புதுடெல்லி: உலக ளவில் ஆண்டுக்கு ஒன்று முதல் ஐந்து டிரில்லியன் பிளாஸ்டிக் பைகள் நுகரப்படுகின்றன. ஐந்து டிரில்லியன் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் ஒன்றாக இணைத்தால், பிரான்ஸை விட இரண்டு மடங்கு பெரிய பகுதியை உள்ளடக்கும். விரைவில், இந்தியர்கள் இந்த சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் அடுத்த ஆண்டு முதல், நாடு ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP - எஸ்யூபி) வெளியேற்றத் தொடங்கும் போது பைகள், ஸ்டிரா, சீலிடப்பயன்படும் டேப் ஆகியவற்றை எடுத்துச் செல்ல மாற்று வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தின் குறியீடு அடிப்படையில், தடை செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு குழு அடையாளம் கண்டுள்ளது. சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியுள்ளனர், மற்றும் கோவிட் தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச்சரிவின் காரணமாக ஒரு வருடத்திற்கு தடையை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போதுள்ள தடைகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT - என்ஜிடி) சமீபத்திய உத்தரவில் இருந்து பார்க்கும் போது, எவ்வளவு மோசமாக அமல்படுத்தப்பட்டுள்ளன மற்றும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று எது என்ற கேள்வி போன்ற வரைவு அறிவிப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் பிளாஸ்டிக் துறையின் எதிர்ப்பாலும் தடையை திறம்பட செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த கட்டுரையில், வரைவு அறிவிப்பு என்ன, கழிவு மேலாண்மை நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் வர்த்தக சங்கங்களின் எதிர்வினை என்ன என்பதை நாம் ஆராயவுள்ளோம்; தற்போதுள்ள தடைகளின் செயல்திறன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பு (ஈபிஆர்) ஆகியவற்றின் பங்கையும் அலசுகிறோம்.

தடை செய்ய அறிவிப்புக்கு என்ன தேவை

கடந்த 2016 இல் அறிவிக்கப்பட்ட மற்றும், 2018 இல் திருத்தப்பட்ட, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த தற்போதைய விதிகளை, புதிய வரைவானது மாற்றும். 2021 வரைவு விதிகளானனது, 2022 ஜனவரி 1 முதல் சில ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்வதற்கு முன்மொழிந்துள்ளது.

மே 11 வரை இரண்டு மாத காலத்திற்கு குடிமக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து, வரைவு குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை கோரிய பின்னர், அமைச்சகம் தற்போது பெற்ற பின்னூட்டங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக, பெயர் வெளியிட விரும்பாத அமைச்சக அதிகாரிகள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

மூன்று கட்ட தடையில், பலூன்கள், கொடிகள், சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் இயர் பட்ஸ், அலங்காரங்களில் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகளின் பயன்பாடு என, முன்மொழிவில் இடம் பெற்றுள்ள முதல்வகை ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள், படிப்படியாக வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 1, 2022 முதல் தடை செய்ய உத்தேசிக்கப்பட்ட இரண்டாவது பிரிவில், தட்டுகள், கப், கண்ணாடி மற்றும் ஃபோர்க்ஸ், ஸ்பூன், கத்திகள், ஸ்டிரா, தட்டு போன்ற துண்டாக்கப்பயன்படுபவை அடங்கும்; இனிப்பு பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பாக்கெட் செய்ய உதவும் செலோ டேப், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள ஸ்டிரர்கள் மற்றும் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்கள் அடங்கும்.

மூன்றாவது வகை தடையில், 240 மைக்ரான் தடிமன் குறைவாக உள்ள நெய்யப்பட்ட பைகள் உள்ளன. இந்த செயல்முறை, செப்டம்பர் 30, 2022 முதல் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு, முதன்முறையாக, ஷாப்பிங் பைகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகளையும், மேலும் பிராண்ட் உரிமையாளர்களையும் (பதிவுசெய்யப்பட்ட பிராண்ட் பெயரில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டி விற்கிறது) அத்துடன் பிளாஸ்டிக் கழிவு செயலிகளையும் அதன் எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. இது முதன்முறையாக, தெர்மோசெட் பிளாஸ்டிக்கை வரையறுத்துள்ளது - அவை மீளமுடியாத அளவிற்கு கடினமானவை மற்றும் மாற்றியமைக்க முடியாதவை - மற்றும் வெப்பத்தை மென்மையாக்கும் தெர்மோபிளாஸ்டிக்ஸ். தெர்மோசெட் பிளாஸ்டிக் மின் பொருத்துதல்கள் மற்றும் மேஜைப்பாத்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் பொம்மைகள், சீப்பு மற்றும் குவளைகள் போன்ற பொருட்களில் தெர்மோபிளாஸ்டிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.

முதல்முறை அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கேரிபேக்குகளின் தடிமன் 50 மைக்ரானில் இருந்து 120 மைக்ரானாக அதிகரிக்கவும், இந்த வரைவானது முன்மொழிகிறது. தடிமன் 50 மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தாள்களைப் பயன்படுத்துவதை, 2016 விதிகள் ஏற்கனவே தடைசெய்துள்ளன.

தடை செய்ய வேண்டியவை எவ்வாறு அடையாளம் காணப்பட்டன

இந்தியா, ஒன்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை, பயன்படுத்தியதும் அழிக்க வேண்டிய பிளாஸ்டிக்குகள் (பயன்படுத்தி வீசும் பொருட்கள் - யூஸ் அண்ட் த்ரோ) என வரையறை செய்துள்ளது, அவை பொதுவாக பேக்கேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை தூக்கி எறியப்படுவதற்கு அல்லது மறுசுழற்சி செய்யப்படுவதற்கு முன்பு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கேரி பைகள், உணவு பேக்கேஜிங், பாட்டில்கள், ஸ்டிராக்கள், கப் மற்றும் உணவு துண்டாக்கப்பயன்படுபவை போன்ற பொருட்கள் இதில் அடங்கும்.

வேதியியல் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவின் அறிக்கையின் உதவியுடன், படிப்படியாக வெளியேற்றப்பட வேண்டிய ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டளவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கான அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து, இந்த குழு அமைக்கப்பட்டது, அத்துடன், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் வகைகளை ஆராயவும், அவற்றில் எது படிப்படியாக அகற்றப்படலாம் என்று பரிந்துரைப்பதும் குழுவின் பணியாகும்.

ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலாளர் இந்திரஜித் பால் தலைமையில், 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் ஐந்து முறை கூடிய இக்குழுவில், விஞ்ஞானிகள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தொழில் அமைப்புகளின் பங்குதாரர்களுடனும், தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (TERI - டெரி) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த சுயாதீன நிபுணர்களுடனும், சிந்தன் மற்றும் டாக்ஸிக்ஸ் லிங்க் போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டனர். இந்த குழுவின் அறிக்கை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2020 க்குள் 20 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஒரு ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் உபயோக குறியீட்டு மற்றும் சுற்றுச்சூழலில் அதன் மோசமான தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தடைக்கான பொருட்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்கப்பட்டதாக, குழு அறிக்கை தெரிவிக்கிறது. பயன்பாட்டிற்கான தலா ஐந்து காரணிகள் (சுகாதாரம், தயாரிப்பு பாதுகாப்பு, அத்தியாவசியம், சமூக தாக்கம் மற்றும் பொருளாதார தாக்கம்) மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு (சேகரிப்பு, மறுசுழற்சி, வாழ்நாள் தீர்வுகளின் சாத்தியம், மாற்று பொருட்களின் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் குப்பை கொட்டுதல்) ஆகியவை கருதப்பட்டன. இந்த 10 காரணிகளைப் பயன்படுத்தி அவற்றின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்டறிந்து, மதிப்பெண் அடிப்படையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் வகைப்படுத்தப்பட்டன.

பயன்பாட்டு அளவில் குறைந்த மதிப்பெண் மற்றும் சுற்றுச்சூழல்-தாக்க அளவில் அதிக மதிப்பெண் பெற்றவை, தடை செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டன. மெல்லிய கேரிபே, நெய்யாத கேரிபேக் மற்றும் கவர்கள், சிறிய பொட்டலம் போட உதவும் டேப், ஸ்டிராக்கல், நுரைத்த கட்லரி பொருட்கள், நுரைக்காத கட்லரி பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள், 100 மைக்ரான்களுக்குக் குறைவான தடிமன் கொண்ட சிறிய குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பதாகைகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் ஆகியன, பயன்பாட்டு காரணிகளில் குறைவாகவும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தில் அதிகமாகவும் இருந்தன.

பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை, அரசு குழுவும் கவனித்த இரண்டு முக்கிய பிரச்சினைகள்.

கலப்பு எதிர்வினைகள்

"இது [வரைவு] ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும், ஏனெனில் இது, முதல்முறையாக ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை வரையறுக்கிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளின் ஒரு பகுதியை உருவாக்கும் பொதுவான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தயாரிப்புகளின் அடிப்படையில் வரையறையை சூழ்நிலைப்படுத்த வேண்டும்" என்று, டெல்லியைச் சேர்ந்த வள மேலாண்மை மற்றும் சர்க்குலர் பொருளாதாரம் குறித்த நிபுணர் சுவாதி சம்பியல் கூறினார்.

உதாரணமாக, சில மாநிலங்களில் குட்கா மற்றும் மெல்லும்-புகையிலை சாக்கெட்டுகளின் பைகளால் பெரிய சிக்கல் உள்ளது, அதேசமயம் பேக்கேஜிங் மற்றும் செலவழிப்பு பொருட்களுடன் அதிக சுற்றுலாப் பயணிகளை அந்த மாநிலங்கள் காண்பதாக, சாம்பியல் விளக்கினார்.

பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட கேரி பைகளின் தடிமன் 120 மைக்ரானாக உயர்த்துவதற்கான திட்டம், சாம்பியலின் கூற்றுப்படி, அவ்வாறு செய்வது அத்தகைய பைகளின் நீண்ட ஆயுளை அதிகரிக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் தன்மையை உறுதி செய்யும், ஏனெனில் மெல்லிய பைகளை மறுசுழற்சி செய்ய. அது நிதி ரீதியாக சாத்தியமில்லை.

டெல்லியின் 11 முறைசாரா மறுசுழற்சி மையங்களில் கழிவு சேகரிப்பாளர்களிடையே மெல்லிய கேரி பைகள் குறைவாக இருப்பதைக் காணலாம் என்று, டெல்லியை சேர்ந்த இலாப நோக்கற்ற டாக்ஸிக்ஸ் இணைப்பு கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் கணக்கெடுப்பில், அழுக்கடைந்த மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட பைகள், குறிப்பாக மெல்லியவை, பெரும்பாலும் அழுகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தன, அவை சுத்தமாக எடுக்கப்படுவதற்கு தகுதியற்றவை.

முன்மொழியப்பட்ட பிளாஸ்டிக் மீதான தடை,பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு சிறந்த படியாகும் என்று டெல்லியை சேர்ந்த கொண்ட சிந்தன் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பாரதி சதுர்வேதி கூறினார், அவர் நீடித்த நுகர்வு மற்றும் கழிவு உற்பத்தியைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட தடை, இந்தியாவுடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அது ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் தீங்கு விளைவிக்கும் பயன்பாடு மற்றும் கழிவுகளை எடுப்பவர்களின் வாழ்வாதாரங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், கழிவுகளை பொறுக்கி எடுத்து, அதன் மூலம் வாழ்வாதாரத்தை கொண்டுள்ள, இந்தியாவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி சங்கிலியில் உள்ளனர். கலப்பு கழிவுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களை வெளியே இழுத்து, அவற்றை வரிசைப்படுத்தி, கழிவு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம், அவற்றை சுத்தம் செய்து மீண்டும் வரிசைப்படுத்தி அவற்றை சிறப்பு விற்பனையாளர்களுக்கு விற்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் கழிவுகள் மறுசுழற்சிக்கான வழியைக் கண்டுபிடிக்கும் என்று சதுர்வேதி கூறினார். "கழிவுகளை எடுப்பவர்களின் வருமானத்தில் சுமார் 41% பிளாஸ்டிக்குகளில் இருந்து தான் வருகிறது. கழிவுகளை குறைப்பது என்பது கழிவுப்பொருட்களின் வருவாயைக் குறைப்பதைக் குறிக்கும், "என்று அவர் கூறினார்," எனவே, மறுசுழற்சி செய்ய முடியாத அந்த பிளாஸ்டிக்குகளை நாம் முதலில் வெளியேற்ற வேண்டும். குறைந்த பிளாஸ்டிக் பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மாற்றத்தை நிர்வகிக்க, கழிவுகளை எடுப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம், இதனால் மாற்றம் பாதுகாப்பானது, நியாயமானது மற்றும் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது" என்றார்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது மற்றும் அவற்றின் சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் தடம் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்த பின்னர் மிகவும் நிலையான விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றொரு முக்கிய சவாலாகும் என்று சாம்பியல் கூறினார். "மாற்று சந்தை இப்போது பொருளாதாரங்களின் அளவைக் குறிக்கவில்லை, இது ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்களின் விஷயமாகும். உள்ளூர் அரசின் உந்துதல் மாற்றுத்தொழிலுக்கு சிறிய வணிக மாதிரிகளை உருவாக்கியுள்ளது; எவ்வாறாயினும், இது போதாது மற்றும் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இதை மேலும் அளவிட வேண்டும்" என்றார்.

தற்போதுள்ள தடைகளை அமல்படுத்துதல்

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு நாடு தழுவிய தடையை மத்திய அரசு முன்மொழிந்தாலும், பிளாஸ்டிக் தடை செய்வது தொடர்பாக, மத்திய மற்றும் பல மாநிலங்களில் விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் (PWM - பி.டபிள்யூ.எம்)- 2016 (2018 இல் திருத்தப்பட்டது), நாடு முழுவதும் 50 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்த தடை விதித்தது.

நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பு (ஈபிஆர்) விதியின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் 'தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்களின்' பொறுப்புகளையும் இந்த விதிகள் குறிப்பிடுகின்றன. நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பின் கீழ், ஒரு தயாரிப்பாளருக்கு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது (தனித்தனியாக அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து) மற்றும் அதன் மேலாண்மை, இது பிளாஸ்டிக் சேகரிப்பு, அவற்றின் சேமிப்பு, மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் அகற்றல் ஆகியவற்றிற்கான ஒரு சேனலை உருவாக்குவதை உள்ளடக்கியது.

அடுத்து வந்த ஆண்டுகளில், பல மாநிலங்கள் தங்களது சொந்த விதிமுறைகளை கொண்டு வந்துள்ளன, அவை ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக அல்லது பகுதியளவு தடையை அமல்படுத்தியதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 2021 பிப்ரவரி மாதம் மக்களவைக்கு தெரிவித்தார்.

இருப்பினும், ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளை அமல்படுத்துவது என்பது, மோசமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பினை, மோசமாக நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சகத்தை கண்டித்தது. உண்மையில், மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பிளாஸ்டிக் விதிகளை மோசமாக நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தாக்கல் செய்த மனுவில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்தது.

"வருந்தத்தக்க வகையில், நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பு அதிகாரத்தை இறுதி செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக உள்ளன. 2011 விதிகளுக்கு பதிலாக 2016 ஆம் ஆண்டில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் விதிகள் வடிவமைக்கப்பட்டன என்பதை நாம் கவனிக்கிறோம். விதிகள் வெளியிடப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பு மாதிரிகளை இறுதி செய்வதில் நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமும் இல்லை. இன்று முதல் மூன்று மாதங்களுக்குள் இது விரைவில் இறுதி செய்யப்படலாம்" என்று தேசிய பசுமைத்தீர்ப்பாயத் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான பெஞ்ச், 2021 ஜனவரி 8 தேதியிட்ட தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டது போல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளரின் பொறுப்பு குறித்த வரைவு கட்டமைப்பை வெளியிட்டது, இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வரைவு கட்டமைப்பானது மூன்று மாதிரிகளை முன்மொழிந்தது: கட்டண அடிப்படையிலான மாதிரி, கழிவுகளை நிர்வகிப்பதற்கான தயாரிப்பாளர்கள் ஒரு மைய கார்பஸில் செலுத்த வேண்டும்; தயாரிப்பாளர்கள் தாங்கள் உருவாக்கும் கழிவுகளை ஈடுசெய்ய வரவுகளை வாங்க அனுமதிக்கும் கடன் அமைப்பு; மற்றும் ஒரு தயாரிப்பாளர் பொறுப்பு அமைப்பு மாதிரி, இதில் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளுக்கு இணங்க ஒரு ஒப்பந்தக்காரர் சேவையை அமர்த்துவர்.

அரசின் கட்டமைப்பானது தயாரிப்பாளர்களை பொறுப்பில் இருந்து விலக்க அனுமதித்ததாகவும், கழிவுகளை குறைப்பது மற்றும் அதிக உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியதாகவும் நிபுணர்கள் கூறியதாக, இந்தியாஸ்பெண்ட் 2020 அக்டோபர் கட்டுரை தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு

இந்தியா ஆண்டுக்கு சுமார் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் -- ஒரு டிரக்கிற்கு 25 டன் என்ற அளவில் 1,030 டிரக் லோடுகளுக்கு சமம்-- உற்பத்தி செய்யப்படுகிறது என்ற சிபிசிபியின் திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில், 15,384 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அல்லது கிட்டத்தட்ட 60% சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன, மீதமுள்ள 10,556 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலில் சிதறிக்கிடக்கின்றன என்று ஜவடேகர் 2019 நவம்பரில் மக்களவையில் தெரிவித்தார்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் சுற்றுச்சூழல் பாதிப்பு, அவற்றின் பயன்பாடு மற்றும் வீசுதல் செயல்பாடு மற்றும் சேகரிப்பில் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுனெப் ( UNEP) அறிக்கையின்படி, பிளாஸ்டிக் சிதைந்து மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை ஆகலாம் மற்றும் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும், இது மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. "கடலில் உள்ள பிளாஸ்டிக் பைகள் ஜெல்லிமீனை ஒத்திருக்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் ஆமைகள் மற்றும் டால்பின்களால் உட்கொள்ளப்படுகின்றன, அவை உணவுக்காக தவறு செய்கின்றன" என்று அறிக்கை கூறியுள்ளது.

தாமதப்படுத்த முயற்சிக்கும்பிளாஸ்டிக் தொழில்துறை

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான உத்தேச தடையை சுயாதீன வல்லுநர்கள் வரவேற்றுள்ள நிலையில், உற்பத்தியாளர்களுக்கு இதில் மாறுபாடு உள்ளது. பிளாஸ்டிக் தொழிற்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏஐபிஎம்ஏ), உற்பத்தி எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியால், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டி தயாரிப்புகள் மீதான தடையை ஒரு வருட காலத்திற்கு, 2023 காலக்கெடுவை தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஏஐபிஎம்ஏ இயக்குநர் ஜெனரல் தீபக் பல்லானி, இந்தியாஸ்பெண்டிடம் சுட்டிக்காட்டினார்.

அரசுக்கு அதன் பிரதிநிதித்துவத்தில், நாடு முழுவதும் ஒரு சீரான கொள்கையின் தேவை, தடை செய்ய முன்மொழியப்பட்ட தயாரிப்புகளின் சுழற்சி பகுப்பாய்வு மற்றும் பெரிய நிறுவனங்களை சேர்க்க வேண்டிய அவசியம் போன்ற பரந்த பிரச்சினைகளை, தொழில்துறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மூலப்பொருட்களை உற்பத்தி செய்பவமை, பொது மற்றும் தனியார் துறை, அவை பாலிமர்களை உற்பத்தி செய்யும் பெரிய பெட்ரோ கெமிக்கல் துறை நிறுவனங்கள் என்று பல்லானி கூறினார்.

வரைவில் முன்மொழியப்பட்ட கேரிபேக்குகளின் தடிமன் 120 முதல் 75 மைக்ரான் வரை திருத்தப்பட வேண்டும் என்றும் இது அரசாங்கத்திடம் கேட்டுள்ளது, தடிமன் அதிகரிப்பது பைகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கு உதவாது என்றும், அது குறிப்பிட்டுள்ளது. தடிமன் 120 மைக்ரானாக அதிகரிப்பது, இயந்திரங்களை மாற்றுவதில் உற்பத்தியாளர்களுக்கு பெரும் செலவுகளைச் செய்ய கட்டாயப்படுத்தும் என்று பல்லானி கூறினார்.

"நாடு முழுவதும் ஒரு சீரான கொள்கை இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்," என்று பல்லானி கூறினார், 2016 மத்திய ஒழுங்குமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட மாநில வாரியான விதிகளின் ராஃப்ட்டைக் குறிப்பிடுகிறார். "இது திறம்பட செயல்படுத்த உதவும். முன்னதாக மாநில அரசுகள் பயணிப்பதை நாங்கள் கண்டோம், அவற்றுக்கு அவற்றின் சொந்த விதிமுறைகள் உள்ளன. இத்தகைய அறிவிப்புகளின் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களில் செயல்படும் நபர்களுக்கு பெரிய பிரச்சினைகள் உள்ளன" என்றார்.

பெட்ரோ கெமிக்கல் துறையில் இருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் பெரிய தனியார் மற்றும் பொது உற்பத்தியாளர்களையும் இந்த விதிகள் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று பல்லானி கூறினார். "அவற்றை மூடுவது விதிகளை சரியான திசையில் கொண்டு செல்லும்," என்று அவர் கூறினார். இதுபோன்ற நிறுவனங்கள் உட்பட ஒரு சீரான செயல் திட்டம் மற்றும் கழிவு நிர்வாகத்தை செயல்படுத்துவது முக்கியம் என்று வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. பெட்ரோ கெமிக்கல் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் பாலிமர் போன்ற மூலப்பொருட்களின் உற்பத்தியாளர்கள், அவை உட்பட முழு அளவிலான தயாரிப்புகளையும் உள்ளடக்கும் என்று பல்லானி விளக்கினார்.

காலக்கெடுவில் தளர்வு தேடுவது என்பது தொழில்துறையிடம் இருந்து ஒரு நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது, கடந்த காலத்திலும் இது காணப்பட்டது என்று, டாக்ஸிக்ஸ் லிங்கின் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா, வரைவு அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை வெளியேற்றுவதற்கான நேரம் இது என்று கூறினார். "தொழில் எப்போதும் அதிக நேரத்தையும், நிதானமான சூழலையும் செயல்பட விரும்புகிறது, அவர்கள் ஏன் அந்தக் கண்ணோட்டத்தில் வாதிட மாட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், பெரிய சூழலில், இவை உண்மையில் தடையாக இருக்கும் அல்லது நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அவை எவ்வாறு பொருட்களை விற்கின்றன அல்லது உற்பத்தி செய்கின்றன என்பதில் நான் நினைக்கவில்லை" என்றார்.

தடை செய்ய உத்தேசிக்கப்பட்ட பொருட்கள், நுகர்வோருக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று சின்ஹா ​​கூறினார். "ஆனால் இப்போது, ​​தொற்றுநோய் மற்றும் தற்போதைய வளர்ச்சிப்பாதை காரணமாக, அவர்கள் [வர்த்தக அமைப்பு] இந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். ஆனால் பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை பார்த்தால், நாம் இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

உற்பத்தியாளர்களைத் தவிர, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான அரசின் முன்மொழியப்பட்ட தடை, அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களையும் பாதிக்கும், அவை பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல் பேக்கேஜிங்கிலும் பயன்படுத்துகின்றன. செப்டம்பர் 2020 இல், இரு நிறுவனங்களும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் குறித்து, 16 வயது சிறுவனின் வேண்டுகோளைக் கேட்டபோது தேசிய பசுமைத்தீர்ப்பாயம் இரு நிறுவனங்களிடமும் கேள்வி எழுப்பியது.

இரு நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் 2016 விதிகளின் கீழ், ஈபிஆர் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று அதே வழக்கில் பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு, இதுபற்றி விரிவான கேள்விகளை இந்தியா ஸ்பெண்ட் அனுப்பியது, அதாவது வரைவு அறிவிப்பு குறித்து அவர்களின் பதிலைப் பெறவும், பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்தவொரு நிறுவனமும் இதுவரை குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் வலைத்தளங்களில் கிடைக்கும் விளம்பரப் பொருட்களைப் பகிர்ந்து கொண்டனர். பிளிப்கார்ட் ஆகஸ்ட் 2019 வெளியீட்டைப் பகிர்ந்து கொண்டது, இது, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில், 25% குறைப்பைப் பெற்றதாகக் கூறியது, அமேசான் இந்தியா ஒரு வலைதளப்பதிவை பகிர்ந்து கொண்டது, இது 50 க்கும் மேற்பட்ட மையங்கள் அல்லது கிடங்குகளில் இருந்து உருவாகும் பேக்கேஜிங்கில் அனைத்து ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக்கையும் அகற்றிவிட்டதாகக் கூறியது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்