மும்பை: 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், இந்தியா முழுவதும் 333,966 காசநோய் (டிபி- TB) நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகி உள்ளன, இது 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பதிவான எண்ணிக்கையை விட 20% குறைவு என்று சுகாதார அமைச்சகத்தின் நிக்ஷய் (Nikshay) தளம் தெரிவித்துள்ளது. இந்த சரிவு காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவதால் அல்ல,ஆனால் நோயாளிகள் விவரம் பதிவாவது குறைந்ததால், அதாவது அதிகாரப்பூர்வமாக நோயாளிகள் எண்ணிக்கை அரசுக்கு பதிவாவதை இது குறிக்கிறது.

காசநோய்க்கு சரியான நேரத்தில் பரிசோதனை மற்றும் கண்டறிதல் - சிகிச்சை அளிக்கக்கூடிய பாக்டீரியா நோயை- கண்டறிவது முக்கியமானது, ஏனெனில் இது உயிர்களைக் காப்பாற்றும், அத்துடன் நோய் மேலும் பரவாமல் தடுக்கும். காசநோய் பாதிப்புகளை அரசிடம் பதிவு செய்வது என்பது இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) நோயாளிகளைக் கண்காணிக்கவும், அவர்கள் சிகிச்சையை முடிக்கவும், இலவச மருந்துகளை வழங்கவும் முடியும். முழுமையடையாத காசநோய் சிகிச்சையானது நோயாளியை மேலும் மோசமடையலாம், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படலாம் அல்லது மருந்துக்கு கட்டுப்படாத காசநோயை உருவாக்கலாம்.

அரசிடம் பதிவு செய்யப்பட்ட காசநோயாளிகள் எண்ணிக்கை, நாட்டில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட குறைவாக உள்ளன. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2.5 மில்லியன் காசநோய் மற்றும் 500,000 இறப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2019 வரையிலான ஒவ்வொரு ஆண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், 2.4 மில்லியனை எட்டியபோது, ​​​​அதிகமாக காசநோய் எண்ணிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டின், முதல் இரண்டு மாதங்களில், 2019 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களை விட இந்தியாவில் 5% அதிகமான நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகி உள்ளன. இருந்த போதும், 2020 இல் அறிவிக்கப்பட்ட காசநோய் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 25% குறைந்து, 1.8 மில்லியனாக என்று இருந்தது; கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தேசிய மற்றும் மாநில ஊரடங்கு காரணமாக இவ்வாறு குறைந்ததாக தரவு காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டின் தேசிய ஊரடங்கு காலத்தில், ​​2019 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 46% குறைவான நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகி உள்ளன.


"சுகாதார மையங்களில், கோவிட் மீது அதிக கவனம் செலுத்துதல் மற்றும் சோதனை மற்றும் கண்டறியும் வசதிகளை அணுகுவதற்கான நடமாடும் பரிசோதனை [TrueNat சோதனை போன்றவை] குறைந்தது போன்றவை, குறைவான காசநோய் பதிவுகளுக்கு பங்களித்தது," என்று தெற்கு ராஜஸ்தானில் பணிபுரியும் இலாப நோக்கற்ற அமைப்பான ஹெல்த்கேர் சர்வீசஸின் (Healthcare Services) செயலாளரும் இணை நிறுவனருமான பவித்ரா மோகன் கூறினார். "அதே நேரத்தில், உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்தது," என்று அவர் கூறினார், இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது மற்றும் காசநோய் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.

தனியார் மையங்களில் அதிகமான நோயாளிகள் பதிவாகின

காசநோய் என்பது அறிவிக்கப்பட வேண்டிய நோயாகும், அதாவது அரசு அல்லது தனியார் துறையில் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளும் அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட நோயாளிகள் இலவச சிகிச்சைக்காக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தைப் பெறலாம்.

2016 ஆம் ஆண்டில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது, தனியார் துறை நோய் பற்றி தெரியப்படுத்துவதை அதிகரிக்க, ஒரு முன்னோடி திட்டத்தை முன்னெடுத்தது, மேலும் காசநோய் ஒழிப்புக்கான கூட்டு முயற்சி ( JEET) போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தனிப்பட்ட வழங்குநர்கள் மற்றும் நோயறிதல் மையங்கள் உள்ளிட்ட தனியார் வசதிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் காசநோய் ஒழிப்புக்கான கூட்டு முயற்சி (JEET) திட்டம் கவனம் செலுத்துகிறது மற்றும் அவர்களுக்கு காசநோய் சிகிச்சைக்கு ஆதரவளித்தல், செயல்படுத்துதல் மற்றும் பயிற்சி அளிப்பது, அத்துடன் காசநோய் சிகிச்சையை முடிக்க மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை ஊக்குவிப்பது, நோயறிதலுக்கான உலகளாவிய கூட்டணியான ஃபைண்ட் இந்தியா (FIND India) அமைப்பின் தலைவர் சஞ்சய் சரின் கூறினார். "தனியார் சுகாதார மையங்களில் சோதனை அல்லது சிகிச்சையை வாங்க முடியாவிட்டால், நோயாளிகளை பொது சுகாதார வழங்குநர்களுடன் நாங்கள் இணைக்கிறோம்" என்றார்.

கடந்த 2017 மற்றும் 2021 க்கு இடையில், தனியார் துறையின் காசநோய் பதிவுகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2017 இல், ஐந்தில் ஒன்றுக்கும் குறைவான அறிவிப்புகள் தனியார் துறையில் இருந்து வந்தவை. 2021 இல், இது கிட்டத்தட்ட மூன்றில் ஒருவராக அதிகரித்தது.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கோவிட்-19 காரணமாக பெரும்பாலான மாநிலங்களில், ஊரடங்கு அமலான போது, ​​காசநோய்க்கான தனியார் மற்றும் பொதுத்துறை அறிவிப்புகள் கைவிடப்பட்டன. ஆனால் 2019 உடன் ஒப்பிடும் போது, ​​2021 ஆம் ஆண்டில், தனியார் துறையில் இருந்து அதிகமான காசநோய்கள் பதிவாகியுள்ளன.


ஐந்து மாநிலங்கள் - அதாவது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் -- நாட்டில் பதிவான காசநோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை. கோவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக ஐந்து மாநிலங்களும் பொது மற்றும் தனியார் மருத்துவமனை காச நோய் அறிவிப்புகளில் இதேபோன்ற சரிவை கண்டாலும், பொது மற்றும் தனியார் துறைகளால் அறிவிக்கப்பட்ட நோய் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி மகாராஷ்டிராவில் குறைந்துள்ளது.


உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.