்கைகள் மற்றும் கள நிலவரத்துடன் சரிபார்க்கப்பட்டவை; 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன்முதலில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தவை.

பாதிக்கப்பட்டவர்களில் 57% முஸ்லிம்களும், தலித்துகள் 9% பேரும், இந்துக்கள் 9% பசு தொடர்பான வெறுப்பு வன்முறையில் தாக்கப்பட்டவர்களும் உள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில், 74% முஸ்லிம்களும், 20% இந்துக்களும் (தலித்துகள் உட்பட).

கால் பகுதிக்கும் மேலாக - அல்லது 133 மாடு தொடர்பான வெறுப்புக் குற்றங்களில் 37 - இத்தகைய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள கால்நடை பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 14, 2017 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, சுமார் 99.38% இந்தியர்கள் தற்போது பசு பாதுகாப்பு சட்ட வரம்புக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

இந்த தாக்குதல்களில் சுமார் 58%, பாஜக அரசைக் கொண்டிருந்த மாநிலங்களில் நடந்தது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் 14%.

இதுபோன்ற சமீபத்திய தாக்குதல், தெற்கு மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் நடந்துள்ளது. அங்கு பஜ்ரங்தள் கும்பல், "சட்டவிரோதமாக" கால்நடைகளை கொண்டு சென்றதற்காகக்கூறி, 25 பேரை தாக்கியது. அவர்களை சங்கிலியால் பிணைத்தது, துஷ்பிரயோகம் செய்தது "கவு மாதா கி ஜெய் (பசு அன்னைக்கு ஜெய்)” என்று முழக்கமிட்டதாக, பேக்ட்செக்கர்.இன் ஜூலை 9, 2019 கட்டுரை தெரிவித்திருந்தது.

மேலும், 25 பேர் குழுவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், அதாவது சட்டவிரோதமான கட்டுப்படுத்துதல், பொது இடத்தில் ஆபாசமான செயல்கள் அல்லது பேச்சுகள், காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஒரு குற்றச்செயல் பல நபர்கள் செய்தல் போன்றவை “ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாக இருந்ததால், அவர்களுக்கு இப்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு முன், மே 22, 2019 அன்று தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சியோனி என்ற இடத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு கிளை அமைப்பான ஸ்ரீ ராமசேனாவின் மாவட்ட நிர்வாகி உள்ளிட்டவர்கள் குழு, "மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக" ஒரு இந்து மனிதர் மற்றும் அவரது இரண்டு முஸ்லீம் நண்பர்களைத் தாக்கியது என்று, மே 27, 2019 பேக்ட்செக்கர்.இன் கட்டுரை தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; இருப்பினும் இறைச்சி வகை இன்னும் சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்படவில்லை.

ஜார்க்கண்டில், 55 வயதான கிறிஸ்தவ பழங்குடியினர், இந்து கிராமவாசிகள் கும்பலால் தாக்கி கொல்லப்பட்டார். எருமையை கொன்றதாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் காவல் துறையின் குற்றப்பத்திரிகையில் இறந்தவர் மற்றும் கும்பல் தாக்குதலில் பலியான மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஜார்கண்ட் விலங்கு வதைச்சட்டம், 2005 இன் பிரிவுகளின் கீழ் மாட்டு இறைச்சியை அதை கொலை செய்து வைத்திருத்தல் என்ற பிரிவில் வழக்கு பதிந்ததாக, ஆகஸ்ட் 1, 2019 பேக்ட் செக்கர்.இன் கட்டுரை தெரிவித்திருந்தது. குற்றப்பத்திரிகையில் பொலிஸ் தகவலறிந்தவர்களின் சாட்சியங்களும், இறந்த எருதுகளின் உரிமையாளர் உட்பட பல சாட்சிகளும் உள்ளனர் - அவர்கள் அனைவருமே, கிராமவாசிகள் தாக்குவதற்கு முன்பே எருது நீண்டகாலமாக இறந்துவிட்டதாகக் கருதினர்.

பாதிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றாலும், அவர்கள் எதிர்பார்த்த ஜாமீன் மனுக்கள் ஜூன் 17 ஆம் தேதி நிராகரித்த பின்னர் அவர்கள் கைது செய்யப்படக்கூடும்.

முன்னதாக, ஜார்கண்டில் இதுபோன்ற பல தாக்குதல்கள் குறித்த காவல் துறையின் விசாரணைகள் எவ்வாறு கொடூரமான தன்மை மற்றும் பாகுபாடான நடத்தையை காட்டின என்பதை, ஜூன் 2019 பேக்ட்செக்கர்.இன் கட்டுரை சுட்டிக்காட்டின. இது பெரும்பாலும் அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுத்தது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.