மவுண்ட் அபு: 2016ஆம் ஆண்டில், உலக வங்கியின் ‘எளிதில் தொழில் செய்ய’ உகந்த 190 நாடுகள் பட்டியலில் இந்தியா 130வது இடத்தில் இருந்தது. சீர்த்திருந்தங்கள் மெதுவாக தொடங்கப்பட்டதன் விளைவாக, அடுத்த ஆண்டே 100வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, 2018ஆம் ஆண்டு 77வது இடத்தை பிடித்துள்ளது. சீர்த்திருங்கள் மேற்கொள்ளும் முதல் 10 நாடுகளில் நியூஸிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க் நாடுகளுடன் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

இது, களத்தை கணிசமாக மாற்றிவிட்டதா? இந்த கேள்வியை தான் ஆராய்ச்சியாளர்கள், கொள்கை பகுபாய்வாளர்கள் கேட்கின்றனர்.

உலக வங்கி தனது தரவரிசைக்கு கருதும் இந்தியாவின் இரண்டு நகரங்களில் ஒன்றான டெல்லியில் (மற்றொன்று மும்பை) அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் சிறு தொழில் முனைவோருக்கு பயனளிப்பதாக இல்லை என்று, “டூயின் பிஸினஸ் இன் டெல்லி” என்ற பெயரில் சிவில் சொசைட்டி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவகம் எனில்: டெல்லியில் மதுபானம் அல்லாத உணவகம் தொடங்க வேண்டுமெனில், தொழில் முனைவோருக்கு குறைந்தபட்சம் எட்டு உரிமங்கள் தேவைப்படுகிறது; மதுபானத்துடன் எனில் 11, உணகவத்தில் ஆடல், பாடல்கள் நடத்துவது எனில் 13 உரிமங்களை பெற வேண்டும். இதற்கு மாறாக, சீனாவில் இதற்கு நான்கு உரிமங்கள், துருக்கியில் இரண்டு உரிமங்கள் இருந்தால் போதுமானது.

இந்த உரிமங்களுள் ஒன்றான உணவக உரிமம், டெல்லி காவல்துறையினரால் வெளியிட்டப்பட்ட ஆவணமாகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை இருந்தாலும், டெல்லி காவல்துறையின் உணவக உரிமம் வழங்கும் பிரிவில் நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களில் ஒருவர் கூறுகையில் “உணவக உரிமம் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது தான் ஒரே வழி” என்றார். மற்றொருவர், “உணவக உரிமத்திற்கான சரியான தொகை கொடுத்தால் வீடு தேடி வந்து உரிமத்தை தருவார்கள்” என்றார்.

தொழில் தொடங்க மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க, வணிக செய்வது எளிதாக்கப்பட வேண்டும். 2018 கணக்கின்படி நாட்டில் வேலைவாய்ப்பின்றி 1.86 கோடி பேர் -- இது தொழிலாளர் திறனில் 3.5% -- உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது. இளைஞர்கள், உயர்கல்வி பயின்றவர்கள் இடையே வேலையின்மை என்பது, 16% ஆகும். இது, 20 ஆண்டுகளில் நாட்டின் மிக உயர்ந்த விகிதம் என, அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையத்தின் ‘வேலைவாய்ப்பு இந்தியா 2018’ என்ற அறிக்கை தெரிவிக்கிறது.

"தொழில் தொடங்குவதை எளிதாக்க எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் சாளர அலங்காரம் போன்று, வெறுமனே ஒரு சீர்திருத்த சரிபார்ப்புப் பட்டியலை சரிபார்த்து ‘டிக்’ போடுவது போன்றது” என்று ஆய்வின் இணையாசிரியர் அல்ட்சன் டி’சோஸா, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். "நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையை மேம்படுத்துவதற்கான விதிகளை டெல்லி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மீளமைக்க வேண்டும். உரிமத் தேவைகள் அறிவார்ந்தவை என்பதால் அதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். உரிமம் நடைமுறைகளை வேகப்படுத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை மேம்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். பீகாரின் பிரயாக்கில் இந்திய சமூக தலைமைத்துவத் திட்டத்தின் கீழ் இளைஞர் மேம்பாடு முகாமை பயிற்சி அளிப்பவர்களில் ஒருவராக டிசோஸா உள்ளார். அவர் கர்நாடகா தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் இளங்கலை படிப்பை முடித்தார். தற்போது, சிவில் சொசைட்டி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்.

எளிதில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 2016ஆம் ஆண்டு 130வது இடத்தில் இருந்த இந்தியா, 2018ஆம் ஆண்டில் 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த முன்னேற்றம் இந்தியாவின் சராசரி நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) எதிர்கொள்ளும் வணிகச்சூழலை பிரதிபலிப்பதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஏன்?

முதலாவதாக, உலக வங்கி தரவரிசை மும்பை மற்றும் டெல்லியின் நிலைமைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது; அதன்படி இந்த குறியீடு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இவ்விரு பெருநகரங்களுக்கு வெளியே உள்ள சூழலை இக்குறியீடு புறந்தள்ளுகிறது. அந்த இரு நகரங்களிலும் கூட, நிபுணர் உதவியுடன் அணுகுவதற்காக பெரிய, பொதுவாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தி இக்குறியீடு [190 பங்கேற்பு பொருளாதாரங்களில் வணிக ஒழுங்குமுறைகளை ஒப்பிடுவதற்கு] வரையப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கிறேன். உதாரணத்திற்கு, ’தொழில் தொடங்குதல்’ பிரிவில் ‘வணிகம்’ என்பது சுமார் 929 ச.மீட்டர் (10,000 சதுரஅடி) இடத்தில் ஐந்து நபர்களுக்கு சொந்தமானதாக; ஒருவரின் தனிநபர் வருவாயை போல் 10 மடங்கு மூலதனத்துடன்; தனிநபர் வருவாயை விட 100 மடங்கு விற்று முதலுடன்; 10- 50 பணியாளர்களுன் ஒரு மாதத்திற்குள் இயக்கத்தை தொடங்குதல் என்ற வரையறையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி, மும்பையில் உள்ள பெரும்பாலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த வரையறையில் இல்லை எனும் போது, இக்குறியீட்டில் அவர்களின் அனுபவங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

இரண்டாவதாக, இந்தியாவின் மேம்பட்ட தரவரிசைக்கான காரணங்களை நீங்கள் கவனித்தால், தொழிற்துறை உரிமங்களின் செல்லுபடியாக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (GST),புதிய திவால் சட்ட நடைமுறை (IBC) போன்ற 2017ல் மேற்கொண்ட எழுச்சி சீர்திருத்தங்களே பெரும்பாலும் காரணமாக இருந்துள்ளது. கட்டுமான அனுமதி, எல்லைகள் முழுவதும் வர்த்தகம், நெறிமுறை நடைமுறை, செயலாக்க அனுமதி விண்ணப்பங்களுக்கான நேரத்தை குறைத்தல் மற்றும் மாநில அளவில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் என, 2018 ஆம் ஆண்டிலும் சீர்திருத்தங்கள் எழுச்சி பெற்றன. தொழிற்சாலை உரிமம், கட்டுமான அனுமதி, ஏற்றுமதி விதிமுறை போன்ற அம்சங்கள் பெரும்பாலான் சிறுகுறு நிறுவனங்களுடன் தொடர்பின்றி உள்ளன.

நாடு முழுவதும் தொழில் தொடங்குவதை எளிதாக்க, மத்திய வர்த்த அமைச்சகத்தின் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (DIPP), உலக வங்கி உதவியுடன் இணைந்து வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைத் திட்டத்தை (BRAP), 2017 ஏப்ரலில் வெளியிட்டது. இதில் தொழிலாளர், ஒப்பந்தங்கள், சொத்து பதிவு, கட்டுமானம், சுற்றுச்சூழல் மற்றும் பலவற்றில் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 405 பரிந்துரைகளின் தொகுப்பு இடம் பெற்றிருந்தது. முந்தைய ஆண்டில் முன்னுரிமை தரப்படும் நடவடிக்கைகள் மீதான மாநிலங்களின் முன்னேற்றம், சுய அறிவிப்பு அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதில் டெல்லி பற்றிய உங்கள் கண்டுபிடிப்பு என்ன?

டெல்லியில் வணிக செயல்முறை மறுகட்டமைப்பு என்பது, ஒரு வெற்று அலங்கார செயலாகும். சுற்றுச்சூழலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்க, தொழிலாளர் தொடர்பான ஆய்வுகள், அரசு துறைகள், நிலையான இயக்க நடைமுறைகளை வெளியிடுவது, இடர் மதிப்பீட்டு வழிமுறைகளை வரிசைப்படுத்துதல், ஆய்வாளர்களின் ஒதுக்கீடுகளை சீரமைத்தல் மற்றும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆய்வு அறிக்கைகள் / கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை செய்ய வேண்டும். இத்தகையபடிகள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வணிகரீதியான முரண்பாடுகளில் கவனம் செலுத்துதல், 90% நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்புதல், சிறப்பு வணிக நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்ற டி.ஐ.பி.பி. பரிந்துரை பெயரளவில் மட்டுமே எதிர்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், டெல்லி அரசு ஒரு வணிகப்பிரிவை உருவாக்கியுள்ளது. வணிகரீதியான முரண்பாடுகளுக்காக இது பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் வணிகம், தொழில் சார்ந்த வழக்குகளை விட, அது அல்லாத வழக்குகளுக்காக 2.73 மடங்கு அதிக நேரம் செலவிடப்பட்டுள்ளது. வணிக மோதல் வழக்குகளுக்கு செலவிடப்பட்ட நேரம், அதுதொடர்பான நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை விகிதாசாரம் அல்ல; வணிகரீதியான மற்றும் வணிகம் சாராத வழக்குகளுக்கு நீதிபதி ஒதுக்கிய நேரமாகும்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வணிகப்பிரிவை டெல்லி அரசு உருவாக்கியுள்ளது. வணிகரீதியான முரண்பாடுகள், வழக்குகளை தீர்க்க இது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தொழில் சார்ந்த வழக்குகளை விட, அது சாராத வழக்குகளுக்கு 2.73 மடங்கு கூடுதல் நேரம் செலவிடப்பட்டுள்ளது.

புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்படாததால், வர்த்தக வழக்குகளை அதே எண்ணிக்கையிலான நீதிபதிகள் எண்ணிக்கை அதே அளவிலேயே உள்ளது. டி.ஐ.பி.பி. சிபாரிசுகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது வணிகம் சார்ந்து ஒன்று, வணிகம் சாராத ஒன்று என, இரண்டு நீதிபதி பணியிடங்களை ஏற்படுத்துதல், அல்லது நீதிமன்றத்தின் ஆதார வளங்களை பகிர்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை குறைந்தபட்சம் நடைமுறைப்படுத்துவது என்பதை குறிக்கிறது.

2018 ஆம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த நடவடிக்கை திட்ட (BRAP) மதிப்பீடு அரசு பின்னூட்டத்திற்கு வணிகமாக இருப்பதை நாம் புரிந்து கொண்டோம். அந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா என்று எங்களுக்கு தெரியாது. மதிப்பீட்டை சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மையில் பொதுவாக பற்றாக்குறை உள்ளது.

சில்லரை உணவு வியாபாரம், வதைக்கூடங்கள், சிறிய இறைச்சி கடைகள் மற்றும் மின் கழிவு கையாள்பவர்கள் போன்ற பல தொழிற்துறைகளை நீங்கள் ஆய்வு செய்துள்ளீர்கள். நடைமுறையில் ஒரு தொழிலை நடத்துவது எவ்வளவு எளிது (அல்லது கடினம்) என்பதை எப்படி தீர்மானிப்பது. டெல்லி மின்கழிவு தொழில் குறித்த தங்களின் கணக்கெடுப்பின்படி, சிவப்பு நாடா முறை தொழிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் உங்கள் கருத்து என்ன? மின் கழிவுகள் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்த தொழில் டெல்லிவாசிகளை பாதிக்கிறதா?

நாட்டின் தலைநகர பிராந்தியத்தில் 28 அங்கீகரிக்கப்பட்ட (உரிமம் பெற்ற) மறுசுழற்சி நிறுவனங்கள், ஆண்டுக்கு 107,976 மெட்ரிக் டன்னை கையாள்கின்றன. ஆண்டுதோறும் உருவாக்கப்படும் 8500 மெட்ரிக் டன் மின்னணு கழிவுகளை விட இது கணிசமான அளவுக்கு அதிகம். கோட்பாட்டளவில், இந்த அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி 79% அவர்களின் ஒருங்கிணைந்த திறனைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், பரிதாபாத், ரோதக், மானேசர் மற்றும் ஹபாரில் ஆறு அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்கள், 39.9% என்ற திறன் அளவில் செயல்பட்டதை எங்கள் ஆய்வில் போது கண்டோம்.

சில அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்கள் மின் கழிவுகளை தங்களது வசதிக்குள்ளாகவே மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அங்கீகரிக்கப்படாத மறுசுழற்சியாளர்களிடம் திசைதிருப்பப்படுவதை நாங்கள் கண்டோம். ஏனெனில் இவ்வாறு செய்வதால் அதிகமான வருமானம் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களால் வழங்கப்படும் தொகையை விட இரு மடங்கு அதிகமாக, முறைசாரா மறுசுழற்சி மின் கழிவு விற்பனையாளர்களால் வழங்க முடியும். உதாரணமாக, பாதரசம், ஈயம் போன்ற கழிவுகளை வெளியேற்றும் முன் சுத்திகரிப்பது போல் மின் கழிவுகளையும் சுத்திகரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனால், அங்கீகாரம் பெறாத மறுசுழற்சியாளர்கள் இக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றி, மண்ணையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றனர்.

சீலாம்பூருக்கு நாங்கள் சென்றபோது அங்கீகரிக்கப்படாத மற்றும் அங்கீகாரம் பெற்ற மின் கழிவு கையாளப்பட்டவர்களுக்கு இடையே ஒரு கூட்டணி இருப்பதை கண்டோம். அவர்களிடம் மின் கழிவு விற்கும் வாடிக்கையாளர் போல பேசினோம். பரிவர்த்தனைகள் நியாயமான முறையில் இருப்பதற்கான ஆதாரம் கொண்டிருக்க முடியுமா என்று கேட்டோம். அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மற்றும் அதன் நிலை சரிபார்க்கப்பட்டதாக, அங்கீகாரம் பெறாத சுழற்சியாளர்கள் சான்றிதழ் வழங்கினர்; இந்த விற்பனையை உறுதிப்படுத்தும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) பரிவர்த்தனை அடையாள எண்ணும் இடம் பெற்றிருந்தது. அங்கீகாரமுள்ள மறுசுழற்சி நிறுவனத்தின் இந்த ஆவணங்களை அவர் வாடகைக்கு விட்டார். எங்கள் பரிவர்த்தனையை சரிபார்க்க ஆவணங்களை நாங்கள் வலியுறுத்தியிருந்தால், அதற்கு எங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மின் கழிவுக்கான விலையில் அது சேர்க்கப்பட்டிருக்கும்.

தொழிற்துறையை அரசு முறையாக பரிசோதித்து வந்திருந்தால், இந்தியாவில் மின் கழிவுகளை அங்கீகாரம் இல்லாதவர்கள் மறுசுழற்சி செய்வது தடுக்கப்பட்டு இருக்கும்.

தொழில் தொடங்குவதில் இருப்பதைப் போல, மின் கழிவு கையாளுதலுக்கான தற்போதுள்ள உரிம செயல்முறைகளும் மிக மெதுவாக உள்ளன. மின் கழிவு மறுசுழற்சிக்கு ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அதிகாரபூர்வ ஒப்புதலை பெற, நிறுவுவதற்கான சராசரி நேரம், இயங்குவதற்கான ஒப்புதல் என 1.3 மாதங்களாகிறது. ஆனால் உண்மையில் இதற்கு 24 மணி நேரமே ஆகும் என்பதை நாங்கள் கண்டோம்.

ஒரு நல்ல தொழில் என்பது அதன் பணியாளர்கள் மீது, குறிப்பாக, குறைந்த சமூக பொருளாதார நிலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை காட்டும்.ஒவ்வொரு நாடுகளின் வணிக மதிப்பீடும் அல்லது தரவரிசை மதிப்பும் செய்வதற்கு இந்த குறிகாட்டிகள் அந்த மதிப்பீட்டை கருத்தில் கொள்ளாத போதும் வணிக வலைத்தளம் மீது முக்கிய தொழிலாளர் சந்தை விதிமுறைகளை கண்காணிப்பதை உலக வங்கி கவனத்தில் கொள்கிறது. டெல்லி தொழிலாளர் நலன் குறித்த உங்கள் கண்டுபிடிப்புகள் என்ன?

டெல்லி அரசின் தொழிலாளர் துறையானது டி.ஐ.பி.பி. முன்வைக்கும் இரண்டு சீர்திருத்தங்களை - சரிபார்த்தல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் (SOP கள்) ஆய்வுகள ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது; வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வேலை நிலைமைகள் என ஏழு முக்கிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் (போனஸ் சட்டம் செலுத்துதல் - 1965; டெல்லி கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டம் - 1954; சம ஊதியம் சட்டம் - 1976; ஊதியங்கள் செலுத்துதல் - 1936; பணிக்கொடை சட்டம் - 1972, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் - 1970; மற்றும் குறைந்தபட்ச ஊதியம் சட்டம் - 1938) பணியமர்த்தல் மற்றும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.

புகார்களை தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்ட பின்வரும் செயல்முறைகள் தொழிலாளி நலனை உறுதி செய்வதை நோக்கிய ஒரு பெரிய படியாகும் என்று கருதினோம்; இந்த செயல்முறைகளை டெல்லி மாவட்ட தொழிலாளர் அலுவலகம் ஆராய்ந்ததா என விசாரித்தோம். நாங்கள் ஆய்வு செய்த 846 தொழிலாளர் புகார்களில், 15 நாட்களுக்குள் எஸ்.ஒ.பி. உத்தரவிட்ட காலக்கெடுவுக்குள் 33.6% ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் பகுப்பாய்வு செய்தவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை (54.8%) முடிக்கப்பட்டன; எஞ்சியவை சராசரியாக 311.5 நாட்கள் அல்லது கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் தான் தீர்க்கப்பட்டன.

அதிக நிலுவைக்கு முக்கிய காரணம் மனிதவள குறைபாடுகள் என்று கூறும் துறை அதிகாரிகள், மாதம் 60 முதல் 80 வழக்குகள் வரை நடைபெறுவதாக கூறுகின்றனர். இருப்பினும், தொழிலாளர் சட்ட விதி ஆய்வாளர்கள் மத்தியில் குறைந்த விழிப்புணர்வு மற்றும் ஒரு மீறல் என்ன என்பது ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்படுகிறது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். உதாரணத்திற்கு பதவி உயர்வில் பாகுபாடு என்பது சமமான ஊதிய சட்டம்-1976கீழ் ஒரு மீறல் இல்லை ஆய்வாளர்கள் என்று கூறினார்; இது தவறானது. மேலும், கடந்த 25 ஆண்டுகளில் எந்தவிதமான புகாரும் இல்லாததால், இந்த சட்டம் தேவையற்றது என கூடுதல் தொழிலாளர் ஆணையர் கூறினார். 2002ம் ஆண்டு சட்டத்தின் கீழ் 2,826 ஆய்வுகள் நடத்தப்பட்டதாக காட்டுவதன் மூலம் அவற்றின் சொந்த இணையத்தளமானது இதில் முரண்படுகிறது. 83% அனுமதிக்கப்பட்ட ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், இத்துறை அதிகாரமற்றது என்ற முடிவுக்கு வந்தோம். ஏனெனில் ஒரு ஆய்வாளர் மாதத்திற்கு 25.9 புகார்களை, அதாவது நாளொன்றுக்கு ஒரு புகார் வீதம் பெறுவதை குறிக்கிறது.

(பஹ்ரி, ராஜஸ்தானின் மவுண்ட் அபுவை சேர்ந்த பத்திரிகையாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.