நாசிக்: "குறைந்தபட்சம் காயம் ஏற்படுமோ என்ற பயம் அல்லது அடுத்த நாளுக்கு தண்ணீர் இருக்காதே என்ற மன அழுத்தமோ இல்லாமல், என்னால் இப்போது தூங்க முடியும்" என்று, நாசிக்கின் பர்தேச்சி வாடியில் உள்ள தாக்கூர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சுனிதா பார்தி கூறினார். பார்தி மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற பெண்கள், வறண்டு கிடக்கும் கிராமக் கிணற்றில் இருந்து சில பானைகளில் தண்ணீரை நிரப்புவதற்காக, கீழே இறங்கி விழுந்தால் காயம் அல்லது மரணம் கூட நேரிடும். மற்றொரு நீர் ஆதாரத்தை அணுகுவதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் பஞ்சாயத்தின் உதவியுடன், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் நிதியைப் பயன்படுத்தி, மார்ச் 2022 இல் அங்கு தண்ணீர் குழாய் வழங்க ஏற்பாடு செய்து, பெண்களை அரசு சமாதானப்படுத்தியது.

மத்திய அரசின் லட்சியமான, ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது வரை, 50% குடும்பங்கள் குழாய் இணைப்பு பெற்றுள்ளன மற்றும் 17% வீடுகளில் குழாய் இணைப்பு இருந்தது, இது ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிட்டால் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு முன்னேற்றம் ஆகும். பர்தேச்சி வாடியை பிரதிநிதித்துவப்படுத்தும் டேக் தியோகாவ் கிராம பஞ்சாயத்தில், 32% வீடுகளில் மட்டுமே குழாய் இணைப்புகள் உள்ளதாக, மிஷனின் தகவல் பலகை காட்டுகிறது. இதில், பார்தியின் குக்கிராமத்திற்கு ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.

இதன் பொருள், ஒவ்வொரு கோடைகாலத்திலும் சுமார் ஐந்து மாதங்களுக்கு, பெண்களும் குழந்தைகளும் 60 அடி கிணற்றில் இறங்கி தண்ணீர் கீழே இறங்குவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இந்தியாவில், வீட்டில் பயன்படுத்த தண்ணீர் நிரப்புவது பெரும்பாலும் பெண்களின் வேலை. உலகளவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும், 200 மில்லியன் மணிநேரம் தண்ணீரைச் சேகரிப்பதற்காகச் செலவிடுகிறார்கள், ஆசியாவில், கிராமப்புறங்களில் சராசரியாக 21 நிமிடங்கள் தண்ணீர் சேகரிக்க ஒரு சுற்றுப் பயணம் எடுக்கிறது.

குடிநீர் குழாய் லைன், பர்தேச்சி வாடியின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை விடுவித்துள்ளது; ஆனால் ஆணாதிக்க விதிமுறைகள், கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லாதது மற்றும் வளர்ச்சிக்கான பிற வாய்ப்புகள் இல்லாததால், இவ்வாறு கிடைக்கக்கூடிய நேரங்களில், வீட்டு வேலைகளுக்காக அதிக நேரம் செலவிடுவதாக மாறிவிட்டதை, எங்கள் அறிக்கை கண்டறிந்துள்ளது.

சுமார் 200 பேர் வசிக்கும் இந்தக் குக்கிராமத்திற்கு தண்ணீரைப் பெறுவதில் உள்ள சிரமம், அரசின் நீர் வழங்கல் உரிமைகோரல்களுக்கு ஒரு கண்ணாடியாக உள்ளது, மேலும் சிறந்த நீர் மேலாண்மையின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது, குறிப்பாக பல பிராந்தியங்களில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் போன்ற கடுமையான வெப்பநிலையில், இதன் அவசியம் உணரப்படுகிறது.

பெண்கள் எப்படி குழாய் இணைப்பை பெற்றனர்

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே, பாதுகாப்பான முறையில் நிர்வகிக்கப்படும் குடிநீரைப் பெற்றுள்ளனர். 2017 ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளில், நீர் வழங்கல் அணுகலில் 14 சதவிகித முன்னேற்றம் இருந்தபோதிலும், ஏறக்குறைய 600 மில்லியன் இந்தியர்கள், பர்தேச்சி வாடியில் வசிப்பவர்கள் போன்ற "அதிகமான நீர் நெருக்கடியை" எதிர்கொள்கின்றனர்.

பர்தேச்சி வாடி, நாசிக் மாவட்டத்தின் திரிம்பகேஷ்வர் பகுதியில் அமைந்துள்ளது மற்றும் அதன் அருகே உள்ள கிராமங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்கு தண்ணீர் வழங்கும் அணைகளில் ஒன்றான மத்திய வைதர்னா அணையில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருந்தாலும், இந்தக் கிராம மக்களுக்கு தண்ணீர் அதிகம் பயன்படவில்லை. இதுவரை எந்த குழாய் லைனும் கிராமத்திற்கு தண்ணீர் வரவில்லை.

கிராமத்தின் முதன்மையான நீர் ஆதாரமான கிணறு, ஜனவரி அல்லது பிப்ரவரியில் வறண்டுவிடும் மற்றும் கோடை காலம் வரை தண்ணீர் பற்றாக்குறை தொடரும். தண்ணீர் டேங்கர்கள் கிணற்றுக்குள் தண்ணீரைக் காலி செய்கின்றன, ஆனால் டேங்கர்களின் வருகைகளுக்கு இடையில், கிராம மக்கள் 'டிப்வான்' (கிணற்றின் தரையில் இருந்து வெளியேறும் சிறிய பகுதியிலுள்ள நீரை சேகரிப்பது) சார்ந்து இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வரை, கிணற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது, ​​ஏணி போன்ற இரும்பு நிலைகளை பயன்படுத்தி பெண்கள் இந்த கிணற்றில் இறங்குவார்கள். கடைசிப் படியில், பாதியளவுக்கு அருகில், மேலும் கீழிறக்க ஒரு கயிற்றைப் பயன்படுத்தினார்கள். பெரும்பாலும், பெண்கள் டார்ச் லைட்டைப் பயன்படுத்தி, இரவு நேரத்தில் பல மணி நேரம் செலவழித்து, காயம் அல்லது பாம்பு, தேள் அல்லது காட்டு விலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. ஏனென்றால், காலை வரை காத்திருப்பது, குக்கிராமத்தில் உள்ள மற்ற குடும்பங்களால் ஏற்கனவே கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் சேகரிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம். தவிர, இரவில் தண்ணீர் நிரப்புவதில் செலவழித்த நேரம், பகலில் மற்ற வேலைகளுக்காக நேரத்தை மிச்சப்படுத்துகிறது.


மே 7, 2022 அன்று பின்னணியில் காணப்படும் பர்டேச்சி வாடியில் உள்ள 60 அடி கிணற்றில், பெண்கள் இனி கீழே இறங்க வேண்டியதில்லை. மின்சாரம் இல்லாத நாட்களில், கிணற்றில் போதிய அளவு நீர் கசிந்து, பெண்கள் வாளிகள் மூலம் தண்ணீர் எடுக்கலாம்.

2019 ஆம் ஆண்டில், பெண்கள் தண்ணீருக்காக அலையும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அணைக்கு அருகில் உள்ள வற்றாத கிணற்றில் இருந்து இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் சேமிப்பு தொட்டிகளுக்கு தண்ணீரை கொண்டு வர புதிய குழாய் அனுமதிக்கப்பட்டது.

இந்த குழாய் லைன், ஜல் ஜீவன் மிஷனில் (ஜே.ஜே.எம்.) இருந்து நிதி அளிக்கப்படவில்லை, மாறாக இகத்புரி ஹிராமன் கோஸ்கர் மற்றும் பஞ்சாயத்து நிதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டது. ஜேஜேஎம் திட்டம், டேக் தியோகாவ் பஞ்சாயத்தில் இன்னும் தொடங்கவில்லை, இருப்பினும் மகாராஷ்டிராவின் 71% வீடுகளில் ஜேஜேஎம் கீழ் குழாய்கள் உள்ளன என்று, மிஷன் கூறுகிறது.

திரிம்பகேஷ்வரின் தொகுதி மேம்பாட்டு அதிகாரி எச்.எல் கட்டலே கூறுகையில், ஜே.ஜே.எம்.மின் கீழ் பணிகள் கிராம செயல் திட்டத்தின்படி திட்டமிடப்பட்டுள்ளன (டேக் தியோகாவிலும் ஒன்று உள்ளது) என்றார்.

"செயல் திட்டம் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான முன்னுரிமை வரிசையை வழங்குகிறது. ஆனால், ஜே.ஜே.எம். திட்டத்தின் கீழ், மிகவும் தொலைதூர குக்கிராமங்களுக்கும் நாங்கள் வீட்டு குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும், மேலும் இந்த குக்கிராமத்திலும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவோம்," என்று கட்டாலே கூறினார்.

ஜேஜேஎம் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையையும், இந்தியா ஸ்பெண்ட் அணுகியது. அவர்கள் பதிலளித்தவுடன் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

மே மாதம், இந்தியா ஸ்பெண்ட் குழு கிராமத்திற்குச் சென்ற நாள், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லை, இதனால் கிராம மக்கள் தண்ணீரை நிரப்ப மோட்டாரைப் பயன்படுத்துவதைத் தடுத்தனர். ஆனால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தைப் பொறுத்து தண்ணீரை நிரப்ப முடியும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக முக்கிய பிரச்சினை, சேமிப்பு தொட்டிகளின் திறன் ஆகும்.

"பைப்லைனில் இருந்து அதிகப்படியான தண்ணீர் கிணற்றில் விடப்படுகிறது, இது விரும்பத்தகாதது, ஏனெனில் பெண்கள் மீண்டும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக, ஒரு பெரிய தொட்டி அவர்கள் குழாய்களில் இருந்து போதுமான தண்ணீரை எடுக்க அனுமதிக்கும். நாசிக் மற்றும் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களின் பழங்குடிப் பகுதிகளில் பணிபுரியும் ஷ்ரம்ஜீவி சங்கதானாவின் செயல்பாட்டாளரான பகவான் தோக் கூறினார்.

ஒரு பெரிய தொட்டிக்கான கிராம மக்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக, கட்டாலே கூறினார்.

பர்தேச்சி வாடியின் பெண்கள், கீழே உள்ள ஒரு பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை நிரப்ப, கிணற்றில் இறங்குவதைக் காட்டும் 2019 ஆம் ஆண்டின் வீடியோ.

'தலைமுறைப் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்'

ஹௌசபாய் பார்தி, தனது ஒரு வயது குழந்தையை மே மாதத்தில் ஒரு சூடான நாளில் தன் கைகளையே தொட்டிலாக்கி போட்டார். சில மாதங்களுக்கு முன்பு வரை, அவர் தனது பிறந்த குழந்தையை கிணற்றுக்கு அழைத்துச் செல்வார், மற்ற பெண்கள் அவரது தலையில் ஒரு தண்ணீர் பானையை வைக்க உதவுவார்கள். குழந்தையைத் தன் கைகளிலும், தலையில் தண்ணீர்ப் பானையிலும் சமன் செய்து, தினமும் வீட்டிற்கு நடந்து செல்வார் ஹௌசபாய்.

"இங்குள்ள தண்ணீர் பஞ்சம் பற்றி தெரிந்திருந்தால், திருமணம் செய்து கொண்டு இங்கு வாழ சம்மதித்திருக்க மாட்டேன்" என்று ஒரு பெண் கிராமத்தின் முன் கோபமாக கூறினார். "ஆணாதிக்க நெறிமுறைகள் என்பது இன்றும் குடும்பத்திற்கு தண்ணீர் ஏற்பாடு செய்யும் பொறுப்பு பெண்களின் மீது உள்ளது" என்று தோக் கூறினார்.

"தலைமுறைப் பெண்கள் இப்படித் துன்பப்படுகிறார்கள்," என்று ஐம்பது வயதில் ஷாலுபாய் பார்தி கூறினார். தண்ணீர் நிரப்புவதை ஆண்கள் தங்களுக்கு இழிவானதாக கருதுகிறார்கள், என்றார் நிவ்ருத்தி பார்தி.


கிணற்றில் ஏறி தண்ணீர் நிரப்பும் சிரமத்தில் இருந்தும், ஆபத்தில் இருந்தும் நிவாரணம் பெற்றாலும், உயர்நிலைப் பள்ளி மற்றும் பிற வாய்ப்புகள் இல்லாததால், பர்தேச்சி வாடியின் பெண்கள் மற்றும் சிறுமிகள், தங்களுக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை வேறு வகையில் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போகிறது.

பர்தேச்சி வாடி வருமானத்திற்காக விவசாயத்தை முதன்மையாக சார்ந்துள்ளது மற்றும் விவசாயமானது பருவமழையை சார்ந்தது. கிராமவாசிகள், ஆண்டுக்கு ஒரு பயிர் செய்கிறார்கள், பொதுவாக நெல் அல்லது தினை, பெரும்பாலானவர்களுக்கு அந்த பயிர் வாழ்வாதாரத்திற்கு போதுமானது. பெரும்பாலான ஆண்கள் வேலைக்காக இடம்பெயர்கிறார்கள், பெண்கள் பண்ணைகளில் வேலை செய்கிறார்கள் மற்றும் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

அருகிலுள்ள கிராமமான வாவி ஹர்ஷாவில், பத்தாம் வகுப்பு வரை பள்ளி உள்ளது. ஆனால் மேற்படிப்புக்காக குழந்தைகள் 30 கிமீ அல்லது ஒரு மணிநேரம் தொலைவில், இகத்புரிக்கு, ஒழுங்கற்ற பேருந்து சேவையைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும்.

"நான் ஒரு நாள் கல்லூரிக்குச் செல்ல விரும்புகிறேன், ஆனால் என் பெற்றோர் என்னை அனுப்ப மாட்டார்கள், ஏனென்றால் அது பாதுகாப்பற்றது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தண்ணீரை நிரப்புவதில் நேரத்தை மிச்சப்படுத்தினோம், இல்லையெனில் எங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம்?" என்று ஒன்பதாம் வகுப்பு மாணவி சங்கீதா பார்தி கேட்கிறார். "நாங்கள் பண்ணைகளில் வேலை செய்கிறோம் அல்லது அதற்குப் பதிலாக வேறு வேலைகளைச் செய்கிறோம்".

வரவிருக்கும் விதைப்பு பருவத்திற்கு நிலத்தை தயார் செய்வதற்காக தனது ஐந்து வயது மகனுடன் மீண்டும் தனது பண்ணைக்குச் சென்றபோது, "அசாச் அஸ்டே (இப்படித்தான் அது இருக்கிறது)" என்கிறார் சுனிதா பார்தி.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.