மும்பை: உலகத் தலைவர்கள் சிஓபி 26 (COP26) மாநாட்டுக்கு நவம்பர் 2021 இல் இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், போதுமான உமிழ்வு இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், அதன் முன்னேற்றத்தை வெளிப்படையாக தெரிவிப்பதற்கும், வளரும் நாடுகளுக்கு தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவும், கார்பன் சந்தைகளை செயல்படுத்துவதற்கும் நிதியுதவி அளிப்பதற்காக, 'பாரிஸ் விதிமுறை புத்தகத்தை' வலுப்படுத்த வேண்டும் என்று, வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உலகில், 191 நாடுகளின் சமூகம் எப்படி பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உமிழ்வு குறைப்பு இலக்குகளை உறுதியளிக்க வேண்டும் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கை செய்ய வேண்டும் என்பதை, 2018 பாரிஸ் விதிமுறை புத்தகம் நிர்வகிக்கிறது. வளரும் நாடுகளுக்கு காலநிலை நடவடிக்கைக்கான நிதியை வழங்குவதற்காக, பணக்கார நாடுகளுக்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளன. ஆனால் பாரிஸ் விதிமுறை புத்தகம், பெரிதும் புறக்கணிக்கப்பட்டது என்று, புதிய அறிக்கை மற்றும் இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு நாடுகள் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, இது அவர்களின் இலக்குகளின் போதுமான அளவு மற்றும் அவற்றைச் சந்திப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் வெற்றியை சுயாதீனமாக சரிபார்க்க உதவும், மேலும் 40% நாடுகள் (78) இன்னும் புதுப்பிக்கப்பட்ட மற்றும் இன்னும் லட்சியமான உறுதிமொழிகளை சமர்ப்பிக்கவில்லை, அவை தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC) என்று அழைக்கப்படுகின்றன, அவை 2020 ல் வரவுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்காக நாடுகள் ஒன்றிணைந்தபோது, ​​2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையை, 1.5-2 ° C ஆகக் கட்டுப்படுத்துவதாக அவை உறுதியளித்தன. இதற்காக, 2030 க்குள், உலகம் 2010 நிலைகளில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 25-45% குறைக்க வேண்டும், ஆனால் அனைத்து நாடுகளின் தற்போதைய தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளும் (NDC) உமிழ்வை, சுமார் 12%மட்டுமே குறைக்கும் என்று செப்டம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் மாநாடு (UNFCCC) அறிக்கை கண்டறிந்துள்ளது.

பாரிஸ் விதிமுறை புத்தகம், நடவடிக்கைகளை அதிகரிக்க நாடுகளை கட்டாயப்படுத்தாது என்று, நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். "தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில், நாடுகள் உறுதி அளித்ததற்கும், காலநிலை மாற்றத்தைக் குறைக்க உண்மையில் என்ன தேவை என்பதற்கும் இடையே உள்ள விதியை, இந்தப் புத்தகம் குறைக்காது" என்று, புதுடெல்லியைச் சேர்ந்த சிந்தனை அமைப்பான, தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்டில் (TERI) அமைப்பின் நேஹா பஹுஜா கூறினார்.

"பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ்மட்ட இயல்பு காரணமாக, நாடுகள் தங்கள் சொந்த தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள், கணக்கு மற்றும் இணக்க விதிகளை பெரும்பாலும் தீர்மானிக்க முடிந்தது," என்று, புதுடெல்லியைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான ஆராய்ச்சி கவுன்சிலின் (CEEW) மூத்த திட்டத்தலைவர் ஷிகா பாசின் கூறினார்.

சர்வதேச கார்பன் சந்தைகள், அத்துடன் வளரும்நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது போன்ற வெப்பநிலை வரம்பை அடையும் லட்சிய இலக்குகளை உறுதி செய்வதற்கான விதிமுறை வழிகாட்டுதல்கள் பலவீனமானவை மற்றும் பயனற்றவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் முக்கிய விவரங்களை இறுதி செய்ய வேண்டும் மற்றும் 2030 இலக்கை அடைவதற்கான உண்மையான வாய்ப்பை, உலகுக்கு வழங்குவதற்காக விதி புத்தகத்தை வலுப்படுத்த வேண்டும். சரி செய்ய வேண்டியது இங்கே.

விதிமுறை புத்தகம் என்றால் என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டில், உலகளாவிய வெப்பநிலையின் உயர்வை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் பின்னடைவை அதிகரித்தல், மற்றும் குறைந்த கார்பன் மற்றும் நிலையான வளர்ச்சியுடன் நிதி ஓட்டங்களை சீரமைத்தல் என, காலநிலை நெருக்கடியை சமாளிக்க நீண்ட கால, சர்வதேச இலக்குகளை பாரிஸ் ஒப்பந்தம் திடப்படுத்தியது. ஆனால் இந்த உலகளாவிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான விவரங்கள் தெளிவாக இல்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டில், போலந்தின் கட்டோவிஸில் நடந்த 24வது சிஓபி மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களுக்கு, பாரிஸ் விதிமுறை புத்தகத்தை நாடுகள் ஏற்றுக்கொண்டன. "பொறுப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான நாட்டின் கடமைகள் என்ன என்பதை விதிமுறை புத்தகம் கூறுகிறது" என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் & நீருக்கான ஆராய்ச்சிகவுன்சில் (CEEW) திட்ட கூட்டாளர் சுமித் பிரசாத் கூறினார். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை புதுப்பித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எப்படி அறிக்கை செய்வது என்ற விதிகள் ஆகியன, இதில் அடங்கும் என்று அவர் விளக்கினார்.

விதி புத்தகத்தில் எந்த நாடுகள் உடன்படவில்லை

பொறுப்புக்கூறல்: காலநிலை நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதில், நாடுகள் முன்பு இரண்டு உடன்படிக்கைகளை -கியோட்டோ நெறிமுறை மற்றும் தோஹா திருத்தம் ஆகியவற்றை கொண்டிருந்தன. இது கியோட்டோ நெறிமுறையை நீட்டித்தது மற்றும் திருத்தியது-ஆனால் இந்த ஒப்பந்தங்களின் கீழ் இலக்குகளை நாடுகள் ஏற்கவில்லை என்று பிரசாத் கூறினார். இதன் காரணமாக, "பாரிஸ் உடன்படிக்கைக்கு, பொறுப்புணர்வை வலுப்படுத்துவது முக்கியமானது… ஆனால் ஒப்பந்தம் பரவலாக்கப்பட்டதால், நாடுகள் பொதுவான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்துவிட்டன, "என்று அவர் மேலும் கூறினார்.

கார்பன் வர்த்தகம்: கார்பன் அல்லது உமிழ்வு வர்த்தகம் என்பது, விதிகள் புத்தக அம்சங்களில் மிகவும் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றாகும் என்று பஹுஜா கூறினார். ஒரு கார்பன் சந்தை, உமிழ்வு இலக்குகளை அடைய முடியாத நாடுகளையும் நிறுவனங்களையும், உமிழ்வைக் குறைத்து விற்பனைக்கு 'வரவுகளை' கொண்டவர்களிடம் இருந்து கார்பன் வரவுகளை வாங்க அனுமதிக்கிறது. உதாரணமாக, 2002 முதல் 2012ம் ஆண்டு வரை, இந்திய நிறுவனங்களும் அரசும் சேர்ந்து கியோட்டோ நெறிமுறையின் கீழ், நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கார்பன் வரவுகளை ஈட்டின. தொழில்துறை உமிழ்வைக் குறைப்பதன் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுதல், வீடுகளில் ஆற்றல் திறன் மற்றும் காடுகளைப் பாதுகாத்தல், மேலும் அவற்றில் சில உமிழ்வு இலக்குகளை விட அதிகமாக இருக்கும் நாடுகள் அல்லது நிறுவனங்களுக்கு வரவுகளாக விற்கப்பட்டன.

கியோட்டோ நெறிமுறையின் கீழ் உள்ள கார்பன் சந்தைகள், சுத்தமான மேம்பாட்டு வழிமுறை (CDM - சிடிஎம்) என அறியப்பட்டன. சிடிஎம் கீழ், நாடுகள் கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்யலாம்-சான்றிதழ்கள் வைத்திருப்பவர் ஒரு டன் கார்பன் டை ஆக்சைடு அல்லது அதற்கு சமமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிட அனுமதிக்கும். ஆனால் 75% கார்பன் வரவுகள், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதைக் குறிக்க வாய்ப்பில்லை என்று, கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின்,2015 அறிக்கை கண்டறிந்தது. சிடிஎம் இந்த குறைப்புகளைச் செய்வது, மலிவான நாடுகளில் உமிழ்வு வெட்டுக்களை செயல்படுத்தியது, மற்ற நாடுகளில் பசுமை இல்ல வாயு உமிழ்வு தொடர்கிறது என்று, ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்கார் ரெய்ஸ் மற்றும் டாம்ரா கில்பர்ட்சன் ஆகியோர், யு.என். கிரானிக்கல் இதழில் எழுதினர். பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தாத தொழில்களால், சிறிய மாற்றங்களுக்கு கூட கடன் வழங்கப்பட்டது, என்றனர் அவர்கள்.

கார்பன் சந்தையை செயல்படுத்துவதற்கு வலுவான கணக்கியல் நடைமுறைகள் தேவை என்று பஹுஜா கூறினார். வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் செய்யப்படும் உமிழ்வு, இரட்டிப்பாகக் கணக்கிடப்படும் என்று நாடுகள் அஞ்சுகின்றன, அதே நேரத்தில் நாடுகளும் கார்பன் வர்த்தக விதிகளை தவறாகப் பயன்படுத்தக்கூடும். உதாரணமாக, தளர்வான விதிகளின்படி, கார்பன் வரவை விற்பனை செய்யும் ஒரு நாடு, தனக்குள்ளே உமிழ்வு குறைப்பைக் கோரலாம், அதே நேரத்தில், கடன் வாங்கும் நாடும் அதே உமிழ்வு குறைப்பைக் கோரலாம் என்று அவர் விளக்கினார்.

பிரேசில் உட்பட சில நாடுகள் பாரிஸ் விதிமுறை புத்தகத்தின் கீழ் இருமடங்கு கார்பன் வரவுகளை எண்ணுவதை ஆதரித்துள்ளன. கியோட்டோ நெறிமுறையின் கீழ், இரட்டை எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டது, ஆனால் அந்த நேரத்தில் நாடுகளுக்கு உமிழ்வு குறைப்பு இலக்குகள் இல்லை.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ்கார்பன் வர்த்தகத்தை மேற்பார்வையிடும் சர்வதேச அமைப்பின் யோசனையை சில நாடுகள் [சர்வதேச ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் போன்றவை ] எதிர்க்கின்றன, மேலும் கார்பன் வரவுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் நாடுகளுக்கு இடையே அதிக கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை தேவை என்று அவை வாதிட்டன.

எதை மாற்ற வேண்டும்

லட்சிய இலக்குகளை சிறப்பாக செயல்படுத்துதல்: 26 வது சிஓபி தங்கள், தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின் மூலம் நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட உமிழ்வு குறைப்பு விருப்பங்களை புதுப்பிக்கும் ஐந்து ஆண்டு செயல்முறையைத் தொடங்க உள்ளது. இதுவரை, அமெரிக்கா (US), இங்கிலாந்து (UK) மற்றும் கனடா உட்பட 77 நாடுகள், நிகர பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்துள்ளன.

ஆனால் எல்லா நாடுகளுக்கும் லட்சிய இலக்குகள் இல்லை, இதை விதியும் புத்தகம் கவனிக்கத் தவறிவிட்டது என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் & நீருக்கான ஆராய்ச்சிகவுன்சிலின் பாசின் கூறினார். உதாரணமாக, கனடா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தின் லட்சியங்கள் மட்டுமே 2030 க்குள் வெப்பநிலை உயர்வில் 1.5 ° C வரம்பை அடைய தேவையான நடவடிக்கைகளுக்கு ஏற்ப மதிப்பிடப்படுகிறது என்று, காலநிலை பகுப்பாய்வு மற்றும் புதிய காலநிலை நிறுவனம் இணைந்து காலநிலை நடவடிக்கை குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை நோக்கி செல்ல இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் நெருக்கடி உள்ளதாக, பாசின் கூறினார். நிகர-பூஜ்ஜிய இலக்குகளை உறுதிப்படுத்துவது என்பது உமிழ்வை கணிசமாகக் குறைப்பது மற்றும் காடு வளர்ப்பு மற்றும் விலையுயர்ந்த கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மீதமுள்ள உமிழ்வை அகற்றுவதாகும். வரும் 2060 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாக, செப்டம்பர் 2020 இல் சீனா அறிவித்தது. இந்தியா தைரியமான காலநிலை நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தாலும், நிகர பூஜ்ஜிய உமிழ்வு அதன் பொருளாதார சூழ்நிலைகளுக்கு முன்னோக்கி செல்லும் வழி அல்ல என்று, இந்தியாஸ்பெண்ட் ஏப்ரல் 2021 கட்டுரை தெரிவித்தது.

நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கான முக்கியத்துவம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, நாடுகள் தற்போது என்ன செய்கின்றன என்பதில் இருந்து கவனத்தை ஈர்க்கிறது. "நிகர பூஜ்ஜியத்தின் இந்த முழு கட்டுரையும், பாரிஸ் ஒப்பந்தத்தின் தேவை இல்லை. ஆனால் எதிர்கால இலக்கைப் பற்றி பேசுவது மிகவும் வசதியான வழியாகும், இன்று வரை நாடுகள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, "என்று பசின் கூறினார்.

பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புக்கு வலுவான முக்கியத்துவம்: காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடானது, 1992 ம் ஆண்டு ரியோ காலநிலை உச்சி மாநாட்டில், பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக, வளரும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான பொறுப்பு, பணக்கார நாடுகளுக்கு உள்ளது என்பதை இந்த அமைப்பு ஒப்புக்கொள்கிறது. மேலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் வளரும் நாடுகளின் வரலாற்றுப் பொறுப்பு ஓரளவு குறைவாக இருப்பதால், எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உமிழ்வைக் குறைக்கும் இலக்குகளைக் கொண்டிருக்காது. உதாரணமாக, 1850 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில் உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் இந்தியா 3% ஆக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்கா 27% ஆக இருந்தது என்று, உலக வள நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து, வளரும் நாடுகளுக்கான விதிமுறையில் ஒப்பீட்டளவில் மென்மையான மொழியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது. "விதிமுறை புத்தகம் ஒவ்வொரு நாட்டையும் சமமான பொறுப்புடன் பார்க்கிறது, மேலும் வளரும் நாடுகளுக்கு நெகிழ்வுத்தன்மை இருந்தாலும், அவை இன்னும் போதுமானதாக இல்லை" என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் & நீருக்கான ஆராய்ச்சிகவுன்சிலின் பிரசாத் கூறினார்.

வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு நிதி உதவி அமல்படுத்துதல்: இந்த இலக்குகளை அடைய, வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்ற அனுமானத்தின் பேரில், நிறைய நாடுகள் தங்கள் தேசியமாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை உறுதி அளித்ததாக பாசின் கூறினார், ஆனால் அது நடக்கவில்லை.

வளர்ந்த நாடுகள் தங்கள் உமிழ்வைக் குறைக்கவும், புவி வெப்பமயமாக்கலைக் கட்டுப்படுத்தவும் நிதியுதவி அளிப்பதற்காக, 2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களில் 75 பில்லியன் டாலர் வரை வழங்குவதில் வளர்ந்த நாடுகள் பற்றாக்குறை அடையும் என்று, செப்டம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியது. 2017-18ஆம் ஆண்டில், வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் மாநாடு அறிக்கைக்கு, காலநிலை நிதி என அறிக்கை அளித்த மதிப்பீடு செய்யப்பட்ட $ 59.5 பில்லியனில், $ 19- $ 22.5 பில்லியனுக்கு இடையில் திறம்பட வழங்கியதாக, ஆக்ஸ்பாமின் காலநிலை நிதி நிழல் அறிக்கை 2020 கூறியது. மேலும், 2017-18 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிடப்பட்ட பொது காலநிலை நிதிகளில் 80%, மானியங்கள் அல்ல, மாறாக கடன்கள் மற்றும் பிற மானியம் அல்லாதவை என அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.