ஜெய்ப்பூர்: பதினான்கு வயது அலிஷா சைனி படிக்க விரும்புகிறார். "நான் பள்ளியில் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் நான் புரிந்துகொள்கிறேன், நான் தெரியாததை பக்கத்து வீட்டு அக்கா எனக்கு புரிய உதவுகிறார்," என்று அவர் கூறினார். ஆனால், மார்ச் 24 முதல் ஆகஸ்ட் 2020 வரை, வடக்கு ராஜஸ்தானின் டோராசரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டின் பிற பள்ளிகளைப் போலவே, கோவிட் -19 ஊரடங்கால் மூடப்பட்டபோது, அவரால் ஆன்லைன் வகுப்புகளை அணுக முடியவில்லை. (ராஜஸ்தானில் ஊரடங்கு மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது).

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் வாயிலாக பாடங்களை வழங்குவர், ஆனால் சில மாணவர்களால்தான் அவற்றை அணுக முடியும், அத்துடன் அணுகக்கூடியவர்களில் சிலரே கற்பிக்கப்படும் பாடங்களை புரிந்து கொண்டனர், கணக்கெடுப்பு தரவு சேகரிப்பின் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எங்களிடம் தெரிவித்தனர். அலிஷா போன்ற பிரகாசமான மாணவியரால் கூட, இதை தொடர முடியவில்லை. "என் தந்தையிடம் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது, ஆனால் அவர் ஒரு மாதத்திற்கு குறைந்தது 15 நாட்கள் வேலைக்காக கிராமத்திற்கு வெளியே சென்றுவிடுவார்," என்று அவர் கூறினார். அலிஷாவின் தந்தை, அவர்களது வீட்டில் இருந்து மூன்றரை மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில், ஒரு சிறிய உணவகத்தை (போஜனலயா) நடத்த உதவி வருகிறார்.

"இது (2020) ஒரு பேரழிவு தந்த ஆண்டாகும்," என்று, பள்ளி கல்வியில் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷனின் (CSF - சி.எஸ்.எஃப்) நிர்வாக இயக்குனர் பிக்ரமா டவுலெட் சிங் கூறினார். "மாணவர்களின் கற்றலில் ஒரு தாக்கம் இருக்கப்போகிறது" என்றார் அவர்..

அரசு பள்ளிகளில் படிக்கும் 80%-க்கும் மேற்பட்ட பெற்றோருடன் வசிக்கும் குழந்தைகளுக்கு, ஊரடங்கு காலத்தில் கல்வி "வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தனர், குடும்பங்களுக்கு டிஜிட்டல் சாதனங்கள் இல்லை அல்லது டிஜிட்டல் கற்றலுக்கான அணுகல் இல்லை என்பது, லாப நோக்கற்ற ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பு பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த பிரச்சினை இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. கோவிட்-19 காரணமாக உலகளவில் குறைந்தது 46.3 கோடி மாணவர்கள் தொலைதூரக் கற்றலை அணுக முடியவில்லை, தொலைநிலை கற்றல் கொள்கைகளின் பற்றாக்குறை அல்லது வீட்டில் கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாததால் என்பதை யுனிசெஃப் கண்டறிந்து உள்ளது.

தொற்றுநோய்களின் போது குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்ய முடியும், 2021 ஆம் ஆண்டில் கல்வித் துறை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, நாங்கள் நிபுணர்களிடம் பேசினோம்.

இந்தியாவில் பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்க தயாராக வேண்டும் என்று, நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர். வரும் ஆண்டுகளில் ஆரம்பக்கல்வி என்பது முக்கியமானது என்பதால் இளைய குழந்தைகள் முதலில் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 2021 பாடத்திட்டத்தில் தொடங்குவதற்கு முன்பு, குழந்தைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும், முக்கிய கருத்துகளையும் 2020 பாடநெறியின் பகுதிகளையும் மீண்டும் கற்பிக்க வேண்டும்.

இங்கே, அடித்தள அல்லது ஆரம்பக்கல்வியில் கவனம் செலுத்த, ஜூலை மாதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை உதவக்கூடும், ஆனால் அதன் செயல்படுத்தல் மெதுவாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

சாதகமான பக்கம் என்னவென்றால், "நெருக்கடிக்கு நன்றி, இதனால் நாம் நிறைய புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டி இருந்தது, இது பள்ளி அமைப்புக்கும் குடும்பங்களுக்கும் கற்றலை துரிதப்படுத்த வழிவகுத்தது," என்று, கல்விசார்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான பிரதம் தலைமை நிர்வாக அதிகாரி ருக்மிணி பானர்ஜி கூறினார். இவற்றில் இரண்டு, சரியான வகையான கல்வி தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு வளர்த்துக்கொள்வது மற்றும் பள்ளிகள், குடும்பங்களில் இடைவெளி இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது, ஆனால் ஒருவருக்கொருவர் தொடர்ந்து தொடர்பு கொள்வது, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு பள்ளி முறையை கற்றுக்கொள்ளவும் தயாரிக்கவும் மாணவர்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் பள்ளிக்குச் செல்லுதல்

"பொருத்தமான இடைவெளியுடன், பள்ளி தொடங்க வேண்டும்," என்று, ராஜஸ்தானின் புகாலாவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரான மம்தா (அவர் ஒரு பெயரைப் பயன்படுத்துகிறார்) கூறினார்; அவர், 5 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணிதத்தைக் கற்பிக்கிறார். "ஆன்லைன் வகுப்பு, ஆஃப்லைனைப் போல வெற்றிகரமாக இல்லை. எங்களால் சிறந்த ஆஃப்லைனில் கற்பிக்க முடிகிறது, மேலும் குழந்தைகளும் அதிகம் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் விளக்கினார். "நாங்கள் இப்போது தொடர்பு கொண்ட பெரும்பாலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன், வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதை புரிந்துகொள்கிறார்கள் … அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள்" என்றார்.

சிறுவயது குழந்தைகள் முதலில் பள்ளிக்குச் செல்ல வேண்டும், சி.எஸ்.எஃப் இன் சிங் பரிந்துரைத்தார், கற்றலின் அஸ்திவாரங்களைக் காணவில்லை என்பது எதிர்கால தரங்களில் முன்னேறுவது கடினம் என்று அவர் விளக்கினார். சிறு குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, வயதான குழந்தைகள் தாங்களாகவே படிப்பது, பாடப்புத்தகங்களின் உதவியுடன் எளிதானது.


ராஜஸ்தானில் உள்ள அரசு பள்ளி மாணவி 14 வயது அலிஷா சைனிக்கு, கதைகள் மற்றும் நகைச்சுவை எழுதுவது பிடிக்கும். கடுகு எண்ணெயில் மூழ்கும் காய்கறிகளைப் பற்றி அவரது கதைகளில் ஒன்றுக்கான படம். "பள்ளிகள், கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும், குடிக்க தூய்மையான நீர் இருக்க வேண்டும்" என்று அலிஷா கூறுகிறார்.

டோராசரைச் சேர்ந்த மாணவர் அலிஷா அதிர்ஷ்டசாலி - அவரது பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் கற்பித்தல் செப்டம்பர் மாதம் தொடங்கியது. பாலர் வகுப்பில் இருந்து, எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளியில் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கல்வி ஆண்டில் பாதி கடந்துவிட்ட நிலையில், 23 மாணவர்களில் 13 பேர் (56%) தவறாமல் வருகிறார்கள் என்று அவர் கூறினார். "சில புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர், ஆனால் நான் அவர்களின் முகங்களைக் கூட பார்த்ததில்லை," என்று அவர் கூறினார். பள்ளி தொடங்கியபோது ஒரு புதிய பள்ளி ஆண்டுக்கு வருவது போல இருந்தது, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கற்றலைத் தொடர முடியவில்லை என்று கருதினர், அவர்கள் புதிதாகத் தொடங்கினர்.

"90 முதல் 100 நாள் பயிற்சி முகாம் இருக்க வேண்டும்" என்று சிங் கூறினார். பாடங்களின் முக்கிய கருத்துகளை குழந்தைகள் தெளிவாகத் தெரிந்த பிறகே, நாம் அடுத்த பாடத்திர்கு செல்ல முடியும், "என்பதை மம்தா ஒப்புக்கொண்டார்.

"இது [குழந்தைகளுக்கு முக்கிய கருத்துக்கள் தெரியும் என்பதை உறுதிசெய்கிறது] எப்படியும் செய்யப்பட வேண்டும், ஆனால் இது கல்வி முறையின் ஒரு பகுதியாக மாறும்" என்று பானர்ஜி கூறினார். மேலும், பள்ளி அமைப்புகள் "ஒரு வருட இழப்பு குறித்த பதற்றத்தை குறைக்க வேண்டும் ... குழந்தைகள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது போல அல்ல. அவர்கள் பல திறன்களைக் கற்றுக் கொண்டனர்", இது பள்ளிகள் அங்கீகரிக்க வேண்டும் என்று பானர்ஜி கூறினார். பள்ளிகள் அரிதாகவே"வாழ்க்கைக்கான கற்றல்"என்பதில் கவனம் செலுத்துகின்றன, இதில் ஒரு திட்டத்தில் ஒத்துழைப்பது அல்லது சுகாதாரக்கல்வி போன்ற அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் திறன்களை உள்ளடக்கியது. தொற்றுநோய் தற்போதுள்ளதைப் போலவே "அதிக பள்ளிக்கல்வி கற்றலில்" கவனம் செலுத்துவதை விட இவற்றைச் சேர்ப்பதை நோக்கி பள்ளிகளை நகர்த்தக்கூடும் என்று அவர் விளக்கினார்.

குடும்பத்தை உள்ளடக்கியது

குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கு முடிந்தவரை உதவ முயற்சிப்பதாகக் கூறிய பானர்ஜி, ப்ரதாமின் கணக்கெடுப்பு, 2020 ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை, கணக்கெடுப்புக்கு முந்தைய வாரத்தில் கிட்டத்தட்ட 70% குழந்தைகளுக்கு ஒரு குடும்ப உறுப்பினரின் உதவி கிடைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பே, பள்ளிகள் பெற்றோரை ஈடுபடுத்தி, தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும்படி அவர்களை நம்ப வைக்க வேண்டும் என்று பானர்ஜி கூறினார். "இதற்கு நிறைய மனித முயற்சிகள் தேவைப்படும், இது ஒரு நல்ல விஷயம், ஏனென்றால் பள்ளிகளும் குடும்பங்களும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குழந்தைகளுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும், நாங்கள் செய்ய முடிந்ததை விட குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்" என்றார்.

அரசுப் பள்ளிகளும் வீட்டு வருகைகள் மூலம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பைப் பேணி வருகின்றன. மம்தாவின் மாவட்டத்தில், நவம்பர் 6 முதல், வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று, அந்த வாரத்தின் பாடத்தை அச்சிட்டு, அந்த வாரத்தில் அவர்கள் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்களை அவர்களுக்கு வழங்குகிறார். குழந்தைக்கு வேலையில் சிக்கல் இருந்தால், ஆசிரியர் அவர்களுக்கு வீட்டில் உதவுவதாக, மம்தா மேலும் கூறினார்.

இடர்பாட்டில் தனியார் பள்ளிகள்

தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், தனியார் பள்ளிகளுக்கு செலவிட்டு வந்த பணத்தை சேமிக்க முயற்சி செய்வதால், அடுத்த பள்ளி ஆண்டில் தனியார் பள்ளி சேர்க்கை குறைந்து, அரசு பள்ளி சேர்க்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த பள்ளிகளில் சிலவற்றால், ஊரடங்கு காலத்தில் கட்டணம் வசூலிக்க முடியவில்லை, 2019-20 கடைசி பருவத்திற்கான கட்டணத்தைக்கூட சில பள்ளிகள் வசூலிக்க இயலவில்லை என்று, அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சி.எஸ்.எஃப் இன் சிங் கூறினார். பெரும்பாலான தனியார் பள்ளிகள் குறைந்த நிதியை கொண்டிருப்பதால், அவர்களுக்கு ஆன்லைன் கற்றலை ஆதரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அணுக முடியவில்லை அல்லது அவர்களது மாணவர்களால் ஆன்லைன் கல்வியை அணுக முடியவில்லை என்று சிங் கூறினார்.


இந்தியாவில், பள்ளி மாணவர்களில் சுமார் 33% பேர், 3,00,000 தனியார் பள்ளிகளில் படிப்பதாக, 2018-19 அரசு தரவுகள் காட்டுகின்றன. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில், கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு தொடக்க கல்வி அளவில் ஒரு மாணவருக்கு சராசரியாக ரூ.10,623 செலவிடுகிறது; நகர்ப்புறங்களில் இது ரூ.19,315 ஆகும் என்று, அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் நுகர்வு குறித்த 2018 அறிக்கை தெரிவித்தது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்விக்காக குடும்பங்கள் செலவழித்ததை விட இது மிக அதிகம் (கிராமப்புறங்களில் ரூ.1,092 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.2,413). குழந்தைகளின் கல்வி தாக்கங்களில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றாலும், தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்களது தர அளவில் கற்கவில்லை. உதாரணமாக, ஏழு மற்றும் எட்டு வயது தனியார் பள்ளி மாணவர்களில் 46% பேருக்கு முதல் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை; இதுவே அரசு பள்ளியில் 61% என்ற ஒப்பீடு உள்ளதாக, ​​கிராமப்புற மாவட்டங்களில் 2019 ஏ.எஸ்.இ.ஆர். கணக்கெடுப்பின் தரவு காட்டுகிறது.

"தனியார் பள்ளித்துறை [தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து] காலப்போக்கில் மீண்டு வரும், அரசு உதவி இல்லாமல் கூட மேலும் மாணவர்கள் இந்த பள்ளிகளுக்கு திரும்பி வருவார்கள்" என்று சிங் கூறினார். "இதுவரை இருந்ததைப் போல இத்துறை அபாயகரமாக வளர அரசு அனுமதிக்க வேண்டுமா அல்லது நல்ல விதிமுறைகள் இருக்க வேண்டுமா?" என்று சிங் கேட்டார். இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், இந்த பள்ளிகளில் குழந்தைகள் கற்கப்படுவதை உறுதி செய்வதற்கும் மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களுக்காக கடன் வாங்கக்கூடிய ஒரு மாதிரி சட்டத்தை வரைவு செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார்.

தேசிய கல்விக் கொள்கை

அரசைப் பொறுத்தவரை, 2020ம் ஆண்டு என்பது கிட்டத்தட்ட கோவிட்-19 தொற்றுடன், தேசிய கல்விக் கொள்கைக்கு "தயாரான ஆண்டு" போலவே உள்ளது என்று சிங் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கி வருவதாக அரசு கூறுகிறது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான நிஷ்டாவையும் (NISHTHA) அரசு ஆன்லைன் முறைக்கு நகர்த்தி இருக்கிறது. தற்போது பள்ளிகள் நடத்தும் தேர்வுகளுக்குப் பதிலாக, திறன்கள் அல்லது முக்கிய கருத்துகளை சோதிக்கும் பரக் (PARAKH) எனப்படும் ஒரு தேசிய மதிப்பீட்டு மையத்தின் சிறப்பு திட்டத்திலும் அரசு பணிகளைத் தொடங்கி உள்ளது.

ஆயினும்கூட, "2021ம் ஆண்டின் பெரும்பகுதி மறுதொடக்கம், மறு சீரமைப்பு ஆண்டு மற்றும் ஊரங்கு மீண்டும் வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான திட்டமிடல்" ஆகியவற்றிற்கே சென்றுவிடும் என்று பானர்ஜி கூறினார்.

குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வி மற்றும் பாலர் வகுப்புகளை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இது தொடர்பான பணிகள் மாநிலங்களில் தொடங்கியுள்ளன, ஆனால் அது "ஒன்றாக சேகரிக்க வேண்டும்" என்று பானர்ஜி கூறினார். இரண்டு அமைச்சகங்கள் - ஒன்று பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சிக்காக, அதன் கீழ் அங்கன்வாடிகள் (தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும்) செயல்படுகிறது, மற்றொன்று தொடக்கப்பள்ளியை மேற்பார்வையிடும் கல்விக்காக, இதைச் செயல்படுத்த ஒன்றாக வேலை செய்ய வேண்டும், என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு நிதி அளிப்பதற்கான பணம் எங்கிருந்து வரும் என்பது தெளிவாக இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் அதிக நிதி கிடைக்கும் என்பதும் சாத்தியமில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் "அமைப்பில் ஏற்கனவே உள்ள நிதி, அதிகபட்ச தாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா?" என்று கேட்டார் பானர்ஜி. நடத்தை மாற்ற தகவல் தொடர்பு, மாவட்ட அளவிலான மதிப்பீடுகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பொருட்கள் மற்றும் வகுப்பறை பொருள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்த ஆதரவு மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றிற்கு அரசு ஏற்கனவே உள்ள நிதியை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிங் பரிந்துரைத்தார். முதலாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை, 2019-20 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1,600 கோடியுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு மொத்த செலவு 2,250 கோடி ரூபாய் என்று சிஎஸ்எஃப் மதிப்பிடுகிறது, என்றார்.

தேசிய கல்விக் கொள்கையானது பாலர் பள்ளி குறித்து தெரிவித்ததை, ஏற்கனவே சலுகை பெற்ற தனியார் துறை நிறையச் செய்து வருகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "குறைந்த கட்டணம் பெறும் தனியார் பள்ளிகள் மிகக் குறைந்தளவு என்ற விளிம்புகளில் செயல்படுவதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. அரசு செய்ய வேண்டிய மாற்றங்களைச் செயல்படுத்த அவர்களுக்கு ஆதாரங்களும் இல்லை," என்று பானர்ஜி கூறினார்.

தொழில்நுட்பம் பயன்படுத்துவதைத் தொடருதல்

"இது கல்வி தொழில்நுட்பத்திற்கான ஸ்பூட்னிக் தருணம்" என்று சி.எஸ்.எஃப் இன் சிங் கூறினார். முன்னதாக அரசு தொழில்நுட்பங்களை கம்ப்யூட்டரை பள்ளிகளில் நிறுவுவது போன்ற வன்பொருள் மட்டுமே என்று நினைக்கும். ஆனால் "ரகசிய சாஸ் என்பது மென்பொருள்" என்பதையும், கல்வி தொழில்நுட்பம் கற்றலை ஆதரிக்க உதவுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள இந்த தொற்றுநோய் அரசுகளை கட்டாயப்படுத்தியுள்ளது என்று சிங் விளக்கினார்.

அடுத்த கட்டமாக எந்த வகையான கல்வி தொழில்நுட்பமும் மென்பொருளும் கற்றலுக்கு நன்றாக வேலை செய்கின்றன என்பதை அறிவது. அரசுகளும் பள்ளிகளும் தெரிந்து கொள்ள வேண்டியது, "இது அடுத்த முறை நடக்கும் போது நாம் எவ்வாறு தயாராக இருக்க முடியும்" என்பதை. சிலர் பணிபுரியும் ஒரு குறியீட்டின் உதாரணத்தை தருகின்றனர், இது கிடைக்கக்கூடிய பல்வேறு மென்பொருட்களை ஒப்பிட்டு, ஆசிரியர்கள், மாணவர் கற்றல், தீர்வுக் கற்றல் மற்றும் பலவற்றின் அடிப்படையில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுகிறது.

டிசம்பர் 22 அன்று நடந்த ஒரு நிகழ்வில், கற்றல் பொருள் மற்றும் வகுப்புகள் இணையத்தின் வழியாக அரசின் திக்ஷா (DIKSHA) இணையதளத்தில் மட்டுமல்ல, சுயம் பிரபா என்ற தொலைக்காட்சி சேனலிலும் கிடைக்கிறது; இது விரைவில் வானொலிகளிலும் கிடைக்கும், என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இன்னும் ஆசிரியர்கள் ஆன்லைன் கற்பித்தலை ஒரு சவாலான பணியாகவே கருதுவதாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் செப்டம்பர் 2020 இல் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களில் 84% பேர் தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகளின் போது குழந்தைகளுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைப் பேணுவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்று அவர்கள் கூறியதாக, அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் ஆய்வு கண்டறிந்தது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் கணக்கெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (54%), ஆன்லைன் தளங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்த அவர்களின் அறிவும் , பயனர்களின் அனுபவமும் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர்.

மம்தாவின் வகுப்பில் உள்ள 29 மாணவர்களில் பாதி பேர் மட்டுமே வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது ஆன்லைன் கற்றலுக்கான ராஜஸ்தான் அரசாங்கத் திட்டமான ஸ்மைல் (SMILE) மூலமாகவோ ஆன்லைனில் கற்றல் மூலம் இணைக்க முடிந்தது, இதன் மூலம் ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக பாடங்கள் அனுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் பின்னர் உள்ளடக்கத்தை - இணைப்புகள், வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு அனுப்பினர். பள்ளியில் கற்பிக்கப்படுவதையே மம்தா விரும்புகிறார், ஆனால் பள்ளிகள் மீண்டும் தொடங்கினாலும், வாட்ஸ்அப் பாடங்களை தொடர வேண்டும் என்று மம்தா கூறினார். "பள்ளியில் என்ன நடக்கிறது, குழந்தைகள் படிக்கிறார்களா என்பதை அறிய குடும்பங்களுக்கு இது உதவுகிறது" என்றார். பழைய குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வந்திருந்தாலும், ஸ்மைல் உருவாக்கிய குழந்தைகளுக்கு பாடங்களை அனுப்ப அவர் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதாக, அவர் கூறினார். "பழைமையை புதிய நுட்பத்துடன் இணைக்க வேண்டும்," என்றார் அவர்.

அத்துடன், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு? "பள்ளிகள் சுத்தமாக இருக்க வேண்டும், கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும், குடிக்க சுத்தமான நீர் இருக்க வேண்டும்" என்று அலிஷா கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.